Tamil Nadu: Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
May 16, 2024 09:20 ISTசென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சோழிங்கநல்லூர், நீலாங்கரை, சைதாப்பேட்டை, பட்டினப்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
-
May 16, 2024 07:03 ISTமன்னிப்புக் கோரிய ரெட் பிக்ஸ் நிறுவனம்
பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிப்பரப்பியதற்காக ரெட் பிக்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நிறுவனத்தின் மேலாளர் ஜேன் பெலிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட் பிக்ஸ் ஊடகம் கருதுகிறது.
சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
-
May 15, 2024 21:44 ISTகாங்கிரஸ் கட்சி புதிய அறிவிப்பு
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவிப்பு
-
May 15, 2024 21:35 ISTநீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தல்
ஒரிசாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பைக்கான போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எரிதல் போட்டியில் 82.27 மீட்டர் தூரம் ஈட்டி எரிந்த ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
-
May 15, 2024 21:32 ISTகேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது
-
May 15, 2024 20:31 ISTஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்காக இதுவரை 18,029 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
-
May 15, 2024 20:26 ISTஇரட்டை குவளை முறை: மதுரை ஐகோர்ட் சரமாரி கேள்வி
"இரட்டை குவளை முறை இன்னும் நடைமுறையில் தான் உள்ளது. நிரூபித்து விட்டால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா" என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
-
May 15, 2024 20:24 ISTஇந்தியா, பாகிஸ்தான் டெஸ்ட்? ரோஹித் சர்மா பதில்
"ஒரு கிரிக்கெட் வீரராக சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் போட்டிகள் நடந்தால் ரசிகர்கள் அதை மிகவும் விரும்புவார்கள்” என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
-
May 15, 2024 20:21 ISTமன்னிப்பு கோரியது ‘ரெட் பிக்ஸ்’
“தமிழக காவல் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர ரெட் பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட் பிக்ஸ் ஊடகம் மனம் திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது” என்று ரெட் பிக்ஸ் ஊடகத்தின் பொது மேலாளரும், ஃபெலிக்ஸ் ஜெரால்டின் மனைவியுமான ஜேன் ஃபெலிக்ஸ் கூறியுள்ளார்.
-
May 15, 2024 19:47 ISTவிழுப்புரம்: இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட முத்துகுமாரன்,(35), நல்லசிவம்,(22) மேல்காவனூர் அருண் (21) ஆகிய 3 பேரிடம் இருந்து 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
May 15, 2024 19:40 ISTமாட்டுச்சாணம் கலப்பு - வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம்
புதுக்கோட்டை, சங்கம்விடுதி நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக தொடரப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
-
May 15, 2024 19:27 ISTராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
-
May 15, 2024 19:27 ISTசாதி குறித்து பேசினேனா? - நடிகர் விளக்கம்
"சாதி குறித்து பேசியதாக பரவும் ஆடியோ என்னுடையதில்லை. இது போன்ற வார்த்தைகளை பேசுபவன் நான் இல்லை" - நடிகர் கார்த்திக் குமார் விளக்கமளித்துள்ளார்.
-
May 15, 2024 18:55 ISTபாலியல் வன்கொடுமை வழக்கில் நேபாளத்தின் முன்னாள் கேப்டன் விடுதலை
T20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
May 15, 2024 18:50 ISTஎய்ம்ஸ்காக உதயநிதி ஒரு செங்கலை கூட வைக்கவில்லை: ஆர்.பி உதயகுமார்
“செங்கல்லை காட்டி வாக்கு கேட்ட உதயநிதி ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டில் மதுரை எய்ம்ஸ்க்காக ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டினார்.
-
May 15, 2024 18:48 ISTகோவையில் ரூ.2 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்
கோவையில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் உயர் ரக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 12 பேரை தொண்டாமுத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். -
May 15, 2024 18:46 ISTகனமழை எச்சரிக்கை: 23 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, 23 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவசர கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில் கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. -
May 15, 2024 18:43 ISTசவுக்கு சங்கர் போன் நம்பர் கேட்டதாக பெண் போலீஸ் புகார்
வேனில் பயணிக்கும் போது திருமணம் ஆகாத பெண் போலீசிடம் பெயர், செல்போன் விவரங்கள் கேட்டதாக பெண் போலீஸ் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
பெண் போலீஸ் தாக்கியதாக சவுக்கு சங்கர் புகார் கூறிய நிலையில், மறுபுறம் பெண் போலீசும் புகார் அளித்துள்ளார். -
May 15, 2024 17:36 ISTதொட்டபெட்டா சிகரம் ஏற 7 நாள்கள் தடை: என்ன காரணம்?
தொட்டபெட்டா மலை சிகரம் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மே 16ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘FAST TAG’ சோதனைச் சாவடியை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -
May 15, 2024 17:23 ISTகோவில் அனைவருக்கும் பொது: நீதிபதிகள் கருத்து
கோயில் மக்கள் அனைவருக்கும் பொதுவானது, ஆகவே அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கும், வழிபாடு செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்துதிண்டுக்கல் வெள்ளபொம்மன்பட்டி கிராமத்தில் மே 19ம் தேதி நடைபெறவுள்ள கோயில் திருவிழாவில் பட்டியல் இன மக்கள் வழிபடும் வகையில் நடவடிக்கை கோரி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
May 15, 2024 17:06 ISTமுதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கியது மத்திய உள்துறை
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின் (CAA) கீழ் முதற்கட்டமாக 14 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை வழங்கியது
-
May 15, 2024 16:28 ISTஆரஞ்சு அலர்ட் - நெல்லை மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார். மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
-
May 15, 2024 16:11 ISTதென்காசி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை
தென்காசி மாவட்ட மக்களுக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை அறிவுறுத்தியுள்ளது
-
May 15, 2024 15:51 IST8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு - சுகாதாரத்துறை
தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
-
May 15, 2024 15:35 ISTடெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை
டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்
-
May 15, 2024 15:17 ISTவானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் மனைவியிடம் மோசடி
சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி சைபர் மோசடி செய்ய முயன்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
-
May 15, 2024 14:34 ISTஅரசுப் பேருந்தில் துப்பாக்கி பறிமுதல்
சென்னையில் இருந்து திருநெல்வேலி வந்த அரசு விரைவு பேருந்தில் கைப்பற்றப்பட்ட அரிவாள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்; ஆயுதங்களை கைப்பற்றி வண்ணாரப்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை.
-
May 15, 2024 13:58 ISTசவுக்கு சங்கர் மீது குவியும் புகார்கள்
கடந்த 5 நாளில் பெண் காவலர்கள் 16 பேரும், ஒரு சமூக ஆர்வலர் என மொத்தம் 17 பேர் மகளிர் ஆணையத்தில் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் காவலர்கள் குறித்து இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் குவியும் புகார்கள்.
-
May 15, 2024 13:57 ISTதிருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர்
திருச்சி மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திருச்சியில் பதியப்பட்ட வழக்கில் ஆஜர்படுத்தப்பட்டார். திருச்சி மாவட்ட சைபர் கிரைம் டிஎஸ்பி யாஸ்மின் அளித்த புகாரில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.
-
May 15, 2024 13:43 IST8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம்
8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. பெண் உரிமை சார்ந்த திட்டங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம்பெற்றுள்ளது. கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம், மதிய உணவு திட்டம், சுயமரியாதை திருமண சட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே 9, 10ஆம் வகுப்புகளிலும் கருணாநிதி பற்றிய பாடங்கள் உள்ளது குறிப்பிடதக்கது
-
May 15, 2024 13:25 ISTஇரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து அனுமானத்தின் அடிப்படையில் பொதுவெளியில் விவாதிப்பது துரதிருஷ்டவசமானது
இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து அனுமானத்தின் அடிப்படையில் பொதுவெளியில் விவாதிப்பது துரதிருஷ்டவசமானது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்புடையதல்ல. கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து வெளியிடுவதால் ஒரு தனிநபரின் வாழ்க்கை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா?- ஜி.வி.பிரகாஷ்
-
May 15, 2024 13:21 ISTதடை செய்த மீன்களை பிடித்தால் கடும் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட மீன்களைப் பிடித்தாலோ, சமைத்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை. உணவகங்களில் விற்பனை செய்வதற்காக பிடித்துச் செல்லப்பட்ட, தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குழிதோண்டி புதைத்த உணவு பாதுகாப்பு துறையினர். ஆப்பிரிக்கன் கெளுத்தி மீனை உட்கொண்டால் கேன்சர், தோல் நோய்கள், மற்றும் ரத்த அழுத்தம் ஏற்படும் என்பதால் தடை.
-
May 15, 2024 12:44 ISTபட்டாசு ஆலைகளில் தீவிர ஆய்வு
பட்டாசு தொழிற்சாலைகளில் அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்படுவதன் எதிரொலி. தீபாவளி முடியும் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை உத்தரவு.
வருவாய், தீயணைப்புத்துறை, தொழிலக பாதுகாப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்.
தொடர் ஆய்வு மேற்கொண்டு விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - அதிகாரிகள் தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைப்பு - அதிகாரிகள் தகவல்
-
May 15, 2024 12:25 ISTசவுக்கு சங்கர் மீது மகளிர் ஆணையத்தில் புகார்
சவுக்கு சங்கர் மீது மகளிர் ஆணையத்தில் பெண் காவலர்கள் புகார்
சவுக்கு சங்கருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்தைல் பெண் காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்கள் புகார். பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்ல் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
May 15, 2024 12:21 ISTஜோதிராதித்ய சிந்தியாவின் தாய் மரணம்
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் மாதவி ராஜே சிந்தியா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானதாக மருத்துவமனை அறிவிப்பு .
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் காலை 9.30 மணியளவில் காலமானார். மாதவி ராஜே சிந்தியா நேபாள பிரதமர் மற்றும் காஸ்கி மகாராஜாவின் கொள்ளுப் பேத்தி ஆவார்.
-
May 15, 2024 12:10 ISTபெண் காவலர்கள் பாதுகாப்பில் சவுக்கு சங்கர்
கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள். பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில், திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, முழுக்க முழுக்க பெண் காவலர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது காவல்துறை. பெண் காவலர்களை இழிவாக பேசியவர்களுக்கு, இதைவிட தகுந்த பாடம் புகட்ட முடியாது என ஏற்கனவே காவல்துறை விளக்கம்.
-
May 15, 2024 11:59 ISTவாரணாசியில் போட்டி: அய்யாக்கண்ணு மனு தள்ளுபடி
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? - அய்யாக்கண்ணுக்கு நீதிபதிகள் கேள்வி
ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை? - நீதிபதிகள்
விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்த பொதுநல மனு என்பதால் தள்ளுபடி - நீதிபதிகள்
பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் - மனு
-
May 15, 2024 11:53 ISTசென்னையில் நாய் கடித்து மேலும் ஒருவர் காயம்
சென்னை மதுரவாயலில், வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டுக்காரரை கடித்த சம்பவத்தால் பரபரப்பு.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாயை பிடித்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள். நாய் கடித்து படுகாயம் அடைந்த ரமேஷ் குமாருக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை. காலில் 2 தையல் போடப்பட்ட நிலையில் சிகிச்சை.
ரமேஷ் குமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில் நாயை பிடித்து சென்ற மாநகராட்சி அதிகாரிகள்
-
May 15, 2024 11:32 ISTகிணற்றில் கலக்கப்பட்டது தேன் அடை
கிணற்றில் கலக்கப்பட்டது மனிதக் கழிவு அல்ல- தேன் அடை
விழுப்புரம் மாவட்டம் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக பரபரப்பு. மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த நிலையில் அது தேன் அடை என உறுதியானது.
-
May 15, 2024 11:27 ISTசெந்தில் பாலாஜி ஜாமின் மனு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி மேல்முறையீடு
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு - உச்சநீதிமன்றம்
-
May 15, 2024 10:59 ISTகிணற்றில் மனித மலம்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரைத்தான் கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
-
May 15, 2024 10:51 ISTமேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
May 15, 2024 10:36 ISTமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.
-
May 15, 2024 10:23 ISTசாலை மறியல் போராட்டம்
திருநெல்வேலி, பல ஆண்டுகளாக பட்டா வழங்கப்படாததை கண்டித்து ஆரோக்கியநாதபுரம் பகுதி மக்கள் திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
May 15, 2024 09:39 ISTசவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு
முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறாக பேசியதாக, வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில், யூடியூபர் சவுக்கு சங்கர், ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் நிறுவனர் ஜெரால்ட் ஆகியோர் மீது கோவை பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
May 15, 2024 09:34 ISTதனியார் பேருந்து விபத்தில் 6 பேர் பலி
ஆந்திரா, ஐதராபாத் சென்று கொண்டிருந்த பேருந்து, டிப்பர் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
பாபட்லா மாவட்டம் சீனகஞ்சத்தில் இருந்து 40 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து விபத்தில் சிக்கியது . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 15, 2024 09:12 ISTதமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீட்டர் முதல் 40 கி.மீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
- இந்திய வானிலை ஆய்வு மையம்
-
May 15, 2024 09:00 ISTஐபிஎல் இன்றைய போட்டி
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
-
May 15, 2024 08:21 ISTபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற டெல்லி, ராஜஸ்தான் அணிகள்
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியதன் மூலம், 14 புள்ளிகளுடன் டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இதன்மூலம் பிளே ஆஃப் செல்வதற்கான குறைந்தபட்ச வாய்ப்பை டெல்லி அணி தக்கவைத்து கொண்டது.
மேலும், இந்த போட்டியின் முடிவால், நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி, ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது
-
May 15, 2024 08:00 ISTசென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு
நீல வழித் தடத்தில், விமான நிலையம்- மீனம்பாக்கம் இடையே ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல்- விமான நிலையம் இடையிலான நேரடி மெட்ரோ ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
விமான நிலையம் செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பச்சை வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.