Advertisment

Tamil news today: இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. உதயநிதி தொடங்கி வைக்கிறார்

Tamil Nadu News, Tamil News Petrol price Today - 16-01-2023 இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை துவக்கி வைக்க உள்ளார். போட்டியில் 900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 240-வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை

நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



  • 22:45 (IST) 16 Jan 2023
    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மு.க.அழகிரியுடன் சந்திப்பு

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் மு.க.அழகிரியுடன் சந்திப்பு அமைச்சரான பின் முதல் முறையாக தனது பெரியப்பாவை சந்தித்தார் வீட்டு வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றார்



  • 22:44 (IST) 16 Jan 2023
    கேரளாவில் முகக் கவசம் கட்டாயம்

    கேரளாவில் முகக் கவசம் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தல்



  • 19:58 (IST) 16 Jan 2023
    ரிமோட் வாக்குப்பதிவு... திமுக எதிர்ப்பு

    ரிமோட் வாக்குப்பதிவு கருத்துக் கேட்புக் கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை (ஜன.16) நடைபெற்றது.

    அதில் திமுக சார்பில் எம்.பி. வில்சன் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரிமோட் வாக்குப்பதிவு வசதி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், திமுக ஆட்சேபனை தெரிவித்தது.

    கட்சிகளின் கடும் எதிர்ப்பால் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை விளக்கம் இன்று நடைபெறவில்லை” என்றார்.



  • 19:49 (IST) 16 Jan 2023
    உயிரிழந்த மாடுபிடி வீரர், குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்.. மு.க. ஸ்டாலின் உத்தரவு

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் மற்றும் பார்வையாளர் அரவிந்த் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



  • 19:36 (IST) 16 Jan 2023
    2023 மாநில தேர்தல்.. பாஜக நிர்வாகிகளுக்கு நட்டா உத்தரவு

    2023-ம் ஆண்டு நடைபெறும் எந்த மாநில சட்டமன்றத் தேர்தலிலும் கட்சி தோல்வியடையாமல் இருக்க கட்சி தேசிய நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார்.



  • 19:18 (IST) 16 Jan 2023
    உத்தரகாண்டில் மற்றொரு ஜோஷிமத்.. காங்கிரஸ் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

    உத்தரகாண்ட்: தார்சூலாவில் எல்லை சாலையை விரிவுபடுத்துவதில் அனுமதிக்கப்பட்ட வரம்புக்கு மேல் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி குற்றஞ் சாட்டியுள்ளார், மேலும், அதை "மற்றொரு ஜோஷிமத்" ஆக விடமாட்டேன் என்று கூறினார்.



  • 19:01 (IST) 16 Jan 2023
    டிசம்பரில் இறக்குமதி குறைந்தது

    2022 டிசம்பரில் இந்தியாவின் இறக்குமதி கடந்த ஆண்டு இதே மாதத்தில் 60.33 பில்லியன் டாலரில் இருந்து 58.24 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.



  • 18:41 (IST) 16 Jan 2023
    ஜோஷிமத் நெருக்கடி, உயர் நீதிமன்றத்தை நாட உத்தரவு

    ஜோஷிமத் நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தை நாடுமாறு சுவாமி அவிமுக்தேஷ்வரானந்திடம் உச்ச நீதிமன்றம் கோரியது.



  • 18:29 (IST) 16 Jan 2023
    ராம்சரித்மனாஸ் அவமதிப்பு, வாக்கு வங்கி அரசியல்.. மத்திய அமைச்சர்

    சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறுவதற்காக பீகார் அமைச்சரின் 'ராம்சரித்மனாஸ்' பற்றி இழிவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

    இதற்கு "ஓட்டு வங்கி மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலும்" ஒரு காரணமாகும் என மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறினார்.



  • 18:15 (IST) 16 Jan 2023
    இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிவு

    இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் 22 காசுகள் சரிந்து 81.60 ஆக (தற்காலிகமாக) முடிவடைந்தது.



  • 17:55 (IST) 16 Jan 2023
    தோனி, கோலி மகள்கள் மீது அவதூறு.. டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

    கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனியின் மகள்கள் குறித்து சமூக வலைதளங்களில் அநாகரீகமாக கருத்து தெரிவித்ததாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி மகளிர் ஆணையத்தின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.



  • 17:45 (IST) 16 Jan 2023
    சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

    சென்செக்ஸ் 168.21 புள்ளிகள் சரிந்து 60,092.97 ஆக முடிந்தது; நிஃப்டி 61.75 புள்ளிகள் சரிந்து 17,894.85 ஆக உள்ளது.



  • 17:36 (IST) 16 Jan 2023
    பாலமேடு ஜல்லிக்கட்டு.. முதலிடம் பிடித்தார் தமிழரசன்

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.



  • 17:18 (IST) 16 Jan 2023
    வாரிசு மனிதநேயம் பேசுகிறது.. நடிகர் ஷாம்

    வாரிசு படம் மனிதநேயம் குறித்து பேசுகிறது நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.

    நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு, அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு மோதியது. இரு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளன.



  • 17:02 (IST) 16 Jan 2023
    நான் ஒரு மிடில் கிளாஸ் இந்தியர்.. நிர்மலா சீதாராமன்

    தாம் ஒரு மிடில் கிளாஸ் இந்தியர் என்பதால் தனக்கு மிடில் கிளாஸ் மக்களின் துயரம் தெரியும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.



  • 16:43 (IST) 16 Jan 2023
    அஜித் குமாருடன் இணையும் ஐஸ்வர்யா ராய்?

    அஜித் குமாரின் 62ஆவது படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தப் படத்தை டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.



  • 16:34 (IST) 16 Jan 2023
    ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனை.. அதிமுக பங்கேற்பு

    டெல்லியில் ரிமோட் வாக்குப்பதிவு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரிமோட் முறையில் வாக்குப்பதிவு செய்வது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்திவருகிறது.



  • 16:26 (IST) 16 Jan 2023
    பாலமேடு ஜல்லிக்கட்டு.. நேரம் நீட்டிப்பு

    பாலமேடு ஜல்லிக்கட்டு நேரம் மாலை 5 மணியாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    இன்னும் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்படாமல் உள்ளன.



  • 15:54 (IST) 16 Jan 2023
    பொங்கல் பண்டிகை: வழக்குப் பதிவு!

    பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று நடத்தப்பட்ட வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 376 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 359 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.



  • 15:27 (IST) 16 Jan 2023
    பாலமேடு ஜல்லிக்கட்டு: 6ம் சுற்று முடிவுகள்!

    18 காளைகளை பிடித்து மணி முதலிடம்

    16 காளைகளை பிடித்து தமிழரசன் 2ம் இடம்

    15 காளைகளை பிடித்து ராஜா 3ம் இடம்



  • 15:01 (IST) 16 Jan 2023
    "குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2000" - காங்கிரஸ் அறிவிப்பு!

    கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என காங்கிரசின் 2வது தேர்தல் வாக்குறுதியாக பிரியங்கா காந்தி அறித்துள்ளார்.



  • 15:00 (IST) 16 Jan 2023
    படப்பிடிப்பில் விஜய் ஆண்டனிக்கு விபத்து!

    மலேசியா, லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நடிகர்

    விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது. அவரை தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



  • 14:29 (IST) 16 Jan 2023
    பாலமேடு ஜல்லிக்கட்டு: 5ம் சுற்று முடிவுகள்

    18 காளைகளை பிடித்து மணி முதலிடத்தையும், 15 காளைகளை பிடித்து ராஜா 2ம் இடமிடத்தையும், 11 காளைகளை பிடித்து தமிழரசன் 3ம் இடமிடத்தையும் பிடித்துள்ளனர்.



  • 13:59 (IST) 16 Jan 2023
    திருச்சி: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

    திருச்சி, சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பார்வையாளராக இருந்த மாடுபிடி வீரர் அரவிந்த் உயிரிழந்தார்.

    காளை முட்டியதில் படுகாயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவர் மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 13:06 (IST) 16 Jan 2023
    விருது வென்ற RRR படம்

    அமெரிக்காவில் நடைபெற்ற கிரிட்டிஸ் சாய்ஸ் விருது விழாவில், ராஜமவுலி இயக்கிய RRR படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான விருதை வென்றது.



  • 12:45 (IST) 16 Jan 2023
    அண்ணாமலைக்கு, கனிமொழி பதில்

    திருக்குறளுக்கான கருணாநிதி உரை தெளிவாக உள்ளது அதை படித்தாலே புரிந்து கொள்ளலாம். திருக்குறளைப் படித்தால் காவிக்கும், திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள்; திருக்குறளை படிக்க வேண்டும்- ட்விட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதவிட்ட பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க எம்.பி கனிமொழி பதில்



  • 12:42 (IST) 16 Jan 2023
    ஒடிடி உரிமை

    அஜித் நடிக்கும் AK 62 படத்தின் ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.



  • 11:54 (IST) 16 Jan 2023
    திருவள்ளுவர் தினம்.. மோடி ட்வீட்

    திருவள்ளுவரின் உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன்



  • 11:52 (IST) 16 Jan 2023
    விடுமுறை இல்லை

    பொங்கலுக்கு பின் ஜனவரி 18ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை என அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்



  • 11:51 (IST) 16 Jan 2023
    விமானம் விபத்து

    நேபாளத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 11:50 (IST) 16 Jan 2023
    தங்கம் விலை

    சென்னையில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து ரூ. 42,536க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 11:50 (IST) 16 Jan 2023
    பாஜக செயற்குழு கூட்டம்

    டெல்லியில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.



  • 11:49 (IST) 16 Jan 2023
    பிரபஞ்ச அழகி 2022

    அமெரிக்காவில் நடந்த 71வது பிரபஞ்ச அழகி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆர் போனி கேப்ரியல் (28), பிரபஞ்ச அழகி 2022 பட்டத்தை தட்டிச் சென்றார்.



  • 11:18 (IST) 16 Jan 2023
    ஜேம்ஸ் கேமரன் உடன் ராஜமவுலி

    ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரன், இயக்குநர் ராஜமவுலியின் RRR படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். அப்போது எடுத்த படத்தை இயக்குநர் ராஜமவுலி தன் ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.



  • 10:44 (IST) 16 Jan 2023
    பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

    சேலம் சிறுவாச்சூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு



  • 10:28 (IST) 16 Jan 2023
    விடுதியில் 3 பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது - மருத்துவமனையில் அனுமதி

    செங்கல்பட்டு, தாம்பரம் கடப்பேரி பகுதியில் உள்ள விடுதியில் 3 பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது

    உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி



  • 10:06 (IST) 16 Jan 2023
    திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

    சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை

    அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு உள்ளிட்டோரும் மரியாதை



  • 10:06 (IST) 16 Jan 2023
    ஜல்லிக்கட்டு பார்க்க வந்த ‘துணிவு’ பட வில்லன் நடிகர்

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ‘துணிவு’ பட வில்லன் நடிகர் ஜான் கொக்கேன் ஜல்லிக்கட்டு போட்டியை தன் குடும்பத்தினருடன் பார்த்து வருகிறார்.



  • 09:19 (IST) 16 Jan 2023
    ஹாக்கி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஆட்டம் டிரா

    ஹாக்கி உலக கோப்பை: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது



  • 08:46 (IST) 16 Jan 2023
    பா.ஜ.க 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது

    டெல்லியில் பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது

    9 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசனை



  • 08:43 (IST) 16 Jan 2023
    பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

    புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது . முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment