Latest Tamil News Live : கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவண்ணாமலை தீபக் திருவிழா, பத்து நாள்களாக இரவும் பகலும் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபத்திருநாளான இன்று காலை 4 மணிக்குக் கோயிலின் கருவறை முன் பரணி தீபம் ஏற்றிவைக்கப்பட்டது. இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படும். மேலும், கொரோனா பரவல் காரணமாகப் பக்தர்களுக்குக் கிரிவலம் செல்வதற்கும், நேரில் சென்று வழிபடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து, தமிழகம், கேரளாவில் டிச.2-ம் தேதி அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வாளினை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினிகாந்த் வரும் 30ம் தேதி (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.சென்னை கோடம்பாக்கத்தில், காலை 9 மணிக்கு ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
பொறியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு: நீதிபதி முருகேசன் ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறித்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
கடந்த 24 மணிநேரத்தில் 41,810 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 70.43% பேர் மகாராஷ்டிரா, கேரளா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்
தென்கிழக்கு வங்கக்கடலில் புரெவி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், இராமநாதபுரம் , தூத்துக்குடி மற்று குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்றும், ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பிலுள்ள விசைப்படகுகளை, செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் விஎச்பி தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் தொடர்பு கொண்டு அருகிலுள்ள மீன்பிடித்துறைமுகங்கள்/ மீன்பிடித்தளங்கள் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு கரை திரும்பிட உரிய நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.
நிவர் புயல் பாதிப்பினை மத்திய அரசு ஆய்வு செய்த பிறகு உரிய நிவாரணம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையத்தை 24 மணி நேரமும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை :
நாள் (01.12.2020): தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாள் (02.12.2020): தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது; தமிழ்நாட்டின் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும், மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருவள்ளூர், காரைக்கால், செங்கல்பட்டு மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “செம்பரம்பாக்கம் ஏரியை பராமரிப்பதிலேயே அலட்சியம் எனில் பிற ஏரிகளை எந்த மாதிரி பராமரித்திருப்பார்கள்? செம்பரம்பாக்கம் ஏரியில் 2,3ஆவது மதகுகளை மூடமுடியாமல் நீர் வீணாக வெளியேறி வருவது அதிர்ச்சி தருகிறது. புயலால் குறைந்த சேதம் எனக் கூறும் அதிமுக அரசு மதகு பராமரிப்பில் எப்படி கோட்டைவிட்டது? பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன? தங்களுக்கு எது லாபமோ அதை மட்டும் செய்துக்கொள்ளும் அரசாகத்தான் ஈ.பி.எஸ். அரசு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சிட்னியில் நடைபெற்ற 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்து தொல்வியைத் தழுவியது. 2வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை வென்றது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அப்சரா ரெட்டியை அதிமுக தலைமைக் கழகம் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக அறிவித்துள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளர் பட்டியலில் இணைந்துள்ள அப்சரா ரெட்டி இனி தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக சார்பில் பங்கேற்பார்.
வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் ராயபுரம் மனோகர் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராஜினாமா செய்தார் அதன்பின் எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இறங்காமல் ஒதுங்கியிருந்தார் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தன்னம்பிக்கை வளர்க்கும் ஒரு மையத்தை இலவசமாக நடத்தி வந்தார் இந்த நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனது ஆதரவாளர்களோடு சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முன்வந்த தயாரிபு நிர்வாகத்திற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். இதன் மூலம், பல்வேறு தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பொதிகை உள்ளிட்ட தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தித் திணிப்பை திரும்ப பெற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒருமைப்பாட்டை பிளக்கும் சமஸ்கிருத திணிப்பை உடனே திரும்ப பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் செம்பரம்பாக்க ஏரி நிரம்பியதையடுத்து ஏரியில் இருந்து நவம்பர் 25ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 5 நாட்களாக உபரி நீர் வெளியெற்றப்பட்டு வந்த நிலையில் செம்பரம்பாக்க ஏரியில் இருந்து இன்று தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கொரோனாவைப் பயன்படுத்தி தொழிலாளர் விரோத சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளது. திருப்பூர் குமரனைப் போல போராட வேண்டிய நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி வரியால் துணி நூல் துறைக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் தவறான கொள்கைக்கு திருப்பூர் மாவட்டமே சான்று” என்று கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு 390 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார். ரஜினி நல்ல மனிதர். ரஜினிகாந்த் எந்த முடிவெடுத்தாலும் மக்கள் வரவேற்பார்கள். ரஜினிகாந்த் கட்சி தொடங்கிய பின்னர்தான் அவரின் கொள்கை தெரிய வரும். முதல்வர் பழனிசாமியின் நடவடிக்கைகளைக் கண்டு மு.க.ஸ்டாலின் எரிச்சல்படுகிறார். தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி அதிமுகவுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.” என்று கூறினார்.
அன்னபூர்ணா தேவி சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவது குறித்து பேசிய பிரதமர் மோடி, “அன்னபூர்ணா தேவி பழங்கால சிலை கனடாவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதை அறிந்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு 1913 இல் இந்த சிலை வாரணாசியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டு நாட்டிலிருந்து கடத்தப்பட்டது” என்று கூறினார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் என பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “ரஜினியின் முடிவை மக்க்ள் எதிர்பார்க்கிறார்கள். நாங்களும் எதிர்பார்க்கிறோம். கனிமொழி எடப்பாடியில் அல்ல விண்வெளியில் பிரசாரத்தை தொடங்கினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “இருள் நீங்கி ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இருள் நீங்கி, ஒளி பிறக்கும் கார்த்திகை தீப திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாக பரவிட, அனைவருக்கும் எனது உளமார்ந்த "திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகளை" தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/DzYnd6pf0m
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 29, 2020
மான்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் மற்றும் புதிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய கதவுகளை திறந்துள்ளது. விழிப்புணர்வே அதிகாரம் என்பதை விவசாயிகள் நினைவில் கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தென் தமிழகத்தை நோக்கி நகருகிறது. இதனால் தமிழகத்திற்கு மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக டிசம்பர் 1, 2, 3 ஆகிய தினங்களில் தென் தமிழகத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யும். உள் தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4, 5 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
கொரோனா தடுப்பு மருந்துகளைத் தயாரித்து வரும் இந்திய விஞ்ஞானிகளை உற்சாகப்படுத்தும் வகையில், அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் புனேவில் உள்ள ஆராய்ச்சி மையங்களுக்குப் பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும், வைரஸுக்கு எதிரான போரில், மற்ற நாடுகளுக்கு உதவுவது இந்தியாவின் கடமை என்றும் மோடி தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights