Tamil News Highlights: கொரோனா பாதிப்பு; அமைச்சர் துரைக்கண்ணு மரணம்

சென்னையில் தொடர்ந்து விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14க்கும், டீசல் ரூ.75.95க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

By: Nov 1, 2020, 7:18:11 AM

Tamil News  Updates: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். 71 வயதான அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சமீப நாட்களில் அவருடைய உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை அடுத்து, அமைச்சர் துரைக்கண்ணு உடல் இன்று சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பொது முடக்கம் இன்றுடன் முடிவடையும் நிலையில், புதிய தளர்வுகளை அறிவிக்கிறது தமிழக அரசு. இதில் திரையரங்குகள், பூங்காக்கள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 303 பேர் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு முதல்வர் நேரில் நன்றி. இறுதியில் சமூக நீதி வென்றதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். தீபாவளிக்குள் 25,000 டன் வெங்காயம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
22:45 (IST)31 Oct 2020
நவம்பர் 1ம் தேதி முதல் பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டாஸ்மாக்

தமிழகத்திலுள்ள அனைத்து லாச்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் நவம்பர் 1ம் தேதி முதல் பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.  

21:42 (IST)31 Oct 2020
31  பேர் பலி

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் 17, அரசு மருத்துவமனைகளில் 14 என மொத்தம் 31  பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் அனைவரும் ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் உள்ளவர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது

20:49 (IST)31 Oct 2020
திருமண நிகழ்வுக்கு 100 நபர் வரை கலந்து கொள்ள அனுமதி

மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு  கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை சார்ந்த கூட்டங்களில்  100 பேர் வரை 16 ஆம் தேதி முதல் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது.

19:25 (IST)31 Oct 2020
திமுக ஆட்சி அமைந்தவுடன் கமிஷன் டெண்டர்கள் ரத்து செய்யப்படும்

ரூ.350 கோடி டெண்டர்; ஆனால் கட்டும் போதே இடிந்து விழுகிறது நாமக்கல் மருத்துவக் கல்லூரி.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கமிஷன் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவர் என்று மு. க ஸ்டாலின் தெரிவித்தார்.

19:22 (IST)31 Oct 2020
வெற்றிவேல் யாத்திரையை யாராலும் தடைசெய்ய முடியாது

வெற்றிவேல் யாத்திரையை யாராலும் தடைசெய்ய முடியாது! ”துள்ளி வரும் வேல்” என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை என்று மாநில தலைவர்  டாக்டர் எல்.முருகன் தெரிவித்தார்.

19:18 (IST)31 Oct 2020
அரசுப் பள்ளிகளில் பயின்ற 303 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயின்ற 303 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்புள்ளது என பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.

19:15 (IST)31 Oct 2020
நவ.10 முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி

நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்கு உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 % இருக்கைகளுடன் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

19:15 (IST)31 Oct 2020
பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் அனுமதி

பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

18:53 (IST)31 Oct 2020
கோயம்பேடு வணிக வளாகம்: 

கோயம்பேடு வணிக வளாகம்: 

தற்காலிக இடத்தில் செயல்படும் பழக்கடை மொத்த வியாபாரம் வரும் 2ஆம் தேதி முதலும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபார கடைகள் 3 கட்டங்களாக வரும் 16ஆம் தேதி முதலும் கோயம்பேடு அங்காடி வளாகத்தில், அரசால் வெளியிடப்பட உள்ள  நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்பட அனுமதிக்கப்படுகிறது.   

18:37 (IST)31 Oct 2020
9 முதல்12 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் நவம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி / கல்லூரி பணியாளர்கள் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்படும்.

15:47 (IST)31 Oct 2020
வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவு ரத்து!

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்காக வீடுகளை கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவு ரத்து .   அரசு மீண்டும் விசாரணை நடத்தி 12 வாரத்தில் முடிவெடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு அரசு நிலத்தை திட்டத்திற்கு பயன்படுத்தாமல், குடியிருக்கும் வீடுகளை கையகப்படுத்துவதாக வீட்டு உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

14:51 (IST)31 Oct 2020
அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி!

தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசு பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி . புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கோரிக்கையை ஏற்று பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணை வெளியீடு

13:56 (IST)31 Oct 2020
முதல் கடல் விமான சேவைகள்!

இந்தியாவின் முதல் கடல் விமான சேவைகள் இன்று துவக்கம் . குஜராத் மாநிலம் கெவாடியாவில் முதல் நீர் விமான நிலையம் துவக்கம் * ஒற்றுமை சிலை, கெவாடியா மற்றும் சபர்மதி ஆற்று முகப்பு, ஆகமதாபாத் இடையே கடல் விமான சேவை துவக்கம். பிரதமர், மோடி இன்று துவங்கி வைக்கிறார். 

13:55 (IST)31 Oct 2020
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம் தகவல்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

13:41 (IST)31 Oct 2020
அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடம்!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மிகவும் கவலைக்கிடம் .அதிகப்படியான உயிர் காக்கும் கருவிகளுடன் அமைச்சர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தகவல். 

13:16 (IST)31 Oct 2020
வேல் யாத்திரைக்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு

பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி வழங்கக் கூடாது: காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தல்!

12:28 (IST)31 Oct 2020
எடப்பாடி ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக உள்ளது

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகமும், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவும் பாதுகாப்பாக உள்ளது. ரஜினியின் எந்த நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்வோம், எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

11:44 (IST)31 Oct 2020
மனு தர்மத்தில் சில நல்ல கருத்துகள் உள்ளன - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறவது தவறு. மனு தர்மத்தில் சில நல்ல கருத்துகள் உள்ளன! என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்தார்.

11:13 (IST)31 Oct 2020
பாரதி கவிதை மேற்கோள்

மண்ணும் இமயமலை எங்கள் மலையே எனும் கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு. 

10:17 (IST)31 Oct 2020
முதல்வர் ட்வீட்
10:14 (IST)31 Oct 2020
பிரதமர் பேச்சு

கொரோனா வைரஸை எதிர்க்கும் முயற்சியில் ஒட்டுமொத்த தேசமும் தன்னுடைய கூட்டு சக்தியை நிரூபித்துள்ளது. 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் கஷ்மீர், புதிய வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

10:06 (IST)31 Oct 2020
மத்திய அரசு மறுப்பு

பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பு கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் போதும் திரும்ப பெறும் போதும் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்களில் வந்த செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

10:04 (IST)31 Oct 2020
3 ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு கேட்டுள்ள சகாயம் ஐஏஎஸ்

தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளார் சகாயம் ஐஏஎஸ். அரசு பதவியிலிருந்து ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விஆர்எஸ் கேட்டுள்ளார். 

09:39 (IST)31 Oct 2020
சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு?

சகாயம் ஐஏஎஸ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

09:30 (IST)31 Oct 2020
இயக்குநர் சீனு ராமசாமி நன்றி
09:30 (IST)31 Oct 2020
தேர்தல் ஆணையம் அதிரடி

காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரும் முன்னாள் முதலமைச்சருமான திரு கமல்நாத்தின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது.

09:13 (IST)31 Oct 2020
’சீ பிளேன்’ திட்டம் தொடக்கம்

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் படைப்பிரிவினர் அங்கு அணிவகுப்பு நடத்துகிறார்கள். அதோடு ஒற்றுமை சிலையை காண்பதற்கு வழிவகை செய்யும் பொருட்டு, கடல் வழியே செல்லும் விமானப் போக்குவரத்தான ‘சீ பிளேன்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். 

Tamil News: ஆளுநா் மாளிகை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளாா். இந்த மசோதா தொடா்பாக, மத்திய அரசின் சொலிசிடா் ஜெனரலிடம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தனது கருத்துகளைக் கடிதம் மூலமாகக் கோரினாா். இதற்காக சொலிசிடா் ஜெனரலுக்கு அக்டோபர் 26-ம் தேதி கடிதம் எழுதினாா். அதற்கு அக்டோபர் 29ம் தேதி சொலிசிடா் ஜெனரல் பதில் கடிதம் அனுப்பியுள்ளாா். அவரது கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, மசோதாவுக்கு ஆளுநா் தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Web Title:Tamil news today live lockdown relaxation sea plane covid 19 coronavirus

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X