Tamil News Updates: பிரசாரம் ஓய்ந்தது: 89 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்ட தேர்தல்

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry Election 0

Tamil News Today live

Tamil Nadu Chennai News Update

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு

Advertisment
Advertisements

விவி பேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்கிறது.

  • Apr 24, 2024 22:30 IST

    திருவாரூர் - பட்டுக்கோட்டை இடையே புதிய DEMU ரயில் சேவை அறிவிப்பு

    காலை 8.30 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு மாங்குடி, மாவூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வழியே காலை 10.05 மணிக்கு பட்டுக்கோட்டை செல்கிறது. மறுமார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு இரவு 6.55 மணிக்கு திருவாரூர் வருகிறது.



  • Apr 24, 2024 21:43 IST

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஜூன் 3 முதல் பள்ளிகள் திறப்பு: முதன்மைக் கல்வி அலுவலர் தகவல்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்; திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு ஏப்ரல் 27-ம் தேதி முதல் ஜூன் 2 வ்ரை கோடை விடுமுறை; விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது நெரு திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.



  • Apr 24, 2024 20:48 IST

    கடலூரில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ₹1.20 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Apr 24, 2024 20:12 IST

    சாலை விபத்தில் ஆசிரியர் உயிரிழப்பு; ரூ.15 லட்சம் நிதியுதவி

     

    நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
    அவரது இல்லத்திற்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கருணைத் தொகையாக ₹15 லட்சத்தை வழங்கினார்.



  • Apr 24, 2024 19:15 IST

    உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் போட்டி


    உத்தரப் பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார் என சமாஜ்வாதி கட்சி தெரிவித்துள்ளது.



  • Apr 24, 2024 18:41 IST

    டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு

    தமிழகத்தில் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கிற்கு லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Apr 24, 2024 18:41 IST

    வைகோவுக்கு எதிரான வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிரான 2016ல், திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதாக கூறி வைகோ உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை  4 மாதங்களில் முடிக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 24, 2024 18:17 IST

    நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

    தாம்பரத்தில் தேர்தலுக்கு முன் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பான நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மே 2ம் தேதி தாம்பரம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



  • Apr 24, 2024 18:16 IST

    4 கோடி ரூபாய் பணம் வழக்கு : அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

     

    தாம்பரத்தில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். பணம் பறிமுதல் தொடர்பான வழக்கை, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச்சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது என அமலாக்கத்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.



  • Apr 24, 2024 18:15 IST

    'மஞ்சும்மல் பாய்ஸ்'  படத்தின் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

    பிரபல மலையாள திரைப்படமான 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது கூட்டு சதி, நம்பிக்கை துரோகம், போலி தடயங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு, எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மரடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு



  • Apr 24, 2024 18:13 IST

    பெண் பயணிகளை ஏற்றி செல்லாத அரசு பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

    விழுப்புரத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் ஆறுமுகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்த ஊழியரான நடத்துநர் தேவராசு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாததால் நடவடிக்கை!



  • Apr 24, 2024 18:10 IST

    குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியீடு

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



  • Apr 24, 2024 17:21 IST

    பிரசாரத்தின் போது மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    மகாராஷ்டிரா, யவத்மால் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது மத்திய அமைச்சரும், பாஜகயின் மூத்த தலைவருமான நிதின் கட்கரி மேடையில் மயங்கி விழுந்தார்



  • Apr 24, 2024 16:57 IST

    தமிழக - கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை

    கேரள, கர்நாடக மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தமிழக - கர்நாடக எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கக்கநல்லா சோதனை சாவடி அருகே வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. கர்நாடக வனத்துறைக்கு சொந்தமான பந்திப்பூர் வனத்துறை சோதனை சாவடியில் சோதனை நடத்தப்படுகிறது முழு ஆய்வுக்கு பின்னரே கேரள, தமிழக வாகனங்கள் கர்நாடக பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது



  • Apr 24, 2024 16:45 IST

    திருச்சியில் இருக்கையோடு பேருந்தில் இருந்து கீழே விழுந்த நடத்துனர் - பயணிகள் அதிர்ச்சி

    திருச்சியில் இருக்கையோடு பேருந்தில் இருந்து நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பேருந்து வளைவில் திரும்பிய நிலையில் போல்டுகள் கழன்று இருக்கை தூக்கி வீசப்பட்டதில் நடத்துனர் கீழே விழுந்தார். லேசான காயத்துடன் தப்பிய நடத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • Apr 24, 2024 16:23 IST

    தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல்; ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு

    தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் குடியரசுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது



  • Apr 24, 2024 16:09 IST

    உடல் எடை குறைப்பு ஆபரேஷன் - இளைஞர் மரணம்

    புதுச்சேரியை சேர்ந்த இளைஞரான ஹேமசந்திரன் என்பவர் சென்னையில் உடல் பருமனை குறைக்க ஆபரேஷன் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மகனை இழந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்



  • Apr 24, 2024 15:48 IST

    நகைகளை கொடுத்தது இந்திரா காந்தி மட்டுமல்ல – அண்ணாமலை

    1962 இந்தியா – சீனா போருக்கு காரணமே நேரு தான். அப்போது நாட்டின் பாதுகாப்புக்காக இந்திரா காந்தி மட்டுமல்ல, அனைத்து மக்களும் தான் நகைகள் கொடுத்தனர். இதை காங்கிரஸ் புரிந்துக் கொள்ள வேண்டும் என வயநாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Apr 24, 2024 15:15 IST

    நீதிமன்றங்களில் சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வழக்கு; விசாரணை ஒத்திவைப்பு

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் (CISF) பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், உயர் நீதிமன்றத்தின் மொத்த வளாகத்திற்கும் CISF பாதுகாப்பு வழங்குவது குறித்து தாமாக முன்வந்து எடுத்த வழக்கு விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது



  • Apr 24, 2024 14:53 IST

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி ஆகிய 3-க்கும் தனித்தனியாக மைக்ரோ சிப்கள் புரோகிராம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டு இருக்கும் எனவே அவற்றை மாற்ற முடியாது”- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்



  • Apr 24, 2024 14:32 IST

    வட தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும்

    வட தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.



  • Apr 24, 2024 14:11 IST

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

    "வரிகள், பாடகர் என அனைத்தும் சேர்ந்து தான் பாடல் என்பதால் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?" இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி பாடல்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்கு சொந்தம் என்பது மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது - உயர் நீதிமன்றம் ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை பெறாமல், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்திய விவகாரம் எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஜூன் 2வது வாரத்திற்கு தள்ளிவைப்பு.



  • Apr 24, 2024 14:00 IST

    தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை கோவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவு வடலூர் சர்வதேச மையம் - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Apr 24, 2024 13:40 IST

    திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்" உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

    திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்" உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை . "திரவ நைட்ரஜனால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் உட்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படலாம்" "திரவ நைட்ரஜன் உயிருள்ள திசுக்களுடன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறைபனியை ஏற்படுத்தும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது" திரவ நைட்ரஜனை குடிப்பதால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கிறது - உணவு பாதுகாப்புத் துறை ஸ்மோக் பிஸ்கட் - ஆபத்து - எச்சரிக்கை



  • Apr 24, 2024 12:50 IST

    இந்தியாவிலேயே அதிக வெப்பம்: சேலத்திற்கு 3-வது இடம்

    அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது சேலம். நேற்று சேலத்தில் 108.14 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல். நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூரில் 110.3 டிகிரி, ஒடிசா மாநிலத்தில் 109.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு.

    நேற்று முன் தினம் ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவான நிலையில், நேற்று சேலத்தில் அதிக வெப்பநிலை பதிவு. 



  • Apr 24, 2024 12:42 IST

    கோவை மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

    கோவை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்,கோவையில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

    கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் ஆட்சியர் அறிவுறுத்தல்.

    பொதுமக்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்த வேண்டும் - ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் ஆட்சியர் வேண்டுகோள்

    வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் - கோவை ஆட்சியர்



  • Apr 24, 2024 12:40 IST

    வயநாடு: துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்?

    வயநாட்டில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்

    கம்பமலை பகுதியில் ஓட்டுப் போடக்கூடாது என துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்த மாவோயிஸ்டுகள். சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ.

    கேரளாவில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாவோயிஸ்டுகள் மிரட்டல்



  • Apr 24, 2024 12:26 IST

    திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

    சித்ரா பௌர்ணமியையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவியும் பக்தர்கள். நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசிக்கும் பக்தர்கள்.

    கடற்கரையில் புனித நீராடி முருகனை வழிபடும் பக்தர்கள். திருச்செந்தூரில் அலை கடலென திரளும் பக்தர்களால் போக்குவரத்து நெரிசல். 



  • Apr 24, 2024 12:23 IST

    பறவை காய்ச்சல்: கூடலூரில் பண்ணைகளில் சோதனை

    கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி. கூடலூரில் உள்ள கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு. கோழி மற்றும் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சோதனை. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதி. 



  • Apr 24, 2024 11:45 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

    இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 53,840 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 6 ஆயிரத்து 730 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல், கிராம் 86 ரூபாய் 50 பைசாவாக விற்பனையாகிறது. ஏப்ரல் 19இல், 55 ஆயிரத்து 120 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை, பின்னர் படிப்படியாக குறைந்து, ஏற்ற இறக்கங்களுடன் தொடர்கிறது.



  • Apr 24, 2024 11:29 IST

    கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: 12 பேர் கைது

    சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது. நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - லக்னோ இடையேயான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக புகார்.

    10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல். திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை 



  • Apr 24, 2024 11:29 IST

    கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: 12 பேர் கைது

    சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது. நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை - லக்னோ இடையேயான போட்டியின் போது கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக புகார்.

    10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 டிக்கெட்டுகள் பறிமுதல். திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை 



  • Apr 24, 2024 11:28 IST

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று ஆஜராக உத்தரவு

    விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கு.

    விவி பேட் வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

    பதிவான வாக்குகளுடன் விவிபேடுகளை சரிபார்க்க கோரிய பொதுநல மனு

    இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சில கேள்விகள் முன் வைத்து விடைகாண விரும்புகிறோம் - நீதிபதி 

    மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் கன்ட்ரோல்  யூனிட்டில் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது விவிபேடில் பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிபதி

    பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ கன்ட்ரோல் யூனிட் ஒரு முறை புரோகிராம் செய்யப்பட்டதா? - நீதிபதி 

    தேர்தல் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகள் எத்தனை உள்ளன? - நீதிபதி 

    கன்ட்ரோல்  யூனிட் மட்டும் சீலிடப்படுகிறதா? அல்லது விவிபேடு தனியாக வைத்து பாதுகாக்கப்படுகிறதா? - நீதிபதி

     



  • Apr 24, 2024 10:58 IST

    தமிழ்நாட்டுக்கு இன்று மஞ்சள் அலெர்ட்

    தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 



  • Apr 24, 2024 10:49 IST

    மோடிக்கு வைகோ கண்டனம்

    ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பிரசாரத்தில் இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படுத்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இஸ்லாமியர்கள் மீதான பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு உலகின் பல்வேறு நாடுகளில் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பிரதமர் மோடி இப்படி பேசி இருப்பது அவரது சிந்தையில் நிறைந்திருக்கும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

    - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை



  • Apr 24, 2024 10:49 IST

    இன்னும் சற்று நேரத்தில் இடைக்கால உத்தரவு

    விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் அனைத்து ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.  



  • Apr 24, 2024 10:19 IST

    அதிகாரிகள் கண்காணித்து இருக்க வேண்டும்- தமிழிசை

    பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது, வருத்தம் அளிக்கிறது. அதிகாரிகள் சரியாக கவனித்து இருக்க வேண்டும். அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் சொல்வது வருத்தத்தை அளிக்கிறது.

    -  தமிழிசை சௌந்தரராஜன்



  • Apr 24, 2024 10:17 IST

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம்

    நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.



  • Apr 24, 2024 09:44 IST

    2ம் கட்ட மக்களவைத் தேர்தல்

    நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

    கர்நாடகா, கேரளா, அசாம், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



  • Apr 24, 2024 09:07 IST

    அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து

    தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து, வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்

    விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 24, 2024 08:50 IST

    அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி- 4 பேர் கைது

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற வழக்கில்  அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 24, 2024 08:08 IST

    அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.

    மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 24, 2024 07:44 IST

    சென்னையில் ரூ.11 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது

    சென்னை  விமான நிலையத்தில் தோகாவில் இருந்து வந்த இளைஞரிடம் இருந்து 11 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.11 கோடி.

    ஹெராயின் போதைப் பொருள் கடத்தி வந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 24, 2024 07:44 IST

    ஐ.பி.எல். இன்றைய போட்டி

    ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • Apr 24, 2024 07:43 IST

    கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியர் கைது

    15 வருடங்களுக்கு முன் பாலியல் தொல்லை அளித்தாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கலாஷேத்ரா முன்னாள் நடன ஆசிரியரான ஸ்ரீஜித் என்பவஅடையாறு போலீசார் கைது செய்தனர்.

    பாலியல் புகாரில் ஏற்கனவே உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் கைதான நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Apr 24, 2024 07:29 IST

    லக்னோவிடம் வீழ்ந்தது சிஎஸ்கே

    நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ அணி.

    முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - 108, ஷிவம் துபே - 66 ரன்கள் அடித்தனர்.

    211 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 19.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 124* ரன்கள் அடித்து, லக்னோ அணியை வெற்றியின் பக்கம் உந்தினார்.

    புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்துக்கு லக்னோ அணி முன்னேறியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது இடத்தில் உள்ளது.



  • Apr 24, 2024 07:29 IST

    2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு

    இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுட ஓய்கிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தலைவர்கள் இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



  • Apr 24, 2024 07:28 IST

    சிஎஸ்கே - ஹைதராபாத் போட்டிக்கு நாளை டிக்கெட் விற்பனை

    ஐபிஎல் டி20 தொடரில் வரும் 28-ம் தேதி சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை நாளை (25-ம் தேதி) காலை 10.40 மணிக்கு இணையதளம் வாயிலாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Paytm மற்றும் www.insider.in என்ற இணையதளம் வாயிலாக டிக்கெட்களை பெறலாம் என சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: