Advertisment

Tamil News highlights: இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு: பல்வேறு அழகிய மலர்கள் நிறைந்த அற்புதமான பூந்தோட்டம்: அதை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது: ஸ்டாலின்

Tamil Nadu News, Tamil News LIVE, Kerala Convention Centre Blasts, Andhra train accident, World Cup 2023, Chennai Rains today – 30 October 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
30 Oct 2023 புதுப்பிக்கப்பட்டது Oct 31, 2023 07:20 IST
New Update
stalin

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: நவ.2 ஆஜராக உத்தரவு

டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் 2ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது.

தேர்தல் பரப்புரையில் எம்.பி.க்கு கத்திக்குத்து: காங்கிரஸ் மீது அமைச்சர் புகார்

தெலங்கானா பாரதீய ராஷ்ட்ரீய சமிதி எம்.பி. பிரபாகர் ரெட்டி தேர்தல் பரப்புரையின்போது இன்று கத்தியால் குத்தப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு பின்னால் காங்கிரஸ் குண்டர்கள் இருப்பதாக தெலங்கானா அமைச்சர் கே.டி ராமாராவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “பிஆர்எஸ் எம்பி பிரபாகர் ரெட்டி மீது காங்கிரஸ் குண்டர்கள் நடத்திய கொலை முயற்சியை வன்மையாக கண்டிக்கிறேன். விரக்தியில் இருக்கும் காங்கிரஸ் இப்போது தெலுங்கானாவில் நமது தலைவர்களை உடல் ரீதியாக ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தெலங்கானா காங்கிரஸ் தலைவராக 3வது கிரிமினல் நியமிக்கப்படுவதால் இது நிச்சயமாக எதிர்பார்க்கப்பட்டது. ஜனநாயக சமூகத்தில் வன்முறைக்கு இடமில்லை, இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளதார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது - டி.கே. சிவக்குமார்

15 நாட்களுக்கு தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்த நிலையில், கர்நாடக துனை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில், “நீர்வரத்து முற்றிலுமாக நின்றுவிட்டதால் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருக்கும் தண்ணீர் எங்கள் குடிநீர் தேவைக்கே போதுமானதாக இல்லை; எனவே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது” என்று கூறினார்.

 டி.டி.எஃப் வாசனுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு 

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து விபத்தில் சிக்கி கைதான டி.டி.எஃப் வாசனுக்கு நவம்பர் 9-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டை திராவிட பூமி என்று அழைப்பதில் தவறில்லை - அமைச்சர் சேகர் பாபு 

அமைச்சர் சேகர் பாபு: “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கலாச்சார மையம் அமைக்கப்படும் என்று கூறினார். இதில், சட்ட விதி மீறல்கள் எதுவும் இல்லை, கலாச்சார மையத்தைக் கண்டிப்பாக தொடருவோம், அண்ணாமலை போராட்டத்துக்கெல்லாம் பயந்தது அல்ல இந்த இயக்கம். அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தமிழ்நாட்டுக்கு வந்து 2, 3 ஆண்டுகள்கூட ஆகவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தவறுகள் எதுவும் நடப்பதற்கு இந்த ஆட்சி அனுமதிக்காது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு புண்ணிய பூமி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திராவிடத்தால்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கு மருத்துவர், பொறியாளர் என எந்த துறையிலும் பற்றாக்குறை இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம். அதனால், தமிழ்நாட்டை திராவிட பூமி என்று அழைப்பதில் தவறில்லை” என்று  கூறினார்.

நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றுவந்த மாணவி தற்கொலை 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மாணவி பைரவி தற்கொலை செய்துகொண்டார். நேற்று முன் தினம் விஷம் அருந்திய மாணவி பைரவி சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1 முதல் காவிரியில் 2,600 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை

தமிழ்நாட்டுக்கு நவம்பர் 1 முதல் 23ம் தேதி வரை காவிரியில் இருந்து வினாடிக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி: காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி உத்தரவு 

கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சுற்றுலாத் தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள், துணை தூதரகங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைத் தீவிரமாகக் கண்காணிக்க அனைத்து காவல் அதிகாரிகள், ரயில்வே ஏடிஜிபி, ஐஜி, டிஐஜிகளுக்கு கூடுதல் டிஜிபி அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கு

புதுச்சேரி: ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது! ஆளுநர் மாளிகை முகப்பு வாசல், ஆனந்தரங்கப்பிள்ளை வீதியில் தடுப்பு அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்!

கும்பகோணம் : திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி ஆலயத்தில் பிரபல தெலுங்கு நடிகரும் எம்.எல்.ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்!

மும்பையில் முடிவுக்கு வரும் காலி-பீலி கருப்பு-மஞ்சள் டாக்ஸி-க்களின் சேவை

மும்பையில் முடிவுக்கு வரும் காலி-பீலி எனப்படும் பிரிமியர் பத்மினி கருப்பு-மஞ்சள் டாக்ஸி-க்களின் சேவை. காலி-பீலி பயணங்கள் இனிமையான பல நினைவுகளை கொண்டது என ஆனந்த் மகிந்திரா பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் பலர் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

அண்மை காலமாக பலர் மாரடைப்பால் உயிரிழப்பதற்கு கொரோனாவே காரணம்" என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கேரளா முதல்வர் ஆய்வு

கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பின் சம்பவம் குறித்து கேரளா மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

முகேஷ் அம்பானியின் `ஜியோ மால்' மும்பையின் பந்த்ரா குர்லாவில் நவ.1 தேதி திறப்பு

இந்தியாவிலேயே மிகப்பெரிய, அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள முகேஷ் அம்பானியின் `ஜியோ மால்' மும்பையின் பந்த்ரா குர்லாவில் நவ.1 தேதி திறக்கப்படுகிறது

செந்தில் பாலாஜி ஜாமின் மேல்முறையீட்டு மனு : நவம்பர் 6-க்கு தள்ளிவைப்பு

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி தள்ளுபடி செய்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு நவம்பர் 6ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 1 நாள் போலீஸ் காவல்

பாஜக கொடிக்கம்ப விவகாரத்தில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேருக்கு 1 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டு ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாக்டர் பட்டாளத்தையே வீட்டுக்கு அனுப்புன முதல்வருக்கு நன்றி : இயக்குனர் விக்ரமன்

"டாக்டர் பட்டாளத்தையே வீட்டுக்கு அனுப்புன முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு ரொம்ப நன்றி" என்று இயக்குனர் விக்ரமன், கூறியுள்ளார். உடல்நலக் குறைவால் 5 வருடங்களாக படுக்கையில் உள்ள தனது மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க உதவுமாறு விக்ரமன் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீசார் சோதனை

கேரளா குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான டொமினிக் மார்ட்டினின் பூர்வீக வீட்டில் போலீசார் சோதனை. ஆலுவா அருகே அத்தாணி பகுதியில் உள்ள பூர்வீக வீட்டில் வெடிகுண்டு தயாரித்ததாக டொமினிக் வாக்குமூலம் அளித்த நிலையில் சோதனை வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்டதை யாரேனும் கவனித்தார்களா என விசாரணை டொமினிக் மார்ட்டினுக்கு வேறு யாரேனும் உதவினார்களா எனவும் விசாரணை.

 பழ.நெடுமாறனின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார் ஸ்டாலின்

மதுரையில் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் இல்லத்திற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் மு..ஸ்டாலின்.

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர்

 சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கைதான ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல்

+2 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்

 மதுரை தனியார் பள்ளி மாணவர் ஒருவர், +2 பொதுத் தேர்வில் வினாத்தாள் முறைகேடு செய்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. தேர்வு முறைகேடு நடந்து 6 மாதங்கள் ஆகியும் இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி. +2 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் - நீதிபதி உத்தரவு

ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் வழக்குப்பதிவு: அவசர வழக்காக விசாரிக்க இயலாது: நீதிமன்றம்

 ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக RSS சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தாக்கல்.இன்றே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம். அனுமதி கோரிய அக்டோபர் 22, 29 தேதிகள் தாண்டிவிட்டதால், அவசர வழக்காக விசாரிக்க அவசியம் இல்லை; வழக்கமான பட்டியலில் விசாரிக்கப்படும் - உயர் நீதிமன்றம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு: ஓ.பி.எஸ் மரியாதை 

தேவர் ஜெயந்தியையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் சென்று நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இயக்குனர் விக்ரமனின் மனைவியை மருத்துவ குழுவுடன் சென்று நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இ.பி.எஸ் மரியாதை 

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.

2 ரயில்கள் மோதி கோர விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தது ரயில்வே துறை

ஆந்திரா: விஜயநகரம் அடுத்த கண்டகபள்ளி ரயில் நிலையம் அருகே 2 ரயில்கள் மோதி கோர விபத்து. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம்  நிவராணம் அறிவித்தது ரயில்வே துறை. ஆந்திர அரசு சார்பாக ரூ. 10 லட்சமும், ஒன்றிய அரசு சார்பாக  ரூ. 2 லட்சம் இழப்பீடாக  வழங்கப்படும் என அறிவிப்பு.  

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி மாநில புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும் வழக்கை 6-8 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

லியோவெற்றி கொண்டாட்டத்துக்கு அனுமதி

நவம்பர் 1-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் லியோபட வெற்றி விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கியது.

சவரனுக்கு ரூ.280 குறைந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.45,880-க்கும்; ஒரு கிராம் ரூ.5,735-ஆக விற்பனையாகிறது.

சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை

மந்தைவெளி, MRC நகர், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மரியாதை

Stalin

மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள, மாமன்னர்கள் மருது சகோதரர்கள் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Thevar Jayanthi

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் 2 புதிய மேம்பாலங்கள்

மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோரிப்பாளையம் சந்திப்பில் ₹190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ₹150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு         

தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு  மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு நேற்றிரவு பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலும் விசாகப்பட்டினம்-பாலசா பயணிகள் ரயிலும் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி தண்டவாளத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா குண்டு வெடிப்பு                                                                                                        

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரியில் நடந்த ஜெகோவா வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

இதையடுத்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment