Advertisment

News Highlights:10, 12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான வீரர்கள் விவரத்தை அறிவித்தது பிசிசிஐ.

author-image
WebDesk
New Update
Tamil News Today Live,

தேர்வு முடிவுகள்.

Tamil News Today: 10 மற்றும் 12 வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறன்றன. மாணவர்கள் அதன் முடிவுகளை இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். இந்தியா - அமெரிக்கா வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இதில் முக்கிய விஷயங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு வழங்குமாறு, இந்த ஆண்டு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இட ஒதுகீட்டை இந்த ஆண்டே உறுதி செய்யக்கோரி பிரதமருக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தமிழகத்தை வன்முறை களமாக்க பாஜக முயற்சி செய்வதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர், துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. குணமானவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரிப்பு.பீகார் சட்ட மன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    21:07 (IST)27 Oct 2020

    தலைமுறைகளாக ஊழல் தொடர்வதைத் தடுக்க வேண்டும் - பிரதமர் நரேந்திரமோடி

    லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், " பொருளாதார முறைகேடுகள், போதைப் பொருள் பரிமாற்றம், தீவிரவாதம், ஊழல் ஆகியவை ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டு இருப்பதால், இதனை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்றும், தலைமுறைகளாக ஊழல் தொடர்வதைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றும் தெரிவித்தார்.  

    20:11 (IST)27 Oct 2020

    நாளை 10,12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

    நாளை 10,12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்; 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்தது. தேர்வு முடிவுகளை மாணவ/ மாணவிகள் http://dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்

    20:09 (IST)27 Oct 2020

    பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை - நிதி அமைச்சர்

    ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் பொருளாதாரத்தில் 23.9 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் குறைவாகவே இருக்கும் என்றும், பொதுமக்களின் வாங்கும் திறனை அதிகரித்து, பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    20:07 (IST)27 Oct 2020

    மனுஸ்மிருதி பெண்களை மிகமிகக் கேவலமாக சித்தரிக்கிறது - திருமாவளவன் விளக்கம்

    மனுஸ்மிருதி பெண்களை மிகமிகக் கேவலமாக சித்தரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வர்ணம் அல்லது சாதியைத்தவிர மற்ற எவரும் இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள் என்பதாக பேசுகிறது. அதன் காரணமாகவே புரட்சியாளர் அம்பேத்கர் 1927ஆம் ஆண்டிலேயே அதைத் தீயிட்டுக் கொளுத்தினார் என்று தொல். திருமாவளவன் தெளிவுப்படுத்தினார்.    

    20:04 (IST)27 Oct 2020

    நம் நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் - டி. ஆர். பாலு

    "நம் நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அரசை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்க வேண்டும்; தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பறிக்க பாஜக அரசு துணை போகக்கூடாது என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

    19:21 (IST)27 Oct 2020

    தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று 2,522 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து இதர 32 மாவட்டங்களில் 100க்கும் குறைவான கொரோனா எண்ணிக்கை கண்டறியப்பட்டது. 

     

     

        

    17:54 (IST)27 Oct 2020

    42 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

    தில்லியிலும், ஹரியானா, பஞ்சாப், உத்ரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் 42 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர். முறைகேடாகவும், வரி செலுத்த தவறியும் பலர் கருப்புப் பணத்தை பதுக்கியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

    சுமார் 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறியுள்ளது.

    17:53 (IST)27 Oct 2020

    சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

    100 அடி சாலை & காளியம்மன் சாலை சந்திப்பில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளால், பின்வரும் இடங்களில் வாகனங்கள் திசை திருப்பப்பட்டுள்ளது. சாலை திசைதிருப்பல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது. 

    17:49 (IST)27 Oct 2020

    3 நாள் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மத்திய புலனாய்வுத் துறை ஏற்பாடு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு குறித்த 3 நாள் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

    16:14 (IST)27 Oct 2020

    நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு

    ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு, நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

    15:57 (IST)27 Oct 2020

    அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் - பிரதமர் மோடி சந்திப்பு

    இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர்.

    15:52 (IST)27 Oct 2020

    மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தோற்று

    பாஜக கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளுள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் ஒரே அமைச்சரான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக இருந்து வரும் இவர், கொரோனா பரவலின் ஆரம்பக்கட்டத்தில் 'Go Corona Go' என முழக்கம் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    15:01 (IST)27 Oct 2020

    பாகிஸ்தான் மத பாடசாலையில் குண்டுவெடிப்பு - 7 சிறுவர்கள் உயிரிழப்பு

    பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள மத கருத்துக்களை கற்றுக்கொடுக்கும் மத பாடசாலையில், இன்று இன்று காலை 8.30 மணியளவில் குண்டு வெடித்தது. இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், அங்கு கல்வி கற்று வந்த 7 சிறுவர்கள் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    14:57 (IST)27 Oct 2020

    இந்தியா - அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

    ஆயுர்வேதம் மற்றும் புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில், இந்தியா - அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    14:39 (IST)27 Oct 2020

    கன்னியாகுமரி மருத்துவர் டிஎஸ்பியின் டார்ச்சரால் தற்கொலை செய்தது அதிர்ச்சியளிக்கிறது - ஸ்டாலின்

    "விசாரணை என்ற பெயரில் டிஎஸ்பி பாஸ்கர், மருத்துவர் சிவராம பெருமாளை அழைத்துச் சென்று, மிரட்டி, அவதூறாகப் பேசியதை அடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற கருப்பு ஆடுகளால் காவலர்கள், அதிகாரிகளின் நன்மதிப்பு கெடுவது கவலையளிக்கிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கில் உண்மை வெளியே வரும் நிலையில் மீண்டும் ஒரு சம்பவம்" என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

    14:22 (IST)27 Oct 2020

    பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் - 60-க்கும் மேற்பட்ட விசிகவினர் கைது

    மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பிரதமர் மோடியை எதிர்த்து விசிகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அங்கு வேறொரு வேலையாக வந்திருந்த பாஜக நிர்வாகியின் மீது தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து, அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து, 60-க்கும் மேற்பட்ட விசிகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    14:12 (IST)27 Oct 2020

    இந்தியாவின் எரிபொருள் தேவை இரட்டிப்பாகும் - பிரதமர் நரேந்திர மோடி

    காணொலி காட்சி மூலம் இந்திய எரிபொருள் அமைப்பு மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, விலை பாகுபாடின்றி நாடு முழுவதும் எரிவாயு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். விமானங்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதால், எரிபொருளின் தேவையும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் எரிசக்தி எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல பாதுகாப்பு நிறைந்தது என்றும் கூறினார்.

    14:07 (IST)27 Oct 2020

    கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

    திமுக கிழக்கு மண்டல நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 110 திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    13:45 (IST)27 Oct 2020

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு

    மருத்துவ படிப்பில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் புதுச்சேரி கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

    12:55 (IST)27 Oct 2020

    வானிலை நிலவரம்

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    12:24 (IST)27 Oct 2020

    பெரியார் சிலைக்கு காவி சாயம்

    திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டதால் பதற்றம் நிலவியது. சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

    12:06 (IST)27 Oct 2020

    சீமான் கருத்து

    பாஜகவிற்கு வேலை இல்லாததால் தான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது, என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

    11:52 (IST)27 Oct 2020

    கிராம நிர்வாக பணிகளுக்கு - 5 குழுக்கள் நியமனம்

    கிராம ஊராட்சி நிர்வாக பணிகளை திறம்பட செயல்படுத்த 5 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியமனக்குழு, வளர்ச்சி குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை குழு, பணிகள் குழு, கல்விக் குழு  ஆகிய குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவு. 

    11:20 (IST)27 Oct 2020

    விசிக - பாஜக-வினர் இடையே தள்ளு முள்ளு

    கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், விசிக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது. விடுதி தடுப்பை விசிகவினர் உடைத்து உள்ளே செல்ல முயன்றதால் பதற்றம் நிலவியது. பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை அப்புறப்படுத்தினர். 

    10:29 (IST)27 Oct 2020

    அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

    தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம். உயிர்காக்கும் எக்மோ கருவி சிகிச்சையிலும் பின்னடைவு ஏற்பட்டு, ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. சிகிச்சையில் மிகப்பெரிய சவாலாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

    10:27 (IST)27 Oct 2020

    கொரோனா பரிசோதனை

    இந்தியாவில் ஒரேநாளில் 9.58 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 10,44,20,894 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

    09:42 (IST)27 Oct 2020

    அடுத்த ஆண்டும் சி.எஸ்.கே கேப்டன் தோனி தான்

    அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியை தோனியே தலைமைதாங்கி வழிநடத்த வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே அணியின் சிஇஓ, காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

    09:35 (IST)27 Oct 2020

    கலந்தாய்வு தொடக்கம்

    கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்குகிறது. எம்.சி.ஏ. படிப்பைத் தவிர மீதமுள்ள 20 படிப்புகளுக்கு 552 இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. 

    09:34 (IST)27 Oct 2020

    கரை திரும்பிய மீனவர்கள்

    கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் பாட்டில்களை வீசி இலங்கை கடற்படை தாக்குதல். இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் மீனவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மீனவர்கள் கரைதிரும்பினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரைதிரும்பினர். 

    09:31 (IST)27 Oct 2020

    பட்டாசு விபத்து - இலவச எண் அறிமுகம்

    சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் 1800 425 6743 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சிவகாசி தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநர் வேலுமணி தகவல்

    09:29 (IST)27 Oct 2020

    கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

    லலிதா ஜுவல்லரி உள்ளிட்ட நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகன் உயிரிழந்துள்ளார். 6 மாதமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொள்ளையன் முருகன் உயிரிழப்பு

    09:21 (IST)27 Oct 2020

    குஷ்பு கைது

    திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க, காரில் சிதம்பரம் புறப்பட்ட நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே கைது செய்யப்பட்டார். அராஜகத்துக்கு நாங்கள் ஒருபோதும் தலை வணங்க மாட்டோம் என கைதான பின் குஷ்பு தெரிவித்தார்

    Tamil News Today: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏழு புள்ளி ஐந்து சதவீத உள்ஒதுக்கீடு மசோதா ஆளுநருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த மசோதாவிற்கு, இதுவரை தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. திமுக, மதிமுக, தமிழக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் என அனைத்து எதிர்க்கட்சியினரும் சட்டப்பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதிருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொள்கிறேன் என்று மாநில தலைவர் எல்.முருகன் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.
    Coronavirus Corona Covid 19
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment