பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 350-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மோடி வாழ்த்து
மன்னரான மூன்றாம் சார்லஸ்-க்கு பிரதமர், நரேந்திர மோடி வாழ்த்து தெர்வித்துள்ளார். வரும் ஆண்டுகளில் இந்தியா- இங்கிலாந்து உறவு மேலும் வலுப்பெறும் என்பதில் உறுதியாக உள்ளதாக ட்வீட்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேள்வி
சித்த மருத்துவப் பல்கலைக்கழக மானிய விதியில் வேந்தராக ஆளுநர்தான் இருக்க வேண்டும் என்றும், துணை வேந்தரை அவரே நியமிக்கலாம் என்று எந்த இடத்தில் குறிப்பிட்டுள்ளது என ஆளுநர் ரவி கூற முடியுமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
என் மகன் விஜய்யை ஹீரோவாக அறிமுகப்படுத்த பல இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டேன். யாரும் முன்வரவில்லை என சென்னையில் நடைபெற்ற, தங்கர்பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்
கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் உல்லாச படகில் பயணம் செய்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
ஆளுநருடனான தனிப்பட்ட நட்பு வேறு; கொள்கை வேறு. தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டு தர மாட்டேன். இந்தியாவுக்கே முன்மாதிரியான மாநிலமாக தமிழகத்தை உயர்த்தி காட்டுவோம் என தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 228 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது
ஆளுநருக்குச் சொல்கிறேன் திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதானம், மனுநீதி, வர்ணாசிரமத்தை காலாவதியாக்கியது திராவிடம். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டுமே உண்டு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடிவிபத்து ஏற்பட்டது. இருவர் படுகாயமடைந்த நிலையில் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது
மணிப்பூரில் அமைதி திரும்ப பிரார்த்திக்கிறேன் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடக்கும் வன்முறையில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னை வண்டலூரில் உள்ள பூங்காவிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர்.
கோடைக் கால விடுமுறை தினம் என்பதால் இவ்வளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘வீரன்’ திரைப்படம், ஜூன் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், மோகன் லால், ஷிவ் ராஜ்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.
திராவிடம் என்பது தனித்த நாகரீகம், மிகச் சிறந்த வரலாற்றினை கொண்டது.
ஆளுனர் ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்பட திராவிட மண் ஏற்றுக் கொள்ளாது என ஆளுனருக்கு எதிராக தி.மு.க. விளையாட்டு அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது நெல்பேட்டை பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கிய புகாரில் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாகத்தியுடன் அவர்கள் கூட்டத்தில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.
ராணுவம் வான்வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தியதன் மூலம் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 23,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவம் மற்றும் அசாம் அதிரடிப்படையினர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் இதுவரை 23,000 பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியதால், ஞாயிற்றுக்கிழமை காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காலத்தில் உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைக் காண முடிந்தது என்று பிடிஐ தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2016 முதல் 20202 வரையிலான 5 ஆண்டுகளில் 40,000-க்கு அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, உடனடியாக மாணவர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் காலதாமதமாக வந்ததாகக் கூறி டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்தின் கேட்டை மூடியதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், டி.என்.பி.எஸ்.சி தேர்வு மையத்தின் கதவை உடைத்தெறிந்து தேர்வெழுத சென்ற தேர்வர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் கடந்த 6 நாட்களில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 மூலம் 659 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 728 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் 41 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 499 மையங்களில் இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின் போது நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன்” போதிய பாதுகாப்பின்மையால் திருவிழாக்களில் தொடரும் சோக நிகழ்வுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் “பாதுகாப்பை முறையாக திட்டமிடாததால் மதுரை திருவிழாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்” “பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருவிழாவில் உலா வந்தவர்களால் பக்தர்கள் அச்சம் ” தமிழகத்தில் உளவுத்துறை இயங்குகிறதா? காவல்துறையினர் காவல் கட்டப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது – ஈபிஎஸ்
மதுரை: கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது நெல்பேட்டை பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பைக்குகளை அடித்து நொறுக்கிய புகாரில் 7 சிறுவர்கள் கைது பட்டாகத்தியுடன் அவர்கள் கூட்டத்தில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை
சேப்பாக்கத்தில் நேற்று நடந்த சென்னை – மும்பை போட்டிக்கு பிறகு ‘தல’ தோனியுடன் உரையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி
சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய பொருட்கள் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
திராவிட மாடல் பயன் தராது என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது. சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து 2 ஆண்டு காலமாக திமுக அரசு மக்களை ஏமாற்றி உள்ளது. தமிழக மக்களுக்கு வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? என நன்றாக தெரியும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரையில் 13 தேர்வு மையங்கள் அமைப்பு
9,139 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்
நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது
மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கும் நிலையில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வர அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு
புதுக்கோட்டை, ராக்கத்தான்பட்டியில் உள்ள கல்குவாரியில் ஹிட்டாச்சி வாகனத்தால் பாறைகளை அகற்றிய போது மண் சரிந்து விபத்து
மண் சரிவில் சிக்கி கொண்ட தொழிலாளி லட்சுமணன்(25) – மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 2,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர் எண்ணிக்கை 27,212 ஆக உள்ளது – மத்திய சுகாதாரத்துறை தகவல்
ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து ஆட்சி நடத்தி வருகிறோம்.
2 ஆண்டுகள் ஒத்துழைப்பு வழங்கியது போல தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன்(18) என்பவர் தூக்கிட்டு தற்கொலை
இன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
கர்நாடகா தேர்தலையொட்டி பெங்களூருவில் 2வது நாளாக பிரதமர் மோடி பேரணி
நேற்று 26 கி.மீ. தூரம் வாகன பேரணி மேற்கொண்ட நிலையில், இன்று 6.5 கி.மீ பேரணி
சென்னை, வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் “ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம்”
அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நடிகர்கள் சிவக்குமார், கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு
அருங்காட்சியகத்தில் உள்ள பழமையான கார்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
சென்னை, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை . திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3ம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு மலர் தூவி மரியாதை . அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
தென்கிழக்கு வங்க கடலில் நாளை காலைக்குள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை, தேனாம்பேட்டையில் ரேப்பிடோவில் சென்ற பெண் ஒப்பனை கலைஞர் லாரி மோதி உயிரிழப்பு. உறவினர் வீட்டிற்கு பிறந்தநாள் வாழ்த்து பெற சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்பு . ராமநாதபுரம், தென்காசி,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு முழுவதும் இன்று ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யபட்டன. பல்வேறு தரப்பின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும், கடந்த 5ம் தேதி வெளியான இத்திரைப்படம், தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்களில் மட்டுமே திரையிப்பட்டு வந்தது. இந்நிலையில் போராட்டம் தீவிர மடைந்ததால் படம் ரத்து செய்யப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது
தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், குழந்தைகள் மையங்களுக்கு மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை விடுமுறை வழங்கவும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கவும் உத்தரவிட்டு அரசாணை வெளியீடு.
மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை மற்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இன்று நடக்கவிருந்த நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் புதிய தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.