Advertisment

Tamil News Highlights: இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை – இ.பி.எஸ்

Tamil Nadu News Update Today- 7 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
eps trichy meeting

Tamil News live Updates

Tamil Nadu Chennai News Update 

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மு.க. ஸ்டாலினுக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

Tamil nadu

கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்துச் செங்கோலை வழங்கினார் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள்.

  • Apr 07, 2024 22:18 IST
    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை – இ.பி.எஸ்

    இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை, பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் இந்தியா கூட்டணி முரண்பாடுடன் செயல்படுகிறது என தேர்தல் பரப்புரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்



  • Apr 07, 2024 21:33 IST
    தி.மு.க ஆட்சியில் அரிசி, மளிகைப் பொருட்கள் விலையேற்றம் – இ.பி.எஸ்

    தி.மு.க ஆட்சியில் அரிசி, மளிகைப் பொருட்கள் விலையேற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு வியாபாரிகளின் வியாபாரம் குறைந்துவிட்டது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் கூறினார்.



  • Apr 07, 2024 21:22 IST
    நெல்லை விரைவு ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி பணம் கருவூலத்தில் ஒப்படைப்பு

    நெல்லை விரைவு ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி பணத்தை பெட்டிகளில் வைத்து சீலிட்ட நிலையில் சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.



  • Apr 07, 2024 20:12 IST
    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் - உதயநிதி

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும், சிலிண்டர் விலை குறைக்கப்படும் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்



  • Apr 07, 2024 19:59 IST
    தி.மு.க. வீழ்ந்தால், பழைய ஓய்வூதிய திட்டம்: மருத்துவர் ராமதாஸ்


    அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே திமுக வீழ்ந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் தானாக கிடைக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Apr 07, 2024 19:34 IST
    சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

     

    சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து, ஓமலூர் பகுதியில் உதயநிதி பரப்புரை செய்தார்.



  • Apr 07, 2024 18:53 IST
    தமிழ்நாட்டில் இரட்டை இலக்க வாக்கு வங்கியை பா.ஜ.க பெறும்; பிரசாந்த் கிஷோர்

    அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் பா.ஜ.க இரட்டை இலக்க வாக்கு வங்கியை பெறும். மேற்கு வங்கத்திலும், ஒடிசாவில் முதல் இடத்தில் இருப்பார்கள்.
    தெலங்கானாவில் இரண்டாம் இடத்தில் வர வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென்னிந்தியாவில் பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை அதிகரிக்கும்” என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.



  • Apr 07, 2024 18:28 IST
    வயநாட்டில் ராகுல் காந்தி மிகப்பெரிய வெற்றி பெறுவார்; டி.கே. சிவக்குமார்

     

    “இக்கட்டான காலங்களில், பாஜகவுக்கு தூக்கமில்லாத இரவுகளைக் கொடுக்கும் எங்கள் தலைவரை நீங்கள் தேர்ந்தெடுத்ததால், ஒட்டுமொத்த நாடும், காங்கிரஸ்காரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நீங்கள் வயநாட்டிலிருந்து அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். எனவே நமது தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்ததற்காக அனைத்து மக்கள் சார்பாக மலையாளிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறையும் இங்கு ராகுல் காந்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவார்” என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறினார்.



  • Apr 07, 2024 17:46 IST
    திருமாவளவனுக்கு ஆதரவாக QR Code மூலமாக டிஜிட்டல் பிரசாரம்

    வேப்பூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் QR Code ஐ scan செய்து பரிசோதித்தனர்.



  • Apr 07, 2024 17:43 IST
    பா.ஜ.க-வுக்கு தென்னிந்தியா மரண அடி கொடுக்கும் - மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்: “பா.ஜ.க-வுக்கு தென்னிந்தியா மரண அடி கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Apr 07, 2024 17:17 IST
    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மோடியே காரணம் - ஜே.பி. நட்டா மதுரையில் வாக்கு சேகரிப்பு

    மதுரை, திருமங்கலம் பிரசாரக் கூட்டத்தில் வாக்கு சேகரித்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா: “பா.ஜ.க-வின் 10 ஆண்டு ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது. பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு நாடு வந்ததற்கு, பிரதமரின் தலைமை பண்பே காரணம்” என்று பேசினார்.



  • Apr 07, 2024 16:53 IST
    நாங்கள் ஜெயித்து விடுவோம் என்ற பயத்தில் எல்லோரும் மோடியை திட்டுகிறார்கள் - ராதிகா சரத்குமார்

    விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ராதிகா சரத்குமார்: “நாங்கள் ஜெயித்து விடுவோம் என்ற பயத்தில் எல்லோரும் பிரதமர் மோடியை திட்டுகிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



  • Apr 07, 2024 16:40 IST
    வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும் - வானிலை மையம்

    வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்; சென்னையில் 2 நாட்களுக்கு அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.



  • Apr 07, 2024 16:01 IST
    வெற்றி பெற்றால் விழுப்புரத்திற்கு விமான நிலையம் கொண்டுவருவேன் - பா.ம.க வேட்பாளர் வாக்குறுதி

    விழுப்புரம் பா.ம.க வேட்பாளர் முரளி சங்கர் வாக்குறுதி: “தேர்தலில் வென்றால் விழுப்புரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் கொண்டு வருவேன்” என வாக்குறுதி அளித்துள்ளார்.



  • Apr 07, 2024 15:41 IST
    ஜே.பி. நட்டா ரோட் ஷோ மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி - ஐகோர்ட்

    திருச்சி கண்ணப்பன் ஹோட்டலில் இருந்து இ.எஸ்.ஐ வரை வாகனப் பேரணி நடத்த ஜே.பி. நட்டாவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியது. 1.5 கி.மீ தூரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ரோட் ஷோ நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Apr 07, 2024 15:01 IST
    இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணியாக இருக்கிறது- ஜெ.பி.நட்டா

    "I.N.D.I.A கூட்டணி ஊழல் கூட்டணியாக இருக்கிறது; சனாதனத்தை இழிவாக பேசுபவர்களை இந்த தேர்தலில் முடிவுகட்ட வேண்டும்; தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா



  • Apr 07, 2024 14:17 IST
    தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில், தேர்தல் பறக்கும் படை சோதனை

    தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில், தேர்தல் பறக்கும் படை சோதனை மணப்பாடு பகுதியில் பிரசாரத்திற்கு சென்ற போது, வாகனத்தை நிறுத்தி சோதனை பிரசார வாகனம் மற்றும் கனிமொழியின் பைகளில் சோதனை செய்த அதிகாரிகள்



  • Apr 07, 2024 14:05 IST
    ரூ.4 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

    சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஊழியர்களிடம் இருந்து ரூ.4.5 கோடி பறிமுதல் - ஆர்.எஸ்.பாரதி நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்களின் இடங்களிலும் சோதனை நடத்த வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி "வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்". 



  • Apr 07, 2024 13:53 IST
    பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்

    பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் 10 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன் என்று அண்ணாமலை சொன்னார், ரூ.4 கோடி பிடிபட்டுள்ளது ஜனநாயகம் பணநாயகம் ஆகிவிட்டது, அதனால் தான் எந்த கட்சியிடனும் கூட்டணி சேரவில்லை பணம் கொடுக்கும் வேட்பாளர்களுக்கு மட்டும் தடை விதிக்க வேண்டும், கட்சிக்கு கூடாது" - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்



  • Apr 07, 2024 13:52 IST
    சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்

    சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி தமிழ்நாட்டின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர். 



  • Apr 07, 2024 13:19 IST
    போலி இணையதளம் மூலம் ஐபிஎல் டிக்கெட் மோசடி

    பிரபல புக்கிங் இணையதளங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கி மோசடி சேப்பாக்கம் மைதானத்தில், வீரர்களின் அருகேயே அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என பல லட்சம் மோசடி செய்த கும்பல் சென்னை மற்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை சென்னை - பெங்களூரு போட்டியின் போது, அதிகளவு டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிப்பு.



  • Apr 07, 2024 12:52 IST
    தேர்தலில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது- குஷ்பு

    தேர்தலில் தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ள முடியாது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு, குஷ்பு கடிதம்

    மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி, என்னால் இனி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முடியாது- சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்வேன் - குஷ்பு



  • Apr 07, 2024 12:52 IST
    நட்டா பேரணிக்கு அனுமதி மறுப்பு - நீதிமன்றத்தில் மனு

    திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்

    அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல்

    அவசர வழக்காக சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது

    திருச்சியில் இன்று ரோடு ஷோ செல்வதற்கு, காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுப்பு



  • Apr 07, 2024 12:29 IST
    தமிழர்களின் கலாச்சாரத்தை தி.மு.க அழிக்கிறது: ஜெ.பி. நட்டா

    தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க தி.மு.க முயற்சி செய்து வருகிறது. செங்கோல் விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ், தி.மு.க எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பா.ஜ.க தான்  காத்து வருகிறது- அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் பா.ஜ.க தேசிய தலைவர்  ஜெ.பி. நட்டா பரப்புரை



  • Apr 07, 2024 12:21 IST
    மாரடைப்பு ஏற்பட்டு போராடிய இலங்கை மீனவரை மீட்ட இந்திய கடற்படை

    மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இலங்கை மீனவர். நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இலங்கையை சேர்ந்த மீனவர் சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திய கடற்படையினர், மீனவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்றனர். இலங்கை மீனவரை, இந்திய கடற்படை மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. 



  • Apr 07, 2024 11:58 IST
    புகழேந்தி உடலுக்கு அரசு மரியாதை

    மறைந்த திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உடலுக்கு அரசு மரியாதை. விக்கிரவாண்டி தொகுதியின் எம்.எல்.ஏ. புகழேந்தி நேற்று காலை காலமானார். புகழேந்தி உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை புகழேந்தியின் இறுதிச்சடங்கில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்பு. 



  • Apr 07, 2024 11:57 IST
    ரூ.4 கோடி பறிமுதல்: சாகு விளக்கம்

    "தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல செய்யப்பட்ட விவகாரம்  தொடர்பாக அனைத்து தகவல்களும் வருமான வரித்துறைக்கு அனுப்பி வைப்பு. 

    தேர்தல் காலத்தில், ₹10 லட்சத்துக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தொடர்பான தகவல்கள் வருமான வரித்துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும்"

    - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு



  • Apr 07, 2024 11:54 IST
    மஞ்சு வாரியாரின் காரில் பறக்கும் படை சோதனை

    திருச்சி: நடிகை மஞ்சு வாரியர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை. சோதனை ஒருபுறம் நடக்க, அவருடன் செல்ஃபி எடுத்தக்கொண்ட ரசிகர்கள்!.



  • Apr 07, 2024 11:25 IST
    ரூ.4 கோடி பறிமுதல்: ஐ.டி சோதனைக்கு பரிந்துரை

    சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பாஜக பிரமுகரிடம் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வருமான வரித்துறை சோதனைக்கு பரிந்துரை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல்



  • Apr 07, 2024 11:23 IST
    அதிமுக பற்றி ஸ்டாலின் விமர்சனம்

    அதிமுக கூட்டணியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. Simply Waste.

    பாஜக வேட்பாளரின் நன்மைக்காதான் அதிமுக இங்கு தேர்தலில் நிற்கிறது - புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு 



  • Apr 07, 2024 11:00 IST
    பாஜக உறுப்பினரை துணைநிலை ஆளுநராக போட்டது பாஜக அரசு

    தமிழகத்தில் உள்ள ஆளுநராலும் நாங்கள் படாத பாடு படுகிறோம்

    புதுச்சேரி போலவே, தமிழகத்திலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் ஆளுநராக இருக்கிறார்

    ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த கிரண்பேடி, ஆளுநராக இருந்த போது சட்டத்தை மீறி செயல்பட்டார்

    முன்னாள் முதல்வர் நாராயண சாமிக்கு ஒத்துழைக்காமல் நிர்வாகத்தை சீர்குலைத்தனர்

    புதுச்சேரியில் ரேஷன் அரிசி, இலவச திட்டங்களை தடை செய்தனர்

    பாஜக உறுப்பினரை துணைநிலை ஆளுநராக போட்டது பாஜக அரசு

    புதுச்சேரியை பின்னோக்கி கொண்டு செல்ல பாஜக செயல்படுகிறது

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு



  • Apr 07, 2024 10:57 IST
    வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து

    கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து. 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்

    சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீப்பற்றி எரிவதாக தகவல். ஹிட்டாட்சி, பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகள் நகர்த்தப்பட்டும் தீ பரவாமல் தடுக்கப்படுகிறது

    விமானப்படையில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன

    100க்கும் மேற்பட்ட தீயணைப்பு, மாநகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்



  • Apr 07, 2024 10:35 IST
    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது

    2006 திமுக அறிக்கை போலவே, தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது

    புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்படும்

    மாமல்லபுரம் - புதுச்சேரி, கடலூர் - புதுச்சேரி ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்

    புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும்

    காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்

    கோயில் நகரம் திட்டத்தின் கீழ் காரைக்கால் மேம்படுத்தப்படும்

    புதுச்சேரியில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்

    - முதலமைச்சர் ஸ்டாலின்                                            



  • Apr 07, 2024 10:21 IST
    மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

    சமூக நீதி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என மோடி ஒரு நாளும் சொன்னதில்லை

    புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு



  • Apr 07, 2024 10:02 IST
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான தங்கும் விடுதியிலும் போலீசார் சோதனை

    தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தங்கும் விடுதியிலும் போலீசார் சோதனை



  • Apr 07, 2024 09:58 IST
    யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது

    மாநிலங்களை மாநகராட்சிகள் போல, புதுச்சேரியை கிராம பஞ்சாயத்து போல நடத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இதற்கு புதுச்சேரி முதலமைச்சரும் துணை போகிறார்

    ஆளுநர்களால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமல்ல, பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களிலும் பிரச்னைதான்

    மாநில உரிமை மட்டுமல்லாமல், யூனியன் பிரதேசங்களுக்கான உரிமைக்காகவும் இந்தியா கூட்டணி போராடுகிறது

    புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை



  • Apr 07, 2024 09:40 IST
    சென்னையில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

    அடையாறில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் சோதனை   

    அபிராமபுரத்தில், ஓய்வு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய இணை தலைமை பொறியாளர் வீட்டில் சோதனை

    பணப்பட்டுவாடா தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை என தகவல்



  • Apr 07, 2024 09:22 IST
    தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஜெசிபி மூலம் பிரமாண்ட மாலை



  • Apr 07, 2024 09:12 IST
    நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்

    தமிழர்கள் என கூறும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்ஷங்கர் ஆகியோர் பிரதமர் மோடி பின்னால் ஒளிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்.

    கச்சத்தீவை யாரும் யாருக்கும் தாரைவார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரச்னையை எழுப்புவது இலங்கை தமிழர்களுக்கு செய்யும் மிகப்பெரிய தீங்கு

    ப.சிதம்பரம்



  • Apr 07, 2024 08:50 IST
    மோடி பெரிய நடிகர்

    மோடி போல் நடிப்பதற்கு ஆளே கிடையாது..

    நடிகர் சிவாஜி தற்போது உயிருடன் இருந்திருந்தால், தான் பெற்ற செவாலியர் பட்டத்தை மோடியிடம் கொடுத்துவிடுங்கள், அவர் என்னைவிடப் பெரிய நடிகர் என கூறியிருப்பார்...

    - திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தேர்தல் பரப்புரை



  • Apr 07, 2024 08:30 IST
    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை

    தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் ரூ. 4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.



  • Apr 07, 2024 08:11 IST
    இன்றைய ஐபிஎல் போட்டி

    ஐபிஎல் டி20 தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோத உள்ளன. ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள மும்பை வெற்றிக்கணக்கை தொடங்க கடுமையாக போராடக்கூடும்.

    இரவு 7.30 மணிக்கு லக்னோ ஏகனா மைதானத்தில் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சம பலம வாய்ந்த அணிகள் மோதும் இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.



  • Apr 07, 2024 07:33 IST
    சென்னையில் ரூ. 4 கோடி பறிமுதல்

    சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ரூ.500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேர் கைது. 

    நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவர் வாக்குமூலம்.



  • Apr 07, 2024 07:32 IST
    முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 65.17% நீர் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் - 74.07%

    புழல் - 85.09%

     பூண்டி - 46.8%       

    சோழவரம் - 20.17%

    கண்ணன்கோட்டை - 84.8%



  • Apr 07, 2024 07:32 IST
    ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி

    பெங்களூருக்கு எதிரானப் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.

    முதலில் ஆடிய பெங்களூரு, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான், 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி

    தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 4வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.



  • Apr 07, 2024 07:31 IST
    புகழேந்தியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி



  • Apr 07, 2024 07:30 IST
    மு.க.ஸ்டாலின் அறிக்கை

    அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்

    நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.

    மு.க.ஸ்டாலின்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment