பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 209-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.75-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விசாரணை
கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Oct 12, 2024 23:05 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைத புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தில் வழக்கு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 25 பேர் குண்டர் சட்டத்தில் எடுத்துள்ள நிலையில், தற்போது புதிதாக புதூர் அப்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 21:18 ISTவிஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் ஏற்கத்தக்கதல்ல: கமல்ஹாசன்
கவரப்பேட்டை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த விஞ்ஞான யுகத்திலும் ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகள் தொடர்வது சிறிதும் ஏற்கத்தக்கதல்ல. எதைக்காட்டிலும் முக்கியமானது பொதுமக்களின் உயிர். அதைக் காப்பதில் சற்றும் கவனக்குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
Oct 12, 2024 21:11 ISTகவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் ரயில் சேவை தொடக்கம்
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் சென்னை மார்க்கத்தில் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. நிஜாமுதீன் - சென்னை செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் சென்றது.
-
Oct 12, 2024 20:07 ISTகலைஞர் பூங்காவில் ஜிப்லைன் பழுது - இ.பி.எஸ் கண்டனம்
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "விடியா தி.மு.க முதல்வர், தனது தந்தை கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.
அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.
கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
விடியா திமுக முதல்வர், தனது தந்தை
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 12, 2024
திரு. கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள்… pic.twitter.com/h94161OoLy -
Oct 12, 2024 19:39 ISTமீட்புப் பணிகள் நிறைவு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
கவரப்பேட்டையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், 3 ரயில்கள் வழக்கமான பாதையில் செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக மாற்றுப்பாதையில் செல்லும் என 3 ரயில்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றது. ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், இன்று இரவுக்குள் அந்த தடத்தில் ரயில் சேவை தொடங்கவுள்ளது
-
Oct 12, 2024 19:38 ISTகோட் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் - வீடியோ
'தி கோட்' திரைப்பட வெற்றியை தயாரிப்பாளர் அர்ச்சனா, தமிழ்நாடு விநியோகஸ்தர் ராகுல்-உடன் கேக் வெட்டி நடிகர் விஜய் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
#WATCH | 'THE GOAT' திரைப்பட வெற்றியை தயாரிப்பாளர் அர்ச்சனா, தமிழ்நாடு விநியோகஸ்தர் ராகுல்-உடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஜய்#SunNews | #TheGOAT | #TheGreastestOfAllTime | @actorvijay | @archanakalpathi | @mynameisraahul pic.twitter.com/kkLFxft85C
— Sun News (@sunnewstamil) October 12, 2024 -
Oct 12, 2024 19:36 IST13 ரயில்வே ஊழியர்களுக்கு சம்மன்
கவரைப்பேட்டை ரெயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே ஊழியர்களுக்கு சென்னை கோட்ட மேலாளர் சம்மன் அனுப்பியுள்ளார். கவரைப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், மோட்டர் மேன், கவரைப்பேட்டை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரி என 13 பேர் இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 19:14 IST'சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும்' - தலைமை செயலாளர் முருகானந்தம் பேச்சு
சென்னை எழும்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், ஐ.ஏ.எஸ். அதிகாரி செல்வம் எழுதியுள்ள 'ஹார்வர்டு நாட்கள்' என்ற புத்தகத்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் வெளியிட்டார். தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் அதனை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை செயலாளர் முருகானந்தம், பொருளாதார வளர்ச்சிக்கு தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், "சென்னையில் 12 புதிய பூங்காக்கள் உருவாக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நகராட்சி பகுதிகளில் 1,250 பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு கான்கீரிட் வனமாக இருக்கும் சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும்" என்று தெரிவித்தார்.
-
Oct 12, 2024 18:27 ISTகோத்தகிரி: 20 அடி ஆழ குழிக்குள் விழுந்த இளைஞர்
கோத்தகிரி அருகே, 20 அடி ஆழ குழிக்குள் இளைஞர் ஒருவர் விழுந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி அவரை பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கயிறு கட்டி குழிக்குள் இறங்கினர்.
நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருந்த பாழடைந்த வீட்டின் நடுவே அந்த 20 அடி ஆழ பள்ளம் இருந்துள்ளது.
-
Oct 12, 2024 18:14 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து: தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்!
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம் செய்யப்பட்டு வருகின்றன. 9 பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று இரவுக்குள் 2 ரயில் பாதைகளும், நாளை காலைக்குள் மற்ற 2 பாதைகளும் சீர் செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
#Watch | கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், தண்டவாளத்தில் தடம் புரண்ட அனைத்து ரயில் பெட்டிகளும் அகற்றம்!
— Sun News (@sunnewstamil) October 12, 2024
9 பெட்டிகள் ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எஞ்சி இருந்த 2 பெட்டிகளும் தற்போது கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டன. இன்று இரவுக்குள் 2 ரயில் பாதைகளும், நாளை… pic.twitter.com/NvHdD2xkOi -
Oct 12, 2024 17:50 ISTஜனவரி 10-ல் 'கேம் சேஞ்சர்’ ரிலீஸ்
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ’கேம் சேஞ்சர்’ திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Oct 12, 2024 17:48 ISTகவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளுவர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் பாதை பிரியும் இடத்தில், ரயில்வே இண்டர்லாக் அமைப்பு குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டறிந்தார் எஸ்.பி. ஸ்ரீஜித்.
-
Oct 12, 2024 17:46 ISTஆம்ஸ்ட்ராங் வழக்கு - ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 17:25 IST'முரசொலி செல்வம் மறையவில்லை' - ஸ்டாலின் பதிவு
"அண்ணன் முரசொலி செல்வத்தின் மரணத்தை ஒரு கட்சிக்கோ குடும்பத்திற்கோ ஏற்பட்ட மரணமாகக் கருதாமல், சமூகநீதிப் பயண வழியில் இயற்கை உருவாக்கிய இடர்ப்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. முரசொலி செல்வம் மறையவில்லை. உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Oct 12, 2024 16:59 IST17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
சென்னை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, தஞ்சை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், மதுரை, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் 17 ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 12, 2024 16:39 ISTமுரசொலி செல்வம் மறையவில்லை! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி வெளிச்சம் தருவார்! - மு.க.ஸ்டாலின்
அண்ணன் முரசொலி செல்வத்தின் மரணத்தை ஒரு கட்சிக்கோ குடும்பத்திற்கோ ஏற்பட்ட மரணமாகக் கருதாமல், சமூகநீதிப் பயண வழியில் இயற்கை உருவாக்கிய இடர்ப்பாடு என்று கருதி, துயரத்தில் துணைநின்று ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி! முரசொலி செல்வம் மறையவில்லை! உதயசூரியனின் கதிராக ஒளிவீசி நமக்கு என்றும் வெளிச்சம் தருவார்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
-
Oct 12, 2024 16:16 ISTஅனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணை - அமைச்சர் பெரியகருப்பன்
தக்காளி, வெங்காய விலையை கட்டுக்குள் வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது; சென்னையில் பசுமை பண்ணை மூலம் விலை ஏற்றத்தை அரசு தடுத்துள்ளது; அனைத்து மாவட்டங்களுக்கும் பசுமை பண்ணையை விரிவுபடுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது என சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
-
Oct 12, 2024 15:49 ISTகவரைப்பேட்டையில் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரம்
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளத்தில் புரண்டு கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் 2 பெட்டிகள் மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ள நிலையில், 150 டன் எடை வரை கையாளும் திறன் கொண்ட கனரக க்ரேன் கொண்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 4 வழித்தடத்தில் 2 வழித்தடம் மாலைக்குள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
-
Oct 12, 2024 15:34 ISTரயில் விபத்து; 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன்
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மாலை தெற்கு ரயில்வே அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அதிகாரிகளுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது
-
Oct 12, 2024 15:01 ISTகவரைப்பேட்டை ரயில் பாதைகளில் இரவுக்குள் போக்குவரத்து சீராகும்
கவரைப்பேட்டையில் இரு ரயில் பாதைகளில் இன்று இரவுக்குள் போக்குவரத்து சீராகும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
-
Oct 12, 2024 14:50 ISTசாம்சங் விவகாரம்; சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு சி.ஐ.டி.யூ கடிதம்
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு சி.ஐ.டி.யூ கடிதம் எழுதியுள்ளது. தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் நலத்துறை பதிவாளர் மறுப்பதாக கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளது
-
Oct 12, 2024 14:48 ISTசென்னை மாங்காடு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்
சென்னை மாங்காடு அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம் அடைந்தனர். வீட்டின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து சேதம் அடைந்துள்ளது
-
Oct 12, 2024 14:02 IST8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 12, 2024 13:50 ISTத.வெ.க மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம்
த.வெ.க முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கும் பணி தொடங்கியது. இன்று மாலை 4 மணிக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் கொடிக்கம்ப பூஜை நடைபெறுகிறது
-
Oct 12, 2024 13:28 ISTவிபத்திற்கு நிர்வாக அலட்சியம் தான் காரணம் - திருவள்ளூர் எம். பி. சசிகாந்த் செந்தில்
விபத்திற்கு நிர்வாக அலட்சியம் தான் காரணம். ரயில்வே ஊழியர்களுக்கு அரசின் மீது மிகப்பெரிய வருத்தம் உள்ளது; ரயில் இன்ஜின் டிரைவர்களை தூங்க விடுவதில்லை என கடந்த 6 மாதமாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற விபத்துகளை தடுக்க வேண்டும். ரயில் விபத்துகளை தடுப்பது குறித்து நாடாளுமன்றத்திலும் கேள்விகளை எழுப்பினோம், ஆனால் அரசு எதையும் கண்டுக்கொள்ளவில்லை. ரயில் விபத்து குறித்து என்.ஐ.ஏ ஆய்வு செய்வதன் அவசியம் என்ன? என திருவள்ளூர் காங்கிரஸ் எம். பி. சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்
-
Oct 12, 2024 12:57 ISTஆறு நாட்களுக்கு ஒரு விபத்து; தீர்வுகளை ரயில்வே உருவாக்குவது எப்போது? சு.வெங்கடேசன் கேள்வி
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே . ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது? என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
-
Oct 12, 2024 12:33 ISTவானர வேடமிட்ட கைதிகள் தப்பியோட்டம்
உத்தரகாண்ட் - ஹரித்துவார் சிறையில் ராமாயண நாடக அரங்கேற்றத்தின் போது வானர வேடமிட்ட 2 கைதிகள் தப்பியோடியுள்ளனர்
-
Oct 12, 2024 12:14 ISTஆயுத பூஜை கொண்டாடிய நடிகர் விஜய் சேதுபதி
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஊழியர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி ஆயுத பூஜை கொண்டாடினார்
-
Oct 12, 2024 12:01 ISTஎன்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் காலையில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
-
Oct 12, 2024 11:16 ISTபொதுத் தேர்வு அட்டவணை
10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிடுகிறார்.
-
Oct 12, 2024 11:12 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.56,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7120க்கு விற்பனை ஆகிறது.
-
Oct 12, 2024 11:08 ISTகோவை விமான நிலையத்தில் பரபரப்பு
துபாயில் இருந்து 164 பயணிகளுடன் கோழிக்கோடு செல்ல இருந்த விமானம் கோவையில் தரை இறங்கியது
கோழிக்கோட்டில் வானிலை சரி இல்லாததால் கோவை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது
-
Oct 12, 2024 10:32 ISTரயில் மீட்பு பணியில் 'மாமல்லன்' கிரேன்
கவரைப்பேட்டை ரயில் விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் 140 டன் வரை தூக்கக்கூடிய அதிதிறன் கொண்ட `மாமல்லன்' பளு தூக்கும் கருவி பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 10:11 ISTசந்தேகத்திற்கு இடமான ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பஞ்சாப்: பெரோஸ் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. பாதுகாப்பு படையினரால் போதைப் பொருட்களை கொண்டு வந்த ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
-
Oct 12, 2024 09:55 IST18 ரயில்கள் ரத்து
கவரைப்பேட்டை ரயில் விபது நடந்த இடத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணி நீடிப்பதால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி- புதுச்சேரி, சென்னை சென்ட்ரல்- திருப்பதி, சூலூர்பேட்டை- நெல்லூர், கடப்பா- அரக்கோணம், விஜயவாடா- சென்னை சென்ட்ரல், டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 08:56 ISTமீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியது
கவரைப்பேட்டை அருகே ரயில் விபத்து நடந்த பகுதியில் மழை விட்டுள்ளதால் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியது.
-
Oct 12, 2024 08:54 ISTதர்பங்கா புறப்பட்ட ரயில்
கவரைப்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு மாற்று ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா புறப்பட்டது. பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.
-
Oct 12, 2024 08:18 ISTகனமழை - மீட்பு பணிகளில் சிக்கல்
கவரப்பேட்டையில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் கனமழை பெய்து வருகிறது. தண்டவாளத்தின் குறுக்கே கிடக்கும் ரயில் பெட்டிகளை மீட்கும் பணிகள் தீவிரம். ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்ட நிலையில், கனமழை பெய்வதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
Oct 12, 2024 08:17 ISTஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணை
கவரைப்பேட்டை அருகே நடந்த ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட உள்ளது.
இந்தக் குழுவினர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்வர். ரயிலை இயக்குதல், சிக்னல், தொழில்நுட்ப கோளாறுக்கான காரணங்களை ஆராய்ந்து அதன் அறிக்கையை சமர்ப்பிப்பர்.
மனிதத் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமா கண்டுபிடிக்கப்பட்டு, அதன்படி உயர்மட்டக் குழுவினர் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்வர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.