Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
கருணாநிதி பிறந்தநாள்!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
Tamil News Today Live
‘விக்ரம்‘ படம் வெளியானது!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படம் திரையரங்குகளில் இன்று வெளியானது. இதில், நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கைதி’யை மற்றொரு முறை பார்த்துவிட்டு ‘விக்ரம்’ உலகுக்கு வாருங்கள் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்வீட்!
சோனியா காந்திக்கு கொரோனா!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சமீப நாட்களாக சோனியா காந்தியை சந்தித்த அவரின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஜூன் 8ஆம் தேதி சோனியா காந்தி அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர்.. இளையராஜா!
முன்னாள் முதல்வர் கருணாநிதி, என் தந்தைக்கு சமமானவர். என் தந்தை எனக்கு ‘ஞானதேசிகன்’ என பெயர் வைத்தார். கருணாநிதி எனக்கு இசையோடு சேர்த்து ‘இசைஞானி’ என பெயர் வைத்தார். அனைவரின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்தான் கருணாநிதி. தமிழக மக்களை முன்னேற்றும் பணியில் கருணாநிதியின் பாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். ஸ்டாலின் மக்களுக்காக செய்து வரும் பணிகளை எனக்கு செய்து வருவதாக ஏற்றுக் கொள்கிறேன்- கோவை, கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இளையராஜா பேச்சு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
மதுரையில் மண்சரிவு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலாளர் சதீஷ் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சமும்,கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இருந்து ரூ.5 லட்சமும் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சதீஷ் உயிரிழந்த தகவலை கேட்டு வேதனை அடைந்தேன்; சதீஷின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே போல, பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன், விகாஸ் மகாரியாவை கைது செய்ய தடை இல்லை என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி என்று இ.பி.எஸ் கூறினார். மேலும், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை என்று கூறினார்.
பாஜக குறித்து பொன்னையன் பேசிய கருத்தை, அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் கூறினார்கள்.
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம். பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்பதால் கார்த்திக் சிதம்பரத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஆலோசித்த நிலையில் தற்போது உயர்மட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேசிய பாதுகப்பு செயலாளர் அஜித் பாண்டே, ராணுவ தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மும் -காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். காஷ்மீரில் வெளிமாநில மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தடுப்பது குறித்து ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.
மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக சார்பில் கல்யாண சுந்தரம், ராஜேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பில் சிவி சண்முகம், ஆர் தர்மர் ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் ப. சிதம்பரமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கர்நாடகாவில் பேருந்து – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை இல்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள திருக்காக்கரா சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான UDF வேட்பாளர் உமா தாமஸ் வெற்றி பெற்றார். இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
“தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவதா?. கால தாமதம் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்” என்று பள்ளிக் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய இடையிலான போர் தொடங்கி 100 நாள் ஆகும்நிலையில், உக்ரைனில் உள்ள ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைனின் லூகன்ஸ் நகரம் முழுவதையும் இன்னும் 2 வாரத்திற்குள் ரஷ்யா தனது கட்டுப்பாடிட்ன் கீழ் கொண்டுவந்துவிடும் என்று இங்கிலாந்து பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
திருச்சி லால்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை விசாரணையை அடுத்து முத்து (50) என்ற விவசாயியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ஒவ்வொரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியும் ஒரு கி.மீ. அளவுக்கு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தை கொண்டிருக்க வேண்டும். சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலத்தில் நிரந்தர கட்டுமானங்கள் இருக்க கூடாது என்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் 14 உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ1.7 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடரபாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா அதிகரித்து 77.47க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது!
சென்னை, பாரிமுனையில் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக திமுக பாடுபடும். தமிழ்நாட்டு மக்களுக்காக தனது பிறந்தநாளை கொண்டாடியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் கை ரிக்ஷாவை ஒழித்து, சைக்கிள் ரிக்ஷாக்களை இலவசமாக வழங்கியவர் கருணாநிதி.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மேலும் 4,041 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து 2,363 பேர் குணமடைந்துள்ளனர். மற்றும் 21,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
“எனக்கு மிகவும் பிடித்த அரசியல் தலைவர் கருணாநிதி. இந்தியாவிலேயே தலைச்சிறந்த தலைவர் கருணாநிதி. ராமதாஸ், கருணாநிதி இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
*நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கோரியிருந்த நிலையில், அவருக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரகாண்ட் இடைத்தேர்தலில் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு முழுவதும் 1,180 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 53 குப்பை கிடங்குகள் பயோ மைனிங் மூலமாக குப்பைகள் இல்லாதவாறு மாற்றப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டியளித்தார்.
சோனியா காந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரியங்கா காந்திக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பிரியங்கா காந்தி தனிமைப்படுத்திக் கொண்டார்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோ சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ.38,480 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,810க்கு விற்பனையாகிறது.
மூத்த பத்திரிகையாளர் 'தினத்தந்தி' சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல்' விருது, ரூ. 5 லட்சம் பரிசுத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி கவிஞர் வைரமுத்து ட்வீட்டரில் பிறந்தநாள் வாழ்த்து!
கலைஞர் 99#hbdkalaignar99 ைஞர்99 #kalaignar99 pic.twitter.com/iM7ocjf4IZ
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2022
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Live: பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துதல் https://t.co/sGxu3jDxCQ
— M.K.Stalin (@mkstalin) June 3, 2022
கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை, அவரது இல்லத்திற்கே நேரில் சென்று வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதை எதிர்த்து பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இந்நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கி இன்று 100வது நாளை எட்டி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 3 நாட்கள் உத்தர பிரதேசம் பயணம் செல்கிறார். கான்பூரில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இன்று பொதுமக்களிடையே உரையாற்றுகிறார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும், மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின், இன்று தொடக்கி வைக்கிறார். கண்காட்சியை பார்வையிட மாணவர்களுக்கு – ரூ.20, பெரியவர்களுக்கு – ரூ.50 நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.
காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நேரில் ஆய்வு செய்கிறார். அங்கு அமித்ஷா தலைமையில் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயில் பொது கோயிலாக இருப்பதால், கோயில் நிர்வாகத்தை சீரமைக்க, கோயில் விவகாரங்களை விசாரிக்க குழுவை நியமிக்க இந்து அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது என தீட்சிதர்கள் புகார்களுக்கு இந்து அறநிலையத்துறை பதிலளித்துள்ளது.
சென்னையில் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு காரணமாக, தேர்வர்கள் பயனடையும் வகையில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் வார நாட்கள் அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இன்று நடத்த திட்டமிட்டிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றவும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.