Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
-
Mar 13, 2024 22:42 ISTமோடிக்கு மிரட்டல்; அமைச்சர் அன்பரசன் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு
பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடும் வகையில், பீஸ் பீசாக்கிவிடுவோம் என்று பேசிய அமைச்சர் அன்பரசன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 13, 2024 21:59 ISTபா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை - இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பா.ஜ.க தலைமையிலான அணியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என ஓ.பி.எஸ் விரக்தியின் விளிம்பில் பேசுகிறார்” என கூறியுள்ளார்.
-
Mar 13, 2024 21:55 ISTமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ல் கொடியேற்றம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
Mar 13, 2024 21:52 ISTமாற்று Fastag பெறும்படி பேடிஎம் பயனர்களுக்கு அறிவுரை
பேடிஎம் Fastag பயனர்கள் மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் வேறு வங்கிகள் மூலம் Fastag பெறும்படி மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. மார்ச் 15ம் தேதிக்கு பின்னர், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட ஆர்.பி.ஐ தடை விதித்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு NHAI அறிவுறுத்தியுள்ளது.
-
Mar 13, 2024 20:56 ISTபொன்முடி பதவி பிரமாணம் நடக்குமா? டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி
பொன்முடிக்கு நாளை (மார்ச் 14) பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில் நாளை காலை ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி செல்கிறார். மார்ச் 16ஆம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
-
Mar 13, 2024 20:52 ISTபாஜக 2வது வேட்பாளர் பட்டியல்; மனோகர் லால் கட்டார் போட்டி
மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோர் முறையே மும்பை வடக்கு மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஹரியானா முன்னாள் முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுகிறார். -
Mar 13, 2024 20:12 ISTமதுரை சித்திரை திருவிழா ஏப்.11ஆம் தேதி தொடக்கம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 11ம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்குகிறது. 21ஆம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்.
முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. -
Mar 13, 2024 19:54 ISTதேர்தல் பத்திரங்கள் விரைவில் வெளியீடு; தேர்தல் ஆணையம்
எஸ்.பி.ஐ வங்கி மூலமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே இருக்கும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். -
Mar 13, 2024 19:45 ISTபோதைப் பொருள் விவகாரம்; மு.க. ஸ்டாலின் திசைதிருப்புகிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
“திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப் பொருள் மாபியா நடத்தி வந்தது குறித்தும், விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு சிந்தெடிக் போதைப்பொருட்களின் கிடங்காக மாறியிருக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின், அம்புலி மாமா பாணியில் கதையாடல் செய்து திசைதிருப்பும் தன் தந்தை காலத்து உக்தியைக் கையாளுகிறார்” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக் சர்வதேச போதைப் பொருள் மாபியா நடத்தி வந்தது குறித்தும், விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு சிந்தெடிக் போதைப்பொருட்களின் கிடங்காக மாறியிருப்பது பற்றியும் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் இடியாய் இறக்கிய கேள்விகளுக்கு பதில் தர… https://t.co/Ix9jE3qPdc
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) March 13, 2024 -
Mar 13, 2024 19:21 ISTபா.ஜனதா 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தப் பட்டியலில், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் , அரியானா, இமாச்சலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 72 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
எனினும், பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. -
Mar 13, 2024 18:25 ISTஇறைவன் பார்த்துக் கொள்வான் - ஜாபர் சாதிக்
என்சிபி அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கை சந்தித்து பேசினார் வழக்கறிஞர் பிரபாகரன் இறைவன் பார்த்துக் கொள்வார் என வழக்கறிஞரிடம் கூறிய ஜாபர் சாதிக்
-
Mar 13, 2024 18:24 ISTமீண்டும் அமைச்சர் ஆகிறார் பொன்முடி
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்; உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து மீண்டும் எம்எல்ஏ ஆனார் பொன்முடி
-
Mar 13, 2024 18:08 ISTதமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்
முதல்வர் முன்னிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழக அரசுடன் ரூ. 9000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு
-
Mar 13, 2024 17:12 ISTஉணவு தேடி இரவில் ஊரை சுற்றும் காட்டு யானை
10 நாட்களுக்கும் மேலாக உணவுத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் ஒற்றை யானை.
