Tamil News Today live kamalhassan birthday : தமிழ் சினிமாவின் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமலஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
10 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்விசி-49 ராக்கெட். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது .
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது . வரும் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகவுள்ளன .
தடையை மீறி வேல் யாத்திரை செல்ல முயன்றதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்பட 508 பேர் மீது வழக்குப் பதிவு. தடையை மீறி யாத்திரை, அனுமதியின்றி கூட்டம் கூடியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.
அமெரிக்க அதிபர் தேர்தல்; ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மாநில அரசு உத்தரவு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி ட்ரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்த நிலையில், மாநில நிர்வாகமே உத்தரவு
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Tamil News Today live kamalhassan birthday : பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு துணை தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி, வீடுகளில் உருவப் படத்தை வைத்து பூஜை செய்யும் மக்கள்.மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அரசிதழில் வெளியீடு. 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரசு நடவடிக்கை
Web Title:Tamil news today live kamalhassan birthday us election results vijay sv chandrasekhar tamil news
அமெரிக்கா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுக்கு வாழ்த்துக்கள். அவர், அமெரிக்காவை ஒன்றிணைத்து வலுவான பாதையைக் காட்டுவார் என்று நான் நம்புகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
அமெரிக்கா அரசியல் வரலாற்றில் முதன் முறையாக - கருப்பினம் மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த முதல் பெண்மணி ஒருவர் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராகிறார் ஜோ பைடன், பெரும்பான்மைக்குத் தேவையான 284 பிரதிநிதிகள் வாக்குகள் அவருக்கு கிடைத்தது.
நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டதற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பாரட்டுக்களைத் தெரிவித்தார்.
பீகார் சட்டப்பேரவைக்கு மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக 78 தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.
டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் - நிதிஷ் குமார் அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 116 இடங்களையும், தேஜஸ்வி யாதவ் தலைமயிலான மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 120 இடங்களைப் பெறும்.
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் -ஜான் கி பாத் கருத்துக் கணிப்பு முடிவுகள்: மகா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் 138 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கிறது.
இந்தியா டிவி ஆக்சிஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள்: தேஜஸ்வி யாதவுக்கு அடுத்த முதல்வராகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.
மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி காவல்துறையிடம் அளித்த மனுவில் எந்த விபரமும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து, யாத்திரைக்கு அனுமதி கோரி புதிய மனு அளிப்பதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கையும் கேட்ட நீதிபதிபதிகள், வழக்கை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே, “பாஜக நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தமிழக காவல் துறை தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது வெற்றிவேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும்!! வேல் துள்ளி வருவதற்கான அனைத்து முயற்சிகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று எல். முருகன் தெரிவித்தார்.
வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாராணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கொரோனா பொது முடக்கநிலை தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் டாஸ்மாக், கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. 30 பேர் யாத்திரை செல்வதில் என்ன அபாயம் இருக்கப் போகிறது. எங்கள் தலைவருக்கு பாதுகாப்பு கோருகிறோம் என்று விசாரனனையில் பாஜக வாதிட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, ” பொது அமைதிக்கு தொடர்புடையதால் வேல் யாத்திரையின் வழியை வழியை அதை நடத்தும் பாஜக கட்சியே தீர்மானித்துக் கொள்ள முடியாது. யாத்திரை டிச. 6.ம் தேதி முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த தேதியை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் . முருகன் கோயில்களே இல்லாத வழியில் யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது ஏன்? என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.
மத்திய அரசு செய்திக் குறிப்பு: 23 மாநிலங்கள் மற்றும்1 யூனியன் பிரதேசத்தில் உள்ள மொத்தம் 33 சைனிக் பள்ளிகளில் அடுத்த வருடம்( கல்வியாண்டு 2021-22) 6 மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய சைனிக் பள்ளிகள் நுழைவுத்தேர்வு 2021, (ஏஐஎஸ்எஸ்ஈஈ) அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறும்.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வுக்காக இணையதளம் வாயிலாகக் கடந்த அக்டோபர் மாதம் இருபதாம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. இந்த மாதம் 19ம் தேதி வரை https://aissee.nta.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து கொண்டபின் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்த விரிவான தகவல்கள் www.nta.ac.in என்ற தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இன்று மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்ஹாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு, இஸ்ரோவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய விஞ்ஞானிகள் பல தடைகளை முறியடித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்தி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் அரசு அறிவித்த நேரம் தவிர்த்து பட்டாசு வெடித்தால், சட்ட நடவடிக்கை பாயும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார். தியாகராய நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த இரண்டு மணிநேரத்திற்கு மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
10 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. பூமி கண்காணிப்பு பணிக்காக இ.ஓ.எஸ். 01 என்ற செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-49 ரக ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. மோசமான வானிலை காரணமாக 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்ட ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாய்ந்தது.
ஹெரிடேஜ் குழுமம் ரூ.1000 கோடி வருமானத்தை மறைத்தது கண்டுபிடித்துள்ளோம். ரூ.500 கோடி மதிப்புள்ள 300 ஏக்கர் நிலம் வாங்கியதும் வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரயிலின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 முதல் இரவு 11 மணி வரைக்கும், ஞாயிற்றுக் கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பட்டாசு தடையை நீக்க வேண்டும் அல்லது தொழிலாளர் நலனுக்கு நிதி ஒதுக்கவேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், தொழில்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமாருக்கும் திமுக எம்.பி டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக அரசு உத்தரவின்படி வரும் 10ம் தேதி திரையரங்குகளை திறக்க முடிவு திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!
சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுடன் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு . வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தல்.
கொலை குற்றம் செய்தவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல. பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை அரசியல் கட்சிகள் கோருவது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
மாணவர்களை பரிசோதிக்க மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும். குடும்ப நலத்துறை இயக்குநர் உத்தரவு வைட்டமின் மாத்திரைகளை தயாராக வைத்திருக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கிருமி நாசினி வழங்க ஏற்பாடு 6ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து கருத்துக் கேட்பு நடைபெறவுள்ள நிலையில் உத்தரவு.
சமூக வலைதளங்களில் உள்ள பெண்களிடம் பழகி மோசடியில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு புகார் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சிபிசிஐடி போலீசாரிடம் புகார். மாணவியின் புகாரின் பேரில் காசி மீது பலாத்கார வழக்கை பதிவு செய்தது சிபிசிஐடி . புகார் தொடர்பாக காசியிடம் விசாரணை நடத்த டிஎஸ்பி அனில்குமார் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் திட்டம்
தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு அறிவிப்பு:தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரக் கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை -சென்னை காவல்துறை எச்சரிக்கை . அதிக ஒலி எழுப்பும் வெடியை தவிர்க்கவும் வேண்டுகோள்.
ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.
நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு. தென்னிந்தியாவில் சிறந்த மாவட்டத்திற்கான பிரிவில் வேலூர் - முதல் இடம், கரூர் - 2ம் இடம்
தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமானத்தில் முதல் அறிவிப்பு தமிழில் இருப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பு அமெரிக்கர்களும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நிலவரம் எனது வெற்றியை உறுதிப்படுத்துகிறது என்று ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர், ஜோ பைடன், தெரிவித்துள்ளார்.