Advertisment

Tamil News Live Updates: பணிப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் எச்.டி. ரேவண்ணா விசாரணைக்குப் பின் கைது

Tamil Nadu Live News Update Today- 4 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil News live

 Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates   

நீலகிரி பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்

மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • May 04, 2024 21:11 IST
    இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த கான்வாய் மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய விமானப்படை வீரர்கள் பயணித்த கான்வாய் மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் ராணுவம் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், காயமடைந்த வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உத்தம்பூரில் உள்ள கமாண்டோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



  • May 04, 2024 20:56 IST
    கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு

    கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனியில் தனியார் விடுதியில் வைத்து சவுக்கு சங்கரை இன்று கைது செய்த கோவை காவல்துறையினர் அவருடன் இருந்த இருவரை விசாரித்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • May 04, 2024 20:21 IST
    எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்

    எச்.டி. ரேவண்ணாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் பெங்களூரு பத்மநாபநகர் பகுதியில் உள்ள தேவகவுடா வீட்டிலிருந்த அவரை அதிரடியாக விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையின் முடிவில் எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • May 04, 2024 20:19 IST
    நடிகர் ராகவா லாரன்ஸுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

    மாற்றம் அறக்கட்டளை துவங்கிய நடிகர் ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் "இன்னும் பல்லாயிரம் ஏழைகளுக்கு உதவி செய்யனும்.." என வாழ்த்தியுள்ளார்



  • May 04, 2024 19:32 IST
    நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் கோஷம்

    அரசியல் விமர்சகர் யூ டியூபர் சவுக்கு சங்கர் கோவையில் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவரை போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் கோஷம் எழுப்பினர்.



  • May 04, 2024 18:59 IST
    நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக தொடரும் கனமழை

    நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை கொட்டித் தீர்க்கும் நிலையில் உதகையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குன்னூரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் படகு சவாரி ரத்து செய்யப்ட்டள்ள நிலையில், குன்னூர் லேம்ஸ்ராக் பகுதியில் சுற்றுலா வாகனம் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.



  • May 04, 2024 18:34 IST
    தஞ்சாவூரில் திடீரென வீசிய சூறாவளி காற்று

    தஞ்சாவூரில் திடீரென சூறாவளி காற்று வீசியது. ஐ.டி.ஐ மைதானத்தில் காற்று சுழன்றடித்தது. இதனால் பல அடி உயரத்திற்கு மண் மேலே எழும்பியது. திடீரென வீசிய சூறாவளி காற்றால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்



  • May 04, 2024 18:18 IST
    பா.ஜ.க.,வில் இணைந்தார் அர்விந்தர் சிங் லவ்லி

    டெல்லி மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.க.,வில் இணைந்தார் 



  • May 04, 2024 18:02 IST
    ஜெயக்குமார் மரண வழக்கு; 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை; நெல்லை எஸ்.பி தகவல்

    ஜெயக்குமார் தனசிங் மரண வழக்கில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாக நெல்லை எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்



  • May 04, 2024 17:41 IST
    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம்; உடலை வாங்க மறுத்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஜெயக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என கூறி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்  நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் டி.ஐ.ஜி ஆய்வு செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்



  • May 04, 2024 17:22 IST
    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    கோவை, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஈரோடு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 04, 2024 16:57 IST
    நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை தொடக்கம்

    எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகே, தற்கொலையா? கொலையா? என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்



  • May 04, 2024 16:32 IST
    ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் நெல்லை மாவட்ட போலீசார் நேரில் ஆய்வு

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தன்சிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவ இடத்தில் நெல்லை மாவட்ட போலீசார் நேரில் ஆய்வு செய்தனர். ஜெயக்குமாரை கொலை செய்ததற்கான அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை. தற்போது கிடைத்துள்ள தடயங்களின் அடிப்படையில் அவர் தற்கொலை செய்திருக்கலாம். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் முடிவில் முழு விவரங்கள் தெரியவரும் என நெல்லை மாவட்ட போலீஸார் தெரிவித்துள்ளனர்



  • May 04, 2024 15:56 IST
    பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட வேண்டும்; மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்

    பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு கர்நாடக மாநில அரசு இ-மெயில் வாயிலாக கடிதம் எழுதியுள்ளது. குற்றவாளி குறித்த தகவல்களை அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில், ப்ளு கார்னர் நோட்டீஸ் வெளியிட அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் முன்ஜாமின் கோரி பிரஜ்வால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தொடங்கியது



  • May 04, 2024 15:36 IST
    ஜெயக்குமாரின் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் - அண்ணாமலை

    ஜெயக்குமாரின் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலுவின் பெயர்களை, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • May 04, 2024 14:50 IST
    காங்., நிர்வாகி கொலை - தங்கபாலு விளக்கம்

    கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குற்றச்சாட்டு வைத்தார் ஜெயக்குமார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சங்களை செலவு செய்ததாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

    வெளியாகி இருக்கும் கடிதம் ஜெயக்குமார் எழுதியது தானா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து தங்கபாலு விளக்கமளித்துள்ளார். 



  • May 04, 2024 13:37 IST
    பிரஜ்வல் ரேவண்ணா தந்தையிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

    கர்நாடகாவில் பாலியல் புகார்களுக்கு உள்ளான பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா வீட்டில், பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து வந்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.

     



  • May 04, 2024 13:29 IST
    தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

    கோடை காலத்தை முன்னிட்டு உதகையில் நடத்தப்படும் 134வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி வரும் மே 10ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இதில் டேஷண்ட், கோல்டன் ரிட்ரீவர், கிரேட் டேன், ஜெர்மன் ஷெபர்ட், லேப்ரடார், சைபீரியன் ஹச்கி, பீகில், ராஜபாளையம், கன்னி, சிப்பிபாறை உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த சுமார் 450 நாய்கள் கலந்து கொள்ளவுள்ளன 



  • May 04, 2024 13:28 IST
    ராகுல்காந்தி கடிதம் 


    "பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும்" என்று கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். 



  • May 04, 2024 13:01 IST
    கட்சி ரீதியாகவும் விசாரணை: செல்வப் பெருந்தகை

    நெல்லை மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினேன்

    ராகுல்காந்தி நெல்லை வந்தபோது தேர்தல் பணிகளில் ஜெயக்குமார் தீவிரமாக இருந்தார் 

    காவல்துறை சுதந்திரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் 

    கட்சி ரீதியாகவும் இதுதொடர்பாக விசாரணை நடத்துவோம் - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை



  • May 04, 2024 13:00 IST
    காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்

    தன் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங். நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார். நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக அதிமுக ஜெயக்குமார் கருத்து 



  • May 04, 2024 12:48 IST
    கொலை மிரட்டல் வருவதாக புகார்

    2 நாட்களாக மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

    வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டார். கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.

    காணாமல் போன ஜெயக்குமார் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் 30ஆம் தேதி போலீசில் புகார் அளித்திருந்தார். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    ஜெயக்குமாரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என மகன் கருத்தையா ஜாஃப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடந்த 2ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை என மகன் கருத்தையா ஜாஃப்ரின் புகார்



  • May 04, 2024 12:34 IST
    காங். தலைவர் பலி: 3 தனிப்படைகள் அமைப்பு 

    நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தன சிங் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட  விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை- நெல்லை எஸ்.பி சிலம்பரசன்



  • May 04, 2024 12:29 IST
    காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக கண்டெடுப்பு

    மாயமான நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் தன சிங் சடலமாக கண்டெடுப்பு. உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மே 2 முதல் ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 



  • May 04, 2024 12:23 IST
    தமிழகத்தில் கடல் சீற்றம் - எச்சரிக்கை

    குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் சிகப்பு நிற எச்சரிக்கை. விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை



  • May 04, 2024 12:04 IST
    கடல் கொந்தளிப்பு: 'கல்லக்கடல்' எனும் நிகழ்வு ஏற்படும்

    காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் - இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை

    'கல்லக்கடல்' எனும் நிகழ்வு இன்றும், நாளையும் ஏற்படும். கடல் அலை சீற்றத்துடன் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் சிகப்பு நிற எச்சரிக்கை கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படி மீனவர்களுக்கு அறிவுரை



  • May 04, 2024 12:02 IST
    அமைச்சர் ரோஜா பிரச்சாரம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

    ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் ரோஜா. பிரசாரத்திற்காக சென்ற போது வேமாபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு.

    கடந்த 5 ஆண்டுகளில் தங்கள் கிராமத்திற்காக ரோஜா ஒன்றும் செய்யவில்லை என குற்றச்சாட்டு/ எதிர்ப்பை மீறி கிராமத்திற்கு சென்று ரோஜா பிரசாரம்.வீடுகளுக்குள் சென்று கதவுகளை பூட்டிக்கொண்ட பொதுமக்கள்



  • May 04, 2024 12:00 IST
    கனகசபையில் சலசலப்பு: 40 பேர் கைது

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனகசபையில் சலசலப்பு

     நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனர் சேலம் சத்தியபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். தீட்சிதர்கள் இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு 

    சிவனடியார்களை வெளியே அழைத்து சென்ற போலீசார். சேலம் சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த போலீசார். 



  • May 04, 2024 11:26 IST
    நாளை நீட் தேர்வு: என்.டி.ஏ முக்கிய அறிவுரை 

    மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக் கூடியவையாக இருக்க வேண்டும். மாணவர்கள் எழுதிப் பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது. புக்லெட்டிலேயே எழுதிக் கொள்ளலாம்- நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அறிவுரை 



  • May 04, 2024 11:26 IST
    நாளை நீட் தேர்வு: என்.டி.ஏ முக்கிய அறிவுரை 

    மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக் கூடியவையாக இருக்க வேண்டும். மாணவர்கள் எழுதிப் பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது. புக்லெட்டிலேயே எழுதிக் கொள்ளலாம்- நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமை அறிவுரை 



  • May 04, 2024 10:58 IST
    பயோ-பிரேக் இல்லை

    ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வின் முதல் ஒரு மணி நேரத்திலும் கடைசி அரை மணி நேரத்திலும் பயோ-பிரேக் எதுவும் அனுமதிக்கப்படவில்லை என்று தேசிய தேர்வு முகமை (NTA) தெரிவித்துள்ளது.



  • May 04, 2024 10:42 IST
    நா.த.க. நிர்வாகிகள் கைது

    வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, கடலூர் மாவட்டம் வடலூரில் தடையை மீறி போராட்டம் அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கைது

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாக கூறி காவல்துறை அனுமதி மறுப்பு



  • May 04, 2024 10:42 IST
    பள்ளி கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை

    கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது. அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி எச்சரிக்கை



  • May 04, 2024 10:31 IST
    எச்.டி.ரேவண்ணா வழக்கு இன்று விசாரணை

    பெண் கடத்தல் வழக்கில் முன் ஜாமின் கோரி கர்நாடக முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா தொடர்ந்த வழக்கை பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

    மேலும் ஒரு வழக்கில் மைசூரு குற்றவியல் நீதிமன்றத்திலும் அவர் முன் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்



  • May 04, 2024 10:03 IST
    ஐபிஎல் இன்றைய போட்டி

    ஐபிஎல் 52வது லீக் போட்டியில் இன்று குஜராத் Vs பெங்களூரு மோதுகின்றன.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • May 04, 2024 09:41 IST
    சவுக்கு சங்கரை அழைத்து சென்ற காவல்துறை வாகனம் விபத்து

    யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து விசாரணைக்காக  கோவைக்கு அழைத்து சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் பகுதியில் விபத்துக்குள்ளானது;

    காவல்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் கோவைக்கு அழைத்து செல்கின்றனர்



  • May 04, 2024 09:13 IST
    தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் 6ம் தேதி வரை வெப்ப அலை வீசும். இன்று வெப்ப அலை வீச கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது

    இந்திய வானிலை ஆய்வு மையம்



  • May 04, 2024 08:39 IST
    கனமழைக்கு வாய்ப்பு

    மே 7, 8 ஆகிய தேதிகளில் வட தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 04, 2024 08:36 IST
    அமித்ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு

    தேர்தல் விதிமுறைகளை மீறியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது தெலங்கானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த மே.1-ம்  தேதி ஹைதராபாத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட தேர்தல் பிரசார வாகன பேரணியில் குழந்தைகளை பயன்படுத்தியதாக, தெலங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு



  • May 04, 2024 07:50 IST
    சவுக்கு சங்கர் கைது

    பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்



  • May 04, 2024 07:41 IST
    தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்தரி வெயில்

    தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கத்தரி வெயில் இன்று  தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து இருக்கும்.



  • May 04, 2024 07:40 IST
    வானிலை அப்டேட்

    தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகரிக்கும். தருமபுரி, திருத்தணி, திருப்பதூர் உட்பட 10 இடங்களில் 42 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகும்.

    6ம் தேதி வரை வட தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும். நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூரில் மே 7ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

    -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்



  • May 04, 2024 07:40 IST
    ரயில் சேவை ரத்து

    பச்சகுப்பம் ரயில்வே யார்டில் நடைபெற்றுவரும் பொறியியல் பணிகள் காரணமாக காட்பாடி - ஜோலார்பேட்டை இடையிலான MEMU ரயில் சேவை இன்று மற்றும் 6ம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு



  • May 04, 2024 07:40 IST
    பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

    மே 20 ஆம் தேதிக்கு பிறகு சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    அதேநேரம் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



  • May 04, 2024 07:39 IST
    கோத்தகிரியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

    மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனைப்பகுதியில் எதிர்பாராத விதமாக சுற்றுலா பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment