Advertisment

Tamil News updates: வங்கக்கடலில் உருவானது 'ரீமால்' புயல்

Tamil Nadu News Update Today- 25 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Remal Cyclone Depression Forming Over Bay of Bengal Brings Rainfall In West Bengal orecast updates in tamil

Tamil News live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பசுமைத் தீப்பாயம் உத்தரவு

உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த கேரளா அரசிக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

  • May 25, 2024 22:31 IST
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் நன்றி

    தமிழ்நாட்டில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்லும் பயணிகளுக்கு ₹10 கோடி மானியத் தொகை ஒதுக்கி இஸ்லாமியர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வந்தோருக்கெல்லாம் வாரி வழங்கும் முதலமைச்சருக்கு மனம் நிறைந்த நன்றி. தந்தை வழியில் தமிழ்நாடு முதலமைச்சரும் பயணிக்கிறார் என்பதை நன்றி உணர்வோடு நினைத்துப் பார்க்கிறோம் -இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர்



  • May 25, 2024 22:14 IST
    "என்றும் மக்களின் குரலாக இருப்பேன்" : நடிகர் பிரகாஷ் ராஜ்

    விசிக விருதுகள் வழங்கும் விழாவில் அம்பேத்கர் சுடர் விருது பெற்ற பின் நடிகர் பிரகாஷ் ராஜ் "என்றும் மக்களின் குரலாக இருப்பேன்" என பேச்சு.



  • May 25, 2024 22:12 IST
    கூகுள் மேப்பை நம்பி காரை குளத்தில் விட்ட சுற்றுலா பயணிகள்

    கேரள மாநிலம் கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் 4 பேர், கூகுள் மேப்பில் வழி பார்த்துக்கொண்டே சென்று, காரை குளத்திற்குள் விட்டனர். இதைக்கண்டு உடனடியாக பதறிப்போய் ஓடிவந்த அப்பகுதி மக்கள் காரில் இருந்த 4 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்திற்குள் மூழ்கிய காரையும் மீட்டனர்.



  • May 25, 2024 20:49 IST
    வங்கக்கடலில் உருவானது 'ரீமால்' புயல்

    வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது நாளை காலை தீவிர புயலாக வலுவடைகிறது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • May 25, 2024 19:53 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை,  ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்கள் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • May 25, 2024 18:39 IST
    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு அப்டேட் கொடுத்த தேர்தல் ஆணையம்

    தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பாக விமர்சனங்கள் எழுத்ததை தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது



  • May 25, 2024 18:37 IST
    சென்னை மெரினாவில் கோப்பையுடன் கேப்டன்கள்!

    சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகள் மோதல்.



  • May 25, 2024 18:36 IST
    கார்த்தி நடிக்கும் படத்தின் புதிய அப்டேட்

    நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘வா வாத்தியார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது கார்த்தியின் பிறந்தநாளை ஒட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது பட நிறுவனம்!



  • May 25, 2024 17:53 IST
    குட்கா தடை நீட்டிப்பு

    தமிழகத்தில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகத்திற்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு



  • May 25, 2024 17:49 IST
    ஆரணி அருகே திடீரென தரையிறங்கிய 2 ஹெலிகாப்டர்கள் : பொதுமக்கள் அச்சம்

    ஆரணி அருகே இரும்புலி கொள்ளை மேடு மலை கிராமம் அருகே திடீரென 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய நிலையில், ஒரு ஹெலிகாப்டரில் இருந்து, மற்றொரு ஹெலிகாப்டருக்கு ஆட்கள் மாறியதால் பரபரப்பை ஏற்பட்ட நிலையில், ஹெலிகாப்டரில் வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



  • May 25, 2024 17:18 IST
    தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு சதவீதம் வெளியீடு

    தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் மொத்தமுள்ள வாக்குகள், பதிவான வாக்குகள் மற்றும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதுவரை நடந்து முடிந்துள்ள 5 கட்ட வாக்குப்பதிவிலும், தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டு வந்தது. வாக்குப்பதிவு விவரங்களை முழுமையாக வெளியிடாதது தொடர்பான விமர்சனங்களை அடுத்து, வாக்குப்பதிவு முடிந்துள்ள தொகுதிகளுக்கு தற்போது முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது



  • May 25, 2024 16:52 IST
    3 மணி நிலவரப்படி 49.20% வாக்குகள் பதிவு

    மக்களவைத் தேர்தலின் 6 ஆம் கட்டத்தில் 3 மணி நிலவரப்படி 49.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகார் - 45.21%, டெல்லி - 44.58%, ஹரியானா - 46.26%, ஜம்மு காஷ்மீர் - 44.41%, ஜார்க்கண்ட்- 54.34%, ஒடிசா - 48.44%, உ.பி. - 43.95%, மேற்கு வங்கம் - 70.19%



  • May 25, 2024 16:09 IST
    நாங்குநேரி காவலர் – பேருந்து நடந்துநர் விவகாரம்; சமாதானமாகி கட்டிப்பிடித்து, டீ குடிக்கும் வீடியோ வெளியீடு

    முடிவுக்கு வந்தது நாங்குநேரி காவலர் - பேருந்து நடந்துநர் விவகாரம். இருவரும் சமாதானமாக பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இனி இப்படியெல்லாம் வேண்டாம் என கைகுலுக்கி, கட்டிப்பிடித்து சமாதானம் செய்து கொண்டு நடத்துநரும், காவலரும் டீ குடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது



  • May 25, 2024 15:35 IST
    குட்கா, பான் மசாலா, புகையிலைப் பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

    தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனை, விநியோகம், பதுக்கல் ஆகியவற்றுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை 2025 ஆம் ஆண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது



  • May 25, 2024 15:12 IST
    மகள் திருமணம்; ஸ்டாலினிடம் அழைப்பிதழை வழங்கிய அர்ஜூன்

    நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஆகியோரின் திருமண அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்கள்



  • May 25, 2024 15:01 IST
    ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு

    ஏற்காடு மலர் கண்காட்சியை மேலும் 5 நாட்கள் நீட்டிப்பு செய்து சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது



  • May 25, 2024 14:44 IST
    நடிகர் கார்த்திக், நடிகர் அரவிந்த்சாமி இணைந்து நடிக்கும் மெய்யழகன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

    நடிகர் சூர்யா ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2 ஜி ப்ரோடுக்ஷன் கார்த்திக் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கிறது. நடிகர் கார்த்திக், நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு மெய்யழகன் என பெயரிடப்பட்டுக்கும் நிலையில், இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.



  • May 25, 2024 14:29 IST
     3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    சென்னை வானிலை ஆய்வு மையம் 

    வரும் 31-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்



  • May 25, 2024 14:11 IST
    போதை ஊசி செலுத்திக் கொண்ட சிறுவன் பலி

    சென்னை: போதை ஊசி செலுத்திக் கொண்ட சிறுவன் உயிரிழப்பு 

    சென்னை பிராட்வே பகுதியில் போதை ஊசி செலுத்திக் கொண்ட 17 வயது சிறுவன் பலி. நண்பருடன் போதை ஊசி செலுத்தி பின் மயங்கி விழுந்து பலி எஸ்பிளனேடு போலீஸ் விசாரணை 



  • May 25, 2024 13:53 IST
    அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்.

    அனைவருக்குமான தலைவரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை, ஒற்றை மதவாத தலைவர் போல் சித்தரித்ததாக குற்றச்சாட்டு.

    தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறார் - ஜெயக்குமார் "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின் அடிப்படையில் ஆட்சி புரிந்தவர் ஜெயலலிதா"

    "அனைத்து மத மக்களை பாதுகாத்து, அவர்களின் நம்பிக்கைகளை மதித்து போற்றுவதில் சமரசமின்றி உறுதியாக நின்றவர் ஜெயலலிதா" - அதிமுக ஜெயக்குமார்



  • May 25, 2024 13:50 IST
    ஜெயக்குமார் மரண வழக்கு: 3வது நாளாக சி.பி.சி.ஐ.டி விசாரணை

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு-  3வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    ஜெயக்குமாரின் மனைவி, 2வது மகன் சி.பி.சி.ஐ.டி. காவல் நிலையத்தில் ஆஜர். சம்பவம் நடைபெற்ற நாளில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரிக்க திட்டம் 



  • May 25, 2024 13:44 IST
    போலீசார் கைது - பொதுமக்கள் சாலை மறியல்

    புதுக்கோட்டையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார். உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல். 

    பொதுமக்களின் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு. போலீசார் அழைத்து சென்ற நபர் தான் கோயில் கும்பாபிஷேகத்தை முன் நின்று நடத்துகிறார் - மக்கள் 



  • May 25, 2024 13:31 IST
    ராஞ்சியில் தோனி வாக்குப் பதிவு

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜனநாயக கடமை ஆற்றினார், தோனி.

    ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று 6ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 



  • May 25, 2024 13:30 IST
    தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

    தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கைது. சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்.

    பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹ்ரிர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.

    வாட்ஸ் ஆப்பில் சீக்ரெட் கோடுகள் அனுப்பி ரகசிய கூட்டங்கள் நடத்தியதாக தகவல். ரகசிய கூட்டங்கள் மூலம் ஆதரவாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. ஏற்கனவே ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேர் கைது



  • May 25, 2024 13:26 IST
    கோவை சிறார் பலி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

    கோவை ராணுவ குடியிருப்புப் பூங்காவில் மின்சாரம் தாக்கி 2 சிறார் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர்  மீது வழக்குப்பதிவு. பூங்கா ஒப்பந்த பணிகளை மேற்கெண்ட முருகன், சீனிவாசன், எலக்ட்ரீசியன் சிவா மீது வழக்கு. சட்டப்பிரிவு 303 (ஏ)-ன் கீழ்  வழக்குப்பதிவு



  • May 25, 2024 13:17 IST
    திற்பரப்பு அருவியில் குளிக்க தொடரும் தடை

    கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கி வரும் கனமழை. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறப்பு.

    குழித்துறை சப்பாத்து தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் நீர். திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். அருவியில் வெள்ளப்பெருக்கு - 7வது நாளாக தொடரும் தடை 



  • May 25, 2024 13:15 IST
    ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு

    மே 27, 28 ஆகிய 2 நாட்கள் ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் - ஆளுநர் மாளிகை

    ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது

    மாநாட்டில் கல்வியாளர்கள், தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பல்கலைக்கழக மானிய குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்



  • May 25, 2024 12:52 IST
    இளம்பெண் கடத்தல் விவகாரம்: தீவிர வாகன சோதனை

    சென்னை வேளச்சேரியில் 20 வயது இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம். வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் வைத்து செவிலியரை காரில் கடத்திய தாய்மாமன். திண்டிவனம் அருகே ஒலக்கூர் சுங்கச்சாவடியில் வைத்து காரை மடக்கி பிடித்த போலீசார். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்



  • May 25, 2024 12:38 IST
    காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனை

    காப்பீட்டு தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றன. 

    காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து. 

    மாரடைப்பால் உயிரிழந்தவரின் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த தனியார் வங்கியின் உத்தரவு ரத்து. 2021, மே 10ல் மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததை அடுத்து, காப்பீட்டு தொகை வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.

    4 வாரங்களில் காப்பீட்டு தொகையை மனுதாரருக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு



  • May 25, 2024 12:37 IST
    ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு. பொருட்கள் கையிருப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து அதிரடியாக சோதனை.

    ரேஷன் கடைகள் குறித்த நேரத்துக்கு திறக்கப்பட்டு செயல்படுகிறதா? எனவும் அதிகாரிகள் ஆய்வு. ரேஷன் கடைகளில் என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்து ஊழியர்களிடம் விசாரணை.

    பல்வேறு இடங்களில் பாமாயில், பருப்பு தட்டுப்பாடு என புகார்கள் எழுந்துள்ள நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை 



  • May 25, 2024 12:07 IST
    போக்குவரத்து, உள்துறை செயலர் ஆலோசனை

    தமிழக முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை

    போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ஆலோசனை, இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தகவல்

    நான்குநேரியில் ஆறுமுகபாண்டியன் என்ற காவலர் சீருடையில் இருந்தபடி டிக்கெட் எடுக்க மறுத்ததால் பிரச்சினை

    வாரண்ட் இருந்தால் மட்டுமே காவலருக்கு இலவச பயணம் என விளக்கம் அளிக்கப்பட்டது

    அரசு பேருந்துகளுக்கு தமிழக போலீசார் அபராதம் விதிக்கத் தொடங்கியதால் அதிகரித்த சர்ச்சை



  • May 25, 2024 11:52 IST
    ஜனநாயக கடமை ஆற்றிய தலைவர்கள்

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன் பகுதியில் வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார் முதல்வர் கெஜ்ரிவால்

    கெஜ்ரிவால் வாக்களித்த தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் போட்டி. நிர்மான் விகார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்., மூத்த தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி வாக்களித்தனர்



  • May 25, 2024 11:50 IST
    தி.மு.க நிர்வாகி மகள் மரணம்: ஸ்டாலின் அஞ்சலி

    தி.மு.க. மகளிர் அணி தலைவி விஜயா தாயன்பனின் மகள் தேவிகா ஸ்ரீதரன் காலமானார் தேனாம்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி அமெரிக்காவில் வசித்து வந்த தேவிகா ஸ்ரீதரன், கடந்த 17ஆம் தேதி மாரடைப்பால் மரணம் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரும் தேவிகா ஸ்ரீதரன் உடலுக்கு அஞ்சலி



  • May 25, 2024 11:36 IST
    குமரி, நெல்லை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

     - வானிலை ஆய்வு மையம் தகவல் 



  • May 25, 2024 11:14 IST
    மதுரையில் 9 வயது சிறுவனை குத்திக் கொன்ற 13 வயது சிறுவன்

    மதுரை மாவட்டம் மேலூர் கத்தப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் உருது பயிற்சி பள்ளியில் பயின்று வந்த பீகாரை சேர்ந்த 9 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் 9 வயது சிறுவனை கொலை செய்து கழிவுநீர் தொட்டியில் மறைத்து வைத்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.



  • May 25, 2024 11:06 IST
    துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

    வாணியசத்திரம் துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 16,000 கிலோ வாட் ட்ரஸ்ன்பார்மர் தீயில் எரிந்து சேதமாகின.



  • May 25, 2024 11:04 IST
    தமிழ்நாட்டில் தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் ஊழல்

    தமிழ்நாட்டில் தரம் குறைந்த நிலக்கரியை விற்று அதானி நிறுவனம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த விவகாரத்தில், 21 சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



  • May 25, 2024 10:55 IST
    தங்கம் விலை குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.95 குறைந்து  ரூ.6,555-க்கும், சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.52,440-க்கும் விற்பனையாகிறது.



  • May 25, 2024 10:55 IST
    காலை 9 மணி நிலவரப்படி 10.82% வாக்குகள் பதிவு

    பீகார் - 9.66 %

    டெல்லி - 8.94%

    ஹரியானா - 8.31%

    ஜம்மு காஷ்மீர் - 8.89%

    ஜார்கண்ட் - 8.89%

    ஒடிசா - 7.43 %

     உ.பி. - 12.33%

    மேற்கு வங்கம் - 16.54%

    தேர்தல் ஆணையம்



  • May 25, 2024 10:30 IST
    அனைத்து ரேஷன் கடைகளும் நாளை இயங்கும்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் நாளை (மே 26) ) இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா உத்தரவு; 

    இதற்கு ஈடான விடுமுறை நாள், பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



  • May 25, 2024 10:16 IST
    சி.பி. ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு

    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (25.04.2024) நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காலை 7 மணி அளவில் வாக்களித்து என்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்.

    தேர்தலில் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நடைமுறையில் நம்முடைய பங்களிப்பை உறுதி செய்வதாக இருக்கும். அதில் பங்கெடுக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம் சார்ந்த, சிறந்த நிர்வாகத்திற்கான அடிப்படை குடிமக்கள் தேர்தலில் வாக்களிப்பதில் இருந்தே தொடங்குகிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

    -சி.பி. ராதாகிருஷ்ணன்



  • May 25, 2024 10:00 IST
    சோனியா காந்தி, ராகுல் வாக்குப்பதிவு

    புதுடெல்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நிர்மான் பவன் வாக்குப்பதிவு மையத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி தங்கள் ஜனநாயக கடமையாற்றினர்.



  • May 25, 2024 09:57 IST
    மெகபூபா முப்தி தரையில் அமர்ந்து போராட்டம்

    தனது தேர்தல் முகவர்களை காவல்துறையினர் அதிக அளவில் கைது செய்து வைத்திருப்பதாக கூறி, ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தரையில் அமர்ந்து போராட்டம்



  • May 25, 2024 09:57 IST
    அண்ணாமலை அறியாமையில் பேசுகிறார்- சசிகலா

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் அடைத்து விட முடியாது. ஜெயலலிதா எல்லோருக்குமான தலைவர், அவரை இந்துத்துவா தலைவர் என்கிற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கருத்து தவறானது.

    அண்ணாமலை அறியாமையில், தவறான புரிதலில் பேசுகிறார்.

    - வி.கே.சசிகலா



  • May 25, 2024 09:21 IST
    புயல் உருவாவதில் சற்று தாமதம்!

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றிரவு புயலாக மாறும் என கூறப்பட்டிருந்த நிலையில், நாளை காலை தீவிர புயலாக மாறி, நாளை நள்ளிரவு வங்க தேசத்திற்கு அருகே கரையை கடக்கும்

    இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு



  • May 25, 2024 08:53 IST
    நாளை தீவிர புயலாக வலுப்பெறும் ரீமால்

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மத்திய கிழக்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடலில் வடக்கு நோக்கி நகர்ந்து ரீமால் புயலாக வலுப்பெறும்.

    மேலும் இது வடக்கு நோக்கி நகர்ந்து நாளை காலைக்குள் வடமேற்கு, அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெறும். நாளை நள்ளிரவில் சாகர் தீவு - கேபுபாரா இடையே வங்கதேசம், மேற்கு வங்கத்தை ஒட்டிய கடற்கரைகளை கடக்க அதிக வாய்ப்பு உள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 110 -120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்

     - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • May 25, 2024 08:34 IST
    கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

    திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

    கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.



  • May 25, 2024 08:34 IST
    சிவதாஸ் மீனா பேட்டி

    சென்னையில் திடீர் கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சென்னை மட்டுமின்றி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களிலும், நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    -தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா பேட்டி



  • May 25, 2024 08:02 IST
    குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் 9-வது நாளாக குளிக்க தடை நீடிக்கிறது.

    ஐந்தருவி, புலியருவி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று குளிக்க அனுமதி



  • May 25, 2024 07:31 IST
    புதிய பாடத்திட்டம்

    குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்துத் தேர்வுகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டதை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment