பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 89-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம். புழல் ஏரியில் நீர்இருப்பு 2962 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 453 கனஅடியாக அதிகரிப்பு. சென்னை குடிநீருக்காக 180 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 110 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர் வரத்து 43 கன அடியாக உள்ளது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 316 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரியில் நீர்இருப்பு 114 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர் வரத்து 80 கன அடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 117 கன அடி நீர் வெளியேற்றம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jun 14, 2024 00:22 ISTகுவைத் தீ விபத்து - முதல்வர் நிவாரணம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ள ஸ்டாலின், தனி விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.
-
Jun 14, 2024 00:20 ISTஅமித்ஷா என்னை கண்டித்தாரா? : தமிழிசை விளக்கம்
சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் அமித்ஷா கண்டித்ததாக தகவல் பரவிய நிலையில் விளக்கம் அளித்துள்ள தமிழிசை, மக்களவை தேர்தலில் பாஜக சந்தித்த சவால்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். தொகுதியில் கட்சி பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினார் என்று கூறியுள்ளார்.
-
Jun 14, 2024 00:19 ISTகுவைத் புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர இந்திய விமானப்படைக்கு சொந்தமான C-130J சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் குவைத் புறப்பட்டுள்ளது.
-
Jun 13, 2024 20:15 ISTகுவைத் தீவிபத்து - வெளிவரும் உண்மைகள்
குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம் என்றும், தரைதளத்தில் உள்ள பராமரிப்பு அறையில் விதிகளை மீறி சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Jun 13, 2024 20:14 ISTதயார் நிலையில் இந்திய விமானப்படை விமானம்
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டுவர தயார் நிலையில் இந்திய விமானப்படை விமானம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிண்டன் விமானப் படை தளத்தில் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Jun 13, 2024 20:13 IST"இளையராஜா உரிமை கோர முடியாது" - எக்கோ நிறுவனம்
"ஊதியம் கொடுத்து இசையை பெறும் தயாரிப்பாளர் தான் முதல் காப்புரிமை உரிமையாளர். பதிப்புரிமை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளாத இளையராஜா எந்த உரிமையும் கோர முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான், பதிப்புரிமையை யாருக்கும் வழங்குவதில்லை. ஆனால் இளையராஜா பட தயாரிப்பாளரிடம் தன் உரிமையை வழங்கி விட்டார்.
இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த உரிமை உள்ளது. இசையை திரித்தாலோ, பாடல் வரிகளை மாற்றினாலோ மட்டும் தான் தார்மீக உரிமை வரும்" என்று எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Jun 13, 2024 20:13 IST"எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை" - திருமாவளவன் நெகிழ்ச்சி
"அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன் என்றால், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை" என்று கூறி வி.சி.க தலைவர் திருமாவளவன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
-
Jun 13, 2024 19:24 ISTவெளி மாநில பதிவெண் வாகனங்களுக்கு அவகாசம் - தமிழக அரசு கால நீட்டிப்பு
தமிழகத்தில் 547 வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க நாளை முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், வாரயிறுதி மற்றும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு, வெளி மாநில பதிவெண் வாகனங்களுக்கு திங்கட்கிழமை வரை போக்குவரத்துத்துறை அனுமதி அளித்துளளது.
-
Jun 13, 2024 18:52 ISTநீட் பிரச்னை: மாநில அரசின் பங்கை மீட்டெடுப்பதுதான் தீர்வு: மு.க ஸ்டாலின்
“கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதன் மூலம் சமீபத்திய # NEET ஊழலில் இருந்து வெளியேற மத்திய அரசு முயற்சிப்பது அவர்களின் சொந்த திறமையின்மையின் மற்றொரு ஒப்புதலாகும்.
மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, விதிமீறல்கள் மற்றும் தொழில்சார்ந்த முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது.
அவர்களின் திறமையின்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையில் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.The Union Government’s attempt to wriggle out of the recent #NEET Scam by agreeing to cancellation of grace marks is another admission of their own ineptitude.
— M.K.Stalin (@mkstalin) June 13, 2024
It should not be allowed to divert the attention away from the core problems of irregularities and unprofessional… https://t.co/Bzn1YciYGO -
Jun 13, 2024 18:48 ISTபக்ரீத் பண்டிகை: பொது இடத்தில் ஆடு, மாடு பலியிட தடை இல்லை
பக்ரீத் பண்டிகை அன்று பொது இடத்தில் ஆடு, மாடுகளை பலியிட தடையில்லை என்றுஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
-
Jun 13, 2024 18:25 ISTதிருப்பதி கோவில் பிரசாதம் விலை ஏற்றப்படாது: சந்திரபாபு நாயுடு
“ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவில் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. இனி கோவில்களில் பிரசாதம் தரமாக வழங்கப்படும். கோவில் பிரசாதம் விலை ஏற்றப்படாது” என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
Jun 13, 2024 18:22 ISTபாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை: எக்கோ நிறுவனம்
இசையமைப்பாளர் இளையராஜா, பாடல்கள் மீது எந்த உரிமையும் கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Jun 13, 2024 17:35 ISTதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
“பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக உள்ள பி.கே.மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், அப்பதவியில் தொடர்கின்றனர்” என பணியாளர் நலன அமைச்சகம் தெரிவித்துள்ளது. -
Jun 13, 2024 16:49 ISTதனுஷுக்கு எதிரான வழக்கில் சமரசம்; வழக்கு முடித்து வைப்பு
வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இரு தரப்பிற்கிடையே சமரசம் ஏற்பட்டதை அடுத்து, வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. போயஸ் கார்டனில் தான் வசித்து வந்த வாடகை வீட்டை தனுஷ் வாங்கி விட்டதால், காலி செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், எந்த முன்னறிவிப்பும் இன்றி காலி செய்ய வற்புறுத்தியது சட்டவிரோதம் என்றும் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரருக்கும் தங்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது, வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது என தனுஷ் தரப்பு தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது
-
Jun 13, 2024 16:40 ISTகுவைத் தீ விபத்தில் இந்தியர்கள் மரணம் - விஜய் இரங்கல்
குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன் என விஜய் பதிவிட்டுள்ளார்
-
Jun 13, 2024 16:15 ISTஜெயக்குமார் மரண வழக்கு; புதூர் தோட்டத்தில் சி.பி.சி.ஐ.டி ஏ.டி.ஜி.பி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, மாவட்ட எஸ்.பி. ஆய்வு
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில், கரைச்சுத்து புதூரில் உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐ.ஜி.அன்பு, மாவட்ட எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் ஆய்வு நடத்தினர்
-
Jun 13, 2024 15:54 ISTகுவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் மரணம்
குவைத் நாட்டில் நடந்த பயங்கர தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக அயலக தமிழர் நலத்துறை தெரிவித்துள்ளது
-
Jun 13, 2024 15:33 ISTநீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம் - மத்திய கல்வி அமைச்சர்
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம். குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
-
Jun 13, 2024 15:19 ISTகிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த இளைஞர் மரணம்
புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லை நகரை சேர்ந்த பி.டெக் பட்டதாரியான கிஷோர்(23), கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்
-
Jun 13, 2024 14:47 ISTசலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமின்
தருமபுரி அரூரை அடுத்த கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ்வரன் மற்றும் அவரது தந்தை கருப்பனின் சலூன் கடையில், பட்டியிலின இளைஞருக்கு முடி திருத்தம் செய்ய மறுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
Jun 13, 2024 14:23 ISTவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டி?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
-
Jun 13, 2024 14:22 ISTநடிகர் பிரதீப் கே விஜயன் சடலமாக மீட்பு
சென்னை, பாலவாக்கத்தில் உள்ள வீட்டில் இருந்து நடிகர் பிரதீப் கே விஜயன் சடலமாக மீட்பு
தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட திரைபடங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் பிரதீப் கே விஜயன் நடித்துள்ளார்
வீட்டில் கழிவறையில் இறந்த நிலையில் கிடந்த பிரதீப் உடலை மீட்டு போலீசார் விசாரணை
-
Jun 13, 2024 13:46 ISTகுவைத் தீ விபத்து: படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்த மத்திய இணையமைச்சர்
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், படுகாயமடைந்தவர்களை மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று பார்வையிட்டார்.
MoS Kirti Vardhan Singh arrives in Kuwait, meets Indians injured in fire incident
— ANI Digital (@ani_digital) June 13, 2024
Read @ANI Story | https://t.co/Tieq8iH7Bw#MEA #Kuwait #KirtiVardhanSingh #fireincident pic.twitter.com/1IYICEuX9c -
Jun 13, 2024 13:45 ISTசவுக்கு சங்கரின் ஜாமின் மனு ஒத்திவைப்பு
யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனுவை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்
-
Jun 13, 2024 13:23 ISTமா.சுப்பிரமணியன் பேட்டி
கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. மத்திய அரசிடம் தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்துவோம்.
நீட் தேர்வில் குழப்பமும், குளறுபடியும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது நேரப் பற்றாக்குறையால் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
- சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
-
Jun 13, 2024 13:23 ISTகேரளா மாநில அரசு நிவாரணம் அறிவிப்பு
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு
-
Jun 13, 2024 13:10 ISTகுவைத் விரைகிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
குவைத் தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குவைத் விரைகிறார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்த மலையாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க திட்டம்
-
Jun 13, 2024 12:42 ISTதமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்க நாளை முதல் தடை
தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்க நாளை முதல் தடை போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் திட்டவட்ட அறிவிப்பு.
-
Jun 13, 2024 12:16 ISTவெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும்
"வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் மீது நாளை முதல் நடவடிக்கை எடுக்கப்படும்" கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து, போக்குவரத்துத் துறை ஆணையர் முடிவு செய்வார் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன், போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் "மத்திய அரசின் அறிவிப்பின்படி 15 ஆண்டுகள் கடந்த பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக கணக்கில் கொள்ளப்படுகின்றன" "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கோரி இருக்கும் நிலையில் போக்குவரத்து துறை ஆணையர் அதனை பரிசீலனை செய்வார்" போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்
-
Jun 13, 2024 12:16 ISTநீட் தேர்வில் ஊழலும் இல்லை, முறைகேடும் இல்லை
நீட் தேர்வில் ஊழலும் இல்லை, முறைகேடும் இல்லை" மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்.
-
Jun 13, 2024 12:02 ISTகுவைத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்தினர், தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்"
குவைத்தில் 195 பேர் தங்கியிருந்த கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது" "பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யாரும் அச்சப்பட தேவையில்லை, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது" "வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனுக்காக தான், அயலக தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டது/ பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது" "உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" "தமிழக அரசு அறிவித்த எண்ணிற்கு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்" "குவைத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்தினர், தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்"
-
Jun 13, 2024 11:44 ISTகுவைத் அரசிடம் அயலக நல தமிழர் நல வாரியம் கோரிக்கை
குவைத்தில் தமிழர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளில், பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்" குவைத் நாட்டு அரசிடம், தமிழக அரசின் அயலக தமிழர் நல வாரியம் கோரிக்கை பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் வலியுறுத்தல்
-
Jun 13, 2024 11:24 ISTகுவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை சந்தித்த இந்திய தூதர்
குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை சந்தித்த இந்திய தூதர் அல்-கபீர், பர்வானியா, அதான் ஆகிய மருத்துவமனைகளுக்கு நேரில் சென்ற இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா முபாரக் தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து, இந்திய தூதர் ஆறுதல் தூதரகம் சார்பாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என உறுதி.
-
Jun 13, 2024 11:07 ISTகாயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்
குவைத் தீ விபத்து தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் தகவலை சேகரிக்க அயலக தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு
குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அயலக தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிப்பு
-
Jun 13, 2024 11:07 ISTகாயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்கும்
குவைத் தீ விபத்து தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களின் தகவலை சேகரிக்க அயலக தமிழர் நலத்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு
குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை அயலக தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிப்பு
-
Jun 13, 2024 11:02 ISTபுதுவை விஷவாயு தாக்கி உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த பகுதியில் மேலும் ஒருவர் மயக்கம்.
மயங்கி விழுந்த புதுநகரை சேர்ந்த 38 வயது பெண், மருத்துவமனையில் அனுமதி. புதுநகர் பகுதியில் தொடர்ந்து 3வது நாளாக பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரம். புதுநகர் பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு வரும் 17ஆம் தேதி வரை விடுமுறை
-
Jun 13, 2024 10:56 ISTகுவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம்: அமைச்சர்
குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.
குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்க கூடும். உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரங்கள் தமிழ் சங்கங்கள் மூலம் கிடைத்துள்ளன. உயிரிழந்தவர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்தி இன்னும் கிடைக்கவில்லை-அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்.
-
Jun 13, 2024 10:54 ISTகுவைத் தீ விபத்து - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்
குவைத் நாட்டில் உள்ள மாங்காப் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், நமது நாட்டைச் சேர்ந்த 40 பேர் பலியாகியுள்ளனர் என்று முதற்கட்ட தகவலில் வருந்தத்தக்க செய்திகள் கிடைத்துள்ளது.
— Dr.L.Murugan (@Murugan_MoS) June 13, 2024
இந்த செய்தி கேட்ட உடனே மாண்புமிகு பாரத பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்கள்… -
Jun 13, 2024 10:15 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660க்கு விற்பனை
-
Jun 13, 2024 09:50 ISTசேலம் பெரியார் பல்கலை: துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு
ஊழல் புகாரில் சிக்கியுள்ள துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிகாலத்தை நீட்டிக்க கூடாது என பல்கலை. தொழிலாளர்கள் சங்கம். ஆளுநர், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு. இம்மாத இறுதியில் பணிநிறைவு பெற உள்ள இவருக்கு பணி நீட்டிப்பு செய்தால் மோசமான உதாரணம் ஆகிவிடும் என மனுவில் தெரிவிப்பு
-
Jun 13, 2024 09:45 ISTசிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானம் தாமதம்
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால், விமானம் புறப்படுவதில் 5 மணி நேரம் தாமதம்.
186 பயணிகள் விமானம் ஏறமுடியாமல் ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்வாக அதிகாரிகள் விசாரணை.
-
Jun 13, 2024 09:43 ISTஇன்று இத்தாலிக்கு செல்கிறார் பிரதமர் மோடி
ஜி7 உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று இத்தாலி செல்கிறார். இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் மோடி பயணம். பிரதமராக 3-வது முறை பதவியேற்ற பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
-
Jun 13, 2024 09:39 ISTநீட் தேர்வில் கருணை மதிப்பெண்: இன்று விசாரணை
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் -உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
நடப்பாண்டு 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை. இதற்க எதிராக 2000 மாணவர்களிடம் கையொப்பட் பெற்று அலக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு.
-
Jun 13, 2024 09:21 ISTபொறியியல் படிப்பு: நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நாளை முதல் ஜுன் 30-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும். ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தகவல். பொறியியல் படிப்பில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
-
Jun 13, 2024 09:08 ISTகுவைத் தீ விபத்து: 3 தமிழர்கள் பலி எனத் தகவல்
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நேரிட்ட பயங்கர தீ விபத்து - மூன்று தமிழர்கள் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பணன் ராமு, குவைத் தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழப்பு
-
Jun 13, 2024 08:51 ISTகுவைத் தீ விபத்து: அயலகத் தமிழர் நலத்துறைக்கு ஸ்டாலின் உத்தரவு
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனரா என்ற தகவலை சேகரிக்க அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்திற்கு உத்தரவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.