மாலை 7 மணிக்கு காட்டில் இருந்து வெளியேறி வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, மாட்டுக்கு தீவனமாக வைக்கப்பட்டுள்ள புண்ணாக்கு ஆகியவற்றை உண்பதாக பொதுமக்கள் வேதனை.
இதுமட்டுமன்றி நேற்று இரவு இந்த ஒற்றை யானை தாக்கியதில் 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். யானையை இடம்பெயர செய்யுமாறு வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை
-
Mar 13, 2024 17:02 ISTதேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும் - தலைமை தேர்தல் ஆணையர்
தேர்தல் பத்திர தரவுகள் நிச்சயம் குறித்த காலத்திற்குள் வெளியிடப்படும். எப்போதும் வெளிப்படைத் தன்மைக்கு ஆதரவாகவே உள்ளோம் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்
-
Mar 13, 2024 16:35 ISTபோதைப் பொருள் கடத்தல் விவகாரம்; ஆவணங்களை கேட்ட என்.ஐ.ஏ
போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டிருப்பதால் என்.ஐ.ஏ விவரங்களை கேட்டுள்ளது.
-
Mar 13, 2024 16:09 ISTகொடைக்கானலில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி வழக்கு – ஐகோர்ட் முக்கிய உத்தரவு
கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனுமதியின்றி செயல்படும் வணிகவளாகங்கள், உணவகம், சாலையோர கடைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில், தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, வனத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Mar 13, 2024 15:49 ISTவங்கி கணக்குகள் முடக்கம்; காங்கிரஸ் மனு தள்ளுபடி
கடந்த 2018-ஆம் ஆண்டு வருமான வரிக் கணக்கை 45 நாள்கள் தாமதமாக தாக்கல் செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது. வங்கி கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தாக்கல் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
Mar 13, 2024 15:28 ISTமுல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம்; தமிழக அரசு பதில் மனு
முல்லைப் பெரியாறு வாகன நிறுத்த மையம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. வாகன நிறுத்த மையம் முல்லைப் பெரியாறு அணை குத்தகை பகுதிக்கு வெளியில் உள்ளது என சர்வே ஆஃப் இந்தியா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
Mar 13, 2024 15:15 ISTஅ.தி.மு.க.,வில் இணைந்த ச.ம.க நிர்வாகிகள்
சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க உடன் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் தேனி மாவட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஆண்டிப்பட்டி ச.ம.க ஒன்றிய செயலாளர் குணசேகரன், கம்பம் ஒன்றிய செயலாளர் அல்லி பாலா, தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் தனிக்கொடி ஆகியோர் தேனி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ராமர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்
-
Mar 13, 2024 14:49 ISTநம்பிக்கை வாக்கெடுப்பு - ஹரியானா அரசு வெற்றி
ஹரியானா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார்
-
Mar 13, 2024 14:22 ISTகோவை மாவட்டத்திற்கு 13 புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கோவை மாவட்டத்திற்கு 13 புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் .கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காய் நேரடி விற்பனை தென்னை நோய் பாதிப்புகளை களைய ரூ.14 கோடி நிதி வழங்கப்படும். விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் ஆர்.எஸ் புரத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும் உக்கடத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
-
Mar 13, 2024 14:22 ISTகடினமான தொகுதிகளை எங்களிடம் தாருங்கள் - திமுக
கடினமான தொகுதிகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள், நாங்கள் வென்று விடுவோம் என கூட்டணி கட்சிகளிடம் கூறியிருந்தோம்" - திமுக தரப்பு ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுக யாரையும் கழட்டிவிடவில்லை, தொகுதிகளையும் குறைக்கவில்லை - திமுக தரப்பு கேட்கும் எண்ணிக்கையை கொடுத்துவிடுங்கள் என தொகுதி பங்கீடு குழுவிற்கு முதல்வர் அறிவுறுத்தி இருந்தார் - திமுக தரப்பு
-
Mar 13, 2024 14:21 ISTபாஜகவில் இணைந்தது ஏன்? - சரத்குமார் விளக்கம்
சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது குறித்து சரத்குமார் அறிக்கை இணைப்பு குறித்து பலரும் பல விதமாக சித்தரித்து வருவதால் தன்னிலை விளக்கம் அளிக்கிறேன் - சரத்குமார் 1996ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்ததே எனது முதல் அரசியல் பயணம் - சரத்குமார் தேர்தல் வரும் போதெல்லாம், யாருடன் கூட்டணி? எத்தனை இடங்கள் என்ற பேச்சே மேலோங்கி நிற்கிறது - சரத்குமார் கூட்டணி பேச்சுகளுக்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணம் என் அமைதியை இழக்க செய்தது - சரத்குமார் "என் பயணத்தில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று பலர் பலவிதமாக பேசினாலும் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை" பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்பட கூடாது என சிந்தித்தேன் - சரத்குமார் 2026ல் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது - சரத்குமார் "எனது 28 ஆண்டு அரசியல் அனுபவத்தை தேச வளர்சிக்கு அர்ப்பணிப்பதற்காக, பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தேன்"
-
Mar 13, 2024 13:49 ISTசெந்தில் பாலாஜி வழக்கு - ஒத்திவைப்பு
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
-
Mar 13, 2024 13:49 ISTநாடு செழிக்க நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும்: சரத் குமார்
எந்த பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் நான் சேரவில்லை - சரத்குமார் 16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன், என்னை பற்றி பாஜக அறியும் பாஜக தலைமை சொல்லும் பணியை செய்வேன் நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன். நாடு செழிக்க நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக வேண்டும்; பாஜகவில் பொறுப்புக்காக இணையவில்லை பொறுப்புடன் நடந்து கொள்வதற்காக இணைந்துள்ளேன்; சமகவில் இருந்த பாஜகவில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை செய்யப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை உறுதி அளித்துள்ளார் - சரத்குமார்
-
Mar 13, 2024 13:30 ISTபுதிய வேலைவாய்ப்புகளில் 50% இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு
“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் புதிய வேலைவாய்ப்புகளில் 50% இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும்; அங்கன்வாடி மற்றும் ஆஷா தொழிலாளர்களின் மாத ஊதியத்திற்காக மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்; ஒவ்வொரு ஏழை குடும்பத்தின் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்; இந்தியா முழுவதும் வேலைக்குச் செல்லும் பொண்களுக்காக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ‘சாவித்ரி பாய் பூலே’ விடுதி ஏற்படுத்தப்படும்” - அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள காணொலியில் தெரிவித்த அறிவிப்புகள்
-
Mar 13, 2024 13:28 ISTதேர்தல் ஆணையர் வழக்கு - மார்ச் 15ல் விசாரணை
தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை.
-
Mar 13, 2024 13:28 ISTஉச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. பிரமாண பத்திரம்
தேர்தல் பத்திரம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ பிரமாண பத்திரம் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டோம் - எஸ்.பி.ஐ
-
Mar 13, 2024 12:44 ISTமண் சரிந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
உதகை அருகே வீடு கட்டுமான பணியின் போது மண் சரிந்து, மண்ணுக்குள் புதைந்த 2 தொழிலாளர்களில் ஒருவர் உயிரிழப்பு.
விபத்தில் மீட்கப்பட்ட ரிஸ்வான்(22) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
Mar 13, 2024 12:25 ISTபெங்களூரு குண்டுவெடிப்பு - ஒருவர் கைது
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது
சபீரை பெல்லாரியில் வைத்து கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல்
கைதான சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது
-
Mar 13, 2024 12:25 ISTசெந்தில்பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு,
மாநில போலீசாரின் வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க செந்தில் பாலாஜி மனு.
அமலாக்க துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது - நீதிபதிகள்
மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன் அமலாக்க துறை வழக்கு விசாரணையை துவங்க முடியாது - செந்தில் பாலாஜி தரப்பு
செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்.25க்குள் பதிலளிக்கும்படி அமலாக்க துறைக்கு நீதிபதிகள் உத்தரவு
-
Mar 13, 2024 12:19 ISTபொள்ளாச்சி சம்பவம் - ஸ்டாலின் உறுதி
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடூரங்களை மறக்க முடியுமா? தமிழ்நாட்டை பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியது அதிமுக.
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -
Mar 13, 2024 11:53 ISTஎந்த தேர்தல் வந்தாலும் வெல்வோம்: ஸ்டாலின்
“எந்த தேர்தல் வந்தாலும் வெல்வோம்''
நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, இனி எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் வெல்வோம்
திமுக ஆட்சியின் மீது பொறாமைப்பட்டு வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி நடத்தி வருகிறார்கள்.
பொய், அவதூறுகளை பரப்புவோருக்கு பாடம் புகட்ட வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது.
பொள்ளாச்சி அரசு விழாவில் வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலின் உரை
-
Mar 13, 2024 11:48 ISTபல்வேறு திட்ட பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல்
பொள்ளாச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல். 1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்கம். கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். 57 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்
-
Mar 13, 2024 11:26 ISTபுதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு விசாரணை
புதிய சட்டப்படி தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவதை எதிர்த்த வழக்குகள் வரும் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டப்படி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்.
-
Mar 13, 2024 11:19 ISTவாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு வந்திருக்கிறேன்: ஸ்டாலின்
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய தெம்போடு, துணிவோடு வந்திருக்கிறேன். சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்- பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேச்சு
-
Mar 13, 2024 11:00 ISTஅதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் மன்சூர் அலிகான்
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்திய ஜனநாயக புலிகள் கட்சி பேச்சுவார்த்தை
அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுகல் சீனிவாசன், பெஞ்சமின் ஆகியோரை மன்சூர் அலிகான் சந்தித்து பேசுவார்த்தை நடத்தியுள்ளார்
-
Mar 13, 2024 10:33 ISTதங்கம் விலை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.48,880க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.6,110க்கு விற்பனை
-
Mar 13, 2024 10:31 ISTஜாபர் சாதிக்கின் கைது
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவர் கைது
சென்னையில் வைத்து கைது செய்து டெல்லி அழைத்துச் சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார்
-
Mar 13, 2024 10:03 ISTகோவை வந்தடைந்தார் ஸ்டாலின்
பொள்ளாச்சி செல்வதற்காக கோவை வந்தடைந்தார் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு
-
Mar 13, 2024 09:44 ISTமுன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை - அரசாணை வெளியீடு!
நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். பட்ஜெட் அறிவிப்பன் படி பொதுத் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டார்.
-
Mar 13, 2024 09:02 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி எல்லை பகுதிகளில் திடீரென நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 200 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது வினாடிக்கு 9000 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
Mar 13, 2024 08:58 ISTஐபிஎல் தொடரில் விளையாட ரிஷப் பண்ட் தகுதி- BCCI
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடற் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
எதிர்வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாட பண்ட் தகுதி பெற்று இருப்பதாகவும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக பண்ட் மீண்டும் செயல்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது
-
Mar 13, 2024 08:23 ISTநாம் தமிழர் கட்சி சின்னம்- நாளை மறுநாள் விசாரணை
நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணை
மக்களவை தேர்தலுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்குமாறு சீமான் மேல் முறையீடு
-
Mar 13, 2024 08:23 ISTஇன்று பொள்ளாச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்
25 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
Mar 13, 2024 07:33 ISTதமிழ் பாடம்- சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு
தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு
-
Mar 13, 2024 07:32 ISTஇரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் - ஓ.பி.எஸ்.
பாஜக உடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை மிக சுமுகமாக முடிந்தது
பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது
இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்
- சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓ.பி.எஸ்.
-
Mar 13, 2024 07:32 ISTமு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
திமுக அரசு தமிழ்நாட்டில் CAA நடைமுறைப்படுத்தப்படுவதை நிச்சயம் அனுமதிக்காது
- மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
-
Mar 13, 2024 07:32 ISTதேர்தல் பத்திர வழக்கு
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வாய்ப்பிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.