Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது
நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான பதிவு தொடங்கியது. நாளை முதல் ஜுன் 30ஆம் தேதி வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம். http://epass.tnega.org என்ற இணையதளத்தின் வாயிலாக இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம்.
பேருந்துகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டிய தேவை இல்லை
-
May 07, 2024 07:06 ISTதமிழ்நாட்டில் நேற்று 100°Fக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள்!
தமிழ்நாட்டில் நேற்று 100°Fக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள்!
நாட்டிலேயே நேற்று 4வது அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
கரூர் பரமத்தி - 110°F
ஈரோடு - 110°F
திருச்சி - 109°F
வேலூர் - 109°F
மதுரை விமான நிலையம் - 108°F
திருத்தணி - 107°F
திருப்பத்தூர் - 107°F
பாளையங்கோட்டை - 106°F
மதுரை நகரம் - 105°F
சேலம் - 105°F
தருமபுரி - 104°F
தஞ்சாவூர் - 104°F
மீனம்பாக்கம் - 102°F
கோவை - 102°F
நாகப்பட்டினம் - 100°F
-
May 06, 2024 21:13 ISTகல்லூரி விடுமுறையில் ஊருக்கு வந்த இளைஞர் நீரில் மூழ்கி பலி
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியில் உள்ள பரளியாற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி, சுபின் வர்கீஸ் (19) என்ற இளைஞர் மரணமடைந்தார். கோவையில் பொறியியல் படித்து வரும் இவர், விடுமுறைக்காக பூர்வீக கிராமத்திற்கு வந்த நிலையில், இன்று ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 06, 2024 21:12 ISTமோசமான வானிலை : ஒடிசா முதலமைச்சர் பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்க தாமதம்
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பயணித்த ஹெலிகாப்டர் பலத்த காற்று மழை மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்த நிலையில் 30 நிமிடங்களுக்குப் பிறகு ஜர்ஸூகுடா என்ற இடத்தில் தரையிறங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
-
May 06, 2024 20:24 ISTசிறுமியை கடித்த நாய்களை அப்புறப்படுத்த உரிமையாளருக்கு நோட்டீஸ்
சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களையும் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த உரிமையாளருக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏழு நாட்களுக்குள் வீட்டிலிருந்து நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் உரிமம் இன்றி வளர்த்ததுடன், முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மாநகராட்சி நோட்டீஸில் தகவல் தெரிவித்துள்ளது.
-
May 06, 2024 19:44 ISTபட்டாசு குடோனில் வெடி விபத்து : உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயம்
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன மூலப்பொருள் தயாரிப்பு குடோனில் வெடி விபத்தில் உரிமையாளர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
May 06, 2024 19:41 ISTபிளஸ் டூ மாணவர்கள் நாளை முதல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் நாளை முதல் 11ம் தேதி வரை மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வு துறை அறிவித்துள்ளது.
-
May 06, 2024 19:34 IST5 கோடி கேட்டு சாட்டை துரைமுருகனுக்கு எம்.பி நவாஸ் கனி நோட்டீஸ்
தேர்தலில் வெற்றி பெற வைக்க பணம் விநியோகம் செய்யப்பட்டதாக சாட்டை துரை முருகன் கடந்த ஏப்ரல் 27ம் தேதி வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கோரி இராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி, யூ டியூபர் சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வீடியோவில் நவாஸ் கனியை வெற்றி பெற வைக்க இராமநாதபுரம் கோபாலபட்டினம் பகுதி ஜமாத், ரூ.10 லட்சம் வழங்கியதாக குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் உள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இருப்பதாக நவாஸ் கனி கூறியுள்ளார்.
-
May 06, 2024 18:55 ISTடெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் பரிந்துரை
தடை செய்யப்பட்ட அமைப்பிடம் நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ.வுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
-
May 06, 2024 18:25 ISTநாய் கடித்த சிறுமிக்கு 9ம் தேதி அறுவை சிகிச்சை
சென்னையில் நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வர வேண்டியுள்ளதால் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை என சிறுமியின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்றாக இருப்பதாகவும், உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
May 06, 2024 17:32 ISTகாங். நிர்வாகி மரணம் : முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட 30 பேருக்கு சம்மன்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் என 30 பேருக்கு மாவட்ட காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதில் ரூபி மனோகரன், முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகளும் அடங்கியுள்ளனர்.
-
May 06, 2024 17:29 ISTமின் தடையை சரி செய்ய 60 பறக்கும்படை : தலைமைச் செயலாளர் தகவல்
கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது. இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய சென்னையில் 60 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார்
-
May 06, 2024 17:06 ISTமக்களவை தேர்தல் : நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்
இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், குஜராத்தில் உள்ள 26, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 10, மத்தியப் பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7 பீகாரில் 5, அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகளின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், 25 தொகுதிகளில் மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் மூலம் நாளை மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது
-
May 06, 2024 16:14 ISTமக்களவை தேர்தல்: நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவை தேர்தலில் நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, குஜராத்தில் 25 தொகுதிகள், மகாராஷ்ரா 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசம் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 9 தொகுதிகள், சத்தீஸ்கர் 7 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள் மற்றும் கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள் ஆகியவற்றில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
May 06, 2024 15:34 ISTதமிழ்நாட்டில் மின்சாரம் வழங்காததால் விவசாய பணிகள் பாதிப்பு: தி.மு.க அரசு மீது அ.தி.மு.க குற்றச்சாட்டு
“தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வழங்குவதிலும் குளறுபடி காணப்படுகிறது. அலட்சியம் காட்டும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்காததால் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிப்பு !
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) May 6, 2024
குடிநீர் வழங்குவதிலும் குளறுபடி ! அலட்சியம் காட்டும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/gWUEGXfgXU -
May 06, 2024 15:18 ISTநாங்குனேரி மாணவர் சாதனை; அன்பில் மகேஷ் பாராட்டு
நாங்குனேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் 12ஆம் வகுப்பு தேர்வில் 469 மதிப்பெண்கள பெற்றுளளார்.
அவருக்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை பிளஸ் 2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 6, 2024
இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும்,…இந்நிலையில் மாணவரை தொடர்புகொண்டு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, 11.08.2023 அன்று நான் உறுதியளித்தபடி அவர் விரும்பும் கல்லூரியில் இணைவதற்கு உதவுவதாகவும், அவரின் உயர் கல்விக்கு அனைத்து வகையிலும் துணை நிற்பேன் என்றும் உறுதிப்படுத்தினேன்” எனத் தெரிவித்துள்ளார்.
-
May 06, 2024 14:34 ISTகன்னியாகுமரி கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
கன்னியாகுமரி கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்தபோது மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது 12 மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். இதில் 6 பேரை கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றனர். இதில் ஒருவர உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவரை தேடும் பணி நடந்துவருகிறது. -
May 06, 2024 14:02 IST12ஆம் வகுப்பு ரிசல்ட்: ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் தாங்கள் விரும்புகின்ற பாடங்களை தேர்ந்தெடுத்து சாதனை புரிய எனது நல்வாழ்த்துகள்.
தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல் உடனடித் தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற எனது நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள். தேர்ச்சி
— O Panneerselvam (@OfficeOfOPS) May 6, 2024
பெற்றவர்கள் அனைவரும் தாங்கள் விரும்புகின்ற பாடங்களை தேர்ந்தெடுத்து சாதனை புரிய எனது நல்வாழ்த்துகள்.
தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் மனம் தளராமல் உடனடித் தேர்வு… -
May 06, 2024 13:46 ISTசென்னையில் பசுமை பந்தல்
சென்னையின் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம், 5.5 மீட்டர் உயரத்தில் இந்தப் பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளது. -
May 06, 2024 13:25 IST15 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 15 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப ஆரஞ்ச் அலர்ட்-ஐ சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
-
May 06, 2024 13:10 ISTநாங்குனேரி; மாணவர் சின்னத் துரை சாதனை
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ம் வகுப்புத் தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
May 06, 2024 12:50 ISTநாய், பூனை வளர்க்க உரிமம்: ஆணையர் தகவல்
"நாய், பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும்" என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
-
May 06, 2024 12:32 ISTசெந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணையை தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்
-
May 06, 2024 12:30 ISTநாய் கடித்து சிறுமி படுகாயம்- மேலும் இருவர் கைது
சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் ஏற்கனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
May 06, 2024 12:29 ISTஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக், சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக்குமார் ஆகியோரை கடந்த மார்ச் 9ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
5 பேரிடமும் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத் துறைக்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
-
May 06, 2024 12:29 ISTஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 29ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக், சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக்குமார் ஆகியோரை கடந்த மார்ச் 9ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற காவல் நிறைவடைந்ததால் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
5 பேரிடமும் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத் துறைக்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
-
May 06, 2024 12:09 ISTஅமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ.20 கோடி பறிமுதல்
ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலம் உதவியாளர் சஞ்சீவ் லால் இல்லத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு திட்டங்களை செயல்படுத்தியதில், பணமோசடி நடந்ததாக குற்றச்சாட்டு
இதே வழக்கில் மாநில ஊரக வளர்ச்சித்துறையின் தலைமை பொறியாளர் வீரேந்திர ராமு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
-
May 06, 2024 11:46 ISTமே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!
உத்தர பிரதேசம் வாரணாசி தொகுதியில் மே 14ம் தேதி பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாள் வாரணாசியில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
தொடர்ந்து 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.
-
May 06, 2024 11:45 ISTஜெயக்குமாரின் உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்து செலுத்தும் பிரிவில் பணியாற்றும் கரைச்சுத்துப்புதூரை சேர்ந்த செல்வகுமார் என்ற மருத்துவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயக்குமாரின் கடிதத்தில் செல்வகுமாரின் பெயரும் இருந்தது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்
-
May 06, 2024 11:45 ISTமனம் தளர வேண்டாம்- மு.க.ஸ்டாலின் அறிவுரை
இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்.
அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்
- ஸ்டாலின்
பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) May 6, 2024
இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்… pic.twitter.com/V07ppFN4ET -
May 06, 2024 11:37 ISTதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
-
May 06, 2024 10:58 ISTபொறியியல் படிப்பு
பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இன்று முதல் ஜூன் மாதம் 6ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு செய்யலாம்.
ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 13ம் தேதி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை நடைபெறும்.
-
May 06, 2024 10:56 ISTமறுகூட்டலுக்கு நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், நாளை (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்;
தேர்ச்சி அடையாத மாணவர்களும் நாளை முதல் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
-
May 06, 2024 10:29 ISTதுருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன்’
கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…💥✨#Bison @beemji @NeelamStudios_ @ApplauseSocial @nairsameer @deepaksegal @Tisaditi #DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi @rajisha_vijayan @KalaiActor @editorsakthi @Kumar_Gangappan… pic.twitter.com/0bpLJFoEsB
— Mari Selvaraj (@mari_selvaraj) May 6, 2024 -
May 06, 2024 10:05 ISTஐபிஎல் இன்றைய போட்டி
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது
-
May 06, 2024 10:04 ISTபிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
May 06, 2024 09:28 ISTஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்
திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
-
May 06, 2024 09:27 ISTமாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 6, 2024
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் https://t.co/9nr5Ub1f7S மற்றும், https://t.co/FzUQwsOj4U ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இத்தேர்வு முடிவுகள் மாணவர்களின் வாழ்க்கையை மதிப்பீடு செய்வதற்கானது… -
May 06, 2024 09:07 ISTஇ-பாஸ் பெறுவதற்கான மாதிரி காணொளி வெளியீடு
உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெறுவதற்கான மாதிரி காணொளி வெளியீடு
#WATCH | உதகை மற்றும் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் பெற பெறுவதற்கான மாதிரி காணொளி வெளியீடு#SunNews | #EPass | #Nilgiris | #Kodaikanal pic.twitter.com/tXD4cjTjIx
— Sun News (@sunnewstamil) May 6, 2024Credit: Sun news
-
May 06, 2024 09:04 ISTமின்சாரம் தாக்கி 6 வயது மக்னா யானை உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே சந்தனப் பள்ளி ஏரி பகுதியில் உணவுக்காக நீர் நிலையங்களைத் தேடி வந்தபோது ஏரிப் பகுதியில் உள்ள தாழ்வான மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் 6 வயது மக்னா யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 06, 2024 08:45 ISTசிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்- உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்கா காவலாளியின் மனைவி மற்றும் மகளை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
புகழேந்தி, அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
May 06, 2024 08:31 ISTஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இளநிலை மற்றும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் http://www.tngasa.in என்கிற இணையதளம் மூலம் பெறலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
May 06, 2024 08:30 ISTசென்னையில் 5 வயது சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்
சென்னை, ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்காவில் வேலை பார்க்கும் காவலாளியின் மனைவி மற்றும் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்த நிலையில், தலையில் பயங்கர காயத்துடன் குழந்தை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாய்களின் உரிமையாளரான புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
-
May 06, 2024 08:30 ISTபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.