scorecardresearch

Tamil News Update: மின் கொள்முதலுக்கு தடை: தமிழகத்தில் மின்தடை இருக்காது.. செந்தில் பாலாஜி உறுதி

Tamil News , Petrol price Today, IND vs ZIM 1st ODI, Nellai kannan, Janmashtami 2022– 19 August 2022 – இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Update: மின் கொள்முதலுக்கு தடை: தமிழகத்தில் மின்தடை இருக்காது.. செந்தில் பாலாஜி உறுதி
Tamil News updates

தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் வாங்க மற்றும் பகிர்ந்துகொள்ள மத்திய அரசு தடைவித்துள்ளது. நிலுவத்தொகை செலுத்திவில்லை என்பதால் இந்த நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 926.16 கோடி நிலுவைத் தொகை உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் செந்தில் தமிழக அரசு சார்பில், மத்திய அரசின் மின் தொகுப்புக்கு 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவைத் தொகை இருக்கிறது. இதனால், தமிழகத்தில் மின்தடை இருக்காது என கூறியுள்ளார்.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil News Latest Updates

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி, ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் குறிக்கிறது. அந்தவகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 19 அன்று  உலகம் முழுவதும் உள்ள இந்து மக்களால் கோலகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 40.3 ஓவர்கள் முடிவில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிகர் தவான் – 81, சுப்மன் கில் – 82 ரன்களை எடுத்தனர்.

நெல்லை கண்ணன் மறைவு

தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆன நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 78. திருநெல்வேலி பூர்விகமாகக் கொண்ட நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர்.

அவரது உடலுக்கு  அரசு சார்பில், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நெல்லை டவுனில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற அமைச்சர்கள், நெல்லை கண்ணன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Live Updates
23:48 (IST) 19 Aug 2022
பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டுவிடும் என அச்சம் கொள்ள தேவையில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: பொதுமக்கள் மின்தடை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறினார்.

20:24 (IST) 19 Aug 2022
கலால் வரி ஊழல்: டெல்லி துணை முதல்வர் உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. டெல்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பாக சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.

இந்த சோதனைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ மனோஜ் திவாரி, அவர்களின் மதுக் கொள்கைக்கான காரணம் போதுமானதாக இருந்திருந்தால், சிசோடியாவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் மத்திய அமைப்பின் விசாரணையையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டிருப்பார்கள் என்றார். அந்த மதுபானக் கொள்கை ஒரு மோசடி என்பதால்… அவர்கள் அதை ரத்து செய்தனர்” என்று என்று கூறினார்.

19:26 (IST) 19 Aug 2022
உள்துறை செயலருக்கு பணி நீட்டிப்பு

உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

19:15 (IST) 19 Aug 2022
மகாராஷ்டிராவில் உறியடி நிகழ்ச்சிகளில் காயம்

மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடந்த உறியடி நிகழ்ச்சிகளில் இதுவரை 78 பேர் காயமுற்றுள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிருக்கு ஆபத்தில்லை என மாநகராட்சி தகவல்கள் கூறுகின்றன.

18:53 (IST) 19 Aug 2022
இரட்டை குழந்தைகளுக்கு தாயான நமீதா

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை குழந்தைகளுடன் நடிகை நமீதா வழிபாடு நடத்த வந்தார்.

அப்போது தமது குழந்தைகளுக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. விரைவில் கிருஷ்ணரின் பெயரையொட்டி பெயர் வைப்போம்” என்றார்.

மேலும் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

18:22 (IST) 19 Aug 2022
ராகுல் அலுவலகத்தில் மகாத்மா படம் சேதம்: காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி., ராகுல் காந்தி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படங்களை சேதப்படுத்தியதாக காங்கிரஸ் தொண்டர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

18:13 (IST) 19 Aug 2022
பொன்னியின் செல்வன் பாடல் வெளியீடு

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாடல் சோழா சோழா இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது.

17:46 (IST) 19 Aug 2022
செப்.7 தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவரும், வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் என மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைப்பயணத்தை ராகுல் காந்தி தொடங்கிவைக்கிறார்.

17:22 (IST) 19 Aug 2022
வங்கிக் கொள்ளை 31.7 கிலோ தங்கம் மீட்பு

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கொள்ளை போன தங்க நகைகள் 9 இடங்களில் இருந்து மீட்கப்பட்டன.

அந்த வகையில் இதுவரை 31.7 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16:55 (IST) 19 Aug 2022
எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

அதிமுக உள்கட்சி பிரச்னை விஸ்வரூபம் அடைந்துள்ளது. ஐகோர்ட் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பையும் எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். தொடர்ந்து முக்கிய தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

16:36 (IST) 19 Aug 2022
கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக திருவாரூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

16:35 (IST) 19 Aug 2022
அரும்பாக்கம் தனியார் வங்கி கொள்ளை : 31.7 கிலோ தங்கம் மீட்பு

சென்னை, அரும்பாக்கம் தனியார் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ், சூர்யா, அமல்ராஜ் உட்பட 9 பேரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

16:05 (IST) 19 Aug 2022
போதையில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட உலகின் மிக இளமையான பெண் பிரதமர்!

பின்லாந்தின் ஆளும் ஜனநாயக சமூக கட்சியின் பிரதமராக இருப்பவர் சன்னா மரீன். 2019 ஆம் ஆண்டில் தனது 34 வயதில் பிரதமர் பதவி ஏற்று உலகின் இளம் வயது பெண் பிரதமர் என்ற பெருமை பெற்றறார்.

இந்நிலையில், தனது அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்களுடன் மது விருந்தில் டான்ஸ் ஆடிய குத்தாட்டம் போட்டுள்ளார் பிரதமர் சன்னா மரீன். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அவர் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

15:52 (IST) 19 Aug 2022
மும்பையில் நொறுங்கி விழுந்த 4 மாடி கட்டிடம்!

மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்ட கட்டிடம், யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இந்நிலையில், அந்த 4 மாடி கட்டிடம் நொறுங்கி விழுந்தது.

15:47 (IST) 19 Aug 2022
எலி பேஸ்ட்க்கு தடை: அமைச்சர் மா.சு!

தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட், சாண பவுடர் விற்பனையை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

15:41 (IST) 19 Aug 2022
‘கேப்டன்’ படத்தின் ட்ரெய்லர் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கேப்டன்' படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

15:24 (IST) 19 Aug 2022
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் – அமைச்சர் சிவசங்கர்!

“பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.11.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் ஆலோசித்து அடுத்தடுத்து வரும் தொடர் விடுமுறைகளின்போது கட்டண உயர்வு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

15:12 (IST) 19 Aug 2022
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை!

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பின்னும் கருவுற்றதால் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீட்டை 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

14:59 (IST) 19 Aug 2022
“ஓபிஎஸ் ஆதரவாளர்களை திட்டமிட்டு இபிஎஸ் தோற்க வைத்தார்” – சையது கான், ஓபிஎஸ் ஆதரவாளர்!

இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் சையது கான், “தனக்கு வேண்டியவர்களை மட்டும் எடப்பாடி பழனிசாமி ஜெயிக்க வைத்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களை திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி தோற்க வைத்தார். எடப்பாடி பழனிசாமி எப்படி முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

14:57 (IST) 19 Aug 2022
நித்யானந்தாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட்: கர்நாடக நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடகாவின் ராம்நகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், நித்யானந்தாவுக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

14:16 (IST) 19 Aug 2022
திருமாவளவன் அஞ்சலி

நெல்லை கண்ணன் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஞ்சலி

13:31 (IST) 19 Aug 2022
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அபாரத நடவடிக்கை

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அபாரத நடவடிக்கை . கூடுதல் கட்டண புகாரில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொடர் விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூலை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

13:01 (IST) 19 Aug 2022
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் – துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .சென்னை, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் .

13:00 (IST) 19 Aug 2022
தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று டெல்டா மற்றும் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் * கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. துரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

12:36 (IST) 19 Aug 2022
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் வரும் 24 முதல் 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்

12:36 (IST) 19 Aug 2022
சீன கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது இந்தியாவை உளவு பார்க்க தான்

சீன கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது இந்தியாவை உளவு பார்க்க தான். சீன கப்பல் விவகாரத்தில் இலங்கையை இந்தியா ஏன் கண்டிக்கவில்லை?. கடந்த காலங்களில் இலவசங்கள் குறித்து பாஜக ஏன் பேசவில்லை- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

12:35 (IST) 19 Aug 2022
மின்சார கொள்முதல் – விற்பனைக்கு தடை

மின்சாரம் வாங்க, விற்க தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, பீகார் உள்பட 13 மாநிலங்களுக்கு தடை 13 மாநிலங்களும் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,000 கோடி நிலுவை பாக்கி நிலுவை தொகையை செலுத்த தவறியதால் மத்திய அரசு நடவடிக்கை

11:41 (IST) 19 Aug 2022
மின் கொள்முதலுக்கு தடை – பாதிப்பு ஏற்படாது

மின்சார கொள்முதல் தடையால் தற்காலிகமாக எந்த பாதிப்பும் ஏற்படாது நிலுவை தொகை விரைவில் முழுமையாக செலுத்தப்படும் – தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல் .

11:39 (IST) 19 Aug 2022
தங்கம் சவரனுக்கு ரூ.224 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து ரூ.38,576-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ.4,822க்கு விற்பனை

11:35 (IST) 19 Aug 2022
இபிஎஸ் வராமல் போனால் போகட்டும்

இபிஎஸ் வராமல் போனால் போகட்டும் . தொண்டர்கள் ஓபிஎஸ்-ஸை தேடி வருகிறார்கள் – ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்

10:50 (IST) 19 Aug 2022
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆவணி திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

10:39 (IST) 19 Aug 2022
நெல்லை கண்ணன் மறைவு.. கமல் இரங்கல்

அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி

10:38 (IST) 19 Aug 2022
நீட் தேர்வில் விலக்கு

நீட் தேர்வில் விலக்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில விவரங்களை தமிழ்நாடு அரசிடம் கேட்டுள்ளது; அதன் பின் குடியரசு தலைவர் நீட் விலக்கிற்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புகிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

09:30 (IST) 19 Aug 2022
சிபிஐ ரெய்டு

புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ சோதனை நட த்தி வருகிறது.

09:03 (IST) 19 Aug 2022
கருணாநிதி வீட்டுக்கு சென்ற தமிழிசை

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வியாழன் இரவு சென்னை கோபாலபுரம் வேணு கோபாலசுவாமி கோயிலில், தமிழிசை சவுந்திரராஜன் தரிசனம் செய்தார். பிறகு கருணாநிதியின் இல்லத்திற்கு சென்ற அவர் தயாளு அம்மாளை சந்தித்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.

09:03 (IST) 19 Aug 2022
நீதிமன்றம் உத்தரவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், 4 மாவட்ட செயலாளர்களின் முன் ஜாமின் மனுக்களில், காவல்துறை பதிலளிக்கும் வரை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

08:14 (IST) 19 Aug 2022
காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை வங்கி கொள்ளை வழக்கில் 3.5 கிலோ தங்க நகைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில், அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜை சஸ்பெண்டு செய்து காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்தியபிரியா உத்தரவிட்டார்.

Web Title: Tamil news today live janmashtami 2022 ops eps nellai kannan ind vs zim 1st odi