Advertisment

Tamil News Updates: தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில்- அதிகபட்சமாக ஈரோட்டில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
heatwave survival guide

IE updates

Tamil News Updates : பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 27, 2024 07:06 IST
    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள்!

    ஈரோடு - 108°F

    திருப்பத்தூர் - 107°F

    சேலம் - 106°F

    தருமபுரி - 106°F

    கரூ‌ர் பரமத்தி - 106°F

    திருத்தணி - 105°F

    வேலூர் - 105°F

    திருச்சி - 104°F

    நாமக்கல் - 104°F

    கோவை - 103°F

    மதுரை விமான நிலையம் - 103°F

    மதுரை நகரம் - 102°F

    🥵தஞ்சாவூர் - 102°F

    🥵பாளையங்கோட்டை - 100°F



  • Apr 26, 2024 23:08 IST
    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனைக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரபடகு போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீராங்கனை நேத்ரா குமணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின, அவர் வெற்றிவாகை சூட எனது அன்பும் வாழ்த்தும் என்று கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்திய பாய்மரபடக்கு போட்டி வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ள இவர் தொடர்ந்து 2 முறை தகுதிபெறும் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.



  • Apr 26, 2024 21:49 IST
    சென்னையில் பாகிஸ்தான் பெண்ணுக்கு இதய அறுவை சிகிச்சை


    சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பாகிஸ்தான் பெண்ணுக்கு வெற்றிகரமாக இருதய அறுவைச் சிகிச்சை நடந்தது.



  • Apr 26, 2024 21:13 IST
    நாடாளுமன்றத்தில் குதித்த கமாண்டோக்கள்..!

    அவசர நிலை காலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஒத்திகை பார்ப்பதற்காக ஹெலிகாப்டரில் இருந்து கமாண்டோக்கள் நாடாளுமன்றத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Apr 26, 2024 20:58 IST
    நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு

    நாகர்கோவில்-தாம்பரம்-நாகர்கோவில்-சென்னை இருவழித்தடத்திலும், கொச்சுவேலி- சென்னை சென்ட்ரல் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    இந்த ரயில் சேவை மே2ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.



  • Apr 26, 2024 20:45 IST
    சென்னை விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

    கொல்கத்தா விமான நிலையத்திற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுவித்ததாக செய்தி வெளியாகி உள்ளது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • Apr 26, 2024 20:25 IST
    சென்னை எம்.டி.சி. பேருந்து புகார் எண்கள் அறிவிப்பு

    சென்னை மாநகர பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.



  • Apr 26, 2024 20:07 IST
    கேரளத்தில் மாற்றம் தேவை; கீர்த்தி சுரேஷ் தாய் பேட்டி

    கேரளத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு மாற்றம் தேவை என நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா கூறியுள்ளார்.
    தொடர்ந்து பேசிய அவர், “கேரளத்தில் ஒரு மாற்றம் வந்தால் நன்றாக இருக்கும். மாநிலத்தில் தாமரை மலரணும்; இதுதான் என் ஆசை. 10  தடவை கீழே விழுந்தா 11வது தடவை எழுந்திருக்க மாட்டார்களா?”என்றார்.



  • Apr 26, 2024 18:56 IST
    தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

    பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Apr 26, 2024 18:37 IST
    கேரளத்தில் 5 மணி நேர நிலவரம்: 64 சதவீத வாக்குப்பதிவு

    கேரளாவில் 5 மணி நிலவரப்படி 64% வாக்குப்பதிவு ஆகி உள்ளது. காசர்கோடு, திரிச்சூர் மற்றும் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மக்களவை தொகுதியில் தலா 66% வாக்குகள் பதிவாகியுள்ளன.



  • Apr 26, 2024 18:01 IST
    ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு; சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்


    தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ₹4 கோடி ரொக்கம் சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    இந்தப் பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் குடும்பத்தாருக்கு தொடர்புடையது என சந்தேகத்தின் அடிப்படையிலான வழக்கு விசாரணையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.



  • Apr 26, 2024 17:46 IST
    தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகரிக்க வாய்ப்பு; பிரதீப் ஜான்

     

    தமிழ்நாட்டில் வெப்ப அலை உச்சத்தை அடைய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதாவது, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார்.



  • Apr 26, 2024 16:55 IST
    அதிகரித்து வரும் வெப்பம் - தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல் 

    தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 

    "காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும். பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். 

    தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. 

     



  • Apr 26, 2024 16:18 IST
    மக்களவை 2ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரையிலான நிலவரம்

    மக்களவை தேர்தல் 2 ஆம் கட்ட  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 3 மணி வரையிலான நிலவரம் குறித்து பார்க்கலாம். 

    அசாமில் 60.32%, பீகாரில் 44.24%, சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு காஷ்மீர் - 57.76%, கர்நாடகா - 50.93%, கேரளா - 51.64%, மத்தியப்பிரதேசம் - 46.50%, மகாராஷ்டிரா - 43.01%, மணிப்பூர் - 68.48%, ராஜஸ்தான் - 50.27%, திரிபுரா - 68.92%, உ.பி. 44.13%, மேற்கு வங்கம் - 60.60% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 66.52% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 



  • Apr 26, 2024 15:24 IST
    வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள்: தமிழக தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை

    வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். 

     



  • Apr 26, 2024 15:22 IST
    சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை முதல் அடுத்தாண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.



  • Apr 26, 2024 15:22 IST
    பெரம்பலூர் அரிசி ஆலை உரிமையாளர் வழக்கில் அறிக்கை அளிக்க உத்தரவு

    பெரம்பலூர் அருகே அரிசி ஆலை உரிமையாளரை அவரது மகன் கொடூரமாக தாக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதன் எதிரொலியாக, வழக்கை விசாரித்த எஸ்.ஐ. பழனிசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை நடக்கப்படும் என்றும், இன்ஸ்பெக்டர் மற்றும் ஏ.எஸ்.பி. இவ்வழக்கு குறித்து விரிவான விசாரணை அறிக்கை அளிக்கவும் மாவட்ட எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார். மகனால் கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தைவேலு, கடந்த வாரம் உயிரிழந்துள்ளார்



  • Apr 26, 2024 15:20 IST
    குப்பைத் தொட்டிக்குள் கிடந்த ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டி!

    சென்னை விமான நிலைய கழிவறையில் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த ரூ. 90 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகளை தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    துபாயில் இருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் இந்த தங்கம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்றும், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தல் ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



  • Apr 26, 2024 15:20 IST
    குப்பைத் தொட்டிக்குள் கிடந்த ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டி!

    சென்னை விமான நிலைய கழிவறையில் குப்பைத் தொட்டிக்குள் கிடந்த ரூ. 90 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகளை தூய்மை பணியாளர்கள் கண்டெடுத்து சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    துபாயில் இருந்து இன்று அதிகாலை வந்த விமானத்தில் இந்த தங்கம் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்றும், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து கடத்தல் ஆசாமியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



  • Apr 26, 2024 15:19 IST
    மக்களவை தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

    கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், பகல் 2.30 மணி நிலவரப்படி 46.02% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 26, 2024 14:12 IST
    2ம் கட்ட வாக்குப்பதிவு - 1 மணி நிலவரம்

    மக்களவை தேர்தல் 2 ஆம் கட்ட  வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது 1 மணி வரையிலான நிலவரம் குறித்து பார்க்கலாம். 

    அசாமில் 46.31%, பீகாரில் 33.80%, சத்தீஸ்கரில் 53.09%, ஜம்மு காஷ்மீர் - 42.88%, கர்நாடகா - 38.23%, கேரளா - 39.26%, மத்தியப்பிரதேசம் - 38.96%, மகாராஷ்டிரா - 31.77%, மணிப்பூர் - 54.26%, ராஜஸ்தான் - 40.39%, திரிபுரா - 54.47%, உ.பி. 35.73%, மேற்கு வங்கம் - 47.29% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது 

    இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 51.50% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது 

     



  • Apr 26, 2024 13:48 IST
    பிற்பகல் 1 மணி நிலவரம்- 2ம் கட்ட வாக்குப்பதிவு

    அசாம் - 46.31%

    பீகார் - 33.80%

    சத்தீஸ்கர் - 53.09%

     ஜம்மு & காஷ்மீர் - 42.88%

    கர்நாடகா - 38.23%

    கேரளா - 39.26%           

    மத்தியப் பிரதேசம் - 38.96%

    மகாராஷ்டிரா - 31.77%

    மணிப்பூர் - 54.26%

    ராஜஸ்தான் - 40.39%

    திரிபுரா - 54.47%

    உத்தரப் பிரதேசம் - 35.73%

    மேற்கு வங்கம் - 47.29%



  • Apr 26, 2024 13:38 IST
    அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை

    வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும். 

    அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கணிப்பு

    தமிழ்நாட்டின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • Apr 26, 2024 13:06 IST
    ராமதாஸ் குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை: கந்தர்வக் கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வியடைந்துள்ளது

    - ராமதாஸ் குற்றச்சாட்டு



  • Apr 26, 2024 12:59 IST
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே சென்றது

    5 ஆண்டுகளுக்கு பின் மேட்டூர் அணை நீர்மட்டம், 55 அடிக்கும் கீழே சென்றது.



  • Apr 26, 2024 12:52 IST
    சிவ்தாஸ் மீனா ஆலோசனை

    கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் இரவு நேர மின் தேவை 19,000 மெகாவாட்டாகவும், சென்னையில் மின் தேவை சராசரியாக 4,000 மெகாவாட்டாக,தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 19,308 மெகாவாட்டாஉள்ளது.  இரவு 10 மணிக்கு மேல், அதிகளவு மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை - மின்வாரியம்



  • Apr 26, 2024 12:49 IST
    விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.85 லட்சம் தங்கம்

    சென்னை விமான நிலைய கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    1.25 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கழிவறையில் போட்டுச் சென்றது யார் என விசாரணை  நடத்தி வருகின்றனர்.



  • Apr 26, 2024 12:14 IST
    ஐபிஎல் டிக்கெட் வழக்கு- பிசிசிஐக்கு உத்தரவு

    ஐ.பி.எல். போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கில், புகார் மனுவை பரிசீலித்து முடிவெடுக்க பிசிசிஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Apr 26, 2024 11:45 IST
    காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்

    அசாம் - 27.43%

    பீகார் - 21.68%

    சத்தீஸ்கர் - 35.47%                                                                   

    ஜம்மு & காஷ்மீர் - 26.61%

    கர்நாடகா - 22.34%

    கேரளா - 25.61%

    மத்தியப் பிரதேசம் - 28.15%

    மகாராஷ்டிரா - 18.83%

    மணிப்பூர் - 33.22%

    ராஜஸ்தான் - 26.84%

    திரிபுரா - 36.42

    உத்தரப் பிரதேசம் - 24.31%

    மேற்கு வங்கம் - 31.25%



  • Apr 26, 2024 11:45 IST
    அதிமுக சார்பில் நீர்,மோர் பந்தல் திறப்பு

    சேலம் சூரமங்கலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக நீர், மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.



  • Apr 26, 2024 11:32 IST
    மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க கோரி மனு

    பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஏப். 19) ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்



  • Apr 26, 2024 11:15 IST
    நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில், கல்லூரி முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில், தீர்ப்பு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்த நிலையில், 29ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி

    குற்றம் சாட்டப்பட்ட மூவரில் நிர்மலா தேவி தவிர, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் பேராசிரியர் முருகன் இருவரும் ஆஜராகினர்.



  • Apr 26, 2024 11:08 IST
    வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

    தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டுகளை 100 சதவிகிதம் சரிபார்க்கக் கோரிய வழக்கு தள்ளுபடி விவிபேடுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். 



  • Apr 26, 2024 10:46 IST
    திடீர் பள்ளம்: திருச்சி - ஸ்ரீரங்கம் போக்குவரத்து பாதிப்பு

    திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாலையில் மீண்டும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு - போக்குவரத்து முற்றிலும் நிறுத்தம் திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலை ரயில்வே மேம்பாலத்திற்கு முன்பாக திடீர் பள்ளம் பாதாள சாக்கடையின் குழாய் வெடித்து சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் இயக்கம் கடந்த 10ஆம் தேதி இதே பகுதியில் பாதாள சாக்கடையில் ஓட்டை விழுந்து, தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.



  • Apr 26, 2024 10:34 IST
    22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு

    சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ. 6,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Apr 26, 2024 10:21 IST
    9 மணி நிலவரம்

    காலை முதல் நடைபெற்று வரும்  வாக்குப்பதிவில், 9 மணி நிலவரப்படி மகாராஷ்ட்ராவில் 7.45% வாக்குப்பதிவாகி உள்ளது. திரிபுராவில் அதிகபட்சமாக 16.65% வாக்குப்பதிவாகி உள்ளது.  



  • Apr 26, 2024 09:59 IST
    மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணை

    மணல் கொள்ளை தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணிநேரம் நடைபெற்ற விசாரணை "குவாரிகளில் மணல் எடுப்பது தொடர்பாக கனிம வளம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தாசில்தார் உள்ளிட்ட பல அதிகாரிகளை கடந்த பின்பே தங்களிடம் வருவதாக கூறிய ஆட்சியர்கள்" "ஆட்சியர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நீர்வளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டம்" 5 மாவட்ட ஆட்சியர்களிடமும் ரூ.4,000 கோடிக்கான மணல் முறைகேடு குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்து கையெழுத்தை பெற்ற அமலாக்கத்துறை.



  • Apr 26, 2024 08:38 IST
    பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபி வாக்களித்தார்

     திருச்சூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சுரேஷ் கோபி தனது வாக்கினை பதிவு செய்தார்.



  • Apr 26, 2024 08:23 IST
    வாக்கு செலுத்திய கேரள முதல்வர்

    கேரளா முதல்வர் பினராயி விஜயன்,  கன்னூரில்  உள்ள 161 வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த வந்தார்.



  • Apr 26, 2024 08:18 IST
    உறவினருடன் வாக்கு செலுத்த வந்த நிர்மலா சீதாராமன்

    நிர்மலா சிதாராமன், அவரது உறவினருடன் பெங்களூரு வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.  



  • Apr 26, 2024 08:05 IST
    வாக்கை செலுத்தினார் நடிகர் பிரகாஷ் ராஜ்

    கர்நாடகா : பெங்களூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார் நடிகர் பிரகாஷ் ராஜ்.



  • Apr 26, 2024 07:41 IST
    VVPAT எந்திரத்தில் பதிவாகும் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு : இன்று தீர்ப்பு

    VVPAT எந்திரத்தில் பதிவாகும் 100% ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். 



  • Apr 26, 2024 07:40 IST
    2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு

    2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைப்பு. இன்றைய தேர்தலில் வாக்களிக்க 15.88 கோடி பேர் தகுதி. பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு. 



  • Apr 26, 2024 07:39 IST
    மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

    மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்க உள்ளது.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment