Advertisment

Tamil News Live Updates: நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சை : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

Tamil Nadu News Update Today- 22 June 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Neet fra.jpg

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தமிழகத்தில் 25 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் வேக மாறுபாடுகாரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 25-ம்தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் நீலகிரிமற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில்கன முதல் மிகக் கனமழைபெய்யக்கூடும். திருப்பூர், தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 22, 2024 23:15 IST
    நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சை : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

    நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாளை நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய தேதிவ விரைவில் அறிவிக்கப்படும் என ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.



  • Jun 22, 2024 23:11 IST
    தேசிய தேர்வு முகமை தலைவர் மாற்றம்

    தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைவராக, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.



  • Jun 22, 2024 21:06 IST
    விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சேஷசமுத்திரம் - குன்ன மேட்டு பகுதியை சேர்ந்த செந்தில் என்ற சாராய வியாபாரியை தனிப்படை போலீஸ் கைது செய்தது.



  • Jun 22, 2024 20:02 IST
    தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்


    தமிழ்நாட்டில் இன்று 4 இடங்களில் 100°Fக்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. அந்த இடங்கள், மதுரை விமான நிலையம் (102°F), ஈரோடு (101°F), கடலூர் (100°F) மற்றும் பரங்கிப்பேட்டை (100°F) ஆகும்.



  • Jun 22, 2024 19:53 IST
    விஜய்க்கு தமிழிசை வாழ்த்து

    நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு தமிழிசை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர், “தமிழக வெற்றிக் கழகத்தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • Jun 22, 2024 19:26 IST
    கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்கள்; பீட்டர் அல்போன்ஸ் கேள்வி

     

    “கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுந்திருக்கிறது” என காங்கிரஸ் மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.



  • Jun 22, 2024 18:37 IST
    தஞ்சையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க எம்.எல்.ஏ கோரிக்கை

     

    சட்டப்பேரவையில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம், “டெல்டா மாவட்டமான தஞ்சையில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். வேளாண் அறிவியல் மையத்திற்கு  ‘நம்மாழ்வார்’ பெயர் வைக்க வேண்டும்;
    நெல், கரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை ரூ.6 வரை உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.



  • Jun 22, 2024 18:37 IST
    தஞ்சையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க எம்.எல்.ஏ கோரிக்கை

     

    சட்டப்பேரவையில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ நீலமேகம், “டெல்டா மாவட்டமான தஞ்சையில் புதிய வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். வேளாண் அறிவியல் மையத்திற்கு  ‘நம்மாழ்வார்’ பெயர் வைக்க வேண்டும்;
    நெல், கரும்பு உள்ளிட்ட பொருட்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை ரூ.6 வரை உயர்த்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.



  • Jun 22, 2024 18:34 IST
    தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

     

    “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி” ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 22, 2024 16:41 IST
    மது விலக்கு, ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்க வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “மது விலக்கு, ஆயத்தீர்வை அமைச்சரை பதவி நீக்க வேண்டும். கள்ளச்சாராயத்தால் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை இல்லை; பா.ஜ.க-வினரை கைது செய்வதில் காட்டும் அக்கறையை சிறிதேனும் கள்ளச்சாராய ஒழிப்பில் அரசு காட்ட வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.



  • Jun 22, 2024 16:38 IST
    நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்; பா.ஜ.க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு

    நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து அரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் காங்கிரசார், பா.ஜ.க அலுவலகத்துக்கு பூட்டு போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.



  • Jun 22, 2024 16:34 IST
    சென்னை - மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

    சென்னை - மும்பை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தஞ்சையை சேர்ந்த பிரசன்னா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் செல்போன் மற்றும் அது அது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.



  • Jun 22, 2024 16:08 IST
    மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    பம்ப்செட்டில் குளித்துக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்கள் மீது மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது. 3 மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 



  • Jun 22, 2024 16:07 IST
    நிர்மலா சீதாராமனை சந்தித்து தங்கம் தென்னரசு கோரிக்கை 

    'தமிழ்நாடு அரசுக்கு ரூ.3, 000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 



  • Jun 22, 2024 15:14 IST
    மாஞ்சோலை, நீட் தேர்வு - இரா.முத்தரசன் கருத்து 

    “நெல்லை மாஞ்சோலை உள்ளிட்ட தேயிலை தோட்டங்களின் குத்தகை காலம் முடிந்து 4 தலைமுறையாக பணியாற்றிய தொழிலாளர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு கையில் எடுக்க வேண்டும், அல்லது மாற்று நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்;

    நீட் தேர்வு வினாத்தாள் விவகாரத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்று திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார். 

     



  • Jun 22, 2024 15:06 IST
    'சென்னையில் ரூ.10 கோடியில் 14 புதிய பூங்காக்கள்' - அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு 

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் முக்கிய அறிவிப்புகளை நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:- 

    ரூ.80.00 கோடியில் 29,000 மக்கள் பயன்பெறும் வகையில் வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.800 கோடியில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.150 கோடியில் 25 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பேரூராட்சிகளில் ரூ.315.50 கோடியில் 575 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.

    பேரூராட்சிகளில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் தள்ளு வண்டிகளுக்கு மாற்றாக 500 மின்கல வாகனங்கள் மற்றும் 150 இலகுரக வாகனங்கள் வாங்கப்படும். ரூ.200 கோடியில் பேரூராட்சிகளிலுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும். ரூ.18 கோடியில் சென்னையில் 15 இடங்களில் மழைநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ரூ.19.65 கோடியில் பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க 500 பேட்டரி வாகனங்கள், 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2500 எண்ணிக்கை மெட்டாலிக் காம்பாக்டர் குப்பை சேகரிக்கும் தொட்டிகள், 5 டிரக்குகள் மீது பொருத்தப்பட்ட கிரேன்கள் கொள்முதல் செய்யப்படும்.

    சென்னையில் ரூ.10 கோடியில் 14 புதிய பூங்காக்கள் மற்றும் 6 நவீன விளையாட்டுத் திடல்கள் அமைக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்த ஆண்டு ரூ.35 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் மேம்படுத்தப்படும், ரூ.30 கோடியில் 16 புதிய பள்ளிக் கட்டடங்கள் அமைக்கப்படும்." என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 

     

     



  • Jun 22, 2024 15:01 IST
    2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் - ஐ.பெரியசாமி 

    மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டு அமைக்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். 

     



  • Jun 22, 2024 15:00 IST
    கோமா நிலைக்கு சென்ற மனைவிக்கு தீவிர சிகிச்சை 

    எதிர்பாராதவிதமாக மாடியில் கிடந்த சோப்பில் கால் வைத்து தவறி விழுந்த மனைவியை காப்பற்ற கணவன் போராடியுள்ளார். துரதிஷ்ட வசமாக கை நழுவி கீழே விழுந்து  தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்ற மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



  • Jun 22, 2024 14:59 IST
    பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியீடு!

    'நடன புயல்' பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி  வெளியிட்டார். 

     



  • Jun 22, 2024 14:30 IST
    வீதிகளில் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ரூ.5,000 அபராதம் கே என் நேரு

    பணக்காரர்கள் நாய் வளர்க்கிறார்கள் - வெளியில் அழைத்து வரும் போது அசம்பாவிதம் நடக்கிறது.  நாய்களுக்கு கருத்தடை செய்து பெருகாமல் பார்த்துக் கொள்ளும் பணி நடந்து வருகிறது. வீதிகளில் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ரூ.5,000 அபராதம் - 2வது முறை ரூ.10,000 அபராதம் "3வது முறை மீண்டும் பிடிபட்டால் மாடுகளை ஏலம் விட நடவடிக்கை" "நாய்களை பூங்காவிற்கு அழைத்து வரும் போது சில தவறுகள் நடந்து வருகின்றன" நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு



  • Jun 22, 2024 13:53 IST
    எங்கெல்லாம் இன்று மழை

    இன்று திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jun 22, 2024 13:53 IST
    சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: கே.என்.நேரு

    சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தகவல் . சென்னை மாநகரில் மொத்த மக்கள்தொகை 89 லட்சம். வார்டுகளின் எண்ணிக்கை 200" "ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர்" சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன - கே.என்.நேரு. 



  • Jun 22, 2024 13:51 IST
    கள்ளச்சாரயம்: 3 பேர் மீது கொலை வழக்கு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையத்தில் 3 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் கண்ணன், வீராசாமி, வீரமுத்து ஆகிய 3 பேர் விஷ சாராயம் குடித்ததால் உயிரிழப்பு கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமர், சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகியோர் மீது கொலை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட நிலையில் 3 பேரும் கைது



  • Jun 22, 2024 13:16 IST
    நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது விபரீதம்:

    நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது விபரீதம் .சிறுவனின் கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த போது அணையாத நெருப்பு பதற்றத்தில் பெட்ரோல் கேனுடன் தீயை அணைக்க முயன்றதால் களேபரமான மேடை சாகசம் செய்த சிறுவன், தீயை அணைக்க முயன்ற நபருக்கு தீக்காயம் இருவரும் மருத்துவமனையில் அனுமதி .



  • Jun 22, 2024 12:59 IST
    விஷச்சாராய விற்பனை விவகாரம் - மெத்தனாலில் வெறும் தண்ணீரை கலந்து விற்றது விசாரணையில் வெளியானது

    கைதான மாதேஷிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் . ஆன்லைன் முலம் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜி.எஸ்.டி. பில் இல்லாமல் தின்னர் என்ற பெயரில் மெத்தனாலை வாங்கிய மாதேஷ் சென்னை மாதவரம் ரவுண்டானா அருகேயுள்ள தொழிற்சாலையில் இருந்தும் வாங்கப்பட்ட மெத்தனால் மாதேஷிடம் மெத்தனாலை வாங்கிய சின்னதுரை, அதில் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்றுள்ளார் சின்னதுரையிடம் இருந்து மெத்தனாலை வாங்கி அதில் மேலும் 1 லிட்டர் தண்ணீரை கலந்து விற்பனை செய்துவந்த கோவிந்தராஜன் . 



  • Jun 22, 2024 12:46 IST
    கள்ளச்சாராயம் விவகாரம் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

     சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக எச்சரித்தும் விற்பனையை கன்னுக்குட்டி தொடர்ந்ததாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்.  வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த விஷ சாராயத்தை சாராய வியாபாரி ராமரின் தந்தை தான் முதலில் குடித்திருக்கிறார் தந்தை உயிருக்கு போராடியதை பார்த்ததும் தன்னிடமிருந்த மெத்தனால் சாராயத்தை அழித்த ராமர் மெத்தனால் கலந்திருப்பதை உணர்ந்த ராமர் சக வியாபாரிகளான கன்னுக்குட்டி உள்ளிட்டவர்களை எச்சரித்துள்ளார் கன்னுக்குட்டி தவிர மற்ற அனைவரும் தாங்கள் வைத்திருந்த விஷச் சாராயத்தை கீழே கொட்டி விட்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் தன்னிடமிருந்த 330 லிட்டர் விஷச் சாராயத்தில் 250 லிட்டர் வரை கன்னுக்குட்டி விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 



  • Jun 22, 2024 12:38 IST
    பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த போதும் அ.தி.மு.கவினர் கேட்கவில்லை: ரகுபதி

    மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த காரணத்தால், இல்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்து சட்டப்பேரவையை முடக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்தார்; பேச வாய்ப்பு தரவில்லை என்ற குற்றச்சாட்டு, அப்பட்டமான பொய்; கேள்வி நேரத்தை கெடுக்கும் நோக்கில் அதிமுகவினர் செயல்பட்டனர்; பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்த போதும் அதிமுகவினர் கேட்கவில்லை; அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் போராடினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” - சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி



  • Jun 22, 2024 12:02 IST
    37 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர்:திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன்

    கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் விஷச்சாராயம் தொடர்பாக அ.தி.மு.க எம்.எல்.ஏ. அரசியல் ஆதாயம் வேண்டி புகார் தெரிவித்துள்ளார்; எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை பாமக தலைவர்கள் வைத்துள்ளனர்; 37 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர்கள் பேசியுள்ளனர் - சட்டப்பேரவை வளாகத்தில் சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏ. உதயசூரியன் பேட்டி



  • Jun 22, 2024 12:00 IST
    ராமதாஸ் , அன்புமணி ராமதாஸ் மீது மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ரகுபதி

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்படும்” - சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி



  • Jun 22, 2024 11:37 IST
    தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

    வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர் உயிரிழந்தால், அதிகபட்சம் ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு செல்ல விமான ஏற்பாடு செய்யப்படுகிறது.

    வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்கள் ஆன்லைன மூலம் பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 8,37,540 வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்ற பதிவு செய்துள்ளனர்.

    - சட்டப்பேரவையில் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி எழுப்பிய கேள்விக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பதில்



  • Jun 22, 2024 10:59 IST
    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேட்ட்டி

    140 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். 56 சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த 5 பேரின் உடல் நிலையில் முன்னேற்றம். விஷ முறிவுக்கான மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. உரிய மனநல ஆலோசனைக்கு பிறகே வீட்டுக்கு அனுப்புவோம். அரசின் ஆணைப்படி பாதிக்கப்பட்டு இறந்த அனைவருக்கும் இழப்பீடு. அனைத்து வித பரிசோதனைகளும் மேற்கொள்கிறோம்

    - கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பேட்ட்டி



  • Jun 22, 2024 10:57 IST
    இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா- வங்கதேசம் இன்று மோதுகின்றன. இரவு 8 மணிக்கு ஆண்டிகுவா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது.



  • Jun 22, 2024 10:34 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.6,695-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.53,560-க்கும் விற்பனையாகிறது.



  • Jun 22, 2024 10:14 IST
    எடப்பாடி பழனிசாமி பேட்டி

    மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என பல முறை குரல் கொடுத்தோம். விஷச்சாராயம் மக்களின் உயிர் பிரச்னை. அதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்.

    தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன

    - சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி       



  • Jun 22, 2024 09:54 IST
    எடப்பாடி பழனிசாமி பேட்டி

    மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என பல முறை குரல் கொடுத்தோம். விஷச்சாராயம் மக்களின் உயிர் பிரச்னை. அதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள்

    - சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி



  • Jun 22, 2024 09:53 IST
    அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு

    தமிழ்நாடு சட்டப்பேரவை 3-வது நாள் அமர்வு: கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி அதிமுக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும் என தொடர் முழக்கமிட்டு அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்



  • Jun 22, 2024 09:26 IST
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து வருகை

    கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரம் தொடர்பாக இன்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்றும் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். Eps



  • Jun 22, 2024 08:45 IST
    விஜய்க்கு, வெங்கட்பிரபு பிறந்தநாள் வாழ்த்து



  • Jun 22, 2024 08:44 IST
    கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது

    தமிழ்நாட்டில் விஷச்சாராய தடுப்பு நடவடிக்கையாக கடந்த 3 நாட்களில் 871 வியாபாரிகள் கைது.

    இதுவரை 861 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



  • Jun 22, 2024 08:39 IST
    தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. 12 - 20 செ.மீ. மழைப் பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • Jun 22, 2024 08:21 IST
    4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, கோவை மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Jun 22, 2024 07:48 IST
    தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி

    இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

    164 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.



  • Jun 22, 2024 07:38 IST
    கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரிப்பு

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரம் பகுதியை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, நேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 184 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி எண்ணிக்கை தற்போது 55 ஆக அதிகரித்துள்ளது.            



  • Jun 22, 2024 07:38 IST
    திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

    நீட் தேர்வுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் ஜூன் 24ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு;

    மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்



  • Jun 22, 2024 07:37 IST
    யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

    2024-2025-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

    பட்டபடிப்புக்கான விண்ணப்பப் படிவத்தை www.tnhealth.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



  • Jun 22, 2024 07:36 IST
    ஜூன் 26இல் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக அரசுக்கு புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷச்சாராய மரணங்கள் தொடா்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஜூன் 26 ஆம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.



  • Jun 22, 2024 07:36 IST
    கள்ளச் சாராயத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பீடு

    சட்டப்பேரவையில் நேற்று கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பான கவனஈர்ப்பு தீர்மானத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிலையான வைப்பீடாக வைக்கப்படும். மாதம்தோறும்பராமரிப்பு தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment