Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்- 3 நாட்கள் சிறப்பு முகாம்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இதுவரை 1.54 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் பதிவு செய்யாதவர்களுக்காக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 13:21 (IST) 18 Aug 2023பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சையாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் . வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
- 13:20 (IST) 18 Aug 2023மல்லிகார்ஜுன கார்கே-வை இன்று சந்திக்கிறார் கே.எஸ். அழகிரி
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வை இன்று சந்திக்கிறார் கே.எஸ். அழகிரி . பெங்களூருவில் இன்று மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற உள்ளது . காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் பெங்களூரு பயணம் *கே.எஸ்.அழகிரியே மாநில தலைவராக நீடிக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல்
- 12:36 (IST) 18 Aug 20239 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதா?
9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளதா? - முதல்வர் . மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்துவது இலங்கையின் வாடிக்கையாக உள்ளது . மீனவர்கள் பாதுகாப்பாக வாழ, இந்தியாவில் வலுவான ஆட்சி அமைய வேண்டும் என பேசிய மோடி என்ன செய்தார்? . பாஜக ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார் எனக்கூறிய பிரதமரின் வாக்குறுதி என்ன ஆனது? - முதல்வர்
- 12:15 (IST) 18 Aug 2023மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும்
மீனவர்களுக்கான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 5,035 மீனவர்களுக்கு பட்டா வழங்கப்படும் - முதல்வர் . மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இனி ரூ. 8,000 ஆக உயர்த்தப்படும் .மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சாத்தியம் உள்ள இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும் - முதல்வர்
- 12:07 (IST) 18 Aug 2023தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது
தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல் . மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு . தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது - முதல்வர்
- 11:36 (IST) 18 Aug 2023அதிமுக மாநாடு நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற
மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு .நான்கு மாதத்திற்கு முன் மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர், கடைசி நேரத்தில் தடை கூறினால் எவ்வாறு முடியும் - நீதிமன்றம் .மாநாட்டில் வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் அதிமுக தரப்பு உறுதி .காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
- 11:35 (IST) 18 Aug 2023மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம் தொடங்கியது
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கான சிறப்பு முகாம் தொடங்கியது . தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன . காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது . முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளி உதவித் தொகை பெறும் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்
- 11:01 (IST) 18 Aug 2023கருகும் பயிர்கள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முறையீடு
தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதால், காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு அரசு இடையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி முறையீடு செய்துள்ளார்.
- 10:57 (IST) 18 Aug 2023மலேஷியா விமான விபத்து
மலேஷியா லங்காவியில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு சென்ற விமானம் ஷா ஆலாம் நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மத்திய பகாங் மாநில சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 10:16 (IST) 18 Aug 2023கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று காலை 17,718 அடியாக இருந்த நிலையில், இன்று 18,145 அடியாக உயர்ந்துள்ளது.
- 10:13 (IST) 18 Aug 2023அடுத்தடுத்து நான்கு வாகனகங்கள் மோதி விபத்து
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, அடுத்தடுத்து நான்கு வாகனகங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- 10:13 (IST) 18 Aug 2023அப்துல் கலாமின் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை
ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- 09:10 (IST) 18 Aug 2023மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,394 கனஅடியில் இருந்து 9,938 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது
- 09:10 (IST) 18 Aug 2023கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி
கிளாம்பாக்கத்தில் ₹20 கோடி செலவில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் 4 மாதங்களில் தொடங்கவுள்ளது.
புதிய பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
- 09:00 (IST) 18 Aug 2023பிரக்ஞானந்தா சாதனை
அஜர்பைஜன் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரக்ஞானந்தா.
- 08:07 (IST) 18 Aug 2023அசல் மதிப்பெண் சான்றிதழ்
10ம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்.
- 08:07 (IST) 18 Aug 2023அசல் மதிப்பெண் சான்றிதழ்
10ம் வகுப்பு மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம்.
- 08:07 (IST) 18 Aug 2023அதிமுக மாநாட்டிற்கு தடை கோரிய வழக்கு- இன்று விசாரணை
மதுரையில் வரும் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை கோரி, காரைக்குடியை சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
- 08:05 (IST) 18 Aug 2023ராமநாதபுரத்தில் இன்று மீனவர் நல மாநாடு
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- 07:54 (IST) 18 Aug 2023சென்னையில் விடிய விடிய கனமழை
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, மெரினா, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கனமழை பெய்தது. கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
- 07:54 (IST) 18 Aug 2023புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 07:54 (IST) 18 Aug 2023India vs Ireland T20 series
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து தொடரில் பங்கேற்கிறது.
- 07:53 (IST) 18 Aug 2023செந்தில் பாலாஜி வழக்கு- சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு வரும் 28-ம் தேதி விசாரணை வரவுள்ளது.
- 07:53 (IST) 18 Aug 2023ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்
நீட் தேர்வுக்கு விலக்கு மற்றும் ஆளுநரை கண்டித்து திமுக ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
- 07:52 (IST) 18 Aug 2023ஓணம் பண்டிகை- தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து ஆக.26ம் தேதி மாலை 5 மணிக்கும், மறுமார்க்கமாக கொச்சுவேலியில் இருந்து ஆக.27ம் தேதி காலை 11.40 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 07:52 (IST) 18 Aug 2023ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 15,500 கனஅடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை வினாடிக்கு 14,000 கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், இன்று காலை மேலும் அதிகரித்துள்ளதால் 3வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.