Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
May 18, 2024 07:03 ISTதமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
-
May 17, 2024 20:50 ISTகொடைக்கானலில் மலர் கண்காட்சி
கொடைக்கானலில் கோடை விழா இன்று மலர் கண்காட்சியுடன் தொடங்கிய நிலையில், முதல் நாளில் 5, 980 சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர்.
-
May 17, 2024 20:48 ISTதிருவண்ணாமலையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த 3 பேர் கைது
திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களைத் தொடர்ந்து திருடி வந்த, அர்ஜுன், பிரபு, சந்தோஷ் ஆகிய 3 பேர் கைது - அவர்களிடமிருந்து 19 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
-
May 17, 2024 19:49 ISTதேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு
தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 17, 2024 19:48 ISTபும்ராவுக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கர்!
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறிவிட்ட நிலையில், லக்னோவுக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பும்ராவுக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை அணியில் சேர்த்துள்ளனர்.
-
May 17, 2024 19:46 ISTமேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை
தென் தமிழகத்தின் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
May 17, 2024 19:45 ISTஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா
இந்தியாவிலேயே முதல் முறையாக 10, 12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்றுச் சாதனை படைத்துள்ள 1,761 அரசு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் 100% மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவ மாணவியருக்கு விரைவில் சீர்மிகு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
-
May 17, 2024 18:05 ISTசென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் ரத்து
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாகக் கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 15 ரயில்கள், மே-18, 19 தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு - கடற்கரை இடையே இயக்கப்படும் 8 ரயில்களின் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
-
May 17, 2024 17:57 ISTதயார் நிலையில் பேரிடர் மீட்பு படை
கனமழை காரணமாக நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்
-
May 17, 2024 17:57 ISTகெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
அமலாக்கத்துறை கைது செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறைக்கு சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளது.
-
May 17, 2024 17:56 ISTகுற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன்: சடலமாக மீட்பு
குற்றால அருவி வெள்ளப்பெருக்கில் சிக்கிய திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் மாயமானார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் சிறுவனை சடலமாக மீட்டனர் தீயணைப்புத் துறையினர்.
-
May 17, 2024 17:12 ISTதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 17, 2024 16:56 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் கைது.. அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கேள்வி
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு பல்வறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
May 17, 2024 16:38 ISTஈழத்தமிழர் மீதான வன்முறை: ஐ.நா. அறிக்கை
“இலங்கை இறுதிப்போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும்” என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. -
May 17, 2024 15:52 ISTகொடைக்கானலில் விபத்து
கொடைக்கானல் வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-
May 17, 2024 15:32 ISTகுற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு: அடித்துச் செல்லப்பட்ட 16 வயது சிறுவன்
தென்காசி பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் திருநெல்வேலியை சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்வின் என்பவர் அடித்துச் செல்லப்பட்டார்.
-
May 17, 2024 15:17 ISTபெண் போலீஸ் பாதுகாப்பில் பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர்
போலீஸ் உயரதிகாரி மற்றும் பெண் போலீசாரை விமர்சித்து சவுக்கு சங்கர் பேசிய வழக்கில் கைதாகியுள்ள ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு பெண் போலீஸ் பாதுகாப்பில் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
-
May 17, 2024 14:46 ISTவாட்ஸ் ஆப் செயலி மூலம் இனி மின்சார கட்டணம் செலுத்தலாம்
500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் வாட்ஸ் ஆப் செயலி மூலம் யுபிஐ வாயிலாக மின் கட்டணம் செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
-
May 17, 2024 14:15 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம்: முக்கிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளரால் தாக்கப்பட்ட விவகாரம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி பரபரப்பு கெஜ்ரிவாலை நான் சந்திக்க சென்ற போது அவரது உதவியாளர் பிபவ் குமார் ஏழெட்டு முறை என்னை சரமாரியாக அறைந்தார் - ஸ்வாதி மாலிவால் விட்டு விடுமாறு கெஞ்சியும் நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் பிபவ் குமார் எட்டி உதைத்தார் - ஸ்வாதி மாலிவால் என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. கொன்று புதைப்பேன் என பிபவ் குமார் மிரட்டினார் - ஸ்வாதி மாலிவால் மாதவிடாய் என்பதால் தாங்க முடியாத வலியால் துடித்தேன். கெஞ்சியும் பிபவ் குமார் விடாமல் தாக்கினார் - ஸ்வாதி மாலிவால்
-
May 17, 2024 13:57 ISTஇரண்டு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு
தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்ப. 2 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் "திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்" "மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை..
-
May 17, 2024 13:55 ISTதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் இ
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் /இலவச தரிசனத்திற்கு 24 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நேற்று ஒரே நாளில் 76,369 பேர் சாமி தரிசனம்.
-
May 17, 2024 13:40 IST100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மதுரை: உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கக் கோரி மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சேடபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
-
May 17, 2024 13:25 IST100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது : மின்சார வாரியம் விளக்கம்
ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால் அவருக்கு 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும் . மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து செய்யப்படும் . ஒரு வீட்டின் உரிமையாளர் அவரின் வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும்.அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி- மின்சார வாரியம் விளக்கம்
-
May 17, 2024 12:52 ISTமாற்றுத்திறனாளி மாணவர்கள் இடஒதுக்கீடு: அரசு உத்தரவு
உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை
2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
-
May 17, 2024 12:41 ISTசென்னையில் 460 விளம்பர பலகைகள் அகற்றம்
மும்பையில் புழுதி புயலால் பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்ததன் எதிரொலி. சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவு.
சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தல்.
விளம்பர பலகை நிறுவ இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல். 2 நாட்களில் அனுமதியின்றியும், அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றம்.
-
May 17, 2024 12:21 ISTராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு, சரண் அடையவும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
ராஜேஷ்தாஸ் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
-
May 17, 2024 12:00 ISTகார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார்
பட்டியலின சமுதாயத்தை நடிகர் கார்த்திக் குமார் தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியான விவகாரம்.
நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார். ஆடியோவில் உள்ளது தன்னுடைய குரல் அல்ல என கார்த்திக் குமார் புகார் மனுவில் தகவல்
-
May 17, 2024 11:52 ISTமதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது: ராஜ்நாத் சிங்
இந்திய அரசமைப்பு சட்டத்தில் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது. அரசமைப்பு சட்டத்தை மாற்றியது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தான். இடஒதுக்கீட்டில் மாற்றங்களை கொண்டு வர வேண்டாம் என்று தான் விரும்புகிறோம்
-
May 17, 2024 11:52 ISTசிந்தெடிக் போதைப் பொருள்: இ.பி.எஸ் விமர்சனம்
சிந்தெடிக் போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம். சென்னை விமான நிலையத்தில் ரூ.22கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சி. சிந்தெடிக் போதைப் பொருளை கடத்துவோர் தமிழ்நாட்டை போதைப் பொருள் மையமாக மாற்றியதற்கு திமுக அரசே காரணம்- எடப்பாடி பழனிசாமி
-
May 17, 2024 11:40 ISTகுடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ்: மக்கள் போராட்டம்
திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றின் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ்
சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் = குண்டுகட்டாக தூக்கிச் சென்ற போலீசார்
250 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை கணக்கெடுத்த நிலையில் நோட்டீஸ்
-
May 17, 2024 11:33 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு முற்றுகை
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு முற்றுகை. கெஜ்ரிவாலை வளையல் அணிய வலியுறுத்தி பா.ஜ.க. மகளிர் அணி போராட்டம்
-
May 17, 2024 11:31 ISTசென்னையில் மிதமான மழை
சென்னை சென்ட்ரல், எக்மோர், ராஜாஜி சாலை, பாரிமுனை, மவுண்ட் ரோடு, நந்தனம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது,
-
May 17, 2024 11:18 ISTகுலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ
தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டது. 1,500 ஏக்கரில் ஆய்வு மையத்திற்கு அருகே தொழிற்சாலை, உந்து சக்தி பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியீடு. விண்வெளி பூங்கா அமைப்பதற்கு இஸ்ரோவின் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம்.
-
May 17, 2024 11:00 IST3 பேரிடம் போலீஸ் விசாரணை
ஈரோடு: பெருந்துறை அருகே பணிக்கம் பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 17, 2024 10:46 ISTகபில் சிபலுக்கு ஸ்டாலின் வாழ்த்து
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வழக்கறிஞருக்கு வாழ்த்துக்கள் .
அவரது வெற்றி பார் கவுன்சிலின் சுதந்திரமும் நமது அரசியலமைப்பு விழுமியங்களும் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதி செய்கிறது. இந்திய மக்கள் ஆழமாகப் போற்றும் நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்த அவரது தலைமையின் மீது நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
Congratulations to Senior Advocate @KapilSibal on being elected as the President of the Supreme Court Bar Association!
— M.K.Stalin (@mkstalin) May 17, 2024
His victory ensures that the independence of the bar and our constitutional values are in safe hands. We are confident in his leadership to uphold justice and… -
May 17, 2024 10:42 ISTசென்னையில் மழை
சென்னை: ராயபுரம், மின்ட், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
-
May 17, 2024 10:41 ISTதமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கரூர், சேலம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 17, 2024 09:58 ISTகராத்தே போட்டியில் பதக்கங்கள் குவித்த தமிழக வீரர், வீராங்கனைகள்
மலேசியாவில் நடைபெற்ற 20வது சர்வதேச ஓகினாவா கராத்தே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 10 தங்கம்.. 5 வெள்ளி.. 5 வெண்கல பதக்கங்கள் வென்று குவித்து நாடு திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய இவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
-
May 17, 2024 09:50 ISTதமிழிசை சௌந்தராஜன் பேட்டி
பிரதமர் யாரையும் பிளவு படுத்தவில்லை, எல்லோரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார்.
முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது, ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3 வது முறையாக ஆட்சி அமைய போகிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்
- தமிழிசை சௌந்தராஜன் பேட்டி
-
May 17, 2024 09:35 ISTகொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்கம். 10 நாட்களுக்கு நடைபெறுகிறது
அரசு முதன்மை செயலாளர், ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கண்காட்சியை துவக்கி வைத்தனர். மலர் கண்காட்சியையொட்டி 10 நாட்களுக்கு பூங்கா நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
May 17, 2024 09:11 ISTதமிழ்நாட்டிற்கு 20 ஆம் தேதி ரெட் அலர்ட்
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
20 ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட்
இந்திய வானிலை ஆய்வு மையம்
-
May 17, 2024 09:07 ISTமேட்டூர் அணை நீர்மட்டம்
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 49.95 அடியாக இருந்தது. நீர் வரத்து 137 கன அடி. வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்த குடி நீருக்கான நீர் திறப்பு இன்று காலை 6 மணி முதல் 2,100 அடியாக அதிகரிப்பு
-
May 17, 2024 09:07 ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 1,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
May 17, 2024 08:22 ISTமின் தேவை குறைந்தது
தமிழகத்தில் சில தினங்களாக மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.
நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது
மின்துறை தகவல்
-
May 17, 2024 07:49 ISTவீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு
மதுரை மதிச்சியம் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியம் உயிரிழந்தார்.
-
May 17, 2024 07:48 ISTமீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை
நெல்லை மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து, 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 55 கி.மீ வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
-
May 17, 2024 07:40 IST9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
May 17, 2024 07:39 ISTபிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதரபாத்
3வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். குஜராத்துக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
-
May 17, 2024 07:39 ISTநெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 -45 கி.மீ வரையிலும், அதிகபட்சமாக 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும்.
கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்
- மீன்வளத்துறை
-
May 17, 2024 07:39 ISTஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 63,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தொடக்கக்கல்வித்துறையில் 26,075 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையில் 37,358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.