Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
குன்னூர் பேருந்து விபத்து; இ.பி.எஸ் இரங்கல்
குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் ஊட்டிக்குச் சென்ற சுற்றுலா பேருந்து, குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்". என இ.பி.எஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
குன்னூர் பேருந்து விபத்து; ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
ஆசிய விளையாட்டு போட்டி; 10 ஆயிரம் மீட்டம் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளின் 10 ஆயிரம் மீட்டம் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2 பதக்கம் கிடைத்துள்ளது. இந்தியாவின் கார்த்திக் குமார் வெள்ளிப்பதக்கமும், குல்வீர் சிங் வெண்கல பதக்கமும் வென்றனர்
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 3 பேர் மரணம்
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து 54 பயணிகளுடன் பேருந்தில் உதகை சுற்றுலா சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது
சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி நெருங்கும் ஆதித்யா எல்-1 விண்கலம்
சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் நெருங்கி வருகிறது. 9.2 லட்சம் கி.மீ தூரத்தை ஆதித்யா விண்கலம் கடந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் -1 இலக்கை ஆதித்யா விண்கலம் நெருங்குகிறது. புவி ஈர்ப்பு மண்டலத்திற்கு வெளியே வெற்றிகரமாக பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, அரியலூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு குமரி, தென்காசி. நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சந்திரபாபு நாயுடு மகனுக்கு சி.ஐ.டி சம்மன்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்-க்கு சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. அமராவதி உள்வட்ட சாலை ஊழல் முறைகேடு வழக்கில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பழனி கோயிலில் இனி செல்போனுக்கு தடை
பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு இனி தடை நாளை முதல் செல்போன், கேமிரா கருவிகளை கொண்டு செல்ல தடை
காவிரி விவகாரம் - கர்நாடகா மனு
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீரை திறந்து விட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடகா மனு தாக்கல் செய்துள்ள நிலையில், உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையீட்டுள்ளது. ஆனால் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுகளில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து முடிவு எடுக்கவும் கர்நாடகா அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.
ரத்த தானம் செய்வீர் - முதல்வர் வேண்டுகோள்
"விலைமதிப்பற்ற உயிர்களை காத்திட, பொதுமக்கள் அனைவரும் ரத்ததானம் செய்திட முன்வர வேண்டும்" தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு
ரூ.2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்.7ம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. இன்று இறுதி நாளாக இருந்த நிலையில் தற்போது அக்.7ம் தேதி வரை அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களில் 96% திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் ஆர்.பி.ஐ தகவல் தெரிவித்துள்ளது
இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம். ஸ்குவாஷ் போட்டியில் தங்கம் வென்றது இந்திய ஆடவர் அணி. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபாரம்
தொழில் நிறுவனங்களின் ஒரு கோரிக்கை ஏற்பு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒன்றை தமிழக அரசு ஏற்றது. மின் இணைப்பு 3Bல் இருந்து 3(A1) TARIFF க்கு மாற்றுவதற்கு 12 KW கீழ் உள்ள நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவும், தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையாக அமல்படுத்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குற்றாலம் அருவியில் குளிக்க தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஜய் குரலில் ஆடியோ போலியானது - புஸ்ஸி ஆனந்த்
"விஜய் குரலில் சமூக வலைதளத்தில் பரவி வரும் ஆடியோ போலியானது" என விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லியோ படம் கர்நாடகாவில் வெளியாகாது என விஜய் பேசுவதாக ஆடியோ பரவி வந்தது. சித்தா பட எதிர்ப்புக்கும் ஆடியோவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. விஜய் பேசுவதாக பரவும் ஆடியோ போலியானது எனவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆளுநருடன் பிரமேலதா விஜயகாந்த் சந்திப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் சந்தித்தார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பணமோசடி வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் 3 வழக்குகளுக்கும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
தி.மு.க அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு - கேவியட் மனு தாக்கல் செய்த ஜெயக்குமார்
சொத்துக்குவிப்பு வழக்குகளிலிருந்து திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
அண்ணாமலை நாளை டெல்லி பயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்கிறார். கோவை, விமான நிலையத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி பயணம். அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் டெல்லி பயணம். பாஜக தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்
மீனவ பெண்கள் போராட்டம்- தற்கொலை முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை அருகே 50க்கும் மேலான ஆக்கிரமிப்பு குடிசைகளை அகற்ற வந்த அதிகாரிகள். எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி. மீனவ பெண்கள் போராட்டத்தின் போது, திடீரென தீப்பற்றி எரிந்த குடிசை வீடு
முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை - கே.பி.முனுசாமி
முதல்வர் பதவிக்கு அண்ணாமலையை முன்நிறுத்த வேண்டும் என பாஜக கேட்கவில்லை. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளால் ஆட்சிக்கு வர முடியாது. அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க பாஜக கூறியதாக கே.சி கருப்பணன் கூறியதற்கு முனுசாமி மறுப்பு
அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
சொத்துக் குவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதை. 30 குண்டுகள் முழங்க எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு மரியாதை அளிக்கும் காவல்துறை. சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு இறுதிசடங்கு. 10 காவலர்கள் 3 முறை வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு இறுதி மரியாதை
டெங்கு காய்ச்சல்- நாளை முதல் சிறப்பு முகாம்
அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு. நடப்பாண்டு 2 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. டெங்கு போன்ற நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
16,005 கொசு ஒழிப்பு புகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4, 631 பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட உள்ளன- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மகளிர் இடஒதுக்கீடு சட்டமாகியிருக்கிறதே தவிர அமலுக்கு வராது- ப.சிதம்பரம்
மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை, அமலுக்கு வராது. மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள செய்தி அறிந்தேன். மசோதா சட்டமாகியிருக்கிறதே தவிர சட்டம் அமலுக்கு வரவில்லை. அமலுக்கு வராது. என்னுடைய கணிப்புபடி இந்த சட்டம் 2024, 2029 தேர்தலுக்கும் வராது-ப.சிதம்பரம் எம்.பி
எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் பெசண்ட் நகரில் இன்று தகனம்
மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனின் உடல் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
காவிரி பிரச்னை- வானதி சீனிவாசன் கருத்து
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது
— Vanathi Srinivasan (@VanathiBJP) September 30, 2023
காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த காவிரி நதி நீர் பிரச்னை எழவில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி…
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது. காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம். காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி, காவிரி பிரச்னைக்கு தீர்வு காண மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வானதி சீனிவாசன்
சவரனுக்கு ரூ.240 குறைந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,880க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் சவரனுக்கு ரூ. 1,520 குறைந்துள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றம்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயா்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம்.
அந்தவகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அக். 3 முதல் 3 மாதங்களுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இன்று உலக கோப்பை பயிற்சி ஆட்டங்கள்
கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து, இந்தியாவை எதிர்கொள்கிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு, இபிஎஸ் அஞ்சலி
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
ரஷ்யா விண்வெளி ஆய்வு மையம் செல்லும் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள்
தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டனர்.
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்
வங்கிகளில் ரூ. 2000 நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
நாளை முதல் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என RBI அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்
கவுகாத்தி, உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.
குடியரசுத் தலைவர் ஒப்புதல்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.