Advertisment

Tamil News Live Updates: ECI திருச்சபை பேராயர் எஸ்ரா சற்குணம் மரணம்

Tamil Nadu News Update Today- 22 September 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sra sargunam passes

Tamil news today

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வரவேற்றார்.

  • Sep 22, 2024 21:21 IST
    ECI திருச்சபை பேராயர் எஸ்ரா சற்குணம் மரணம்

    ECI திருச்சபை பேராயர் எஸ்ரா சற்குணம் உடல்நலக் குறைவால்  காலமானார்; அவருக்கு வயது 86.



  • Sep 22, 2024 20:23 IST
    இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அநுரா குமார திசநாயக நாளை பதவியேற்பு

    இலங்கை அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரும் 50 விழுக்காடுக்கு மேல் வாக்குகளை வாங்காத நிலையில் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், விருப்ப வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னணியில் இருந்த அநுரா குமார திசநாயக தற்போது அதிபராகி இருக்கிறார். நாளை (செப்டம்பர் 23) அவர் பதவியேற்க உள்ளார்.



  • Sep 22, 2024 19:44 IST
    இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசநாயக வெற்றி

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் இழுபறி நீடித்த நிலையில், 2-வது விருப்ப வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றதாக இலங்கை தேர்தல் ஆணைய அறிவித்தது.



  • Sep 22, 2024 19:42 IST
    ஹங்கேரி 45வது செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு உதயநிதி வாழ்த்து

    ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இறுதிச் சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். ஒட்டுமொத்த அணியையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • Sep 22, 2024 19:26 IST
    திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம்: சந்திரபாபு நாயுடுக்கு எல்.முருகன் பாராட்டு

    திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்திய நேய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் போன்றவை கலப்படம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், ஆந்திர அரசு, சரியான நேரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.



  • Sep 22, 2024 19:22 IST
    திருப்பதி லட்டு சர்ச்சை: ஏன் அப்போதே புகார் செய்யவில்லை? பா.ஜ.க-வினருக்கு ரோஜா கேள்வி

    “திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் உண்மையிலேயே கலப்படம் செய்திருந்தால், அறங்காவலர் குழுவில் உறுப்பினர்களாக இருந்த பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் ஏன் அப்போதே மோடி, அமித்ஷாவிடம் புகார் அளிக்கவில்லை? இல்லாத ஒன்றை தனது அரசியலுக்காக திசை திருப்பி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் சந்திரபாபு நாயுடு” என்று ஆந்திரப் பிரதேச முன்னாள் அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.



  • Sep 22, 2024 18:43 IST
    சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பெயரில் சைபர் கிரைம் மோசடி முயற்சி

    சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் க்ரைம் மோசடி முயற்சி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

    +92 எனத் தொடங்கும் செல்போன் எண்ணின் வாட்ஸ் அப் DP-ல் சென்னை காவல்துறை ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்பட ஆதாரத்துடன் ஒருவர் எக்ஸ் வலைதளத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.



  • Sep 22, 2024 18:38 IST
    ஹங்கேரியில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றது இந்திய அணி

     ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.



  • Sep 22, 2024 18:09 IST
    திருப்பதி லட்டு சர்ச்சை: பொதுநல மனு தாக்கல் செய்ய வேண்டும் - ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு

    திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு பற்றி நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் முறையீடு செய்த நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 25-ம் தேதிக்குள் பொதுநல மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனு குறித்து அன்றைய தினமே விசாரணை நடத்தப்படும் என்று ஆந்திரா உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.



  • Sep 22, 2024 17:14 IST
    இலங்கை அதிபர் தேர்தல்: மாலை 04.40 மணி நிலவரப்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலை

    இலங்கை அதிபர் தேர்தலில் மாலை 04.40 மணி நிலவரப்படி 42.31% வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா 32.76% வாக்குகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார்



  • Sep 22, 2024 16:47 IST
    8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

    தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Sep 22, 2024 16:28 IST
    உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து; ஒருவர் மரணம்

    உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் காரை ஓட்டிச் சென்ற தமிழ்ச் செல்வன் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் சென்ற தமிழ்ச் செல்வனின் மனைவி சரண்யா உள்ளிட்ட 4 பேரும், லாரியில் சென்ற 7 பேரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • Sep 22, 2024 16:19 IST
    திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில் அரசு ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது - ஜெகன் மோகன் ரெட்டி

    திருமலை திருப்பதி தேவஸ்தான விவகாரங்களில் அரசு ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது. தேவஸ்தானம் மேற்கொள்ளும் கொள்முதல்கள் அனைத்தும் இ-டெண்டர் முறையிலானது என ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்



  • Sep 22, 2024 15:54 IST
    பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார் – மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்

    கோடிக்கணக்கான பக்தர்களின் மனதை சந்திரபாபு நாயுடு புண்படுத்திவிட்டார். புண்பட்டுள்ள பக்தர்களின் மனதை நீங்கள் தான் மீட்டெடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் 8 பக்க கடிதம் எழுதியுள்ளார்



  • Sep 22, 2024 15:31 IST
    நெல்லையில் நில அதிர்வு - மத்திய குழுவுக்கு தகவல்

    நெல்லையில் நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து மத்திய குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதேநேரம் ரிக்டர் அளவுகோலில் 1 முதல் 3 வரையிலான லேசான நில அதிர்வுகள், ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஏற்படும். இது போன்ற நில அதிர்வுகளால் எவ்வித பாதிப்பும் இல்லை, மக்கள் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது



  • Sep 22, 2024 15:12 IST
    ஒன்றாக இருந்த அ.தி.மு.க.,வை வென்று தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது - ஆர்.எஸ்.பாரதி

    ஒன்றாக இருந்த அ.தி.மு.க.,வை வென்று தான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது; அ.தி.மு.க ஒன்றாவதோ, பிரிந்து இருப்பது பற்றியோ தி.மு.க.,வுக்கு கடுகளவும் கவலை இல்லை என சென்னையில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி அளித்துள்ளார்



  • Sep 22, 2024 14:47 IST
    37 மீனவர்கள் கைது; மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம்

    அண்டை நாட்டு மீனவர்களை கைது செய்வது சர்வதேச நீதிகளுக்கு எதிரானது என அண்மையில் 37 மீனவர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடிதம் எழுதியுள்ளார்



  • Sep 22, 2024 14:24 IST
    இலங்கை தேர்தல் - 2-ம் விருப்ப வாக்கு எண்ணிக்கை

    இலங்கை அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் 2ஆம் விருப்ப வாக்கு எண்ணிக்கை தொடக்கம். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அனுர குமார திசநாயகே மற்றும் சஜித் பிரேமதாசா தவிர மற்ற வேட்பாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Sep 22, 2024 14:23 IST
    யார் பூமி பூஜை போடுவது?

    பென்னாகரம் பாமக எம்.எல்.ஏ.வா? தர்மபுரி திமுக எம்.பி.யா? என வாக்குவாதம். தருமபுரி பேருந்து நிலைய நுழைவுவாயில் பூமி பூஜை போடுவது தொடர்பாக  திமுக, பாமகவினர் இடையே வாக்குவாதம் நடந்தது. 

     பூமி பூஜை போட வந்த திமுக எம்.பி. மணியை தடுத்து நிறுத்திய பாமகவினர், இதையடுதது இரு தரப்பினரும் கடும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. 



  • Sep 22, 2024 13:42 IST
    நெல்லையில் நில அதிர்வா? - மறுப்பு

    நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென நிலஅதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மணிமுத்தாறு, சிங்கம்பட்டி, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு. மக்கள் பீதியடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது.

    தமிழகத்தில் எங்கும் நில அதிர்வு கண்டறியப்படவில்லை என நில அதிர்வுக்கான தேசிய மையம் விளக்கம் அளித்துள்ளது. 



  • Sep 22, 2024 13:19 IST
    ஆந்திர முதல்வரை சந்தித்த தேவஸ்தான நிர்வாகிகள்

     ஆந்திர முதல்வரை சந்தித்த தேவஸ்தான நிர்வாகிகள்

    திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தேவஸ்தான நிர்வாகிகள் சந்தித்தனர்.  



  • Sep 22, 2024 13:19 IST
    தமிழகத்திற்கு படையெடுத்த வெளவால்கள்

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்த வெளவால்கள், நிபா வைரஸ் அச்சுறுத்தும் நிலையில், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு திடீரென படையெடுத்த வெளவால்கள். கூடலூர் எருமாடு பகுதியில் குடியிருப்பையொட்டிய வெளவால்கள் கூட்டம் கூட்டமாக காணப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 



  • Sep 22, 2024 12:25 IST
    மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

    திருப்பத்தூர் அருகே விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழப்பு. பெருமாபட்டு பகுதியில் முருகன் என்பவரின் நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மின்வேலி. வனவிலங்குகளை வேட்டையாட சென்ற மூக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ் மற்றும் கரிபிரான் ஆகியோர் உயிரிழப்பு. நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து வனத்துறை மற்றும் குரிசிலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Sep 22, 2024 12:00 IST
    இலங்கையில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறுவதாக தகவல்

    அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, அதிபர் வேட்பாளர் நமல் ராஜபக்சவின் குடும்பத்தினர், அமைச்சர் தொண்டைமானின் குடும்பத்தினர் இலங்கையில் இருந்து வெளியேறியதாக தகவல் 

    ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பரப்புரையில் உறுதியளித்த அனுர குமார திசநாயக்க அதிபர் தேர்தலில் முன்னிலைய வகித்து வருகிறார்.



  • Sep 22, 2024 11:18 IST
    நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்



  • Sep 22, 2024 11:16 IST
    கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு

    சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் ரூ.60 வரையிலும், தக்காளி ரூ.25 முதல் ரூ.40 வரையிலும் விற்பனையாகிறது



  • Sep 22, 2024 11:00 IST
    இலங்கை அதிபர் தேர்தல்: காலை 10.30 மணி வாக்கு நிலவரம்

    இலங்கை அதிபர் தேர்தலில் காலை 10.30 மணி நிலவரப்படி 1,732,386 (41.71%) வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலை வகிக்கிறார்.



  • Sep 22, 2024 10:59 IST
    மீனவர்கள் கைது; இந்திய அரசு கண்டிக்கவில்லை- எம்.பி., நவாஸ் கனி பேட்டி

    பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் குறிப்பாக, ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகமாகிவிட்டது. இந்திய அரசு இதை கண்டிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை அரசைக் கண்டித்தால் நிச்சயம் கைது மற்றும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தடுக்கப்படும். இந்தியா சொல்வதை கேட்காத நிலையில் இலங்கை அரசு இல்லை, ஆனால் இந்திய அரசு அவர்களை வலியுறுத்துவதில்லை.

    - மதுரை விமான நிலையத்தில் ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி பேட்டி            



  • Sep 22, 2024 10:14 IST
    தமிழக மீனவர்கள் கைது: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    இந்த மாதத்தில் மட்டும் 51 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களையும் சேர்த்து நடப்பாண்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 387 ஆக அதிகரித்துள்ளது.  
    அதுமட்டுமின்றி 52 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக சேர்த்து தமிழக மீனவர்களின் 190 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு இனியும் பொறுக்கக் கூடாது. நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை வேண்டும்
    - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

     



  • Sep 22, 2024 10:13 IST
    தமிழர்கள் வாக்குகளை பெற்ற சஜித் பிரேமதாசா

    இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரி கொள்கையை பின்பற்றி வரும் எதிர்க்கட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

    தமிழர்கள் பெரும்பான்மை பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.  யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாசாவுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் அதிக வாக்குகள் விழுந்துள்ளன.



  • Sep 22, 2024 09:32 IST
    இன்று பிற்பகலில் உறுதியான நிலவரம் தெரியும்

    இப்போது புதிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. இதில், தற்போதைய நிலவரப்படி அனுரா குமார திசநாயகே, 51 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளார். இன்று மதியத்திற்குள் உறுதியான நிலவரம் தெரியும் வாய்ப்புள்ளது.



  • Sep 22, 2024 09:01 IST
    க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம்: மோடி

    க்வாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

    பதற்றமும் பல்வேறு விதமான பிரச்னைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் க்வாட் உச்சி மாநாடு நடக்கிறது. இந்தோ பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். சர்வதேச விதிகளை மதித்து அனைத்து பிரச்னைகளிலும் அமைதியான தீர்வுகளுக்கு ஆதரவு தருகிறோம், என்றார்.



  • Sep 22, 2024 08:15 IST
    297 பழங்காலப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

    பிரதமர் மோடியின் இந்த அமெரிக்க பயணத்தின் போது, ​​நாட்டிலிருந்து கடத்தப்பட்ட 297 பழங்காலப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. 2014 முதல் இந்தியாவால் மீட்கப்பட்ட மொத்த தொல்பொருட்களின் எண்ணிக்கையை 640கும். அமெரிக்காவில் இருந்து மட்டும் திரும்பப் பெற்ற தொல்பொருட்களின் எண்ணிக்கை 578 ஆக இருக்கும்.



  • Sep 22, 2024 07:48 IST
    கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு..

    கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள், 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு பசுமை வரியாக ரூ. 20 வசூலிக்கப்படும்

    மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு



  • Sep 22, 2024 07:40 IST
    கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் இன்று இயங்காது

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புகா் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 8 மணி வரை இயங்காது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா் மற்றும் அரக்கோணத்துக்கு வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும்.



  • Sep 22, 2024 07:34 IST
    இலங்கை அதிபராகிறார் தேசிய அநுர குமார திசநாயக்க

    இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இடதுசாரி கொள்கையை பின்பற்றி வரும் எதிர்க்கட்சித் தலைவர் அனுர குமார திசநாயக்க பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை எண்ணப்பட்டவற்றில் அனுர குமார திசநாயக்க 53.84% வாக்குகளைப் பெற்றார்.

    இதே தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உட்பட பலர் பலத்த பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் நமல் ராஜபக்சே 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டார்



  • Sep 22, 2024 07:29 IST
    தமிழகத்தில் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

    மேற்கு வங்கத்தை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழக வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களிலும், 24-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், என்று தெரிவித்துள்ளது.



  • Sep 22, 2024 07:29 IST
    ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment