Tamil news today : காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவக்கம்

Tamil Nadu News,, Petrol price Today - 23 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News,, Petrol price Today - 23 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
congress

congress

பெட்ரோல்,டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை : பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு

2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைப்பு பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்கள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் முதல்வரின் அறிவுறுத்தலின்படி 2 மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை தூத்துக்குடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு .

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:52 (IST) 23 Sep 2022
    கள்ளக்குறிச்சி கலவரம் - மேலும் 5 பேர் கைது

    கள்ளக்குறிச்சி, தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், பொருட்களை எடுத்து சென்றதாகவும் 5 பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தனர்


  • 22:48 (IST) 23 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் - நிபந்தனைகள் அறிவித்த உயர்நீதிமன்றம்

    ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது

    அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாக பேசக் கூடாது அனுமதிக்கப்பட்ட பாதையில் இடதுபுறமாக மட்டுமே அணிவகுப்பை நடத்த வேண்டும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்த கூடாது

    காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


  • 22:45 (IST) 23 Sep 2022
    கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு

    கோவையில் தொடரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது கோவைப்புதூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது


  • 20:06 (IST) 23 Sep 2022
    மனு தர்மம் பேசியவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் - சீமான் குற்றச்சாட்டு

    “மனு தர்மம் பேசியவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்“ தமிழை பற்றி பெருமையாக பேசுகிறீர்கள், ஆனால் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துகிறீர்கள். வணிக நிறுவனங்களின் பெயர்களை கூட தமிழில் வைப்பதில்லை மனு தர்மத்தை எழுதியவர்களை விட்டுவிட்டு, எடுத்து பேசியவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார்


  • 20:03 (IST) 23 Sep 2022
    பெட்ரோல் குண்டு வீச்சு - காவல் ஆணையர் எச்சரிக்கை

    கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார் மேலும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் காவல் ஆணையர் கூறியுள்ளார்


  • 19:02 (IST) 23 Sep 2022
    “மக்கள் பிரச்சினையை அரசு புரிந்துகொள்ள வில்லை - ஜே.பி.நட்டா

    தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் பாஜகவில் இணைந்து வருகின்றனர் திமுக அரசு மக்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாதது வருத்தத்தை அளிக்கிறது பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்


  • 18:26 (IST) 23 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ்., பேரணி: மேல்முறையீடு செய்ய சீமான் வலியுறுத்தல்

    ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


  • 17:59 (IST) 23 Sep 2022
    விஷால் வழக்கு ஒத்திவைப்பு

    நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.


  • 17:31 (IST) 23 Sep 2022
    தமிழ்நாட்டில் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்

    வருகிற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசிய மா.சுப்பிரமணியன் இதனை தெரிவித்தார்.


  • 17:24 (IST) 23 Sep 2022
    செப்.25, 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம்

    வருகிற 25ஆம் தேதி 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்து பேசிய மா.சுப்பிரமணியன் இதனை தெரிவித்தார்.


  • 17:04 (IST) 23 Sep 2022
    தீபாவளிக்கு ஆவினில் நெல்லை அல்வா உள்பட 9 பொருள்கள் அறிமுகம்: 200 கோடி இலக்கு!

    தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார


  • 16:55 (IST) 23 Sep 2022
    டிசம்பரில் 16வது ஐபிஎல் ஏலம்

    டிசம்பரில் 16வது ஐபிஎல் மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 16:55 (IST) 23 Sep 2022
    டிசம்பரில் 16வது ஐபிஎல் ஏலம்

    டிசம்பரில் 16வது ஐபிஎல் மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 16:37 (IST) 23 Sep 2022
    கும்பகோணத்தில் தேனீக்கள் கொட்டி 12 பேர் காயம்!

    கும்பகோணத்தில் தொண்டு நிறுவனத்தின் மரக்கன்று நடும் விழாவின் போது தேனீக்கள் கொட்டியதில் 12-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    3 புகைப்பட கலைஞர்கள், ஒரு செய்தியாளர், மாணவர்கள், ஆசிரியர்கள் என 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  • 16:36 (IST) 23 Sep 2022
    சென்செக்ஸ் 1020 புள்ளிகள் சரிவு... 1.5% வீழ்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!

    இந்தியப் பங்குச் சந்தைகள் வார நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. பி.எஸ்.இ., சென்செக்ஸ், என்.எஸ்.இ., நிஃப்டி கிட்டத்தட்ட 1.5% வரை வீழ்ச்சி கண்டன.


  • 16:35 (IST) 23 Sep 2022
    "கனடாவில் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்“ - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்!

    கனடாவில் மதவெறி வன்முறைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கனடாவில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.


  • 16:29 (IST) 23 Sep 2022
    அமைச்சர் அன்பில் மகேஷ் வேட்பு மனு தாக்கல்!

    திமுக உட்கட்சி தேர்தலில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.


  • 16:29 (IST) 23 Sep 2022
    “8588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை“ - பள்ளிகல்வித்துறை!

    2021-2022 ஆம் ஆண்டில் 12ம்வகுப்பு முடித்தவர்களில் 8,588 பேர் உயர்கல்வி பயில விண்ணப்பிக்கவில்லை.

    இந்நிலையில், 8,588 பேரின் விவரங்களை சேகரிக்க முதன்மைகல்வி அலுவலர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 8,588 மாணவர்களை கண்டறிந்து உயர்கல்வியில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.


  • 16:22 (IST) 23 Sep 2022
    இந்து முன்னணி நிர்வாகியின் கார் தீ வைப்பு!

    கோவை, குனியமுத்தூரில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  • 16:15 (IST) 23 Sep 2022
    ஆசிரியர் தகுதி தேர்வு: தேதிகளை அறிவித்தது தேர்வு வாரியம்!

    ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 தேர்வுக்கான தேதிகளை அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-ஐ எழுத, 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பத்துள்ளனர் என்றும், அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


  • 15:28 (IST) 23 Sep 2022
    சமூக வலை தளங்களுக்கு உரிமம் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு!

    வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் தொடர உரிமம் கட்டாயம் என்றும், தொலைத்தொடர்பு சேவையின் ஓர் அங்கமாக டிஜிட்டல் செயலிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


  • 15:13 (IST) 23 Sep 2022
    விஷாலுக்கு எதிரான வழக்கு: அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

    நடிகர் விஷால் ரூ. 21.29 கோடி கடனை திருப்பி கொடுக்கவில்லை என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், விஷால் தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 14:15 (IST) 23 Sep 2022
    'இணையவழி சேவை நிறுவனங்களுக்கு தனி சட்டம் வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்!

    ஸ்விகி, ஓலா போன்ற இணையவழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் நிலையற்ற தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


  • 14:08 (IST) 23 Sep 2022
    எடியூரப்பா மீதான வழக்கு: அதிரடி உத்தரவை பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு

    பெங்களூரு மேம்பாட்டு கழக சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


  • 13:53 (IST) 23 Sep 2022
    மத்திய அரசு சொல்வது முற்றிலும் பொய்

    மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரும் போனோம்; 95% வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு சொல்வது முற்றிலும் பொய் என எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.


  • 13:52 (IST) 23 Sep 2022
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையன் தெரிவித்துள்ளது.


  • 13:47 (IST) 23 Sep 2022
    உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

    பெங்களூரு மேம்பாட்டு கழக சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான ஊழல் வழக்கில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீதான லோக் ஆயுக்தா விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.


  • 13:27 (IST) 23 Sep 2022
    தீபாவளி முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டை விட இந்தாண்டு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.


  • 12:31 (IST) 23 Sep 2022
    இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது. ஒரு டாலருக்கு நிகராக 39 காசுகள் சரிந்து இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 81-ஐ தாண்டி 81.27 ஆக உள்ளது


  • 12:13 (IST) 23 Sep 2022
    தங்கம் விலை உயர்வு

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 37,520 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ4,690-க்கும் விற்பனையாகிறது..


  • 11:17 (IST) 23 Sep 2022
    எங்கிருந்தும் எந்நேரத்திலும்

    'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .


  • 11:16 (IST) 23 Sep 2022
    திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து

    திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து . வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு . 1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி வழக்கு.


  • 11:16 (IST) 23 Sep 2022
    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அவசர சட்டம், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை தமிழ்நாடு அமைச்சரவை வரும் 26ம் தேதி காலை 9.30 மணியளவில் கூடுகிறது.


  • 11:15 (IST) 23 Sep 2022
    காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை - அசோக் கெலாட்

    விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன் : எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே நிலைபாடு - அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை - அசோக் கெலாட்


  • 10:29 (IST) 23 Sep 2022
    தீயை அணைக்கும் பணி தீவிரம்

    டெல்லி, நரேலா பகுதியில் பாதணி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து 8 தீயணைப்பு வாகனங்கள் குவிப்பு - தீயை அணைக்கும் பணி தீவிரம்


  • 10:28 (IST) 23 Sep 2022
    பரந்தூர் விமான நிலையம் ;கிராம மக்கள் போராட்டம்

    சென்னை, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் நாகப்பட்டு, நெல்வாய், ஏகனாபுரம், மேலேறி, கிராம மக்கள் புறக்கணிப்பு.


  • 09:31 (IST) 23 Sep 2022
    நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்பு

    தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்பு . பவுலின் தற்கொலை செய்து கொண்டபோது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோன் மீட்பு .


  • 09:28 (IST) 23 Sep 2022
    ரோஜர் ஃபெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

    பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். லண்டனில் இன்று நடைபெறும் லேவர் கோப்பை தொடரில் தனது கடைசி ஆட்டத்தை ஆடுகிறார்


  • 09:28 (IST) 23 Sep 2022
    2 பேர் கைது

    செங்கல்பட்டு : மேலவலம்பேட்டை பகுதியில் புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 1,410 மது பாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது


Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: