Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுண்ணாமலையின் பாதயாத்திரை களாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
புதிய மாதிரி பாடத்திட்டம்
பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கான புதிய மாதிரி பாடத்திட்டம் 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:55 (IST) 26 Jul 2023மத்திய கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் மரணம் - கல்வி அமைச்சகம் தகவல்
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 98 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க கல்வி நிறுவனங்களில் பல நடவடிகைகள் மேற்கொள்வதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 22:54 (IST) 26 Jul 2023மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து பாதியில் ல்வெளியேறிய 25,593 எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் SC/ST/OBC மாணவர்கள் 25,593 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியுள்ளனர். மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி-யில்தான் இந்த எண்ணிக்கை அதிகம் உள்ளது.
- 22:19 (IST) 26 Jul 2023ஐ.பி.எல் போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
சூதாட்டம், முறைகேடுகளை தடுக்க பிசிசிஐ-ல் எந்த விதிகளும் உருவாக்கப்படவில்லை, எனவே ஐபிஎல் போட்டிகள் நடத்த தடை விதிக்கக்கோரி சம்பத்குமார் ஐ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில்,
ஐ.பி.எல் போட்டிகள் நடத்த தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎல்-ல் சூதாட்டம் நடப்பது தெரிந்தால், பி.சி.சி.ஐ குழுவை அணுகி புகார் கொடுத்து நிவாரணம் பெறலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
- 21:30 (IST) 26 Jul 2023அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ. 4000 ஆக உயர்வு
அர்ச்சகர், ஓதுவார் பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 4000 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 21:28 (IST) 26 Jul 2023மகளிர் உரிமைத் தொகை திட்டம்; 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் - தமிழ்நாடு அரசு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முதல் 3 நாட்களில் 36 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
- 21:26 (IST) 26 Jul 2023பழம்பெரும் சினிமா படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல் மரணம்
படிக்காதவன், முரட்டுக்காளை, சர்வர் சுந்தரம், பாயும் புலி, விக்ரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு படத்தொகுப்பு செய்த ஆர். விட்டல் மாரடைப்பால் சென்னையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 91. படத்தொகுப்பாளர் விட்டல் 170 படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர். 5 படங்களை இயக்கியவர், 3 படங்களை தயாரித்தவர்.
- 21:22 (IST) 26 Jul 2023டிசர்ட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ் வாசகம்; மனுதாரரிடம் மீண்டும் பாஸ்போர்ட் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு
பாஸ்போர்ட் அலுவலரிடம் ஒப்படைத்த பாஸ்போர்ட்டை மனுதாரரிடம் திருப்பி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட் அலுவலர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி தொண்டியை சேர்ந்த முகமதுரில்வான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற வாசகம் பொருந்திய டீ-சர்ட் அணிந்ததால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ.எஸ் கோட்பாடுகளை ஏற்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார் என்று கூறிய நீதிபதி, இந்த வழக்குக்கு முன்னோ, பின்னோ மனுதாரர் மீது எந்த வழக்குகளும் இல்லை. இந்த வழக்கால் 9 ஆண்டுகளாக மனுதாரரால், வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி, பாஸ்போர்ட் அலுவலரிடம் ஒப்படைத்த பாஸ்போர்ட்டை மனுதாரரிடம் திருப்பி வழங்க உத்தரவிட்டார்.
- 21:16 (IST) 26 Jul 2023இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயார் - மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ட்வீட்: “தமிழை - தமிழினத்தை - தமிழ்நாட்டு மக்களை - இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கான களம் தயாராகிவிட்டது. திருப்புமுனை தரும் தீரர்கள் கோட்டமான திருச்சியில், வாக்குச்சாவடி வீரர்களிடம் அவர்களின் கடமை இன்றைய காலத்தின் தேவை என்பதை எடுத்துரைத்தேன். வெறுப்பையும் பிரிவினையையும் மக்களிடையே விதைத்தவர்கள் இப்போது indiaின் மக்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். களம் காணுவோம்! களமாடுவோம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே” என்று கூறினார்.
- 21:06 (IST) 26 Jul 2023ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியா... உலக நாடுகள் ஒப்புக்கொள்கிறது - மோடி
டெல்லியில் ITPO கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உரை: “பல ஆண்டுகளாக ஜனநாயகம் என்பது பெருமையாக திகழ்ந்து வருகிறது. ஜனநாயகத்தின் தாய்நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் ஒப்புக்கொண்டு வருகின்றன. இந்தியாவின் அந்தஸ்து அதிகரிப்பதற்கு உலக நாடுகளே சாட்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
- 20:05 (IST) 26 Jul 2023அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம் - ஆர்.எஸ். பாரதி
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி: “அண்ணாமலை கொடுத்த ஆவணத்தில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. பிரச்சனைகளை திசை திருப்பவே புகார் கூறுகிறார். அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
- 19:49 (IST) 26 Jul 2023மணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து, நாளை கறுப்பு உடை அணியும் INDIA கூட்டணி எம்.பி.க்கள்
மணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை கறுப்பு உடை அணிகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் கறுப்பு உடை அணிந்து INDIA கூட்டணி எம்.பி.க்கள் நாளை பங்கேற்க உள்ளனர்.
- 19:37 (IST) 26 Jul 2023மோடி, யோகி ஆதித்யநாத் ஆதார் விவரங்களை மாற்றிய நபர் கைது
பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதார் விவரங்களை மாற்ற முயற்சித்ததாக பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன் குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதார் விவரங்களை மாற்றியமைத்து அதனை வைத்து முறைகேடு செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- 19:31 (IST) 26 Jul 2023பழங்குடியினருக்கு நாடாளுமன்ற தொகுதி வேண்டும் - எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
தொகுதி மறுவரையின்போது, தமிழகத்தில் பழங்குடியினருக்கு என்று ஒரு நாடாளுமன்ற தொகுதியை உருவாக்க வேண்டும் என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் ஹட்டி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வகைசெய்யும் அரசியல் சாசன பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த மசோதா மீது, அதிமுக எம்பி தம்பிதுரை கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழகத்தில் பழங்குடியினத்தவர்களுக்கு இரண்டு சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர், நாடாளுமன்ற தொகுதி ஒன்று கூட இல்லை எனக் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள மீனவர்கள், படுகர் உள்ளிட்ட சமூகத்தினரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொகுதி மறுவரையின்போது பழங்குடியினத்தவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதியையாவது உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மீனவ சமூகத்தினர் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
- 18:47 (IST) 26 Jul 2023ஜெயிலர் படத்தின் 3-வது சிங்கிள் வெளியீடு
ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் படத்தின் 'ஜூஜூபி' என்ற 3வது பாடலை வெளியிட்டுள்ளது. ஜெயிலர் படக்குழு அனிருத் இசையில் பாடகி தீ, அனிருத் ஆகியோர் பாடிய பாடல் வெளியீடு
- 18:46 (IST) 26 Jul 2023சென்னை அண்ணாநகர் கிழக்கு பேருந்து பணிமனையில் தீ
சென்னை அண்ணாநகர் கிழக்கு பேருந்து பணிமனையில் தீ விபத்து. பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
- 18:00 (IST) 26 Jul 2023கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைத்ததை பிரதமரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை - மு.க.ஸ்டாலின்
கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் வைத்ததை, பிரதமர் மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை" திருச்சியில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வாரிசு கட்சி என கேட்டுக் கேட்டு புளித்துப் போன விமர்சனத்தை முன்வைக்கிறார்கள் ஆம், நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம் பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாரிசுகள் நாங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
- 17:30 (IST) 26 Jul 2023ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் பணமோசடி
ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் பணமோசடி செய்ததாக வழக்கு. இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- 17:29 (IST) 26 Jul 2023டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம்
திருச்சி, தஞ்சாவூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் 12,645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்பு. அரியலூர், பெரம்பலூர், நாகை, தஞ்சை, திருச்சி உட்பட 15 மாவட்ட திமுக நிர்வாகிகளும் பங்கேற்பு. டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பாசறை கூட்டம்
- 17:01 (IST) 26 Jul 2023தி.மு.க பைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை ஆளுநரிடம் வழங்கினோம் - அண்ணாமலை
தி.மு.க பைல்ஸ் பகுதி 2 ஆவணங்களை ஆளுநரிடம் அளித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்
- 16:59 (IST) 26 Jul 2023மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகளை கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்
- 16:45 (IST) 26 Jul 2023கர்நாடகாவில் தனியார் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி
கர்நாடக மாநிலம் வினோபா நகரில் உள்ள தனியார் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஏடிஎம்-யை உடைக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
- 16:35 (IST) 26 Jul 2023திருப்போரூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் படுகாயம்
திருப்போரூர் அடுத்த மேட்டு தண்டலம் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
- 16:20 (IST) 26 Jul 2023செந்தில் பாலாஜி வழக்கு; உச்ச நீதிமன்ற விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணையை நாளை பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளைக்குள் வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்
- 16:06 (IST) 26 Jul 2023நீதிபதிகள் கேள்வி – செந்தில் பாலாஜி தரப்பு பதில்
வழக்கமாக அமலாக்கத்துறை தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்படுகிறது? என நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, குற்றங்கள் கண்டறியும் போதும், குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட நிதியை கண்டறியும் போதும் பதிவு செய்யப்படுகிறது என செந்தில்பாலாஜி தரப்பு பதிலளித்துள்ளது
- 15:53 (IST) 26 Jul 2023அமலாக்கத்துறை காவலை எதிர்த்து தான் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
அமலாக்கத்துறை காவலை எதிர்த்து தான் மனுத்தாக்கல் செய்திருக்க வேண்டும். மாற்றாக, ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருக்கக் கூடாது என செந்தில்பாலாஜி மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
- 15:39 (IST) 26 Jul 2023மணிப்பூர் பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துமாறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.,க்கள் கோரிக்கை
மணிப்பூர் பிரச்னைகள் குறித்து விதி 176ன் கீழ் குறுகிய கால விவாதம் நடத்துமாறு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அவைத் தலைவர் ஜகதீப் தன்காரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
- 15:20 (IST) 26 Jul 2023அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பலாஜியின் நீதிமன்ற காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் (ஆகஸ்ட் 8 வரை) நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 15:10 (IST) 26 Jul 2023தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். நாளை மறுநாள் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் ஆளுநருடன் இந்த சந்திப்பு நடந்துள்ளது
- 14:59 (IST) 26 Jul 2023வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு
குரல் வாக்கெடுப்பு மூலம் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றிய பின் ஒத்திவைப்பு
- 14:46 (IST) 26 Jul 2023செந்தில் பாலாஜி மனு - உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
செந்தில் பாலாஜி மனைவி மேகலாவின் மேல்முறையீடு மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் துவக்கம்
- 14:45 (IST) 26 Jul 2023என்எல்சி விவகாரம் - ஆட்சியர் விளக்கம்
நிலத்திற்கு பணம் கொடுக்கும் போது அதனை கையகப்படுத்தி இருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.
என்எல்சி நிறுவனம் நிலத்திற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்து விட்டது.
கடந்த டிசம்பர் மாதமே விளைநிலங்களை பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
பயிர்களுக்கு இழப்பீடு கொடுப்பதற்கு தற்பொழுது என்எல்சி நிர்வாகம் முன்வந்துள்ளது- கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்
- 14:42 (IST) 26 Jul 2023மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு
மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளிநடப்பு
மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் - மல்லிகார்ஜூன கார்கே
கூட்டத்தொடர் தொடங்கி 5 நாட்கள் ஆகியும், பிரதமர் இன்னும் பதிலளிக்கவில்லை - மல்லிகார்ஜூன கார்கே
- 14:25 (IST) 26 Jul 2023ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் தீபக் வாக்குமூலம்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - கைதான இயக்குனர் தீபக் பிரசாத் ₨61 கோடி மோசடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் வாக்குமூலம் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் இதுவரை 22 பேர் கைது
- 13:58 (IST) 26 Jul 2023திமுக பயிற்சி பாசறை கூட்டம் - 30,000 பேருக்கு மட்டன் பிரியாணி
திருச்சியில் இன்று மாலை நடைபெறுகிறது திமுக பயிற்சி பாசறை கூட்டம் பயிற்சி
பாசறை கூட்டத்தில் பங்கேற்கும் 30,000 பேருக்கு சுடச்சுட தயாராகும் மட்டன் பிரியாணி
6000 கிலோ மட்டன், 4000 கிலோ சிக்கன், 40,000 முட்டைகளுடன் கமகமக்கும் அசைவ உணவு
சமையலுக்கு 1200 கிலோ தக்காளி, 3000 கிலோ வெங்காயம், 600 கிலோ இஞ்சி பயன்படுத்தப்படுகிறது
- 13:26 (IST) 26 Jul 2023அரசு பேருந்தின் முன் சக்கரம் சுழலாமல் தேய்ந்தபடி இயங்கிதால் பரபரப்பு
புதுச்சேரி, காரைக்கால் நோக்கி சென்ற அரசு பேருந்தின் முன் சக்கரம் சுழலாமல் தேய்ந்தபடி இயங்கிதால் பரபரப்பு
ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
- 13:25 (IST) 26 Jul 2023நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- 12:56 (IST) 26 Jul 2023அண்ணாமலையின் பாதயாத்திரை: தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் . அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. தாங்கள் எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார் "என் மண் என் மக்கள்" என்ற தலைப்பில் நாளை மறுநாள் பாதயாத்திரையை தொடங்குகிறார் அண்ணாமலை
- 12:52 (IST) 26 Jul 2023என்.எல்.சி. விவகாரம் - விழுப்புரம் சரக டிஐஜி விளக்கம்
நிலங்களை 10 வருடங்களுக்கு முன்பே என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. 10 வருடங்களுக்கு முன்பே கையகப்படுத்தினாலும் பயன்பாட்டுக்கு வரவில்லை" "நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தர என்.எல்.சி முன்வந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- ஜியா உல் ஹக், விழுப்புரம் சரக டிஐஜி
- 12:50 (IST) 26 Jul 2023மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி - மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
- 12:48 (IST) 26 Jul 2023மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் காங்கிரஸ் முன்மொழிந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பு மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் முன்மொழிந்தது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்தார் காங்கிரசின் கவுரவ் கோகாய் அனைவரிடமும் ஆலோசித்து விட்டு தேதியை தீர்மானிப்பதாக சபாநாயகர் அறிவிப்பு
- 12:03 (IST) 26 Jul 2023மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
திருச்சி: கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை
- 12:03 (IST) 26 Jul 2023மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு
மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசும்போது மைக் அணைக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு யார் உத்தரவின் பேரில் மைக் அணைக்கப்பட்டது எனவும் திருச்சி சிவா கேள்வி எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது மைக் அணைக்கப்படவில்லை என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் விளக்கம் ஜெகதீப் தன்கரின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்
- 12:01 (IST) 26 Jul 2023அண்ணாமலை நியாயமானவராக இருந்தால் அதிமுகவின் ஊழல் குறித்தும் பேச வேண்டும்
"வேளாண்மையை அழிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும். வேளாண்மை பற்றிய அறிவை அனைவரும் வளர்க்க வேண்டும் என முதல்வரே சொல்கிறார். கட்டடங்கள் கட்டப்பட்ட இடத்தை திரும்ப எப்படி விளை நிலங்களாக மாற்ற முடியும்?. அண்ணாமலை நியாயமானவராக இருந்தால் அதிமுகவின் ஊழல் குறித்தும் பேச வேண்டும்"- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
- 11:36 (IST) 26 Jul 2023நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
- 11:25 (IST) 26 Jul 2023பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்
மக்களவையில் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் மணிப்பூர் விவகாரத்தில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் இன்று முன்மொழிகிறது
- 11:00 (IST) 26 Jul 2023ரூ. 2,700 கோடி செலவில் ...
டெல்லி, பிரகதி மைதானத்தில் ரூ. 2,700 கோடி செலவில், 123 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- 10:54 (IST) 26 Jul 2023மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான நோட்டீசை, காங். எம்பி கெளரவ் கோகாய் தாக்கல் செய்தார்.
- 10:54 (IST) 26 Jul 2023ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல், காலை 10.30 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது; மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- 10:10 (IST) 26 Jul 2023நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி.
காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.
மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, பிரதமரை பேச வைக்க எதிர்க்கட்சிகள் முடிவு.
- 10:10 (IST) 26 Jul 2023பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான கிறிஸ்தவர்கள் நீல நிற உடையணிந்து பங்கேற்றனர்..
11 நாட்கள் நடைபெறும் பனிமய மாதா ஆலய திருவிழாவில், ஆகஸ்ட் 5ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தங்கதேர் பவனி நடைபெறுகிறது.
- 09:40 (IST) 26 Jul 2023ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ்
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என, நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.
மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம். பி. மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
- 09:38 (IST) 26 Jul 2023ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் அண்ணாமலை
ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிற்பகல் சந்திக்கிறார்
- 09:37 (IST) 26 Jul 2023புறநகர் ரயில் சேவை பாதிப்பு- மக்கள் கடும் அவதி
எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்த கோளாறு காரணமாக, கடந்த 1 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எண்ணூர் ரயில் நிலையத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து உள்ளனர்.
ஆத்திரமடைந்த பயணிகள் பொன்னேரி ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
- 08:44 (IST) 26 Jul 2023கடலூரில் போலீஸ் குவிப்பு
கடலூர், வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபடும் நிலையில், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெவித்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு கருதி, காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 08:44 (IST) 26 Jul 2023கடலூரில் போலீஸ் குவிப்பு
கடலூர், வளையமாதேவியில் நிலத்தை சமன்படுத்தும் பணியில் என்எல்சி நிர்வாகம் ஈடுபடும் நிலையில், இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெவித்துள்ளனர்.
அங்கு பாதுகாப்பு கருதி, காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் தலைமையில் 400 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 08:43 (IST) 26 Jul 2023சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் உயர்மின் அழுத்தம் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
7 மணி முதல் ரயில்கள் இயக்கப்படாததால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் தவிப்பு
- 08:43 (IST) 26 Jul 2023மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
- 08:42 (IST) 26 Jul 2023மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 10,000 கன அடியில் இருந்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
- 08:07 (IST) 26 Jul 2023எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளன.
- 08:07 (IST) 26 Jul 2023ஒரு கிலோ தக்காளி ரூ.110க்கு விற்பனை
சென்னை, கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ. 110க்கு விற்பனை ஆகிறது. நேற்று ரூ. 100க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 10 உயர்ந்துள்ளது.
- 08:07 (IST) 26 Jul 2023திருச்செந்தூர் கோயிலில் ஜூலை மாத உண்டியல் வரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், ஜூலை மாத உண்டியலில், ₹3.09 கோடி ரொக்கம், 1900 கிராம் தங்கம், 29,000 கிராம் வெள்ளி, 30,000 கிராம் பித்தளை, 10,000 கிராம் செம்பு, 3,500 கிராம் தகரம் மற்றும் 552 வெளிநாட்டு கரன்சிகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
- 08:06 (IST) 26 Jul 2023கர்நாடகாவில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சித்தராமையா
கர்நாடகாவில் கடற்கரையோர பகுதி, வடக்கு உள் மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்ட இடங்களில் அரசு ஆய்வு செய்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறது; தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது;
குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது; மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் -கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
- 08:06 (IST) 26 Jul 2023தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்
தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வந்த சிவபத்மநாதன், அப்பொறுப்பில் இருந்து நீக்கம்; அவருக்கு பதிலாக ஜெயபாலனை நியமித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
- 08:06 (IST) 26 Jul 2023காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக உள்ளது.
- 08:05 (IST) 26 Jul 2023நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் திருச்சியில் இன்று நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவக்குகிறார். திமுக பயிற்சி பாசறையில் 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
- 08:05 (IST) 26 Jul 2023செந்தில் பாலாஜி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்த நிலையில் இன்று விசாரணை துவக்கம்
- 08:05 (IST) 26 Jul 2023மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக, அரசுத் துறைகளில் சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி பணியிடங்களை பூர்த்தி செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் அரசின் பல்வேறு துறைகளில் இரண்டாண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.