/indian-express-tamil/media/media_files/gLKQLrl7SaKGUAhpE0Yh.jpg)
Tamil news live
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Updates
கேரளாவில் வெளியானது லியோ
கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு வெளியானது லியோ திரைப்படம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது.
மக்கள் மின்விசிறி போட்டால் அதானிக்கு பணம் செல்கிறது: ராகுல் காந்தி
“அதானி நிறுவனம் அதிக விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதுதான் நாட்டின் மின்சார உயர்வுக்கு காரணம். மக்கள் ஃபேன், ட்யூப் போட்டால் அதானி பணம் செல்கிறது” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காவிரி நீரை கேட்டால் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்
காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம் என வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
மகளிர் விடுதிகளை பதிவு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை - சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே எச்சரிக்கை விடுத்துள்ளார்
நெல்லையில் ’லியோ’ வெளியீட்டு கொண்டாட்டங்களுக்கு தடை
நெல்லையில் லியோ திரைப்பட முதல் நாள் முதல் காட்சி ரசிகர் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
மிசோரம் தேர்தல்; 2ம் கட்ட பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மிசோரம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டது
மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் - பாலஸ்தீனம்
அல் அரபு மருத்துவமனை மீதான ஏவுகணை தாக்குதல் குற்றத்திற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார்
பட்டாசு ஆலை உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள இயலாது- கமல்ஹாசன்
பட்டாசு ஆலை உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்ள இயலாது. அரசு அதிகாரிகள் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு
மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 48.67 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள். இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46% ஆக உயர்ந்துள்ளது
காசா வெடிகுண்டு தாக்குதல் - பிரதமர் மோடி இரங்கல்
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் வெடிகுண்டு வீசப்பட்டதில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகவும் கவலை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி
"பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததால் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்திருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என ஸ்ரீவில்லிப்புத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கிய பின், அமைச்சர் சி.வி.கணேசன் பேட்டி
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை : வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மின்கட்டண சலுகை : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது விளக்குகள், நீர் இறைக்கும் மின் மோட்டார்கள், போன்ற பொது பயன்பாட்டு பணிகளுக்கான மின்சார கட்டணம், ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து 5.50 ரூபாய குறைக்கப்பட்டுள்ளது. 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவாக, 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவாக மின்தூக்கி (லிப்ட்) வசதிகள் இல்லாத குடியிருப்புகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் அதானி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார்
மக்களின் அத்தனை வருமானங்களும் அதானியின் பாக்கெட்டுகளுக்கு நேரடியாக செல்கிறது. அதானி மீதான முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பிரதமர் மோடியால் அதானி தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறார்- ராகுல் காந்தி
மாடு முட்டியதில் முதியவர் படுகாயம் - நேரில் சென்று ராதாகிருஷ்ணன் நலம் விசாரிப்பு
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் இன்று காலை மாடு முட்டியதில் 80 வயது முதியவர் படுகாயமடைந்தார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்ற வரும் முதியவரின் உடல் நலம் குறித்து ராதாகிருஷ்ணன் நேரில் சென்று கேட்டறிந்தார்.
‘லியோ’ - இணையத்தில் வெளியிட தடை
நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம்: ஒருமித்த ஆய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைக்க ருமித்த ஆய்வை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் முடிவு.
இரு மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு. தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உள்ள இடத்தில கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளை மறுதினத்துடன் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு
இலங்கை சென்றுள்ள சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோனோர் சொந்த ஊர் திரும்ப காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை. கப்பல் சேவை 20-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என அறிவிப்பு. மீண்டும் ஜனவரி மாதம் கப்பல் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வுக் கூட்டம்
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட திட்டப் பணிகள் தொடர்பான கள ஆய்வுக் கூட்டம் தொடங்கியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையின் அரசு திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஒரு சிலர், 'பாதுகாப்பான நிலையில் இருக்கிறோம், தேவைப்பட்டால் தொடர்பு கொள்கிறோம்' என தெரிவித்துள்ளனர். அவர்களது விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகிறோம்- கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி
செங்கோட்டை- நெல்லை இடையே மின்சார ரயில் சேவை
செங்கோட்டை- நெல்லை இடையே தினசரி மின்சார ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான்
காசாவில் மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான். தாக்குதல் நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் பயணம்
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடந்துவரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் செல்கிறார்.
நீலகிரி மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து
கல்லார் அருகே பாறை உருண்டு தண்டவாளத்தில் விழுந்ததால், காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி சென்ற மலை ரயில் கல்லார் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பாறையை அப்புறப்படுத்தும் பணி தாமதமாகும் என்பதால் ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே புறப்பட்டது.
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு
21ம் தேதியில் மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சிவகாசி வெடி விபத்து: 3 பேர் கைது
சிவகாசிஅருகே ரெங்கபாளையத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆலை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேற்பார்வையாளர் கனகராஜ், மேலாளர் ராம்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
காசா மருத்துவமனை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் வீசிய ராக்கெட் தாக்குதலே காரணம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
Prime Minister Benjamin Netanyahu, this evening:
— Prime Minister of Israel (@IsraeliPM) October 17, 2023
"The entire world should know: It was barbaric terrorists in Gaza that attacked the hospital in Gaza, and not the IDF.
Those who brutally murdered our children also murder their own children."
இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள், நோயாளிகள் 500 பேர் கொல்லப்பட்டதாக தாக்குதலுக்கு ஆளான மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் இதனை உறுதி செய்துள்ளது.
வருமான வரித்துறையினர் சோதனை
சென்னை வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் பட்டாசு கடை வெடி விபத்து
சிவகாசி பகுதியில் இரு வேறு வெடி விபத்துக்களில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை இணை இயக்குனர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலில் இருந்து 23 தமிழர்கள் மீட்பு
இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட 23 தமிழர்கள் உட்பட 286 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தடைந்தனர்.
மீட்கப்பட்ட 23 தமிழர்களில் 17 பேர் சென்னைக்கும், 4 பேர் கோவைக்கும், 2 பேர் மதுரைக்கும் இன்று வந்தடைய உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.