Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 64.40% வாக்குகள் பதிவு
3ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 64.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக விவரங்கள்
அசாம் – 75.26 சதவீதம்
பீகார் – 56.55 சதவீதம்
சத்தீஸ்கர் 66.99 சதவீதம்
தாத்ரா, டயு மற்றும் டாமன் – 65.23 சதவீதம்
கோவா – 74.27 சதவீதம்
குஜராத் – 56.76 சதவீதம்
கர்நாடகா – 67.76 சதவீதம்
மத்திய பிரதேசம் – 63.09 சதவீதம்
மகாராஷ்டிரா – 54.77 சதவீதம்
உத்தரப்பிரதேசம் – 57.34 சதவீதம்
மேற்கு வங்காளம் – 73.93 சதவீதம்
2019 மக்களவை தேர்தலை ஒப்பிடும் போது தற்போது நடைபெற்ற தேர்தலில் 5% வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
-
May 07, 2024 22:40 ISTதண்டனையை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் பேராசிரியை நிர்மலா மனு
பேராசிரியை நிர்மலா தனக்கான தண்டனையை ரத்து செய்ய கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்க கோரியும் உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் பேராசிரியை நிர்மலாவிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது
-
May 07, 2024 21:06 IST3-ம் கட்ட மக்களவை தேர்தல் - 61.45% வாக்குப்பதிவு
மக்களவைக்கான 3 ஆம் கட்ட தேர்தலில் 61.45% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கம் 73.93%, மத்திய பிரதேசம் 63.09%, உத்திர பிரதேசம் 57.34%, கோவா 72.27%, சட்டீஸ்கர் 66.99% அசாம் 75.26%, பிகார் 56.55%, குஜராத் 56.76%, கர்நாடகா 67.76%, மகாராஷ்டிரா 54.77% வாக்குகள் பதிவாகியுள்ளன
-
May 07, 2024 20:40 ISTகொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம்
பழனி அருகே கொடைக்கானல் மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
-
May 07, 2024 19:47 ISTகர்நாடக பா.ஜ.க வீடியோவை நீக்க தேர்தல் ஆணையம் கடிதம்
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்து கர்நாடக பா.ஜ.க வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தது.
இந்த வீடியோவை நீக்க வலியுறுத்தி காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், “சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்க வலியுறுத்தி ட்விட்டர் எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது. -
May 07, 2024 19:34 ISTஅரியலூரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
அரியலூர் திருமானூர் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் வந்து கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். -
May 07, 2024 19:19 ISTதகதகக்கும் தமிழ்நாடு: 12 இடங்களில் சதம் அடித்த வெயில்!
திருச்சி, மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, மதுரை நகரம், ஈரோடு, வேலூர், திருத்தணி, தஞ்சாவூர், மீனம்பாக்கம், சேலம் மற்றும் கோவை என 12 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்தது. அதிகப்பட்சமாக திருச்சியில் 107.78 டிகிரி வெயில் தாக்கி இருந்தது. -
May 07, 2024 18:31 IST3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு
3ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. அசாம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 60.19% வாக்குகள் பதிவாகியுள்ளன
-
May 07, 2024 18:06 ISTஜெயக்குமார் மரணம்; சடலமாக மீட்கப்பட்ட தோட்டத்தில் தனிப்படை ஆய்வு
ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட தோட்டத்தில் தனிப்படை ஆய்வு செய்தனர். தோட்ட பணியாளர்களை வரவழைத்து தனிப்படை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்
-
May 07, 2024 18:04 ISTஅரசு பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்து கொண்டு மாணவர்கள் அட்டகாசம் செய்தனர்
-
May 07, 2024 17:12 ISTமக்களவை தேர்தல்: 3ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு
மக்களவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் இன்று நடைபெற்றது. இந்த மாநிலங்களில் சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
May 07, 2024 17:07 ISTபா.ஜ.க பிரமுகர் வீட்டில் 6 மணி நேரமாக சி.பி.சி.ஐ.டி சோதனை
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த விவகாரத்தில், சுமார் ஆறு மணி நேரங்களாக பா.ஜ.க பிரமுகர் கோவர்தனின் வீடு மற்றும் ஹோட்டலில் சி.பி.சி.ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்
-
May 07, 2024 16:41 ISTநெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம் : கே.வி.தங்கபாலு விளக்கம்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்னைப் பற்றி பரவும் தகவல்கள் தவறானது. காவல்துறையிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளேன். எப்போது விசாரணை என்றாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
-
May 07, 2024 16:39 ISTடெல்லி மதுபான ஊழல் வழக்கு : பி.ஆர்.எஸ் கவிதாவின் காவல் நீடிப்பு
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
-
May 07, 2024 16:37 ISTஆவடியில் இளைஞர் அட்டகாசம்
ஆவடியில் கையில் தடியை வைத்து சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அச்சுறுத்திய வாலிபரால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், வாலிபரின் அட்டகாசத்தால் இருசக்கர வாகனத்தில் இருந்து குழந்தைகளோடு தவறி விழுந்த குடும்பம் காயமடைந்துள்ளது.
-
May 07, 2024 15:51 ISTவெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் புரோட்டான் நிறுவனம் புதிய தகவல்
தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், இன்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டான் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. பல கட்ட போராட்டத்திற்கு பின் புரோட்டான் நிறுவனத்திடம் இருந்து ஐபி முகவரியை சென்னை காவல்துறை பெற்ற நிலையில், மீண்டும் சில தகவல்களை கேட்டு கடிதம் எழுதியுள்ளது.
-
May 07, 2024 15:49 ISTஇசை மற்றும் மொழி என இரண்டுமே ஒன்றுதான் - சீமான் கருத்து
இசை பெரிதா மொழி பெரிதா என்பது குறித்து இளையராஜா, வைரமுத்து இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் எனது தகப்பன்கள்" "இளையராஜா ஒரு படைப்பாளி, அங்கீகாரம் வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
-
May 07, 2024 15:03 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு: விசாரணை ஒத்திவைப்பு
அமலாக்கத் துறையின் சட்டவிரோத கைதை எதிர்த்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் மே 9ம் தேதிக்கு தள்ளி வைத்தது
-
May 07, 2024 14:42 ISTஜெயகுமார் தோட்டத்தில் தடயவியல் துறை சோதனை
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் தோட்டத்தில் தடயவியல் துறை சோதனை. ஜெயகுமார் மகன்களிடமும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை.
-
May 07, 2024 14:07 ISTதென்னிந்தியாவில் வரும் நாட்களில் வெப்ப அலை குறைய வாய்ப்பு
தென்னிந்தியாவில் வரும் நாட்களில் வெப்ப அலை குறைய வாய்ப்பு. . வருகிற 14ஆம் தேதி வரை படிப்படியாக 2 செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும். - வானிலை ஆய்வு மையம்
-
May 07, 2024 13:55 ISTஜெயக்குமாரின் பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தன்சிங் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்- புதிய தகவல். ஜெயக்குமாரின் வாய் மற்றும் தொண்டையில் இரும்புத் துகள்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது பாத்திரங்கள் கழுவும் இரும்பு பிரஷ், இரும்பு துகள்கள் வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் இருப்பது தெரிய வர, கொலையா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்.
-
May 07, 2024 13:52 ISTவிவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமும் தடையின்றி விநியோகம்: தங்கம் தென்னரசு
தமிழகத்தில் தடையின்றி சீரான மின்சாரம் விநியோகம் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரமும் தடையின்றி விநியோகம் - மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
-
May 07, 2024 13:51 ISTசவுக்குசங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
யூடியூபர் சவுக்குசங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் சிறைக்குள் சென்ற போது, நல்ல நிலையில் இருந்ததாகவும், சிறையில் தாக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்- இ.பி.எஸ்
-
May 07, 2024 13:23 ISTஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்
பயணிகளின் உடமைகளை தாமதமாக வழங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு 1 லட்சம் ரூபாய் அபராதம். மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
-
May 07, 2024 13:10 ISTகாங்கிரஸ் நிர்வாகி வீட்டில் நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணை
காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் நெல்லை மாவட்ட எஸ்பி விசாரணை. ஜெயக்குமார் மகன் கருத்தையா ஜாப்ரின் மற்றும் ஜோ மார்ட்டினிடம் எஸ்.பி விசாரணை.
-
May 07, 2024 12:53 ISTசுங்கச்சாவடி ஊழியர் மீது கார் ஏற்றிய நபர்
கப்பலூர் சுங்கசாவடியில் கட்டணம் செலுத்தாமல் தப்ப முயன்றவரைத் தடுத்த ஊழியர். சுங்கச்சாவடி ஊழியர் மீது கார் ஏற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு, பாதுகாப்புக் கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் போலீசில் புகார்.
-
May 07, 2024 12:53 ISTஜாபர் சாதிக் மனு பிற்பகலில் விசாரணை
அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும்
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு
திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது
விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்- ஜாபர் சாதிக்
"குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"
ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல் விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம்
-
May 07, 2024 12:53 ISTஜாபர் சாதிக் மனு பிற்பகலில் விசாரணை
அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்கறிஞரையும் அனுமதிக்க வேண்டும்
2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு
திகார் சிறையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை வாக்குமூலம் பதிவு செய்ய உள்ளது
விசாரணை நடைபெறும் போது, கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்- ஜாபர் சாதிக்
"குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதிக்கும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்"
ஜாபர் சாதிக் மனுவை இன்று பிற்பகல் விசாரிக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம்
-
May 07, 2024 12:31 ISTபோதை தடுப்பு சிறப்பு பிரிவு: ஐகோர்ட் பாராட்டு
தமிழ்நாடு அரசின் போதை தடுப்பு சிறப்பு பிரிவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது - உயர்நீதிமன்ற மதுரை கிளை
போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் குற்றம் சமூகத்திற்கு எதிரான குற்றமாக பார்க்க வேண்டும் - உயர்நீதிமன்ற கிளை
"NIB-CID விசாரணை அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும். வழக்குகளில் குற்றச்செயலில் உள்ள தொடர்பை போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு கண்டுபிடிக்க வேண்டும்- உயர் நீதிமன்றம்
-
May 07, 2024 12:30 ISTரூபி மனோகரனிடம் விசாரணை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி மர்ம மரண வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரனிடம் விசாரணை
-
May 07, 2024 12:09 ISTமாணவர்களுக்கு ஸ்டாலின் உறுதி
சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளான மாணவர் சின்னதுரை, தான் B.Com படித்துவிட்டு CA படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறியுள்ளார். நீட் தேர்வு எழுதியுள்ளதாகவும், மருத்துவப்படிப்புக்கான சீட் கிடைக்கும் என நம்புவதாகவும் திருநங்கை நிவேதா கூறியுள்ளார். உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி.
-
May 07, 2024 12:09 ISTநாங்குநேரி மாணவர், திருநங்கை நிவேதா ஸ்டாலினை உடன் சந்திப்பு
பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
-
May 07, 2024 12:08 ISTகூடலூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
கேரள - தமிழக எல்லையான கூடலூரில் 5 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல். நெட்வொர்க் பிரச்சினையால் செயலி வேகம் குறைந்து இ- பாஸ் பெறுவதில் தாமதம். இ- பாஸுக்கான ஓடிபி எண் பெற தாமதமானதால், சுற்றுலா பயணிகள் காத்திருப்பு
-
May 07, 2024 12:06 ISTஅமெரிக்க தூதரகம் முன் மாணவர் சங்கத்தினர் போராட்டம்
சென்னையில் அமெரிக்க தூதரகம் முன், மாணவர் சங்கத்தினர் போராட்டம். அமெரிக்கா பல்கலைக்கழங்களில் மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு கண்டனம். காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு மாணவ அமைப்பினர் எதிர்ப்பு.
-
May 07, 2024 11:52 ISTபகுப்பாய்வு முடிவுக்காக காத்திருப்பு- நெல்லை போலீஸ்
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வழக்கில், பகுப்பாய்வு முடிவிற்காக காத்திருக்கிறோம். ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில் நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம். ஜெயக்குமார் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை மட்டுமே காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. பகுப்பாய்வின் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே கொலையா? தற்கொலையா? என இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஜெயக்குமார் மர்ம மரண தொடர்பாக விசாரிக்கும் தனிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், கடந்த 2 தினங்களுக்கு முன் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
-
May 07, 2024 11:43 ISTமின்சாரம் துண்டிப்பு: பொது மக்கள் சாலை மறியல்
நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிப்பு - பொது மக்கள் சாலை மறியல். சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள். காமராஜர் துறைமுகம், அதானி துறைமுகம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு.
-
May 07, 2024 11:19 ISTசிறுமியை கடித்த நாய்கள் மதுரை சென்றன
சென்னையில் சிறுமியை கடித்து குதறிய நாய்கள் மதுரை சென்றன. நேற்றிரவு உரிமையாளர் நாய்களை மதுரைக்கு எடுத்து சென்றதாக தகவல்.
உரிமையாளர் புகழேந்தியால் மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டது என சென்னை மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் ஹூசைன் தகவல்.
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் 5 வயது சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாய்களை 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
-
May 07, 2024 11:05 ISTதங்கம் சரவனுக்கு ரூ240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சரவனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம் 6,640 ரூபாய்க்கு விற்பனை.
ஒரு சவரன் தங்கம் 53,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அட்சயதிருதியை நெருங்கி வரும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு.
-
May 07, 2024 10:58 ISTஅரியலூர் மாவட்ட த்திற்கு இன்று ஆரெஞ்சு அலெர்ட்
அரியலூர் மாவட்ட த்திற்கு இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
May 07, 2024 10:19 IST13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 07, 2024 09:48 ISTகாலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்
கர்நாடகாவில் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில், காலை 9 மணி நிலவரப்படி 9.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.
-
May 07, 2024 09:47 ISTஅமித்ஷா வாக்குப்பதிவு
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார் அமித்ஷா
-
May 07, 2024 09:27 ISTஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் தங்கபாலு இன்று ஆஜர்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று ஆஜராகிறார்.
15க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்
-
May 07, 2024 09:12 ISTஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தகவல்;
கொலைக்கான வாய்ப்புகள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தகவல்;
2 கடிதங்களும் அவர் எழுதியது என தடயவியல் துறை உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
-
May 07, 2024 08:39 ISTஜெனிலியா வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா: லத்தூரில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா தேஷ்முக் வாக்களித்தனர்
#WATCH | Maharashtra: Actor Riteish Deshmukh and his wife Genelia Deshmukh cast votes at a polling booth in Latur.
— ANI (@ANI) May 7, 2024
NDA has fielded sitting MP Sudhakar Tukaram Shrangare against INDIA Alliance's Kalge Shivaji Bandappa.#LokSabhaElections2024 pic.twitter.com/tP7DLeGjoJ -
May 07, 2024 08:38 ISTவாக்குப்பதிவு செய்ய படகில் பயணம்
அசாமில் உள்ள துப்ரி காட் வாக்காளர்கள், படகுகள் மூலம் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கின்றனர்.
#WATCH | | Voters of Dhubri Ghat in Assam, use boats to arrive at a polling booth to cast their votes during the third phase of #LokSabhaElections2024 pic.twitter.com/wCMXQoMAcH
— ANI (@ANI) May 7, 2024 -
May 07, 2024 08:25 ISTகொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பிறகு அனுமதி
நீலகிரி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்கள் கடும் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
-
May 07, 2024 07:54 ISTபிரதமர் மோடி வாக்குப்பதிவு
அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட ராணிப் வாக்கு சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.
வாக்குச்சாவடிக்கு சென்ற பிரதமர் மோடியை உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.
#WATCH | Prime Minister Narendra Modi casts his vote for #LokSabhaElections2024 at Nishan Higher Secondary School in Ahmedabad, Gujarat pic.twitter.com/i057pygTkJ
— ANI (@ANI) May 7, 2024 -
May 07, 2024 07:52 ISTதலைசிறந்த மூன்றாண்டு! மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியமைந்து 3ம் ஆண்டு நிறைவையொட்டி வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்
இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்
பெருமையோடு சொல்கிறேன்
தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"
- மு.க.ஸ்டாலின் தளத்தில் பதிவு
"இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"
— M.K.Stalin (@mkstalin) May 7, 2024
மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!
நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...
பெருமையோடு சொல்கிறேன்...
"தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"#3YrsOfMKStalinGovt pic.twitter.com/kJfRKp0OMx -
May 07, 2024 07:41 ISTமறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
விடைத்தாள் நகல் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று (மே 7) காலை 11 மணி முதல் மே 11ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்
- பள்ளிக்கல்வித் துறை
-
May 07, 2024 07:40 IST12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது பெறலாம்?
மே 9 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்
பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
தனித் தேர்வர்களும் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.