பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
நீர் நிலவரம்
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2398 மில்லியன் கன அடியாக உள்ளது; 225 கன அடி நீர்வரத்து. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 807 மில்லியன் கன அடியாக உள்ளது; 10 கன அடி நீர்வரத்து. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 484 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை
அம்பேத்கர் சிலை திறப்பு
ஹைதராபாத்தில் கட்டப்பட்டு உள்ள 125 அடி உயர அம்பேத்கர் சிலையை, அவரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று பிற்பகல் 2 மணிக்கு திறந்து வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் கோவிலின் சனிப்பெயர்ச்சி விழா டிசம்பர் 20ம் தேதி நடைபெறும்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் நடைபெற்ற பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வில் அறிவிப்பு
கோவையை சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கனரக வாகனங்கள் ஓட்டும் பெண் காவலருக்கும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 2876 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 301 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்ட கடிகாரத்தின் சீரியல் நம்பர் மாறியுள்ளது. மனசாட்சி உள்ள யாரும் அண்ணாமலை வெளியிட்டதை பில் என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள். வாட்ச் வாங்கியவர் 4 லட்சத்திற்கு வாங்கி 3 லட்சத்திற்கு விற்றார் என்பதை எப்படி ஏற்க முடியும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
திராவிட கொள்கைகள் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. நமது நாட்டை காப்பாற்றும் ஆற்றல் சமூகநீதி, சகோரத்துவம், சம தர்மம் ஆகிய 3 கருத்தியலுக்குதான் உண்டு. சமூகநீதி சக்திகளின் ஒற்றுமை தேர்தலுக்காக மட்டுமல்ல இந்தியாவின் எதிர்காலத்திற்காக ஏற்பட வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த நிலையில் நடிகை குஷ்பு நெகிழ்ச்சி ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “ஹீரோக்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். இதனை தோனி நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சூரி, விடுதலை 2 குறித்த அப்டே்டையும் தெரிவித்துள்ளார்.
அதில் அடுத்த பாகத்துடன் விரைவில் உங்களை சந்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தி.மு.க. சார்பில் நடந்த இஃப்தார் நோன்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது, “சிறுபான்மையினர் கோரிக்கை வைக்காமலே பல திட்டங்களை செய்துள்ளோம்” என்றார்.
நடிகர் சிவ கார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் என்ற படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படக்குழு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அறிவுறுத்தல் தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு சில அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தி.மு.க. அரசு அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் தான் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்தார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்.16ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தப் புகாரில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ்சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.
கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
பெண்கள் பலர் அவர் மீது பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளனர்.
தி.மு.க. அமைச்சர்களின் சொத்து பட்டியலை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் மடியில் கனம் இல்லை அதனால் வழியில் பயமில்லை என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மூத்தத் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான லட்சுமணன் சாவடி காங்கிரஸில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி, இந்தியாவிலேயே மிக ‘உயரமான அம்பேத்கர் சிலை’-ஐ (125 அடி) ஐதராபாத்தில் இன்று தெனங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைத்தார்.
ட்விட்டர் ப்ளூ டிக் பயனர்களுக்கு 10 ஆயிரம் எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் போல்ட் அல்லது இட்டாலிக் எழுத்து வகைகளையும் பயன்படுத்தலாம் என்றும் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், அதிவேகமாக எதிர் எதிர் திசையில் வந்த 2 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துளாகியது. இதில், பிறந்து 45 நாட்களேயான இதேஷ் என்ற ஆண் குழந்தை பரிதமாக உயிரிழந்தது.
2 வாகனத்தில் வந்தவர்களும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆளுநர் மாளிகையில் நடந்த சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முன்னிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுகையில், “தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதை அம்பேத்கர் ஆதரித்தார்” என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் துப்பாக்கிச் சூட்டில் இறந்த வீரர் யோகேஷ்குமாரின் உறவினர்கள் போராட்டம். யோகேஷ்குமார் உடலுக்கு அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஞ்சாப், பதிண்டா ராணுவ முகாமில் உயிரிழந்த கமலேஷின் உடல் அவரது சொந்த ஊரான வனவாசி-க்கு வந்தடைந்தது. அவரது உடலுக்கு மலர்தூவி கிராம மக்கள் வரவேற்றனர்.
கமலேஷ்-க்கு அரசு மரியாதை வேண்டும் என கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
“திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அண்ணாமலை வெளியிட வேண்டும்; யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்”, என்றார்.
“அனைவருக்கும் பொதுவாக நான் செயல்பட்டு வருகிறேன்; சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை.
சாதி அடிப்படையில் நான் செயல்பட்டிருந்தால் வேறு சமுதாயத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக்கிருப்பேனா?”, என்று எடப்பாடி பழனிசாமியை சுட்டிக்காட்டிய வி.கே.சசிகலா
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையத்தை ஜூன் மாதம் முதலமைச்சர் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
“கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்” என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் விழாவையொட்டி, அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகிறார்.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 11,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கொரோனாவின் காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 49,622ஆக உயர்வு.
நண்பரிடம் ரபேல் வாட்ச்சை ரூ. 3 லட்சம் கொடுத்து வாங்கினேன். கோவை ஜிம்சன் நிறுவனத்தில் ரஃபேல் வாட்ச்சை வாங்கி, கேரளாவில் உள்ள நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் எனக்கு கொடுத்தார். மே மாதம் என்னிடம் கொடுத்தார்- அண்ணாமலை
2021 மார்ச்சில் ரபேல் வாட்ச்சை வாங்கிய கேரளவில் உள்ள நண்பர் சேரலாத ராமகிருஷ்ணன் மே மாதம் என்னிடம் கொடுத்தார்- அண்ணாமலை
என் வீட்டு வாடகை, நான் பயன்படுத்தும் கார் ஆகியவற்றின் செலவை எனது நண்பர்கள்தான் வழங்கி வருகின்றனர். முதல் தலைமுறை அரசியல்வாதியின் கஷ்டம் இதுதான் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 352 உயர்ந்து ரூ. 45,760க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,720-க்கு விற்பனை
தமிழ் கலாச்சாரம், சர்வதேச அளவில் புகழ்பெற்றிருப்பதால் உலகம் முழுவதும் இந்த நன்னாள் கொண்டாடப்படுகிறது; வரும் ஆண்டில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருகட்டும்; தமிழ் புத்தாண்டை ஒட்டி பிரதமர் மோடி வாழ்த்து.
சட்டமேதை பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.
திண்டுக்கல், பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் உதயக்குமாரை தாக்கி மர்மநபர்கள் கொள்ளை. அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த 3 பேர் மருத்துவரை தாக்கி, 100 சவரன் நகை, ரூ. 20 லட்சம் கொள்ளை.
நெல்லை, மணிமூர்த்திஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் சுவாமி மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு . தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமி மீது சூரிய ஒளி கதிர்கள் விழும் நிகழ்வு. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
அசாம், கவுகாத்தியில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.