பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63
காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
பெங்களூருவில் இன்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. புதிய முதலமைச்சர் தேர்வு குறித்து கூட்டத்திற்குப் பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் டி20
ஐ.பி.எல் 2023 டி20 தொடரில் இன்று ஐதராபாத் – பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை. ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது!
சென்னை ஜாஃபர்கான்பேட்டை அருகே உள்ள பாரி நகர் கரிகாலன் தெருவில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு; தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சித்த ராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு பிறகு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு – ஆந்திரா எல்லை பகுதியில் 6 பேரை கொன்ற 2 காட்டு யானைகள் பிடிபட்டன திருப்பத்தூர், திப்பசமுத்திரம் பகுதியில் காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
சென்னை ஜாபர்கான்பேட்டை, பாரி நகர் கரிகாலன் தெருவில் டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வரவில்லை என போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 7000 அனஸ்தீசியா மருந்துகள் பறிமுதல் மேற்குவங்கத்தில் இருந்து கடத்தி வந்த 8 பேர் கைது செய்த போலீசார்
மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு, புதுச்சேரியிலிருந்து கடத்தி செல்லப்பட்டதே காரணம் என அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர், அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்!
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்!
ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. தமிழரின் கலாசாரத்துக்குக் கிடைத்த சட்டப்பூர்வ அங்கீகாரம் என்று கூறினார்.
மத்திய சட்ட இணை அமைச்சர் எஸ்.பி.சி. பாகேல் சுகாதாரத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு மாற்றப்பட்ட நிலையில், இணை அமைச்சர் எஸ்.பி.சி. பாகேல் மாற்றப்பட்டார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து பா.ஜ.க மகளிர் அணி சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் வரும் மே 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி ட்வீட் பதிவு செய்துள்ளார்.
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 23ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது கடைசி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லவிருந்த தொழிலதிபரின் பையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், லைசென்ஸ் உடன் வைத்திருந்த துப்பாக்கிக்கான குண்டுகள் என தெரியவந்தது.
ராஜீவ்காந்தி நினைவு நாளான மே 21-ம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வருகிறார். காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடம் செல்கிறார்.
தி.மு.க-வின் ஆதிதிராவிடர் நலக்குழு, சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்டவற்றிற்கு நிர்வாகிகள் நியமனம் செய்து தி.மு.க அறிவித்துள்ளது பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகளை நியமித்து தி.மு.க அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக சென்னை மெரினாவில் சுரங்கம் தோண்டும் பணி ஆகஸ்ட்-ல் தொடங்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக, பயன்படுத்தப்படும் நவீன சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் சோதனை முயற்சி நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர், ஊராம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, ரூ. 3 லட்சமும், காயமடைந்த ஒருவருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அறிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஊராம்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அய்யம்மாள்(70) என்பவர் உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடந்த அனுமதித்த நிலையில் மதுரை மக்கள் வெடிவெடித்து கொண்டாடினர்.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மே19ஆம் தேதி பெங்களூரு செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர்ந்து, நாளை மறுதினம் நடக்க உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மே 21ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
தொடர்ந்து முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கிடவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் தமிழ்நாட்டில் தடை விதிக்கவில்லை; பார்வையாளர்கள் வருகை இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிபதிகள் குமரப்பன், சக்திவேல், தனப்பால், ராஜசேகர் ஆகிய 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை அளித்திருந்தது.
இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 65-ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம் திராவிட கலாசாரத்துக்கு கிடைத்த வெற்றி என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
மேலும், “உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டி.கே. சிவக்குமாரும், தாமும் கன்னடர்களின் உரிமையை காக்க கைகோர்க்கிறோம் என சித்த ராமையா கூறினார்.
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது. நண்பகல் 12 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில், உடனடியாக விற்று தீர்ந்தன. ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரசிகர்கள் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாக மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் அழைப்பு வித்தனர். நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்காலிக கால்நடை உதவி மருத்துவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரும் கோரிக்கையினை அரசு பரிசீலித்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 – 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். 4வது வார்டில் உள் நோயாளியை பார்க்க வந்தவர்களின் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் உள்ள பழைய கட்டடத்தை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கில் மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
“பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கான கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் ஆகியவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பால் விற்பனையாளருக்கு விலையை உயர்த்தி தருவதற்கான நடவடிக்கையை முதல்வர் எடுத்துள்ளார்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு வெளியான நிலையில், கர்நாடக மக்களின் நலனுக்காக எங்கள் கைகள் எப்போதும் இணைந்திருக்கும். மக்களுக்கு வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதோடு, எங்கள் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்ற ஒரு குடும்பமாக பணியாற்ற வேண்டும்' என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 தினங்கள் லேசான முதல் மிதமான மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள். ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
பருத்திவீரன் திரைப்பட புகழ் நடிகர் செவ்வாழை ராசு உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் மே 18 முதல் 22ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்; சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; அதற்கு உத்தரவாதம் அளிப்பதற்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்- – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ட்வீட்
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது; தமிழ்நாடு முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, துணை நின்ற அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி- டிடிவி தினகரன் ட்வீட்
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு- காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு பிரச்னையில் முதலிருந்தே நமக்கு உறுதுணையாக இருந்தவர் பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே; ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்க தொடர்சியாக முயற்சித்த, பிரதமருக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக நன்றி- அண்ணாமலை ட்வீட்
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது, தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது; பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்- மு.க.ஸ்டாலின் ட்வீட்
தமிழகத்தில் மே.20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள வேளாண் அலுவலர் போட்டி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது, http://tnpscexams.in, http://tnpsc.gov.in ஆகிய இணையதளங்களில் ஹால்-டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை, தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது; நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம்- உச்சநீதிமன்றம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
ஒரு சவரன் ரூ. 45,200-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5,650-க்கும் விற்பனை
புதிய மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேக்வால் பொறுப்பேற்பு
மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் அமைச்சராக மாற்றம்
அர்ஜூன் ராம் மேக்வால் மத்திய சட்ட அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்
குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் அறிக்கை