Advertisment

Tamil News Updates: தமிழ்நாட்டில் 39 இடங்களையும் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும்- கருத்துக் கணிப்பு

Tamil Nadu News Update: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu CM MK Stalin.jpg

Tamil News

Tamil Nadu Chennai News Update 

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

கச்சத் தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் அனுப்பவில்லை. இந்தியாவிடம் இருந்து அப்படி ஒரு கோரிக்கை இல்லை. அப்படி தொடர்பு இருந்தால் இலங்கை வெளியுறத் துறை அதற்கு பதில் அளிக்கும்.

இலங்கையை பொருத்தவரை கச்சத் தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது

- இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்

  • Apr 03, 2024 07:05 IST
    தமிழ்நாட்டில் 39 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும்

    தமிழ்நாட்டில் 39 இடங்களையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றும் என India Today - CVoter கருத்துக்கணிப்பில் தகவல்



  • Apr 03, 2024 05:05 IST
    அ.தி.மு.க-விற்கு ஓட்டு போடாவிட்டால்; தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது - இ.பி.எஸ்

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க-விற்கு ஓட்டு போடாவிட்டால்; தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.



  • Apr 02, 2024 21:39 IST
    ஏழை மக்களுக்காக பா.ஜ.க பேசுமா -  சீமான் கேள்வி

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு: “பெரும் முதலாளிகளிடம் பணம் வாங்கும் பா.ஜ.க-வினர் ஏழை மக்களுக்காக பேசுவார்களா? தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 6,650 கோடி ஊழல் செய்த பா.ஜ.க-வை யாரும் கேட்பதில்லை. ஊழல், லஞ்சம் இவற்றையெல்லாம் வீசிவிட்டு மக்கள் நலனுக்காக போராடுகிறோம்” என்று பேசினார்.



  • Apr 02, 2024 21:35 IST
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பதவி நாளையுடன் முடிவடைகிறது

    33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாளையுடன் ஓய்வு பெறுகிறார். 1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.



  • Apr 02, 2024 21:01 IST
    மோடிக்கு ஸ்டாலின் கேள்வி


    வேலூரில் நடந்த தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இலங்கையை கண்டிக்கவும், சீனாவை கண்டிக்கவும் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடி கச்சத்தீவு குறித்து பேசலாமா? எனக் கேள்வியெழுப்பினார்.



  • Apr 02, 2024 20:57 IST
    'சீட்டுக்காக வரவில்லை; நாட்டுக்காக வந்துள்ளேன்'- கமல்ஹாசன் பரப்புரை

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
    அப்போது, “நான் சீட்டுக்காக வரவில்லை; நாட்டுக்காக வந்துள்ளேன். திராவிட மாடலை பின்பற்றினால் இந்தியாவின் நுழைவுவாயிலாக தமிழ்நாடு இருந்திருக்கும்” என்றார்.



  • Apr 02, 2024 20:03 IST
    தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பரப்புரை

    மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் தயாநிதிமாறனை ஆதரித்து, புரசைவாக்கம் தானா தெருவில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.



  • Apr 02, 2024 20:00 IST
    காலை உணவுத் திட்டம்; 16 லட்சம் குழந்தைகள் பலன்; மு.க. ஸ்டாலின்

     

    வேலூரில் நடைபெற்ற பரப்புரையில் காலை உணவு திட்டம் மூலம், தமிழ்நாட்டில் 16 லட்சம் குழந்தைகள் வயிறார சாப்பிடுகிறார்கள் என மு.க. ஸ்டாலின் கூறினார்.



  • Apr 02, 2024 19:33 IST
    பெருமாள் கோவிலில் தொல். திருமாவளவன் தரிசனம்

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது அரியலூருக்கு உட்பட்ட கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தொல். திருமாவளவன் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அமைச்சர் சிவசங்கர் உடன் இருந்தார்.

     



  • Apr 02, 2024 18:33 IST
    பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு தொடர்பான வழக்கிவில் ஏப்ரல் 24-ல் தீர்ப்பு

    சென்னை, பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம்பெறாததை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 24ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்



  • Apr 02, 2024 18:00 IST
    5 மணி நேரமாக அமீரிடம் விசாரணை

    டெல்லியில்  போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக என்சிபி அதிகாரிகள் இயக்குனர் அமீரிடம் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் போது இயக்குநர் அமீரின் வழக்கறிஞர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை



  • Apr 02, 2024 17:38 IST
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திர குறைபாடு சரிசெய்ய கோரி திமுக ரிட் மனு தாக்கல்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்



  • Apr 02, 2024 17:30 IST
    மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கிளம்பிய பா.ஜ.க வேட்பாளர்

    திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த மக்கள் 'மோடி கேஸ் கூட கொடுக்கவில்லையே' என கேள்வியை முன்வைத்து அவரை சுற்றுவளைத்துள்ளனர். மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பி அங்கிருந்து நழுவினார்.



  • Apr 02, 2024 16:52 IST
    கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்திய அரசின் கடிதம் தெளிவுபடுத்தி உள்ளது; ப.சிதம்பரம்

    கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தி உள்ளது. அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி, வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர். 27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பா.ஜ.க தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்? கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பான காட்டமான அறிக்கைகளை பா.ஜ.க தலைவர்கள் வெளியிடுகிறார்கள். இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கை தமிழர்கள், 10 லட்சம் இந்திய தமிழர்களை பற்றி பா.ஜ.க.,விற்கு கவலையில்லை போல தெரிகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்



  • Apr 02, 2024 16:30 IST
    நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணம்

    உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விஸ்வேஷ்வர ராவ்(62) காலமானார். உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் விஸ்வேஷ்வர ராவ்.



  • Apr 02, 2024 16:08 IST
    மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.1487 கோடி வழங்கப்பட்டு உள்ளது; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

    மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,487 கோடி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு இருந்தது.



  • Apr 02, 2024 15:42 IST
    கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டி

    ஆந்திர மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடப்பா தொகுதியில் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி போட்டியிடுகிறார்



  • Apr 02, 2024 15:21 IST
    கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் இல்லை – நிர்மலா சீதாராமன்

    கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் இல்லை. தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசவில்லை. கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க.,வும், காங்கிரஸும் 50 ஆண்டுகளாக பொய் பிரசாரம் செய்து வருகின்றன என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்



  • Apr 02, 2024 15:09 IST
    கெஜ்ரிவால் பதவி விலக கூடாது; ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

     எந்த சூழ்நிலையிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக கூடாது என கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். டெல்லியின் 2 கோடி மக்கள் கெஜ்ரிவாலுடன் இருக்கிறார்கள். டெல்லி அரசை சிறையில் இருந்தபடியே கெஜ்ரிவால் இயக்க வேண்டும் என சுனிதா கெஜ்ரிவாலை, டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 55 பேர் சந்தித்து வலியுறுத்தினர். டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தற்போது சிறையில் உள்ளனர்



  • Apr 02, 2024 14:31 IST
    ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்குக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்; சஞ்சய் சிங்குக்கு பிணை வழங்க எந்த ஆட்சேபனையும் இல்லை என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து ஜாமின் வழங்கி உத்தரவு



  • Apr 02, 2024 14:30 IST
    சென்னை அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் ரூ.5,000 கோடி அளித்தோம்

    புயல், வெள்ளத்திற்கு கொடுத்த நிதியை செலவிட்டது குறித்து தமிழக அரசு தகவல் தர வேண்டும் புயல் வந்தவுடன், நான் முதலில் வந்து பார்வையிட்டேன் சென்னை அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் ரூ.5,000 கோடி அளித்தோம் ஏற்கனவே கொடுத்த ரூ.5,000 கோடி மற்றும் ரூ.950 கோடி எங்கே போனது?- நிர்மலா சிதாராமன். 



  • Apr 02, 2024 14:04 IST
    ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? - பிரதமர் மோடி கேள்வி

    எனது 3வது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல் நடைபெறும்" ஊழல் செய்தவர்கள் சிறைக்கு செல்ல வேண்டாமா? - பிரதமர் மோடி கேள்வி ஊழல்வாதிகள் என்னை மிரட்டுவதோடு, அவதூறும் செய்கின்றனர் கேளிக்கைகளில் ஈடுபடுவதற்காக மோடி பிறக்கவில்லை, மக்களுக்காக பணியாற்றவே பிறந்துள்ளேன் - பிரதமர் மோடி



  • Apr 02, 2024 14:02 IST
    நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்

    வயநாடு தொகுதியில் நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வயநாடும் ஒன்று கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 



  • Apr 02, 2024 13:50 IST
    கட்சி தலைமை உத்தரவிட்டால், தேர்தலில் போட்டியிட தயார் - நிர்மலா சீதாராமன்

    "பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தேர்தலில் போட்டியிட முடியும்" கட்சி தலைமை உத்தரவிட்டால், தேர்தலில் போட்டியிட தயார் - நிர்மலா சீதாராமன்



  • Apr 02, 2024 13:29 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் வருகை

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் வருகை. கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த நவடிக்கைகள் குறித்த ஆலோசனை என தகவல்



  • Apr 02, 2024 13:27 IST
    கள்ளழகர் வைபவம் - நீதிமன்றம் உத்தரவு

    சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை சாதிய ரீதியான மற்றும் தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கு கள்ளழகர் வழக்கமாக செல்லும் பாதையில், 483 மண்டக படிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது - கோயில் நிர்வாகம் தற்போது வரை சாதிய ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை - கோயில் நிர்வாகம் விளக்கம். 



  • Apr 02, 2024 13:27 IST
    கள்ளழகர் வைபவம் - நீதிமன்றம் உத்தரவு

    சித்திரை திருவிழாவின் போது கள்ளழகரை சாதிய ரீதியான மற்றும் தனியார் மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்க கோரிய வழக்கு கள்ளழகர் வழக்கமாக செல்லும் பாதையில், 483 மண்டக படிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது - கோயில் நிர்வாகம் தற்போது வரை சாதிய ரீதியான பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டதாக புகார் ஏதுமில்லை - கோயில் நிர்வாகம் விளக்கம். 



  • Apr 02, 2024 12:59 IST
    வட சென்னை பகுதியில் உதயநிதி பிரச்சாரம்

    கொளத்தூர் தொகுதியில் மட்டும், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.  "வட சென்னை அனல் மின் நிலையத்தில் ரூ.6,300 கோடி செலவில் பணிகள்.

    கருணாநிதியை போலவே, சொன்னதை தான் செய்வார், செய்வதை தான் சொல்வார் முதல்வர் ஸ்டாலின்.

    வட சென்னை கணேசபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்படும். வட சென்னையில் பிரத்யேகமாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்படும். பட்டா பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன், பட்டா பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். சட்டப்பேரவை தேர்தலில், ஒட்டுமொத்த சென்னையும், திமுகவுக்கு வாக்களித்தது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 



  • Apr 02, 2024 12:54 IST
    முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் சீனா

    “அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்யும் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக சீனா ஈடுபடுகிறது”- இந்திய வெளியுறவு அமைச்சகம்



  • Apr 02, 2024 12:47 IST
    கச்சத்தீவு தொடர்பாக பொறுப்பற்ற பேச்சு: நிர்மலா சீதாராமன்

    கச்சத்தீவு தொடர்பாக பொறுப்பற்ற பேச்சு - நிர்மலா சீதாராமன்

    கச்சத்தீவு தொடர்பாக உண்மைக்கு புறப்பான பொறுப்பற்ற முறையில் சிலர் பேசுகின்றனர். தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க கையில் எடுக்கவில்லை. கச்சத்தீவை ஒரு தொல்லை எனக் குறிப்பிட்டார். முன்னாள் பிரதமர் நேரு. கச்சத்தீவை வெறும் பாறை எனக் குறிப்பிட்டார் இந்திரா காந்தி- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Apr 02, 2024 12:04 IST
    அமலாக்கத் துறையில் ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு

    சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம்

    உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி - தமிழக அரசு தரப்பில் பரபரப்பு வாதம்

    25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

    அமலாக்கத் துறையில் ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு



  • Apr 02, 2024 11:46 IST
    உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்

    பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்

    பதஞ்சலி தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தவறான தகவல் பரப்பும் விளம்பரத்தை தயாரித்த விவகாரத்தில்  பாபா ராம்தேவ் நிபுந்தனையைற்ற மன்னிப்பு கோருவதாக  உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்



  • Apr 02, 2024 11:21 IST
    பா.ஜ.கவில் இணையுமாறு மிரட்டல்: ஆம் ஆத்மி அமைச்சர்

    பாஜகவில் இணையுமாறு மிரட்டல் - ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி. தங்கள் கட்சியில் இணையுமாறு பாஜக என்னை அணுகியது - டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு 

    என்னுடைய அரசியல் வாழ்க்கையை காப்பாற்றி கொள்ள வேண்டுமானால் பாஜகவில் இணைய நிர்பந்தித்தனர். நான் பாஜகவில் இணையாவிட்டால், அடுத்த ஒரு மாதத்தில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன் - அதிஷி

    மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நான் உட்பட மேலும் 4 ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கைது செய்யப்படலாம் - அதிஷி



  • Apr 02, 2024 10:59 IST
    லடாக்கில் சீனாவின் ஊடுருவல்

    அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் சீனாவின் ஊடுருவல், தேர்தல் பத்திர முறைகேடு உள்ளிட்டவை குறித்து பேசாமல், அவற்றை மறைப்பதற்கு, பாஜகவினர் கட்சத்தீவு குறித்து பேசி வருகின்றனர்

    - கனிமொழி எம்.பி. 



  • Apr 02, 2024 10:32 IST
    இயக்குநர் அமீர் ஆஜர்

    ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கு: திரைப்பட இயக்குநர் அமீர் ஆஜர்;

    டெல்லியில் உள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் இயக்குநர் அமீர்



  • Apr 02, 2024 10:25 IST
    பிரதமர் மோடி வரும் 9 ஆம் தேதி தமிழகம் வருகிறார்

    மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் பிரதமர்

    பிரதமர் மோடி தலைமையில் சென்னையின் 3 வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது

    தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்

    தேர்தல் பிரசாரமாக வாகன பேரணியிலும் ஈடுபட உள்ளார் பிரதமர் மோடி



  • Apr 02, 2024 10:00 IST
    பிரதமர் மோடிக்கு உதயநிதி கேள்வி

    அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?

    - பிரதமர் மோடிக்கு உதயநிதி கேள்வி



  • Apr 02, 2024 09:58 IST
    பாஜக கட்சி அலுவலகமாக தேர்தல் ஆணையம்

    பாஜக என்னிடம் எவ்வளவோ ஆசை வார்த்தை கூறினார்கள், அங்கு சேர்ந்திருந்தால் 500 கோடியும், தேர்தலில் போட்டியிட 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும்.

    அவர்களுடன் கூட்டணி வைக்காததால் நான் கேட்ட சின்னம் எனக்கு கிடைக்கவில்லை. பாஜக கட்சி அலுவலகமாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    தேனியில் சீமான் பேச்சு



  • Apr 02, 2024 09:44 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ51,440-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,430-க்கு விற்பனையாகிறது



  • Apr 02, 2024 09:22 IST
    5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    சென்னையில் ஓட்டேரி உள்ளிட்ட 5 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

    பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த தகவலின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல்

    சென்னை ஏழுகிணறு  காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இன்துராம் சௌத்ரி என்பவர் வீட்டில் சோதனை



  • Apr 02, 2024 08:48 IST
    இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர்

    இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக தெலங்கானாவைச் சேர்ந்த 20 வயது இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி முன்னேறியுள்ளார்.

    செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி அர்ஜுன் எரிகேசி முதலிடம் பிடித்துள்ளார்.

    ஃபிடே வெளியிட்ட லைவ் ரேட்டிங் அடிப்படையிலான பட்டியலில் 2 ஆயிரத்து 756 புள்ளிகள் பெற்று அர்ஜுன் எரிகேசி இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.



  • Apr 02, 2024 08:45 IST
    திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு உற்சாக வரவேற்பு



  • Apr 02, 2024 08:25 IST
    ஐ.பி.எல் இன்றைய லீக் போட்டி

    ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை..

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது..



  • Apr 02, 2024 07:51 IST
    7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி- ஸ்டாலின் பெருமிதம்



  • Apr 02, 2024 07:42 IST
    எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

    கரூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு



  • Apr 02, 2024 07:41 IST
    நான் உங்கள் வீட்டு பெயரை மாற்றினால் எனது வீடாகுமா? ஜெய்சங்கர்

    அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது.

    அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும். நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?. பெயர்களை மாற்றும் சீனாவின் செயல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் எல்லையில் நமது ராணுவத்தை குவித்திருக்கிறோம், என தெரிவித்துள்ளார்.



  • Apr 02, 2024 07:41 IST
    சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

    இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட கூட்டுக்குழு, 2022 மார்ச் மாதத்திற்குப் பிறகு நடக்கவில்லை. இலங்கையில் நடந்த உள்நாட்டு பிரச்னை காரணமாக அவர்கள் தரப்பில் தேதி முடிவு செய்யப்படவில்லை

    - சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்



  • Apr 02, 2024 07:40 IST
    ஐபிஎல் 2024: ராஜஸ்தான் அணி வெற்றி

    மும்பை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.  

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டு  இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது ராஜஸ்தான்.

    ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரம் மும்பை அணி தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment