Advertisment

Tamil News Updates: நெல்லையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடியபோது சுடப்பட்டவர் உயிரிழப்பு

Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil news (கோப்பு படம்)

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

  • Mar 10, 2024 21:52 IST
    எழுத்தாளர் இராசேந்திர சோழன் படைப்புகள் அரசுடமையாக்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கை

    எழுத்தாளர் இராசேந்திர சோழன் படத் திறப்பு நிகழ்ச்சியில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்: எழுத்தாளர் இராசேந்திர சோழனின் எழுத்துக்கள் அனைத்து மக்களிடம் சென்று சேர வேண்டும்; அவரின் படைப்புகள் அரசுடமையாக்கப்பட வேண்டும்; அதற்கான பொறுப்பு எனக்கும் சகோதரர் வேல்முருகனுக்கும் இருக்கிறது.” என்று கூறினார்.



  • Mar 10, 2024 21:08 IST
    ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

    ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி பட்டினம் கடற்கரை பகுதியில் இறால் பண்ணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ முதல்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்த முயன்றவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.



  • Mar 10, 2024 20:07 IST
    புதிய தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய மார்ச் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம்

    புதிய இந்திய தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்ய மார்ச் 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 10, 2024 20:05 IST
    மதுரை - சண்டிகர் ரயில் இன்று தாமதம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

    இணை ரயில் தாமதமாக வருவதால், மதுரை - சண்டிகர் விரைவு ரயில் இன்று தாமதமாக புறப்படும். இரவு 11.35க்கு புறப்பட வேண்டிய ரயில், நள்ளிரவு 1.45க்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Mar 10, 2024 20:02 IST
    யானை சவாரி செய்த மோடி மணிப்பூருக்கு செல்லாதது ஏன்? - கனிமொழி கேள்வி

    தி.மு.க எம்.பி. கனிமொழி: “யானை சவாரி செய்த பிரதமர் மோடி, மணிப்பூருக்கு செல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Mar 10, 2024 18:53 IST
    ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஜாபர் சாதிக் சட்டவிரோத பணப்பரிவர்தனை செய்ததாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Mar 10, 2024 18:34 IST
    தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் நேர்காணல்; கனிமொழி பங்கேற்பு

    தூத்துக்குடி தி.மு.க வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி கருணாநிதி இன்று கலந்துகொண்டார்.



  • Mar 10, 2024 18:12 IST
    இலங்கை: தமிழக மீனவர்கள் 22 பேர் சிறையில் அடைப்பு

    புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களுக்கு 22ஆம் தேதிவரை காவல் விதித்து இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நீதிமன்ற காவலை தொடர்ந்து, 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.



  • Mar 10, 2024 18:10 IST
    கொடைக்கானலில் புதிய படகு குழாம்


    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியில் ஏற்கனவே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இரண்டு படகு குழாம்கள் உள்ள நிலையில், கூட்ட நெரிசலைக் கையாளும் வகையில் நகராட்சி சார்பில் புதிய படகு குழாம், 58 படகுகளுடன், 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 



  • Mar 10, 2024 17:09 IST
    ஜி.வி.பிரகாஷ் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார் நடிகர் தனுஷ்

    நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ரெபல்’ படத்தின் ட்ரெய்லரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார்



  • Mar 10, 2024 16:40 IST
    அருண் கோயல் ராஜினாமா; தேர்தல் நேர்மையாக நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது - திருமாவளவன்

    தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்



  • Mar 10, 2024 16:14 IST
    கிருஷ்ணாநகர் தொகுதியில் மஹூவா மொய்த்ரா போட்டி

    மேற்கு வங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி மஹூவா மொய்த்ரா போட்டியிடுகிறார்



  • Mar 10, 2024 16:08 IST
    கட்சி நலனை விட கூட்டணி நலன் முக்கியம் : திருமாவளவன்

    பாஜக என்ற பாசிச சக்தியிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டாலும் கூட, மனநிறைவோடு 2 தொகுதிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம். இதில் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. கூட்டணியின் வெற்றியே நாட்டின் பாதுகாப்பு என்ற அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என திருமாவளவன் கூறியுள்ளார்.



  • Mar 10, 2024 16:02 IST
    ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு

    டெல்லியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர் சடலமாக மீட்பு முதற்கட்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் 30 வயதுடையவர் என தெரிய வந்துள்ளது எப்படி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார் என போலீசார் விசாரணை



  • Mar 10, 2024 15:06 IST
    நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இயக்குனர் பாரதிராஜா பரப்புரை

    கள்ளக்குறிச்சி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீசப் பாண்டியனை ஆதரித்து ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயிலில் இயக்குநர் பாரதி ராஜா பரப்புரையை தொடங்கி வைத்தார்



  • Mar 10, 2024 15:05 IST
    தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பி மட்டுமே விருப்ப மனு தாக்கல்

    தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி எம்.பி.கலந்துகொண்டார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி எம்.பியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை.



  • Mar 10, 2024 15:03 IST
    தே.மு.தி.க சார்பில் 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

    மக்களவை தேர்தலுக்காக தொகுதிக்கு தலா இருவர் என 39 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு



  • Mar 10, 2024 15:02 IST
    முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் மக்களவைத் தேர்தலில் போட்டி

    திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான். போட்டியிடுகிறார். மேற்குவங்க மாநிலத்தின் 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி.



  • Mar 10, 2024 14:32 IST
    கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் : டெல்லி முதல்வர்

    டெல்லி கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் விழுந்த நிலையில், அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே டெல்லியில் உள்ள கைவிடப்பட்ட அனைத்து ஆழ்துளை கிணறுகளும் 48 மணி நேரத்தில் சீல் வைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.



  • Mar 10, 2024 14:27 IST
    3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் : தமிழக வெற்றி கழகம் அறிவிப்பு

    விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில்  தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. த.வெ.க புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8ம் தேதி செயலி மூலம் தொடங்கியது 3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்



  • Mar 10, 2024 13:38 IST
    தி.மு.க அரசு மீது இ.பி.எஸ் கடும் விமர்சனம் 

    கடத்தலின் மூலம் கிடைத்த பணத்தை உதயநிதியின் டிரஸ்டுக்கு ஜாபர் சாதிக் தந்துள்ளதாக செய்தி. இதே நிலை நீடித்ததால் வரும் 7 ஆண்டுகளில்  போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும். 

    போதைப் பொருள் கடத்திய பணத்தில் தான் தி.மு.க தேர்தலை சந்திப்பதாக செய்தி வருகிறது. போதைப் பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளது- எடப்பாடி பழனிசாமி 



  • Mar 10, 2024 13:14 IST
    விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

    நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்பினர்

    நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்



  • Mar 10, 2024 12:55 IST
    இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும்: இ.பி.எஸ்

    தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக விளக்கமான அறிக்கையை ஆளுநரிடம் அளித்துள்ளோம்.

    ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. இதே நிலைமை தொடர்ந்தால் தமிழகம் சீரழிந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி



  • Mar 10, 2024 12:51 IST
    பா.ஜ.கவின் அரசியல் எடுபடாது- அமைச்சர் ரகுபதி

    "பாஜகவின் அரசியல் எடுபடாது"

    "திமுகவை களங்கப்படுத்த வேண்டும் என்று பாஜக செய்யும் அரசியல் எடுபடாது"

    "வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக தற்போது போதை பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது"

    "பாஜகவுடன் அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகிறது"

    "தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது"-அமைச்சர் ரகுபதி



  • Mar 10, 2024 12:49 IST
    ஜெ.பி.நட்டா உடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

    டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு



  • Mar 10, 2024 11:52 IST
    40க்கு 40 வென்றால்தான் அரசியல் மாற்றம்- ஸ்டாலின்

     "நாற்பதுக்கு நாற்பது என்ற அளவில் வென்றால்தான் நாம் நினைக்கும் அரசியல் மாற்றமானது ஒன்றிய அரசில் நடக்கும்" - தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம்



  • Mar 10, 2024 11:50 IST
    3 மாதத்தில் 4 நடிகைகள் மர்ம மரணம்

    அமெரிக்காவின் பிரபல பாலியல் பட நடிகை சோபியா லியோன் (26) அபார்ட்மென்ட்டில் சடலமாக கண்டெடுப்பு.

    கடந்த 3 மாதங்களில் இத்துறையில் அடுத்தடுத்து 4 நடிகைகள் மிக இளம் வயதிலே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது உலகளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 



  • Mar 10, 2024 11:31 IST
    10ம் வகுப்பு தேர்வு: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 13-ல் துவக்கி, 22ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்

    எட்டு நாட்களுக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வு துறை உத்தரவு

    10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ம் தேதி முதல் தொடங்குகிறது



  • Mar 10, 2024 11:31 IST
    ஆளுநர் உடன் இ.பி.எஸ் சந்திப்பு

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

    போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்



  • Mar 10, 2024 11:00 IST
    அண்ணாமலை பேட்டி

    தமிழ்நாட்டில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக பாஜக களம் இறங்கியுள்ளது

    தேர்தல் ஆணையர் அருண் கோயல் ஏன் ராஜினாமா செய்தார் என்பது அவரிடம் தான் கேட்க வேண்டும்

    ஜாபர் சாதிக் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தமிழ்நாட்டு மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை என் சி பி அதிகாரிகளுக்கு உண்டு

    - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி 



  • Mar 10, 2024 10:59 IST
    7 தொகுதிகளுக்கான நேர்காணல் நிறைவு

    கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு , சேலம் , பொள்ளாச்சி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிறைவு



  • Mar 10, 2024 10:57 IST
    விருப்பமனு விநியோகம் தொடக்கம்



  • Mar 10, 2024 10:27 IST
    அதிமுக வேட்பாளர் நேர்காணல்

    மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது



  • Mar 10, 2024 10:26 IST
    தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம்

    தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம் - நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு



  • Mar 10, 2024 10:26 IST
    தயாநிதிமாறன் விமர்சனம்

    தேர்தல் ஆணையமே சரியில்லை.. எனவே இந்த தேர்தலில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    -தேர்தல் ஆணையர் ராஜினாமா குறித்து எம்.பி. தயாநிதிமாறன் விமர்சனம்



  • Mar 10, 2024 09:55 IST
    திமுகவை கண்டித்து தமிழக பாஜக கண்டன பொதுக்கூட்டம்

    போதைப்பொருட்கள் விவகாரத்தில் திமுகவை கண்டித்து தமிழக பாஜக கண்டன பொதுக்கூட்டம்

    அண்ணாமலை தலைமையில் நாளை மறுநாள் பிற்பகல 3.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என அறிவிப்பு



  • Mar 10, 2024 09:55 IST
    உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - நத்தம் சாலையின் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்

    - மு.க.ஸ்டாலின் உத்தரவு



  • Mar 10, 2024 09:54 IST
    நேர்காணல் தொடங்கியது

    மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது



  • Mar 10, 2024 09:38 IST
    இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன்

    இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்

    காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் வரும் 17ம் தேதி நிறைவு பெறுகிறது.



  • Mar 10, 2024 09:12 IST
    மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்- குஜராத்தை வீழ்த்திய மும்பை

    மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பரபரப்பான லீக் போட்டியில் குஜராத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வீழ்த்தியது

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை அணி,  கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

    கடைசி வரை ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடித்த மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகியாக தேர்வானார்



  • Mar 10, 2024 08:43 IST
    தேர்தல் ஆணையர் ராஜினாமா- கிருஷ்ணசாமி விமர்சனம்

    மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்

    - புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை



  • Mar 10, 2024 08:28 IST
    வி.சி.க. துணைபொதுச்செயலாளர் வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்

    வி.சி.க. துணைப் பொதுச் செயலாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை - முக்கிய ஆவணங்கள்  பறிமுதல்

    பொது விநியோகத் திட்ட ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு



  • Mar 10, 2024 08:28 IST
    4 மாத குழந்தை கடத்தல்

    தூத்துக்குடி: அந்தோணியார் கோயில் அருகே சாலையோரம் யாசகம் எடுத்து வந்த பெண்ணின் 4 மாத குழந்தை நேற்றிரவு மர்ம நபர்களால் கடத்தல்

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. குழந்தையை கண்டுபிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தகவல்



  • Mar 10, 2024 08:27 IST
    மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 67 கன அடியாக அதிகரிப்பு

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நீர் இருப்பு 26.77 டி.எம்.சி. ஆக உள்ளது



  • Mar 10, 2024 07:36 IST
    தேர்தல் ஆணையர் ராஜினாமா- கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

    விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.

    பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை. ஏதோவொரு பிளானை முன்வைத்துதான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன்

    - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்



  • Mar 10, 2024 07:36 IST
    இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா

    2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா;

    வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை இவரின் பதவிக்காலம் உள்ள நிலையில் திடீரென பதவி விலகியுள்ளார்.

    அருண் கோயலின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்



  • Mar 10, 2024 07:35 IST
    தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேர் கைது

    நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கைக் கடற்படை

    கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்



  • Mar 10, 2024 07:35 IST
    திமுக, அதிமுக- வேட்பாளர் நேர்காணல்

    மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நேர்காணல் நடத்துகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கு இன்றும், நாளையும் நேர்காணல் நடைபெற உள்ளது



  • Mar 10, 2024 07:35 IST
    ஓபிஎஸ் அணி

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகளிடம் இருந்து இன்று விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளன.



  • Mar 10, 2024 07:34 IST
    நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 16-ம் தேதி இரவு 10.50 மணி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இரவு 11.50 மணி வரை அதற்கான கட்டணத்தை செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment