Advertisment

Tamil News Updates: நீட் தேர்வு ஹால் டிக்கெட் ரிலீஸ்: 5-ம் தேதி தேர்வு

Tamil Nadu Live News Update Today- 1 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neet campus

Tamil news Updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates               

நீட் தேர்வு ஹால் டிக்கெட் ரிலீஸ்: 5-ம் தேதி தேர்வு

இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைகான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (NEET UG 2024) ஹால் டிக்கெட்டை மே 1ஆம் தேதி தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டது.

  • May 01, 2024 21:45 IST
    மாணவி டயாப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத அனுமதி

    தீ விபத்தில் சிக்கி சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட மாணவி டயாப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத மதுரை உயர் நீதிமன்ற கிளை அனுமதி அளித்துள்ளது.



  • May 01, 2024 19:49 IST
    பிரஜ்வால் ரேவண்ணா விவகாரம்- அமித் ஷா பேச்சு

     

    “கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு பிரஜ்வால் ரேவண்ணா குறித்து தெரியும்; வொக்கலிக்க சமூகத்தினர் வாக்களிக்கும் வரை அவர்கள் காத்திருந்தனர்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.



  • May 01, 2024 19:10 IST
    சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்யத் தடை - தேர்தல் ஆணையம்

    தெலங்கானா முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்யத் தடைவிதித்து இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • May 01, 2024 19:10 IST
    தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு

    தமிழ்நாட்டில் 18 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் இன்று பதிவாகி உள்ளது.
    அந்த இடங்கள், கரூர் பரமத்தி  (111°F), வேலூர் (111°F), ஈரோடு (110°F), திருச்சி (110°F), திருத்தணி (109°F), தருமபுரி (107°F), சேலம் (107°F), மதுரை நகரம் (107°F), மதுரை விமான நிலையம் (107°F), திருப்பத்தூர் (107°F), நாமக்கல் (106°F), தஞ்சாவூர் (106°F), மீனம்பாக்கம்  (105°F), கடலூர் (104°F), பாளையங்கோட்டை  (104°F), கோவை (104°F), நுங்கம்பாக்கம் (102°F), நாகப்பட்டினம் (102°F) பதிவாகி உள்ளது.



  • May 01, 2024 19:07 IST
    சின்னங்களைப் பதிவேற்றும் கருவிகளைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் அறிவுரை

    சின்னங்களைப் பதிவேற்றும் கருவிகளைப் பாதுகாத்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. சின்னத்தைப் பதிவேற்றும் கருவிகளை தேர்தல் முடிவு வெளியாகி 45 நாட்களுக்கு பாதுகாப்பாக வைக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.



  • May 01, 2024 19:03 IST
    மோடியின் உத்தரவாதங்கள் வெறும் வாக்குறுதிகள் அல்ல - பிரதமர் மோடி 

    குஜராத்தில் பிரதமர் மோடி பரப்புரை: “மோடியின் உத்தரவாதங்கள் வெறும் வாக்குறுதிகள் அல்ல; இந்தியாவின் திறமையைப் பற்றிய எனது அனுபவம்; நான் முதல்முறையாக மக்களவைக்கு வந்தபோது டீ விற்பவர் என்ன செய்வார் என காங்கிரஸ் கேலி செய்தது; ஒட்டுமொத்த மோடி, ஓ.பி.சி சமூகத்தை திருடர்கள் என்று பெருமையுடன் அழைத்தார் காங்கிரஸ் இளவரசர்” என்று சாடினார்.



  • May 01, 2024 19:00 IST
    அஜித்குமாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த Good Bad Ugly படத் தயாரிப்பாளர்கள்

    நடிகர் அஜித்குமாரை சந்தித்து பிறந்தநாளில் Good Bad Ugly படத்தின் தயாரிப்பாளர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



  • May 01, 2024 18:22 IST
    காங்கிரஸில் இணைந்தார் தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர் 

    தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார். கருணா சாகர் மற்றும் அவரது மனைவி அஞ்சு காங்கிரஸில் இணைந்தனர். பீகாரைச் சேர்ந்த கருணா சாகர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.



  • May 01, 2024 18:20 IST
    மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான்

    நவகிரகங்களில் ஒன்றான குரு பகவான் மேஷ ராயில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்தார். குரு பெயர்ச்சியையொட்டி, தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெறுகிறது.



  • May 01, 2024 18:00 IST
    சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்

    இயக்குநர் நெல்சன் திலீப்குமார் Filament Pictures என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அப்டேட் மே 3ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



  • May 01, 2024 17:58 IST
    அயோத்தி ராமர் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு

    அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார். 



  • May 01, 2024 17:23 IST
    ராமர் கோவிலில் குடியரசுத் தலைவர் வழிபாடு

    அயோத்தியாவில் உள்ள ராமர் கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு செய்தார்



  • May 01, 2024 16:59 IST
    மோடிக்கு கர்நாடக முதல்வர் கடிதம்

    பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கு வேண்டும் என பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்



  • May 01, 2024 16:44 IST
    பாலியல் புகார்; போலீஸ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரி பிரஜ்வால் ரேவண்ணா பதில் மனு

    கர்நாடகாவில் பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணா, போலீஸ் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் சம்மனுக்கு பதில் அளித்துள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதால் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இவரது மீதான பாலியல் புகார்களை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது.



  • May 01, 2024 16:25 IST
    மே முதல் வாரத்திற்கு பின் தமிழகத்தில் மழை பெய்யும்; தனியார் வானிலை ஆர்வலர்

    கோடையை குளிர்விக்க மே முதல் வாரத்திற்கு பின் தமிழகத்தின் பல இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என தனியார் வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்



  • May 01, 2024 16:00 IST
    நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதானவர் தற்கொலை

    நடிகர் சல்மான்கான் வீட்டின் அருகே கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், கைதான அனுஜ்தாபன் என்பவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மும்பை சிறப்பு பிரிவு போலீசாரின் காவலில் இருந்த அனுஜ்தாபன் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்



  • May 01, 2024 15:38 IST
    ஏற்காடு பேருந்து விபத்து; போக்குவரத்துத் துறை துணை ஆணையர் ஆய்வு

    ஏற்காடு மலைப்பகுதியில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போக்குவரத்துத் துறை துணை ஆணையர் பிரபாகரன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஏற்காட்டிற்கு வரும் வாகன ஓட்டுநர் உரிமங்கள் தீவிர தணிக்கை செய்யப்படுகிறது. ஏற்காடு நுழைவு வாயிலில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் இயக்கப்படும் பேருந்துகளில் இருக்கையில் அமர்ந்து செல்கிறார்களா? என சோதனை நடைபெறுகிறது



  • May 01, 2024 15:07 IST
    விருதுநகர் வெடி விபத்து; மு.க.ஸ்டாலின் இரங்கல்

    விருதுநகர் அருகே வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வெடிவிபத்தில் இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோரின் வாரிசுகளுக்குத் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • May 01, 2024 14:34 IST
    3 தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வட தமிழக உள் மாவட்டங்களில் 3 தினங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை "4, 5ஆம் தேதிகளில் வெப்பநிலை குறையும்" வரும் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை குறையும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். 



  • May 01, 2024 14:32 IST
    கல்குவாரியில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம்

    விருதுநகர் : தனியார் கல்குவாரியில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரம் ஆவியூர் காவல் நிலையத்தில் குவாரி பங்குதாரர் சேது சரண் சரணடைந்தவரிடம் மாவட்ட எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா விசாரணை.



  • May 01, 2024 14:31 IST
    ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டிப்பு

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் மே 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.  டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார் 5 பேரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மே 6 வரை நீட்டிப்பு



  • May 01, 2024 14:10 IST
    மே தினம் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை

    உழைப்பாளர் தினத்தையொட்டி தேமுதிக தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்த பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் மே தினம் - விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை உழைப்பாளர் தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 



  • May 01, 2024 13:20 IST
    கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்

    "கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படலாம் என்று கூறப்படும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்கள் குறைதல் பாதிப்பு ஏற்படலாம் என பிரிட்டன் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனிக்கா நிறுவனம் ஒப்புதல் கோவிஷீல்டு தடுப்பூசி - உச்சநீதிமன்றத்தில் மனு



  • May 01, 2024 13:01 IST
    சாலையில் கொட்டப்பட்ட ஆதார் அட்டைகள்

    திருச்சி லால்குடி அருகே பூவாளூர் சாலையில் 500க்கும்  மேற்பட்ட ஆதார் அட்டைகள் கொட்டப்பட்டதால் அதிர்ச்சி. பூவாளூரைச் சேர்ந்தவர்களின் ஆதார் அட்டைகள் குறித்து காவல்துறைக்கு தகவல். வாகனங்களில் இருந்து ஆதார் அட்டைகள் தவறி விழுந்தனவா? அல்லது வீசப்பட்டதா என விசாரணை



  • May 01, 2024 12:46 IST
    தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம்

    தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி.

    தண்ணீர் பந்தல் திறப்பின் மூலமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது - தேர்தல் ஆணையம்

    தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்

    சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்

    தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம் - தேர்தல் ஆணையம்

     

     



  • May 01, 2024 12:17 IST
    ஜாபர் சாதிக் வழக்கு: அமலாக்கத் துறைக்கு அனுமதி

    திகார் சிறைக்கு சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய அனுமதி.

    சுனில் சங்கர் யாதவ் உள்ளிட்ட சென்னை அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு



  • May 01, 2024 12:13 IST
    தனக்குத் தானே பிரசவம் - செவிலியர் மீது வழக்குப் பதிவு

    சென்னையில், திருமணமாகாமல் கர்ப்பமான செவிலியர், தனக்குத் தானே பிரசவம் பார்த்த போது குழந்தை பலியான சம்பவம்.

    செவிலியர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு. குற்றத்தை புரியவேண்டும் என்ற நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு.

    செவிலியரின் காதலனை தீவிரமாக தேடி வரும் போலீசார். குழந்தையை யாருக்கும் தெரியாமல் பெற்றெடுத்து மறைக்க திட்டமிட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை.



  • May 01, 2024 11:31 IST
    இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து

    உழைப்பாளர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இசை இளையராஜா என குறிப்பிட்டுள்ளார்.

    "கண் சிவந்தால் மண் சிவக்கும்" என்ற படத்தின் பாடலை வெளியிட்டு வைரமுத்து பதிவு. வைரமுத்துவின் பதிவில் எழுத்து - வைரமுத்து, இசை - இளையராஜா, குரல் - ஜேசுதாஸ் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம் - கவிஞர் வைரமுத்து

    அண்மையில் இளையராஜா பற்றி வைரமுத்து கூறிய கருத்துக்கு கங்கை அமரன் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவை மீண்டும் மறைமுகமாக சீண்டிய வைரமுத்து



  • May 01, 2024 11:25 IST
    ரஜினியின் 'கூலி' படத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

    நடிகர் ரஜினிகாந்தின் கூலி படத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்

    கூலி திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

    இசை மறு உருவாக்கத்திற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அந்த பகுதியை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்

    "அனுமதி பெறாவிட்டால் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்

     



  • May 01, 2024 10:56 IST
    ஏற்காடு பேருந்து விபத்து- மு.க.ஸ்டாலின் இரங்கல்

    ஏற்காடு மலைப் பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட்டேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்

    மு.க.ஸ்டாலின்



  • May 01, 2024 10:37 IST
    ரூ.4 கோடி பறிமுதல்- மீண்டும் சம்மன் அளிக்க சிபிசிஐடி முடிவு

    சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், நேற்று சுமார் 9 மணி நேரமாக  சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், 3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் சம்மன் அளிக்க சிபிசிஐடி முடிவு



  • May 01, 2024 10:33 IST
    10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் கருணாநிதி பாடம்

    9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது

    கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது



  • May 01, 2024 09:49 IST
    இபிஎஸ் மே தினம் வாழ்த்து



  • May 01, 2024 09:48 IST
    மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து



  • May 01, 2024 09:48 IST
    கமல் மே தின வாழ்த்து

    உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.

    உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.

    கமல் மே தின வாழ்த்து



  • May 01, 2024 09:48 IST
    ஏற்காடு பேருந்து விபத்து

    ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றுள்ளது.

    ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.



  • May 01, 2024 09:08 IST
    அஜித்தின் 'பில்லா’ இன்று ரீ ரிலிஸ்

    நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளையொட்டி, திரையரங்குகளில் பில்லா திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'பில்லா' வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 01, 2024 08:39 IST
    நடப்பாண்டு கனமழை உறுதி- பிரதீப் ஜான்

    தமிழகம் உள்ளிட்ட தெற்கு தீபகற்ப மாநிலங்களில் கனமழை பெய்ய உள்ளது. 

    எல் நினோ வருகையால் தென் மேற்கு பருவக்காற்று தீவிரம் பெற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்யும்.  தற்போதைய வானிலை முன் கணிப்புகளின் அடிப்படையில் நடப்பாண்டு கனமழை உறுதி

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்       



  • May 01, 2024 08:12 IST
    ஐபில் இன்றைய போட்டி

    ஐபில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டான சேப்பாக்கம் சிதம்பரத்தில் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.



  • May 01, 2024 07:26 IST
    வட உள் மாவட்டங்களில் இன்று முதல் வெப்ப அலை வீசும்

    தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 110 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • May 01, 2024 07:26 IST
    நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை

    மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில், முன்னாள் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனையும், 2 லட்சத்து 50 ரூபாய் அபராதமும் விதித்து  ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • May 01, 2024 07:25 IST
    ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து

    சேலம் மாவட்டம், ஏற்காடு காட்டுரோடு முனியப்பன் கோயில் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.



  • May 01, 2024 07:24 IST
    சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை

    கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை, இந்த தடை இன்று மற்றும் நாளை அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் அறிக்கை



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment