Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
சந்திரசேகர் ராவ் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை
தெலங்கானா மாநிலம் சிர்சில்லாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், அவரது கருத்துகள் அவதூறான வகையில் அமைந்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து, 2 நாள்களுக்கு(48 மணி நேரம்) அவர் பரப்புரையில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தெலங்கானாவில் மே 13 வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
-
May 02, 2024 23:08 ISTபாலியல் புகார் குறித்து மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் விளக்கம்
தன் மீதான பாலியல் புகாருக்கு, விளக்கம் அளித்துள்ள மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் "என்னை கலங்கப்படுத்துவதன் மூலம் யாரேனும் தேர்தலில் ஆதாயம் அடைய விரும்பினால் கடவுள் அவர்களை ஆசிர்வதிப்பார்" என்றும், மேற்கு வங்கத்தில் ஊழல், வன்முறைக்கு எதிரான எனது போராட்டத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்
-
May 02, 2024 20:58 ISTபெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் தர்ணா
பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீவட்டிப்பட்டி பகுதியில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில் கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்க வலியுறுத்தினர். -
May 02, 2024 20:44 ISTசெங்குன்றம் நீர்பிடிப்ப பகுதி; சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
“செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என மிகப்பெரிய நிலப்பரப்பை அறிவித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது” என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புறநகர் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் உள்ள 13 ஆயிரத்து 720 ஹெக்டேர் நிலப்பரப்பை செங்குன்றம் ஏரி நீர்பிடிப்பு பகுதி என அறிவித்ததை எதிர்த்து வழக்கு இந்த வழக்கு தொடரப்பட்டது. -
May 02, 2024 20:43 ISTசென்னை பட்டினப்பாக்கத்தில் காரில் சென்றவர் மீது தாக்குதல்
சென்னை பட்டினப்பாக்கத்தில் மனைவியுடன் காரில் சென்ற நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் செயலால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். -
May 02, 2024 19:37 ISTபாலியல் புகார் சிக்கிய ப்ரஜ் பூஷண் சிங் போட்டியிட அனுமதி மறுப்பு
பாலியல் புகாரில் சிக்கிய ப்ரஜ் பூஷண் சிங் போட்டியிட பா.ஜ.க அனுமதி மறுத்துள்ளது. அவரது மகன் கரண் பூஷண் சிங் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
-
May 02, 2024 19:34 ISTஅவதூறு செய்தி வெளியிட்டடதாக செங்கோட்டையன் புகார்
“என்னைப்பற்றி அவதூறாகவும், உண்மையில்லாத வகையிலும் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
என்னைப்பற்றி அவதூறாகவும், உண்மையில்லாத வகையிலும் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிட்டதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
— K.A Sengottaiyan - Say No to Drugs & DMK (@KASengottaiyan) May 2, 2024
எதிர்காலத்தில் இது போன்ற ஆதாரமில்லாத செய்திகளை பத்திரிகை தர்மத்திற்கு எதிராக வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். pic.twitter.com/m7b9acz04p -
May 02, 2024 18:49 ISTரேவண்ணா முன் ஜாமின் கோரி பெங்களூரு கோர்ட்டில் மனு தாக்கல்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எஸ்.ஐ.டி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ரேவண்ணா முன்ஜாமின் கேட்டு பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
May 02, 2024 18:44 ISTமதுரையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம்: அதிக எடை காரணமாக ஏற்றப்பட்ட 92 பயணிகள் உடைமைகள்
மதுரையில் இருந்து 192 பயணிகளுடன் துபாய்க்கு இன்று புறப்பட்ட விமானம். அதிக எடை காரணமாக 92 பேரின் உடைமைகள் மட்டுமே விமானத்தில் ஏற்றப்பட்டன. 100 பேரின் உடைமைகள் நாளை, நாளை மறுதினம் கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அங்கு செல்லும் பயணிகள் உடைமைகள் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.
-
May 02, 2024 18:15 ISTடிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் தப்பி சென்ற பிரஜ்வால் ரேவண்ணா; வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரஜ்வால் ரேவண்ணா டிப்ளமேடிக் பாஸ்போர்ட் மூலம் ஜெர்மன் தப்பி சென்றுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஜெர்மன் பயணம் தொடர்பாக அரசியல் அனுமதி கோரப்படவும் இல்லை, விசா வழங்கவும் இல்லை, டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா தேவை இல்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது.
-
May 02, 2024 17:36 ISTகோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது - பாரத் பயோடெக் விளக்கம்
கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது ரத்தம் உறைதல், இதயம் பிரச்னை உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்பு முகியம் என்பதை மனதில் வைத்தே கோவாக்ஸின் தடுப்பூசி உருவாக்கப்பட்டது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சக்கத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது என்ரு பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
-
May 02, 2024 17:33 ISTகேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்.. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை - கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்.. கல்வி நிறுவனங்களுக்கு கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது. காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்தில் ஒத்திகை நடத்த வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது. வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் வேலை நேரத்தை மாற்றிக் கொள்ளவும் அறிவுரை வழங்கியுள்ளது.
-
May 02, 2024 17:31 ISTஆந்திராவில் 4 கண்டெய்னர்களில் பிடிபட்ட ரூ.2,000 கோடி; ஆவணங்கள் சரிபார்த்து விடுவிப்பு
ஆந்திராவில் 4 கண்டெய்னர்களில் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.2,000 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் விடுவித்தனர். ஐ.சி.ஐ.சி.ஐ, ஃபெடரல் உள்ளிட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில் கொச்சினில் இருந்து ஐதராபாத் சென்ற 4 கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டன. பின்னர், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டது.
-
May 02, 2024 17:28 ISTகுடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டி மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
-
May 02, 2024 17:04 ISTபாலியல் புகாரளித்த பா.ஜ.க எம்.பி. மகனுக்கு சீட் கொடுத்த பா.ஜ.க
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்த பா.ஜ.க எம்.பி. ப்ரஜ்பூஷன் சிங்க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்காமல், அவரது மகன் கரண்பூஷன் சிங், உத்தரப் பிரதேசத்தின் கைசெர்காஞ் தொகுதியில் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்துள்ளது.
-
May 02, 2024 16:58 ISTகோயில் திருவிழாவில் மோதலால் பரபரப்பு
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர்.
-
May 02, 2024 16:50 ISTவேலூரில் ஆலங்கட்டியுடன் கோடை மழை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் கோடை மழை பெய்தது. இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில், பேரணாம்பட்டு குடியாத்தம் பகுதியில் திடீரென ஆலங்கட்டி உடன் மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
May 02, 2024 16:43 ISTமெத்தபெட்டமைன் போதைப்பொருள்: சென்னை போலீசார் விசாரணை
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
May 02, 2024 16:20 ISTகள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் - 13 பேர் கைது!
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 33 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
May 02, 2024 15:52 ISTநீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
சர்வர் கோளாறால், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஆங்காங்கே சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலானவர்களுக்கு புகைப்படம், கையொப்பம் இல்லாமல் ஹால் டிக்கெட் பதிவிறக்கமாகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தவறாக விண்ணப்பம் பதிவு செய்து விட்டார்களா? என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள். சர்வர் கோளாறு - விரைந்து சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
May 02, 2024 15:51 ISTரூ. 2000 கோடி எடுத்து சென்ற 4 லாரியை மடக்கிய போலீசார் - ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ரூ. 2000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர் லாரியை போலீசார் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுக்கட்டாக கொண்டு செல்லப்பட்ட பணம், ரிசர்வ் வங்கிக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது
கேரளாவின் கொச்சியில் இருந்து ஹைதராபாத்துக்கு பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டன
-
May 02, 2024 14:54 ISTபோதைப்பொருள் விவகாரம்; முன்னாள் அமைச்சர் உறவினர் வீட்டில் சோதனை
சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரிடம் இருந்து 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர். இதனையடுத்து திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின் சோதனை நடத்தினர்
-
May 02, 2024 14:27 ISTதாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை ரகசியமாக பறிக்கிறது பா.ஜ.க அரசு; ராகுல்காந்தி
தனியார் மயமாக்கல் மூலம் அரசு வேலைகளை நீக்கி, தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை ரகசியமாக பறிக்கிறது, பா.ஜ.க அரசு. மோடியின் மாடல், நாட்டின் வளங்களை சூறையாடுகிறது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
May 02, 2024 14:12 ISTபாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் மரணம்
உத்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்ஷாஹர் பகுதியில், பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்கள் கங்கை நீரில் மிதந்த இளைஞரின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டனர். இது தொடர்பாக போலீசார், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் கங்கை நீரில் உடலை வைப்பதால் விஷம் நீங்கும் என்று மூடநம்பிக்கையால், இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
May 02, 2024 13:48 ISTமே 6 வரை வெப்ப அலை வீச வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 4 முதல் 6 ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
May 02, 2024 13:29 ISTடீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்க கோரிய மனு; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி ஐகோர்ட் மறுப்பு
தேர்தல் பரப்புரையில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
-
May 02, 2024 13:00 ISTதமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்
ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்; கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல். மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள்: ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, திருப்பூர், கோவை
-
May 02, 2024 12:34 ISTகல்குவாரி வெடி விபத்து - 4 பேர் மீது வழக்குப்பதிவு
காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் 4 பேரின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அஜாக்கிரதையாக இருந்த கல்குவாரி வெடிமருந்து சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு எலெக்ட்ரிக் டெட்டனைட்டர் வெடி மருந்து வேனையும், நைட்ரேட் மிக்சர் வெடி மருந்து இருந்த வேனையும் அருகருகே வைத்ததால் விபத்து மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும் கவனக்குறைவாக செயல்பட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை.
-
May 02, 2024 12:28 ISTகல்குவாரிகளில் வெடிமருந்து : ஆட்சியர் உத்தரவு
காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்ததன் எதிரொலி மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி மருந்துகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு தீயணைப்பு, காவல், கனிம வளம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் ஆய்வு செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு.
-
May 02, 2024 12:27 ISTஇளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் உடல்நல குறைவால் சென்னையில் காலாமானார் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 6.30 மணிக்கு உயிர் பிரிந்தது.
-
May 02, 2024 11:59 ISTமதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்: டாஸ்மாக் பதில்
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் 306.32 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது - டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
-
May 02, 2024 11:33 ISTமழை வேண்டியும் சட்டையை திருப்பி அணிந்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
சேலம்: கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபடவும், மழை வேண்டியும் சட்டையை திருப்பி அணிந்து சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
-
May 02, 2024 11:31 ISTமானிய கோரிக்கை மீதான விவாதம்: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 2வது வாரம் கூட உள்ளது
மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 2வது வாரம் கூட உள்ளதாக தகவல்.
-
May 02, 2024 11:30 ISTஅரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
-
May 02, 2024 11:28 ISTநீட் ஹால் டிக்கெட் வெளியீடு
மே 5-ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியீடு; நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
-
May 02, 2024 11:14 ISTமணீஷ் சிசோடியா ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
-
May 02, 2024 11:05 ISTசென்னையில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .வடக்கு கூடுதல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ராகுல், காதர் மைதீன் ஆகிய இருவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 02, 2024 10:12 ISTரூ. 4 கோடி பறிமுதல்- சிபிசிஐடி போலீசார் சம்மன்
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் முருகன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிடிபட்ட ஓட்டல் ஊழியர்களிடம் நேற்று முன்தினம் 10 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
May 02, 2024 10:08 ISTதங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்வு
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
தங்கம் ஒரு கிராம் ரூ.6,715க்கும், ஒரு சவரன் ரூ.53,720க்கும் விற்பனையாகிறது.
-
May 02, 2024 09:57 ISTவெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம்
ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.11.50 லட்சம், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது.
-
May 02, 2024 09:07 ISTநீலகிரி உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்பட 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
-
May 02, 2024 09:01 ISTஐபிஎல்- ஐதராபாத், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
-
May 02, 2024 08:18 ISTநிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர்
நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன.
அதில் நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
-
May 02, 2024 08:18 ISTநிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர்
நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன.
அதில் நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
-
May 02, 2024 08:06 ISTநீட் தேர்வு ஹால் டிக்கெட் ரிலீஸ்: 5-ம் தேதி தேர்வு
இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டது.
-
May 02, 2024 08:06 ISTகாமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா
மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் குமார், உடல்நலம், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா தொடர்பான கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். தனது பதவிக்காலம் முடிவதற்கு 11 மாதங்கள் முன்பாகவே ராஜினாமா செய்துள்ளார்.
-
May 02, 2024 08:06 ISTபிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்
தமிழ் திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் அறிமுகமான உமா ரமணன், நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார்.
-
May 02, 2024 08:05 ISTதமிழ்நாட்டில் நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111.2 டிகிரி பாரான்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
தமிழ்நாட்டில் நேற்று 18 இடங்களில் சதமடித்த வெயில்..
கரூர் பரமத்தி - 111°F
வேலூர் - 111°F
ஈரோடு - 110°F
திருச்சி - 110°F
திருத்தணி - 109°F
தருமபுரி - 107°F
சேலம் - 107°F
மதுரை நகரம் - 107°F
மதுரை விமான நிலையம் - 107°F
திருப்பத்தூர் - 107°F
நாமக்கல் - 106°F
தஞ்சாவூர் - 106°F
மீனம்பாக்கம் - 105°F
கடலூர் - 104°F
பாளையங்கோட்டை - 104°F
கோவை - 104°F
நுங்கம்பாக்கம் - 102°F
நாகப்பட்டினம் - 102°F
-
May 02, 2024 08:05 ISTபஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
சென்னை இதுவரை பத்து போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஐந்து போட்டியில் வெற்றியும், ஐந்து போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 10 போட்டியில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.