Advertisment

Tamil News Updates: பாஜக உடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது- ஓ.பி.எஸ்.

Tamil Nadu News: நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள். சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில்..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ops

Tamil News Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

 • Mar 12, 2024 21:22 IST
  10-ம் வகுப்பு தேர்வு: தமிழ் தாய்மொழி அல்லாத மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

  தமிழ் மொடியை தாய்மொழியாகக் கொண்டிராத 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு, வரும் 26-ம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. • Mar 12, 2024 20:41 IST
  தேர்தல் பத்திர விவகாரம்; பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கேள்வி

   

  “மார்ச் 5 ஆம் தேதி நான் கூறியது போல், எஸ்பிஐ ஒரு நாளில் இந்தத் தரவை வழங்க முடியாவிட்டால், அது உலகில் எங்கும் வங்கியாக செயல்படத் தகுதியற்றது.
  எனவே எஸ்பிஐயின் மார்ச் 4ம் தேதி தாக்கல் செய்த முறை தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞரின் தாக்கல் மற்றும் வாதங்களில் உள்ள அப்பட்டமான பொய்களை உச்ச நீதிமன்றம் கணக்கில் வைக்குமா? என பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கேள்வியெழுப்பி உள்ளார். • Mar 12, 2024 20:17 IST
  விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

  சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக வி.சி.க மார்ச் 15ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. • Mar 12, 2024 19:45 IST
  மக்களவை தேர்தல்; கமல்நாத் மகன் மீண்டும் போட்டி

  மக்களவை தேர்தலில் மத்தியப் பிரதேச சிந்த்வரா தொகுதியில் அம்மாநில முதல் அமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் மீண்டும் போட்டியிடுகிறார். • Mar 12, 2024 19:28 IST
  அ.தி.மு.க சின்னம் வழக்கு தள்ளிவைப்பு

  அ.தி.மு.க. சின்னம், கொடி தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. • Mar 12, 2024 19:04 IST
  சி.ஏ.ஏ கால்வைக்க விடமாட்டோம்; மு.க. ஸ்டாலின்


  “ஆட்சிக்கு வந்ததும் #CAA-வைத் திரும்பப் பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்!
  நடைமுறைப்படுத்தப் போவதாக ஒன்றிய அமைச்சர் பேசியபோது, “தமிழ்நாட்டில் CAA கால்வைக்க விடமாட்டோம்” என உறுதிபட அறிவித்தேன்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். • Mar 12, 2024 18:57 IST
  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தது எஸ்.பி.ஐ

  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்றைக்குள் விவரங்களை வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் நேற்று எச்சரித்ததை தொடர்ந்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்கியது. இந்த விபரங்களை வரும் 15க்குள் தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் விவரங்களை வெளியிட வேண்டும் • Mar 12, 2024 18:53 IST
  கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முப்பரிமாண வரைகலை வெளியீடு

   

  கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை இணைக்கவுள்ள புதிய நடை மேம்பாலத்தின் முப்பரிமாண வரைகலை காட்சி வெளியாகி உள்ளது. • Mar 12, 2024 18:06 IST
  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கடிதம்

  “SBI-ன் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கடிதம்! • Mar 12, 2024 17:32 IST
  பொன்முடி விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை ஏப்ரல் 15க்கு தள்ளிவைப்பு

  சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தானாக முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்த வழங்கு இன்று இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த நிலையில, வரும் ஏப்ரல் 15 முதல் 19 வரை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு • Mar 12, 2024 17:30 IST
  அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து

  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • Mar 12, 2024 16:54 IST
  சாலை விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் மரணம்; ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

  மதுராந்தகம் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் நால்வர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார் • Mar 12, 2024 16:40 IST
  இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு தடையின்மைச் சான்று வழங்க லஞ்சம்; ஆர்.ஐ, உதவியாளர் கைது

  திருப்பூரில் இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கு தடையின்மைச் சான்று வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டு, பிறகு ரூ.8000 லஞ்சம் பெற்ற திருப்பூர் தெற்கு நில வருவாய் ஆய்வாளர் நாகராஜன், அவரது உதவியாளர் சுரேஷ் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் • Mar 12, 2024 16:17 IST
  பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; ஐரோப்பிய நாடுகளிடம் தகவல்களை கேட்ட சென்னை காவல்துறை

  மின்னஞ்சல் மூலம் தனியார் பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக எம்.லாட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடம் சென்னை காவல்துறை தகவல்களை கேட்டுள்ளது • Mar 12, 2024 15:59 IST
  அங்கித் திவாரி வழக்கு - நீதிபதி விலகல்

  அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்து கோபமடைந்த நீதிபதி வழக்கில் இருந்து விலகியுள்ளார். • Mar 12, 2024 15:43 IST
  விமானப்படை இலகுரக விமானம் விபத்து

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் இலகுரக விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கி விழுந்து நொறுங்கியது • Mar 12, 2024 15:29 IST
  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு - ஸ்டாலின் அறிவிப்பு

  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் • Mar 12, 2024 15:13 IST
  தமிழ்நாட்டில் 13 காவல் உயர் அதிகாரிகள் பணி இடமாற்றம்

  தமிழ்நாட்டில் 6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்பட 13 காவல் உயர் அதிகாரிகளை பதவி உயர்வு, பணி இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது • Mar 12, 2024 14:51 IST
  சிஏஏ-க்கு பிரேமலதா எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

  பாஜகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், சிஏஏ-க்கு பிரேமலதா எதிர்ப்பு குடியுரிமை திருத்த சட்டத்தை தேமுதிக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - பிரேமலதா • Mar 12, 2024 14:38 IST
  மதுரை எய்ம்ஸ் - நீதிமன்றம் உத்தரவு

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலத்திற்குள் கட்டி முடிக்க உத்தரவிட கோரி வழக்கு மத்திய நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு • Mar 12, 2024 14:27 IST
  ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு

  ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு; இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சராக பதவி ஏற்கிறார் • Mar 12, 2024 14:27 IST
  குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் தமிழ்நாடு அரசின் கருத்து

  “குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் தமிழ்நாடு அரசின் கருத்து; மத்திய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு இடமளிக்காது; இந்தியாவின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது; உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • Mar 12, 2024 14:26 IST
  சத்ய பிரதா சாகு டெல்லி பயணம்

  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு டெல்லி பயணம் மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திடீர் பயணம் • Mar 12, 2024 13:46 IST
  குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது: ஸ்டாலின்

  குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி • Mar 12, 2024 13:32 IST
  சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவுடன் இணைத்துகொண்டார்

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் • Mar 12, 2024 13:30 IST
  பா.ஜ.க-வுடன் இணைந்தார் சரத்குமார்

  இது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல, ஒரு எழுச்சியின் தொடக்கம்; 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்; பெருந்தலைவர் காமராஜர் போல் ஆட்சி செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி; வலிமையான பாஜக உடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்று முடிவு எடுத்து உள்ளேன்” - பாஜகவில் இணைந்த பிறகு சரத்குமார் பேட்டி • Mar 12, 2024 13:13 IST
  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும், பாமகவையும் தமிழ்நாடு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை அறிக்கை

  குடியுரிமை சட்ட திருத்த அமலாக்கம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவை மீறும் செயலாகும்; குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும், பாமகவையும் தமிழ்நாடு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; தேர்தல் நன்கொடை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பை திசைத் திருப்பவே குடியுரிமை திருத்த சட்ட அமலாக்க அறிவிப்பை மத்திய பாஜக அரசு வெளியிட்டுள்ளது” - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை • Mar 12, 2024 13:11 IST
  வரி பாக்கி - கல்லூரி அலுவலகத்திற்கு சீல்

  கடலூர் மாவட்டம் செமண்டலம் பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரியின் அலுவலகத்திற்கு சீல் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.36 லட்சம் வரி பாக்கியால் நடவடிக்கை சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு கீழ் செயல்படும் கல்லூரிக்கு சீல் கல்லூரியின் முதல்வர் அறை மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள் அடுத்த வாரம் செமஸ்டர் தேர்வுகளும், செயல்முறை தேர்வுகளும் நடைபெற உள்ள நிலையில் சீல் - ஊழியர்கள் வெளியே காத்திருப்பு. • Mar 12, 2024 12:53 IST
  சி.ஏ.ஏ அமல்- நாம் தமிழர், தே.மு.தி.க எதிர்ப்பு

  "குடியுரிமை திருத்தச் சட்டம்: தேமுதிக என்றைக்கும் ஏற்காது" - சி.ஏ.ஏ அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக கண்டன அறிக்கை.

  சி.ஏ.ஏ அமல்படுத்தப்பட்டதற்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் 

    • Mar 12, 2024 12:32 IST
  காலை உணவு திட்டம்: மாணவர்கள் வருகை அதிகரிப்பு

  தமிழ்நாட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோரின் கவலை குறைந்துள்ளது. 

  இத்திட்டத்தால் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதா என்பது குறித்து மருத்துவர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது - மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு • Mar 12, 2024 12:22 IST
  தமிழகம் போதைப் பொருள் விற்பனை மையமாக உள்ளது

  போதைப்பொருள் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறியுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி • Mar 12, 2024 12:20 IST
  சி.ஏ.ஏ-வுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஐ.யூ.எம்.எல் மனு

  குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்துவதற்கு தடை கோரி, கேரளாவின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

  கேரளாவில் சி.ஏ.ஏ  அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேற்று உறுதியளித்தார்.  • Mar 12, 2024 12:05 IST
  தேர்தல் பத்திர தரவுகளை வெளியிட தயார்: எஸ்.பி.ஐ

  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான  தரவுகளை வெளியிட தயார் - SBI வங்கி

  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட தயாராக இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.  • Mar 12, 2024 12:05 IST
  தேர்தல் பத்திர தரவுகளை வெளியிட தயார்: எஸ்.பி.ஐ

  தேர்தல் பத்திரங்கள் தொடர்பான  தரவுகளை வெளியிட தயார் - SBI வங்கி

  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட தயாராக இருப்பதாக எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.  • Mar 12, 2024 12:03 IST
  ஹரியானா முதல்வர், அமைச்சர்கள் கூண்டோடு பதவி விலகல்

  ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றதால் அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா.

  முதலமைச்சர் மட்டுமன்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகியுள்ளனர் • Mar 12, 2024 11:56 IST
  ஹரியானா முதல்வர் ராஜினாமா

  ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

  ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மனோகர் லால் கட்டாரை மக்களவைத் தேர்தலில் களம் இறக்க பா.ஐ.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்  • Mar 12, 2024 11:56 IST
  ஹரியானா முதல்வர் ராஜினாமா

  ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

  ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். மனோகர் லால் கட்டாரை மக்களவைத் தேர்தலில் களம் இறக்க பா.ஐ.க தலைமை ஆலோசித்து வருவதாக தகவல்  • Mar 12, 2024 11:55 IST
  பிரக்ஞானந்தாவுக்கு கார் பரிசளிப்பு

  சொகுசு காரை பரிசளித்த ஆனந்த் மகிந்திராவிற்கு இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தா x - தளத்தில் நன்றி தெரிவித்து ட்வீட்  • Mar 12, 2024 11:47 IST
  பொன்முடி பதவி விவகாரம்: அப்பாவு விளக்கம்

  பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் பின்பற்றப்பட்ட சட்ட நடைமுறைகள், பொன்முடி விவகாரத்தில் பின்பற்றப்படும்- நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி • Mar 12, 2024 11:21 IST
  நாகை, திருப்பூரில் சி.பி.ஐ போட்டி

  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு. நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் போட்டி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் • Mar 12, 2024 11:19 IST
  மதுரை, திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் போட்டி

  மதுரை - திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் போட்டி

  திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டி

  கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் போட்டி • Mar 12, 2024 10:59 IST
  ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு

  தமிழ் கடவுள் முருகரை வழிபடும் பக்தர்களை ஒன்றிணைக்க ஜூன் அல்லது ஜூலையில் அனைத்துலக முருகன் மாநாடு நடத்தப்படும்

  முருக பக்தர்கள் மாநாட்டை 2 நாட்கள் நடத்த உயர்மட்ட குழு ஆலோசனையில் முடிவு

  மாநாடு நடத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன

  சென்னை, நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் சேகர்பாபு தகவல் • Mar 12, 2024 10:58 IST
  பேருந்து படிக்கட்டில் பயணம்- 3 மாணவர்கள் பலி

  செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

  சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியதில் மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி • Mar 12, 2024 10:48 IST
  பொன்முடி சொத்து குவிப்பு வழக்கு

  மற்றொரு சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, தானாக முன்வந்து எடுத்துக் கொண்ட சீராய்வு மனுவை இன்று விசாரிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்! • Mar 12, 2024 10:47 IST
  திமுக கூட்டணிக்கு ஆதரவு

  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆம் ஆத்மி, பார்வர்ட் பிளாக் கட்சிகள் ஆதரவு.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் • Mar 12, 2024 10:47 IST
  இந்தியாவை இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கை- வைகோ

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு காஷ்மீர் சிறப்பு உரிமைப் பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மோசடியான தீர்ப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவை சட்டப் பூர்வமாகவே இந்து ராஷ்டிரமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது

  - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை     • Mar 12, 2024 10:47 IST
  சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்

  சென்னையில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

  சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் 6 மணி 20 நிமிடங்களில் பயணிக்கும் • Mar 12, 2024 10:02 IST
  டிடிவி தினகரன் வாழ்த்து

  இறை உணர்வோடு உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டி ஏழை, எளியோரின் ஏழ்மையை போக்கிடும் வகையில் புனித ரமலான் மாதத்தில் நோன்பை தொடங்கியிருக்கும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்;

  மனிதகுலத்தின் வழிகாட்டி இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த அன்பு, கருணை, ஈகை, மனிதநேயம் போன்ற நற்பண்புகளை பின்பற்றும் இஸ்லாமிய பெருமக்களின் எண்ணங்கள் அனைத்தும் இப்புனித ரமலான் மாதத்தில் நிறைவேறட்டும்

  -  டிடிவி.தினகரன் • Mar 12, 2024 09:54 IST
  குடியுரிமை சட்டம்- உச்சநீதிமன்றத்தில் முறையீடு

  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தாக்கல் செய்த மனு

  அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தகவல் • Mar 12, 2024 09:53 IST
  முகமது ஷமி விலகல்

  டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகல்

  காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி குணமடைய நாட்கள் ஆகும் என்பதால் விலகல்

  பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்

  ஏற்கனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஷமி விலகியது குறிப்பிடத்தக்கதுTamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment