Advertisment

Tamil News Updates: நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்- மீன்வளத்துறை எச்சரிக்கை

Tamil Nadu News Update Today- 16 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rameshwaram, chennai high court, firing on tamilnadu fishermen, inquiry by DSP, indian coast guard, tamilnadu government, tamilnadu fishermen

Tamil News Updates

Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வரும் 31ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க உள்ளது.

  • May 17, 2024 07:05 IST
    இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    ஓரிரு  இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை



  • May 16, 2024 21:57 IST
    பாஜகவினருக்கு எம்.பி. சுவாதி மாலிவால் வேண்டுகோள்

    ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ள நிலையில், "எனது விவகாரத்தை பாஜகவினர் அரசியலாக்க வேண்டாம்" என சுவாதி மாலிவால் வேண்டுகொள் விடுத்துள்ளார்.



  • May 16, 2024 21:55 IST
    கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    மழை காலத்தில் பொதுமக்களின் தேவையின் அடிப்படையில் போதுமான அளவு பேருந்துகளை இயக்கிட தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, போக்குவரத்து துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



  • May 16, 2024 21:53 IST
    2026-ல் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா? செல்வப்பெருந்தகை பதில்

    2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காலமும் கட்சி தலைமையும் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.



  • May 16, 2024 21:04 IST
    பட்டாசு குடோன் வெடித்து தொழிலாளி பலி : 2 பெண்கள் படுகாயம்

    சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில், ராஜ மாணிக்கம் என்ற தொழிலாளி உயிரிழப்பு - 2 பெண்கள் படுகாயம்



  • May 16, 2024 21:02 IST
    வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் வருமா?

    தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து சுமூகமான பேச்சுவார்த்தை நடக்கிறது. பிரச்சனைக்கு தீர்வு கண்டவுடன் வெந்து தணிந்தது காடு 2-ம் பாகம் உருவாகும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தெரிவித்துள்ளார்.



  • May 16, 2024 21:01 IST
    முதல்வர் ஸ்டாலினுடன் ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் சந்திப்பு

    அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக 5வது முறையாக தேர்வாகியுள்ள என். கண்ணையா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்



  • May 16, 2024 19:59 IST
    காவிரியில் 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு பரிந்துரை

    காவிரியில் இருந்து 2.5 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.



  • May 16, 2024 19:14 IST
    கூட்ட நெரிசலை குறைக்க ரயில்களில் கூடுதல் பெட்டிகள் : மதுரை கோட்டம் தகவல்

    கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயிலில் நாளை முதல் வரும் 23ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் என்றும், திருவனந்தபுரம் - மதுரை ரயிலில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்படும் என்றுமு் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் தகவல் தெரிவித்துள்ளது.



  • May 16, 2024 19:06 IST
    எனது வழியில் சரியாக செல்கிறேன் - இளையராஜா

    'எனது வேலையை நான் சரியாக செய்கிறேன்' என தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு வீடியோ வெளியிட்டார் இசையமைப்பாளர் இளையராஜா



  • May 16, 2024 18:43 IST
    இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

    இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த 14 இலங்கை மீனவர்கள் கைது 5 படகுகளையும் பறிமுதல் செய்து இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. 



  • May 16, 2024 18:26 IST
    கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை

    10 மற்றும் 20 நாணயங்களை வாங்க மறுக்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



  • May 16, 2024 18:10 IST
    பிரிந்தாலும் நட்பு தொடரும் - சைந்தவி விளக்கம் 

    "சமூக வலைதளங்களில் எங்களின் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் வருத்தமளிக்கிறது. ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும் எங்களின்  நட்பு தொடரும்" பாடகியும் ஜி.வி.பிரகாஷ் மனைவியுமான சைந்தவி கூறியுள்ளார். 

     



  • May 16, 2024 18:06 IST
    சுரேஷ் ரெய்னா - விராட் கோலி சந்திப்பு 

    விராட் கோலியுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சந்தித்தார். வரும் 19ம் தேதி முக்கியமான போட்டியில் சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது 



  • May 16, 2024 17:46 IST
    14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், கடலூர், தென்காசி, தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • May 16, 2024 17:45 IST
    நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை 

    இன்று முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 -45 கி.மீ வரையிலும், அதிகபட்சமாக 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. 



  • May 16, 2024 17:30 IST
    ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் 

    சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்.டி.எம்.ஏ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடந்தி வருகிறார்கள். 



  • May 16, 2024 17:13 IST
    தீயாய் பரவும் நடிகர் ஆடியோ.. விசாரிக்க உத்தரவு

     

    பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக நடிகர் கார்த்திக் குமார் பேசியதாக பரவும் வீடியோ குறித்து விசாரணை நடத்த தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டுள்ளது.



  • May 16, 2024 16:55 IST
    டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் தீ? விரைந்த தீயணைப்பு வாகனங்கள்!

    டெல்லியில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தீ விபத்து மின்சாரத்தில் இருந்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஏற்பட்டுள்ளன.

     



  • May 16, 2024 16:35 IST
    'பசுவதையை ஏற்க முடியாது; தலைகீழாக தொங்க விடுவோம்': அமித் ஷா பரப்புரை

    பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பேசிய அமித் ஷா, “சீதையின் தேசமான இங்கு பசுவதையை ஏற்க முடியாது. பசுவதை செய்வோருக்கு தண்டனை கொடுப்போம் என்பதை உறுதியளிக்கிறேன்” என்றார்.



  • May 16, 2024 16:09 IST
    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி: ஜெகன் மோகன் ரெட்டி


    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி தொடரும் என அம்மாநில முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.



  • May 16, 2024 16:07 IST
    உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் 8 பேர் காயம்

     

    உளுந்தூர் பேட்டை வீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், ஆட்டோவில் சென்ற 8 பேர் படுகாயம் அடைந்தனர்.



  • May 16, 2024 15:46 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் சர்ச்சை பரப்புரை; உச்ச நீதிமன்றத்தில் இ.டி. புகார்

    டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால் சிறைக்கு செல்ல வேண்டியது இல்லை என அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்திய தேர்தல் பரப்பரையில் கூறியிருந்தார். இதற்கு எதிராக அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.



  • May 16, 2024 15:40 IST
    காவிரி நீர் குழுக் கூட்டம் விவகாரம்: தி.மு.க. அரசுக்கு டி.டி.வி தினகரன் கேள்வி

    “காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராத திமுக அரசு, அக்கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பி மாநிலத்தின் உரிமையை கோராமல், ஆன்லைன் மூலமாக பங்கேற்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.



  • May 16, 2024 15:04 IST
    வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு நாமக்கல்

    வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் ரெய்டு நாமக்கல். எளையாம்பாளையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் வருமான வரி சோதனை வரி ஏய்ப்பு செய்த புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக தகவல். 



  • May 16, 2024 14:25 IST
    இதுவரை நடந்து முடிந்த 4 கட்ட மக்களவை தேர்தலில் 45 கோடி பேர் வாக்களிப்பு

    இதுவரை 4 கட்டங்களாக 370 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது 4 கட்டங்களில் இதுவரை 66.95% வாக்குப்பதிவு . இந்திய தேர்தல் ஆணையம் எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு . மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உரிய நேரத்தில் பூத் ஸ்லிப்புகளை வழங்குமாறு அறிவுறுத்தல். 



  • May 16, 2024 14:24 IST
    ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்

    தேசிய மகளிர் ஆணையத்தில் நாளை ஆஜராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாருக்கு சம்மன் .டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்தில் வைத்து ஸ்வாதி மாலிவாலை பிபவ் குமார் தாக்கியதாக குற்றச்சாட்டு.



  • May 16, 2024 14:21 IST
    காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம்

    தேனி மாவட்டம் கம்பம் மெட்டு சாலை அருகே காருக்குள் கிடந்த 3 பேரின் சடலம் மிட்கப்பட்டுள்ளது.  கம்பம் மெட்டு சாலையோரம் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற கார் காருக்குள் பெண் உட்பட 3 பேர் சடலமாக கிடந்தனர். போலீசார் விசாரணை விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் காருக்கு அருகே பூச்சி மருந்து பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு. 



  • May 16, 2024 14:09 IST
    7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்

    மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  "கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.  ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது 



  • May 16, 2024 14:06 IST
    முதல்வரின் தனிப் பிரிவில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி மனு

    யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மனைவி முதலமைச்சரின் தனிப் பிரிவில் புகார் மனு அளித்தார்.ஃபெலிக்ஸ் கைது, வீட்டில் காவல்துறை சோதனை தொடர்பாக முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்தார்.

     



  • May 16, 2024 13:34 IST
    அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

    10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா. தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்களும் கௌரவிக்கப்படுவதாக அறிவிப்பு 100% தேர்ச்சி பெற்ற 1761 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தப்படுகிறது. கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு, கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அறிவுரை வழங்கப்படும்.



  • May 16, 2024 13:32 IST
    மருத்துவக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஓ.பி.எஸ்



  • May 16, 2024 13:28 IST
    5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த 5,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ராமானுஜபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் பாதுகாக்க தார்ப்பாய் வழங்கவில்லை என தகவல் . 



  • May 16, 2024 13:10 IST
    ஜெயக்குமார் வழக்கை டிஜிபி சங்கர் ஜிவால் நேரடி கண்காணிப்பு

    நெல்லை காங்ரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கை டி.ஜி.பி சங்கர் ஜிவால், ஐஜி கண்ணன் நேரடியாக கண்காணிக்க உள்ளார். ஜெயகுமார் மரணம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் விசாரணை நேரடியாக கண்காணிக்கப்பட உள்லது. 



  • May 16, 2024 12:37 IST
    செந்தில் பாலாஜி ஜாமின் மனு: விசாரணை ஒத்திவைப்பு

    பண மோசடி வழக்கில் ஜாமின் கோரும் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு

    விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்த உச்ச நீதிமன்றம்



  • May 16, 2024 12:29 IST
    ஆன்லைன் ரம்மி: மருத்துவ மாணவர் பலி

    சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர்  தற்கொலை

    கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார். ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல்.

    தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்ட தனுஷ் தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில் அறைக்குள் சென்று தற்கொலை



  • May 16, 2024 12:19 IST
    ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுரை

    நெல்லை வள்ளியூரில் சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரில் அரசுப் பேருந்து சிக்கியதன் எதிரொலி
     
    "சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க வேண்டும்"

    ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவுறுத்தல்

    "சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தொலைதூர பேருந்துகளை காட்டாற்று ஓர சாலைகளில் இயக்கும்போது கவனத்துடன் இயக்க வேண்டும்"

    "பணிமனைகளில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும்"

    "பணிமனை மழைநீர் வடிகால் அமைப்புகளில் அடைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்"



  • May 16, 2024 12:08 IST
    ஓய்வு எடுக்க அபுதாபி புறப்பட்டார் ரஜினி

    வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததால் ஓய்வு எடுக்க அபுதாபி புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி இடம்பெறும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபி செல்லும் விமானத்தில் புறப்பட்டார் ரஜினிகாந்த். ஒரு வாரம் அபுதாபியில் தங்கி இருந்து ஓய்வு எடுக்க ரஜினிகாந்த் திட்டம். சென்னை விமான நிலையத்தில் ரஜினியை கண்டதும் உற்சாகமாக முழக்கமிட்ட ரசிகர்கள்.



  • May 16, 2024 11:58 IST
    இ.டி-யால் கைது செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட நபரை, சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்த பிறகு, அமலாக்கத்  துறை கைது செய்ய முடியாது- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

    குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க விரும்பினால் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்ய வேண்டும். - உச்ச நீதிமன்றம்



  • May 16, 2024 11:35 IST
    போதைப் பொருள் நடமாட்டம்: ஸ்டாலின் ஆலோசனை

    போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை.

    தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் ஆலோசனை.

    சில தினங்களுக்கு முன் தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம், மாவட்ட வாரியான நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய ஆலோசனை



  • May 16, 2024 11:34 IST
    கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

    ராமநாதபுரம் மீன் சந்தையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு. பத்துக்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், போலீசார் ஆய்வு. தடை செய்யப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை. பல்வேறு கடைகளில் இருந்த கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை



  • May 16, 2024 11:19 IST
    அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

    நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட். குளச்சல் பணிமனை அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம்.

    நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின்ஜெயந்தி உத்தரவு. பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து. மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்பு



  • May 16, 2024 11:18 IST
    14 மாவட்டங்களில் மிதமான மழை

    சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும்- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை, காஞ்சிபுரம், செங்கப்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூரில் மழை பெய்யும்" அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு 



  • May 16, 2024 11:16 IST
    ஜெயக்குமார் வழக்கு: கூடுதல் அதிகாரிகள் நியமனம்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் குறித்து விசாரிக்க கூடுதல் அதிகாரிகள் நியமனம். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் புதிய அதிகாரிகள் சேர்ப்பு. பல்வேறு கொலை கொள்ளை வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்த அதிகாரிகள் நியமனம்

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு 10 நாட்கள் கடந்துள்ளன. நெல்லை உள்ளிட்ட 3 மாவட்ட தடய அறிவியல் துறையினர் ஆவணங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை



  • May 16, 2024 10:51 IST
    மும்பை கோர விபத்து

    மும்பையின் காட்கோபர் பகுதியில் ராட்சத பேனர் இடிந்து விழுந்ததில் மொத்தம் 16 பேர் பலியாகினர், இடிந்து விழுந்த பேனருக்குள் சிக்கியிருந்த காருக்குள் இருந்த மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.

    உயிரிழந்த இருவரும் மனோஜ் சன்சோரியா (60) மற்றும் அனிதா சன்சோரியா (59) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



  • May 16, 2024 10:28 IST
    ஐபிஎல் இன்றைய போட்டி

    ஐபிஎல் தொடரின் 66 வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.

    ஐதராபாத், ராஜீவ்காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • May 16, 2024 10:08 IST
    அரசுப் பேருந்தில் நடத்துனருக்கு திடீர் நெஞ்சுவலி

    புதுச்சேரியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நடத்துனருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் கோபால், கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றார்

    அங்கு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் நடத்துனர் பன்னீர் பரிதாபமாக உயிரிழந்தார்.



  • May 16, 2024 10:02 IST
    படகு சேவை மீண்டும் தள்ளிவைப்பு

    இந்தியா- இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து நாளை தொடங்கவிருந்த நிலையில் 19ஆம் தேதிக்கு சேவை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    அந்தமானில் இருந்து, நாகைக்கு வரவேண்டிய பயணியர் படகு தாமதமானதால் சேவை தள்ளிவைப்பு

    பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் வரும் 19ஆம் தேதி தங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம்.



  • May 16, 2024 09:56 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795 ஆகவும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360-க்கும் விற்பனையாகிறது.



  • May 16, 2024 09:06 IST
    சென்னையில் வளர்ப்பு நாய் கடித்து சிறுவன் படுகாயம்

    சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 6 வயது சிறுவன் ஹரிஷ்குமார் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். 

    வளர்ப்பு நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா, பிரீத்தா உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment