Advertisment

Tamil News Updates: மேகதாது அணை கட்டும் விவகாரம்- டெல்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

Tamil Nadu Live News Update Today- 3 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu urges Cauvery panel

Tamil News

Tamil Nadu Chennai News Update

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

மன்மோகன் சிங் இன்றுடன் ஓய்வு

33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

1991 முதல் 2019ம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தில் இருந்தும், 2019 முதல் தற்போது வரை ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சென்ற அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

  • Apr 04, 2024 07:04 IST
    மேகதாது அணை கட்டும் விவகாரம்

    காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, இன்று டெல்லியில் 29வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.



  • Apr 03, 2024 22:43 IST
     கச்சத்தீவு என் பாட்டன் சொத்து - சீமான் பேச்சு

    மயிலாப்பூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை: “ கச்சத்தீவு என் பாட்டன் சொத்து; கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும். நடக்கத் தெம்பு இருக்கும்போதே, பொறுப்பை தாருங்கள், சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள். படிப்பகத்தை திறந்தவர் காமராசர், தெருக்கு இரண்டு குடிப்பகங்களைத் திறந்தது தி.மு.க” என்று பேசினார்.



  • Apr 03, 2024 22:40 IST
    பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி பலி

    திருவள்ளூர், பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். சேலத்தைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளர்களான சேகர், சுப்பிரமணி இருவரும் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரயில் ஏற வந்த போது விபத்து நடந்துள்ளது.



  • Apr 03, 2024 21:42 IST
    மோடி அவர்களே உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ம் தேதி தெளிந்து விடும் - மு.க. ஸ்டாலின் பேச்சு

    திருவண்ணாமலையில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மோடி அவர்களே உங்கள் குழப்பங்கள் ஜூன் 4-ம் தேதி தெளிந்து விடும்” என்று பேசினார்.



  • Apr 03, 2024 21:39 IST
    மதுரை சித்திரைத் திருவிழா: 4 முதல் 9-ம் வகுப்பு வரை 23ம் தேதி தேர்வு ஒத்திவைப்பு மதுரை சி.இ.ஓ உத்தரவு

    மதுரை சித்திரைத் திருவிழாவை ஒட்டி 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கு 23ம் தேதி நடக்க இருந்த சமூக அறிவியல் தேர்வு 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மதுரை முதன்மைக் கல்வி அலுவர் உத்தரவிட்டுள்ளார். 



  • Apr 03, 2024 21:00 IST
    சிதம்பரத்தில் கமல்ஹாசன் பரப்புரை


    சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக வேப்டாளர் திருமாவளவனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது விசிக சின்னமான பானையை கைகளில் தூக்கி காட்டினார்.



  • Apr 03, 2024 20:59 IST
    பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

     

    பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து, மண்ணச்சநல்லூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.



  • Apr 03, 2024 20:39 IST
    அமித் ஷா தமிழ்நாடு பயணம் ரத்து; காரணம் என்ன?

    உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழ்நாட்டு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மதுரை, தேனி, சிவகங்கை, கன்னியாகுமரியில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Apr 03, 2024 19:48 IST
    வயநாட்டில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் ராகுல் காந்தி; காங்கிரஸ்

    “இந்தியா கூட்டணி இல்லாத போதும் வயநாட்டில் ராகுல் காந்தி 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்” என கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறினார்.



  • Apr 03, 2024 19:22 IST
    தெலங்கானா தீ விபத்து; 5 பேர் காயம்


    தெலங்கானா மாநிலம் சங்கரெட்டியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.



  • Apr 03, 2024 18:43 IST
    எடப்பாடி பழனிசாமி யாரையோ பலிகடா ஆக்குகிறார் : டி.டி.வி தினகரன்

    மதுரையில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து  தேர்தல் பரப்புரை செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “மக்களவை தேர்தலில் ஓ.பி.எஸ். தைரியமாக போட்டியிடுகிறார். எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருக்கும் மணிகளும் இந்த தேர்தலில் போட்டியிடாமல் யாரையோ பலிகடா ஆக்குகின்றனர்” என தெரிவித்துள்ளார். 



  • Apr 03, 2024 18:39 IST
    குண்டுவெடிப்பு வழக்கு : ஆஜராகாத பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர்க்கு நீதிமன்றம் கண்டனம்

    மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர்க்கு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடல்நலக்குறைவால் ஆஜராகமுடியவில்லை என அவர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு



  • Apr 03, 2024 17:58 IST
    மேற்கு வங்கத்தில் 35 தொகுதிகளில் வெல்வோம்; பா.ஜனதா

    “மேற்கு வங்க மாநிலத்தில் 35க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப் பெறும். மக்கள் நரேந்திர மோடிக்கு பரிசளிக்க முடிவு செய்துவிட்டார்கள்” என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்தார் கூறினார்.



  • Apr 03, 2024 17:18 IST
    மதுரை அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு எச்சரிக்கை

    மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் அவதூறுகளை நிறுத்திக் கொள்ளாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை எம்.பி நிதி ₹17 கோடி ஒதுக்கீடு இருந்தும் ₹5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என சரவணன் கூறியதற்கு, ₹17 கோடியில் ₹16.96 கோடி செலவு செய்து 245 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



  • Apr 03, 2024 16:55 IST
    கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

     



  • Apr 03, 2024 16:54 IST
    தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை - கருணாஸ் பேச்சு 

    “தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக பாஜக பார்க்கவில்லை” என ராமநாதபுரம் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் ஐயுஎம்எல் வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார். 



  • Apr 03, 2024 16:53 IST
    கரும்பு ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்த திண்டுக்கல் பா.ம.க வேட்பாளர்

    புஷ்பத்தூர் கிராமத்தில் உள்ள சாலையோர கடையில் கரும்பு ஜூஸ் போட்டு வாக்கு சேகரித்தார் திண்டுக்கல் பா.ம.க வேட்பாளர் திலகபாமா. 





  • Apr 03, 2024 16:51 IST
    செங்கல் செய்து வாக்கு சேகரித்த அ.தி.மு.க வேட்பாளர் கஜேந்திரன்

    செங்கல் சூளையில் செங்கல் செய்து வாக்கு சேகரித்தார் ஆரணி தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கஜேந்திரன்.

     



  • Apr 03, 2024 16:15 IST
    பா.ஜ.க-வில் இணைந்த குத்துச்சண்டை

    2008 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜயேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார்

    2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். தற்போது தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 



  • Apr 03, 2024 16:11 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Apr 03, 2024 16:07 IST
    பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த விஜயதரணி

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதரணி வாக்கு சேகரித்தார். 



  • Apr 03, 2024 15:03 IST
    மோடியின் குடும்பம் என்பது இ.டி, சி.பி.ஐ, ஐ.டி தான் - மு.க.ஸ்டாலின்

    மோடியின் குடும்பம் என்பது அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமான வரித்துறை தான். பா.ஜ.க.,வுக்கு தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேரின் வழக்குகள் மொத்தமாக முடித்து வைக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Apr 03, 2024 14:40 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மி புகார்; சிறை தரப்பு விளக்கம்

    அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக ஆம் ஆத்மி கட்சி கூறும் குற்றச்சாட்டுக்கு சிறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவரின் உடல்நிலை சீராகவே இருந்தது. சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும் 65 கிலோவாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி வீட்டில் சமைத்த உணவு தான் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படுகிறது. உடல்நிலை சார்ந்த அவசர சூழல் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க தயார்நிலையில் குழு உள்ளது என திகார் சிறை தரப்பு தெரிவித்துள்ளது. 



  • Apr 03, 2024 14:27 IST
    அமலாக்கத் துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை - கெஜ்ரிவால் தரப்பு வாதம்

    அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை நியாயமாக நடந்து கொள்ளவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வாக்குமூலங்கள், அப்ரூவரின் வாக்குமூலங்களை தவிர முக்கிய ஆதாரங்கள் எதுவுமில்லை. பண மோசடி தடுப்பு சட்டத்தின் 70-வது பிரிவு அரசியல் கட்சிக்கு பொருந்தாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதாடியுள்ளது.



  • Apr 03, 2024 14:13 IST
    சமூக நீதிக்காக தி.மு.க – அ.தி.மு.க செய்தது என்ன? – அன்புமணி கேள்வி

    சமூக நீதிக்காக தி.மு.க – அ.தி.மு.க செய்தது என்ன? சமூக நீதிக்கு ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் என்ன செய்தார்கள்? பா.ம.க இல்லை என்றால் இ.பி.எஸ் முதல்வராக தொடர வாய்ப்பு இல்லை. கூட்டணி என சொன்னதால் தான் 10.5% ஒதுக்கீடுக்கு ஒப்பு கொண்டார் இ.பி.எஸ் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்



  • Apr 03, 2024 14:05 IST
    அடையாள அரசியல் பா.ம.க.,விற்கு தெரியாது – அன்புமணி ராமதாஸ்

    அடையாள அரசியல் பாமகவிற்கு தெரியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லி முதல்வரை பல முறை சந்தித்தார் ராமதாஸ். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறார் ஸ்டாலின். அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்



  • Apr 03, 2024 13:46 IST
    ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை - தமிழிசை

    ஆளுநர் பதவியில் இருந்து விலகுமாறு யாரும் என்னை வற்புறுத்தவில்லை என மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்



  • Apr 03, 2024 13:43 IST
    பா.ஜ.க.,வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவிப்பு

    பா.ஜ.க.,வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவித்துள்ளார். கடந்தமுறை மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுமலதா தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசும்போது, பா.ஜ.க.,வில் இணைவதாக அறிவித்தார். சுயேட்சையாக போட்டியிட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்கமாட்டேன் என்றும் சுமலதா தெரிவித்துள்ளார்



  • Apr 03, 2024 13:26 IST
    அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு - பூவை ஜெகன் மூர்த்தி அறிவிப்பு

    மக்களவைத் தேர்தலில் தொகுதிகள் ஒதுக்காவிட்டாலும், 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தருவதாக புதிய பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார்



  • Apr 03, 2024 13:09 IST
    மாநிலங்களவை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட எல். முருகனுக்கு பதவி பிரமாணம்

    மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்ட மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் 



  • Apr 03, 2024 12:56 IST
    புதிய நடைமுறையால் தவறு ஏற்பட வாய்ப்பு

    புதிய நடைமுறையால் தவறு ஏற்பட வாய்ப்பு" வரும் மக்களவை தேர்தலுக்கு புதிய சரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது வாக்குப்பதிவு இயந்திரங்களில் கடந்தகால நடைமுறையை பின்பற்ற வேண்டும் - திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 



  • Apr 03, 2024 12:34 IST
    வள்ளலார் சர்வதேச மையம் - பதிலளிக்க உத்தரவு

    வடலூரில் சத்திய ஞானசபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட உள்ளன? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சத்தியஞான சபை முன் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கு பாஜக நிர்வாகி வினோத் ராகவேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 24க்கு தள்ளிவைப்பு.



  • Apr 03, 2024 12:08 IST
    தேர்தல் களம் சூடாக இருப்பது போன்று கோவையில் சூடாக உள்ளது

    "கச்சத்தீவு - பொய் சொல்லும் திமுகவினர்" தேர்தல் களம் சூடாக இருப்பது போன்று கோவையில் சூடாக உள்ளது கச்சத்தீவு விவகாரம் பாஜக கையில் எடுத்தவுடன் உண்மை தெரியவந்துள்ளது கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவினர் பொய் சொல்லி வருகிறார்கள் எங்களை கேட்காமலேயே கொடுத்து விட்டதாக மேடை போட்டு பேசினார்கள் அதிமுகவினர் ஜூன் 4ம் தேதி மக்களின் தீர்ப்பை திமுகவினர் பார்ப்பார்கள் - அண்ணாமலை



  • Apr 03, 2024 11:48 IST
    தமிழகத்தில் ஏப்.12ல் ராகுல்காந்தி பிரச்சாரம்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏப்.12ல் தமிழகத்திலுள்ள நெல்லை, கோவையில் பிரசாரம் முதலமைச்சர் ஸ்டாலினுடன் இணைந்து ராகுல்காந்தி பிரசாரம் செய்ய உள்ளார் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் ராகுல்காந்தி.



  • Apr 03, 2024 11:47 IST
    எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை -இ.பி.எஸ்

    எடப்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டை - எடப்பாடி பழனிசாமி இங்குள்ள ஒவ்வொருவரும் எம்எல்ஏ தான்... கட்சி பொதுச்செயலாளர் தான் அ.தி.மு.கவின் வெற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரையும் சாரும் - எடப்பாடி பழனிசாமி அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • Apr 03, 2024 11:29 IST
    ஓய்வு பெறும் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

    மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு. 



  • Apr 03, 2024 11:12 IST
    மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது இதை செய்ய வேண்டாம் : நீதிமன்றம் உத்தரவு

    மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது உயர் அழுத்த மோட்டார் வைத்து தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு; பாரம்பரிய முறைப்படி மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு; கள்ளழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எந்த இடத்திலும் தண்ணீர் அடிக்க கூடாது; பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு



  • Apr 03, 2024 11:00 IST
    சிஇஓ - டிஇஓ அலுவலகங்களை காலி செய்ய உத்தரவு

    தமிழகம் முழுவதும் அரசு பள்ளி வளாகங்களில் செயல்படும்  சிஇஓ, டிஇஓ அலுவலகங்களை ஏப்.10-க்குள் காலிசெய்ய கல்வித்துறை உத்தரவு

    பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதால் 151 கல்வி அலுவலகங்களை வாடகை கட்டடங்களுக்கு மாற்றவும் உத்தரவு



  • Apr 03, 2024 10:47 IST
    சென்னையில் சிபிஐ சோதனை

    வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை, அயனாவரம் உட்பட 2 இடங்களில் உள்ள வங்கி அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை

    சூளைமேடு பஜனை கோவில் 2வது தெருவில் உள்ள ஆடிட்டர் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை



  • Apr 03, 2024 10:10 IST
    ரூ.52,000 எட்டியது தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும்;

    சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் விற்பனை



  • Apr 03, 2024 10:08 IST
    தமிழகத்தில் 4 நாட்கள் பிரதமர் மோடி பிரச்சாரம்

    தமிழகத்தில் ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

    ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகன பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார்

    ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் வாகன பேரணியும், கோவையில் பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்

    ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

    ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்



  • Apr 03, 2024 09:38 IST
    வருமானவரித்துறை சோதனை- ரூ.4 கோடி பறிமுதல்

    சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி பணம் பறிமுதல்

    சென்னையில் விருகம்பாக்கம், சேலம், திருச்சி, தென்காசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் ரெய்டு

    பணப்பட்டுவாடா தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் சோதனை



  • Apr 03, 2024 09:14 IST
    நடனமாடி வாக்கு சேகரித்த நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்

     



  • Apr 03, 2024 08:51 IST
    சிறுத்தை நடமாட்டம்- பள்ளிக்கு விடுமுறை

    மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி பதிவால் மக்கள் பீதி

    யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் எனவும் போலீஸ் தகவல்

    சிறுத்தை நடமாட்டத்தால் செம்மங்கரையில் ஒரு தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை



  • Apr 03, 2024 08:10 IST
    தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

     



  • Apr 03, 2024 07:48 IST
    முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணம்

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேர் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர்

    திருச்சி சிறப்பு முகாமில் இருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் காவல்துறை வாகனம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்

    முருகன் உள்பட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்



  • Apr 03, 2024 07:44 IST
    தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமாகின.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Apr 03, 2024 07:41 IST
    வெள்ள நிவாரணம்- மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

    வெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது



  • Apr 03, 2024 07:26 IST
    லேசான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில்  சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 03, 2024 07:26 IST
    RCB அணியை வீழ்த்தியது LSG

    ஐபிஎல் - பெங்களூரு அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ

    லக்னோ அணி நிர்ணயித்த 181 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல், கடைசி ஓவரில் முடங்கியது பெங்களூரு



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment