Advertisment

Tamil News Live Updates: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

Tamil Nadu News Update Today- 18 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil news live

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்கத் தடை

தென்காசி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

பழைய குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த அருவிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • May 18, 2024 20:22 IST
  சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தல்

  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

  ஊட்டி, கொடைக்கானல், தேக்கடி, தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  • May 18, 2024 19:39 IST
  கோவையில் கனமழை

  கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மழைநீரில் தத்தளிக்கும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், நீரில் மூழ்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.  • May 18, 2024 17:50 IST
  பா.ஜ.க தலைமை அலுவலகம் முற்றுகை - கெஜ்ரிவால் அறிவிப்பு

  ஆம் ஆத்மி எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் நாளை (மே 19) பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  • May 18, 2024 17:33 IST
  அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை 

  தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், கடலூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி,  விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  • May 18, 2024 17:31 IST
  முன் ஜாமீன் மனு தள்ளுபடி

  ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட புகாரில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  • May 18, 2024 16:44 IST
  பெரம்பலூரில் 140 கிலோ கஞ்சா பறிமுதல்

  பெரம்பலூர், குன்னம் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டு காரில் கஞ்சா கடத்திய நிலையில், ஜி.பி.எஸ் அடிப்படையில் காரின் உரிமையாளர் தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் மடக்கி பிடித்தனர். 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர் • May 18, 2024 16:22 IST
  ராகுல்காந்திக்கு அபராதம் - ஜார்கண்ட் ஐகோர்ட் உத்தரவு

  பிடியாணைக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் விளக்க மனு தாக்கல் செய்யாததால் ராகுல் காந்திக்கு ரூ.1000 அபராதம் விதித்து ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது • May 18, 2024 16:03 IST
  மருத்துவமனை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு

  அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்,  மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. காலை 6 மணி முதல் மணி 2 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. • May 18, 2024 15:44 IST
  பெங்களூரு விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம்

  திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் இயந்திரகோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து 167 பேர் பயணித்த ஏர் இந்தியா விமானம் அவசரமாக திருச்சியில் தரையிறக்கப்பட்டது • May 18, 2024 15:18 IST
  இலங்கை மீனவர்கள் 7 பேர் கைது

  கன்னியாகுமரி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 7 பேர் அத்துமீறி நுழைந்ததால், இந்தியக் கடலோர காவல் படை அவர்களின் படகைப் பறிமுதல் செய்து அவர்களைக் கைது செய்துள்ளது • May 18, 2024 15:00 IST
  2 நாட்களுக்கு தமிழகத்திற்கு ரெட் அலர்ட்

  தமிழ்நாட்டிற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது • May 18, 2024 14:43 IST
  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிப்பு

  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது வாக்கை பதிவு செய்தார். டெல்லியில் உள்ள தொகுதிகளில் வீட்டில் இருந்து வாக்குப்பதிவு செய்ய 5500 மூத்த குடிமக்கள்/ மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் இருந்து வாக்குகள் பெறும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது • May 18, 2024 14:08 IST
  31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

  காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மாலை 4 மண் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்

  GN2LRhNbkAAopjf.png • May 18, 2024 13:53 IST
  குற்றாலம்: முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை நடவடிக்கை

  முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை. குற்றால அருவிகளில் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கையை தெரிவிக்கும் அமைப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை. பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை தயார் செய்து வருகிறோம்- தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்  • May 18, 2024 13:33 IST
  ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையரின் உத்தரவு ரத்து

  சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லாரிகள் மூலம் விற்பனை செய்ததற்காக ரூ.96.10 கோடியை ஜிஎஸ்டி வரியாக செலுத்த கூடுதல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து

  சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு • May 18, 2024 13:16 IST
  பெண் எம்.பி. மீது தாக்குதல் : பிபவ்குமார் கைது

  பெண் எம்.பி. மீது தாக்குதல் - பிபவ்குமார் கைது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமார் கைது ஆம் ஆத்மி பெண் எம்.பி., ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது டெல்லி முதல்வரின் வீட்டில் இருந்த பிபவ் குமாரை போலீசார் கைது செய்தனர் • May 18, 2024 13:07 IST
  கெஜ்ரிவால் உதவியாளர் கைது

  ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை, டில்லி போலீசார், முதல்வர் இல்லத்தில் இருந்து, காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.  • May 18, 2024 13:01 IST
  ஜெயக்குமார் மரணம்: புதிய கோணத்தில் விசாரணை

  ஜெயக்குமார் த*கொலை..? புதிய கோணத்தில் விசாரணை

  நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் கொலைக்கான முன் விரோதம் இல்லை.

  கழுத்து நெரிக்கப்படவில்லை - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். கடிதம் எழுதியது ஜெயக்குமார் தான்- உறுதி செய்த தடயவியல் அறிக்கை.

  த*கொலை என்ற கோணத்தில் விசாரணை - மாவட்ட காவல்துறை • May 18, 2024 12:47 IST
  பெண் எம்.பி மீது தாக்குதல்: மருத்துவ அறிக்கை

  டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்

  ஸ்வாதி மாலிவாலின் வலது கன்னம் மற்றும் இடது காலில் சிராய்ப்பு இருந்தது

  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தகவல் • May 18, 2024 12:47 IST
  பெண் எம்.பி மீது தாக்குதல்: மருத்துவ அறிக்கை

  டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்

  ஸ்வாதி மாலிவாலின் வலது கன்னம் மற்றும் இடது காலில் சிராய்ப்பு இருந்தது

  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தகவல் • May 18, 2024 12:32 IST
  கெஜ்ரிவால் படத்தை நீக்கினார் மலிவால்

  ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மலிவால் தனது X தளத்தின் முகப்பில் இருந்து முதல்வர் கெஜ்ரிவால் படத்தை நீக்கினார். 

  டெல்லியில் ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால், கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்டதாக புகார் கூறியிருந்தார்.   • May 18, 2024 12:15 IST
  தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் கூட்டம்.

  தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதும் கூட்டம். 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம். நேற்று ஒரே நாளில் 71,510 பேர் சாமி தரிசனம் - ரூ.3.63 கோடி உண்டியல் காணிக்கை  • May 18, 2024 11:52 IST
  100 நாள் வேலைத் திட்டம்: தினசரி ஊதியம் உயர்வு

  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தினசரி ஊதியத்தை ₹319 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

  இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும். மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  • May 18, 2024 11:21 IST
  மேட்டுப்பாளையம் பகுதிகளில் 17 செ.மீ. மழை பதிவு

  நீலகிரி மாவட்டம் குன்னூர், கோவை மாவட்டம் பில்லூர் அணை, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவானது.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் தேனி மாவட்டம் மஞ்சளாற்றில் 9 செ.மீ.  தென்காசியில் சிவகிரி, நீலகிரியில் கோத்தகிரி, பர்லியார், திருப்பூரில் மடத்துக்குளம் பகுதிகளில் தலா 8 செ.மீ. மழைப்பொழிவு

  நீலகிரி மாவட்டத்தின் ஆலக்கரை, பந்தலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் தலா 7 செ.மீ. மழைப்பொழிவு • May 18, 2024 11:19 IST
  நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை

  சேலம்: ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் • May 18, 2024 10:53 IST
  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 18, 2024 10:51 IST
  5ம் கட்ட மக்களவைத் தேர்தல்- இன்றுடன் பிரசாரம் நிறைவு

  நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5ம் கட்டத் தோ்தல் நாளை மறுநாள் (மே 20) நடைபெறவுள்ள நிலையில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, அமேதி, லக்னோ உள்பட 49 தொகுதிகளில் இன்று (மே 18) பிரசாரம் நிறைவடைகிறது.

  5ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 49 தொகுதிகளில் நடைபெற உள்ளது. • May 18, 2024 10:50 IST
  தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் 100 பவுன் நகைகளை கொள்ளை

  தூத்துக்குடி மாநகராட்சி சின்னமணி தெருவை சேர்ந்தவர் சுகுமார் - மீன்வளக்கல்லூரியின் ஓய்வுபெற்ற துணை வேந்தர். இவர் சென்னை சென்ற நிலையில் பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

  கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். • May 18, 2024 10:05 IST
  தங்கம் விலை

  சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.80 உயர்ந்து ரூ.6,850 ஆகவும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,800-க்கும் விற்பனையாகிறது • May 18, 2024 10:03 IST
  நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு

  நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒத்திவைப்பு

  பழைய கப்பல் என்பதால் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரி செய்தால் மட்டுமே கப்பல் போக்குவரத்துக் கழகம் உரிய அனுமதி வழங்கும் என தகவல்

  டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு • May 18, 2024 09:33 IST
  5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

  தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு

  கேரளாவில் 20ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை அதிக கனமழை பதிவாக வாய்ப்பிருப்பதால் ரெட் அலர்ட்

  தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

  - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் • May 18, 2024 09:33 IST
  மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை

  நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவிப்பு • May 18, 2024 09:29 IST
  பாஜகவின் பிளவுவாத கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

  வெற்றி முகத்தை நோக்கி I.N.D.I.A கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரையை பேசி வருகிறார் பிரதமர் மோடி

  பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள். மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் கையில் எடுத்திருக்கிறார்.

  உத்தரப் பிரதேச மக்களைத் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலத் தலைவர்கள் அவதூறாகப் பேசுவதாகத் தன்னுடைய கற்பனைக் கதைகளை - பொய் மூட்டைகளைக் கட்டவிழ்க்கத் தொடங்கியுள்ளார்.

  பிரதமர் பேசுவதைக் கவனித்தால் உண்மை கிலோ என்ன விலை?” என்று கேட்பார் என தோன்றுகிறது

  பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!

  முதல்வர் மு.க.ஸ்டாலின் • May 18, 2024 09:27 IST
  பேருந்து தீப்பிடித்து 8 பேர் உயிரிழப்பு

  அரியானா, குண்ட்லி மான்சர் பகுதியில் பக்தர்கள் பிருந்தாவனத்தில் தரிசனம் முடித்து விட்டு நூ பகுதியை நோக்கி சென்றபோது வழியில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

  பேருந்து தீப்பிடித்து எரிந்தவுடன் பேருந்து ஓட்டுநர் தப்பியோடி விட்டதாக தகவல் • May 18, 2024 09:26 IST
  பேருந்து கவிழ்ந்து விபத்து

  மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார் பேருந்து, நன்னிலம் அருகே மற்றொரு பேருந்தை முந்த முயன்ற போது வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். • May 18, 2024 09:06 IST
  கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பு

  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

  இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  பட்டதாரி ஆசிரியர்/வட்டார வளமைய பயிற்றுநர் 2023, 2024 ஆம் ஆண்டில் 2222 காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 25.10.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.   இதனைத்தொடர்ந்து 360 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு சேர்க்கை 25.11.2023 அன்று வெளியிடப்பட்டது.  மேலும் 110 கூடுதல் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரிய தேர்வு வாரிய இணையதளம் (website: http:// http://www.trb.tn.gov.in) வாயிலாக இன்று வெளியிடப்படுகிறது. • May 18, 2024 08:49 IST
  பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  நீலகிரி, கோவையில் பெய்து வரும் மழையால், கோவைக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  அணையின் நீர் மட்டம் 84 அடியை எட்டியதால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுகிறது. • May 18, 2024 08:39 IST
  மூன்று மாவட்டங்களுக்கு இன்று 'ஆரஞ்சு அலர்ட்'

  தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

  கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவின் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 90 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் சென்னையில் இருந்து நெல்லை வந்துள்ளனர். • May 18, 2024 08:39 IST
  மதுரை எய்ம்ஸ் குழு உறுப்பினர் நியமனம்

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நியமனம்

  அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு • May 18, 2024 08:07 IST
  4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  கடலூர், தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • May 18, 2024 08:00 IST
  தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

  தென்காசி மாவட்டத்திற்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

  இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ய கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட அருவிகள், அணை பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் குளிக்க தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. • May 18, 2024 07:46 IST
  10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் • May 18, 2024 07:45 IST
  தலையணை, திருக்குறுங்குடி நம்பி கோயில் மூடல்

  நெல்லை, தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் தற்காலிகமாக மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது. • May 18, 2024 07:44 IST
  நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்

  நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். • May 18, 2024 07:43 IST
  பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்படும் வீடியோ

  தென்காசி மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

  பழைய குற்றாலத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்த அருவிக்கு செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

  Credit: Sun News Twitter • May 18, 2024 07:42 IST
  அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

  அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

  மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்படி வழக்கமான ஜாமின் கோரி உரிய விசாரணைக்கு நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவிப்பு • May 18, 2024 07:41 IST
  திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கம்

  வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவிப்பு

  திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலும் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment