Advertisment

Tamil News Highlights: 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News Update Today- 11 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains today

Tamil News

Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்ச நீதிமன்றம்

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிறைக்கு வெளியே தொண்டர்கள் மத்தியில் பேசி கெஜ்ரிவால், சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றின்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • May 11, 2024 20:27 IST
    ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

    தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 102.3, கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது



  • May 11, 2024 19:50 IST
    கொல்கத்தா - மும்பை போட்டி தொடங்க தாமதம்

    தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் கொல்கத்தா - மும்பை போட்டி தொடங்க தாமதம் ஆகலாம் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்



  • May 11, 2024 19:25 IST
    பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விபரம்

    2024ம் ஆண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கு இதுவரை 94,939 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 51,857 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியும், 24,843 மாணவர்கள் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தும் உள்ளனர்.



  • May 11, 2024 18:43 IST
    பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ்

    தான் எழுதிய புத்தகத்தில் "பைபிள்" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை எதிர்த்த வழக்கில் பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



  • May 11, 2024 18:41 IST
    காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி அதிரடி

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என ஒடிசா மாநிலம் கந்தமால் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளார்.



  • May 11, 2024 18:40 IST
    த.வெ.க நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் பட்டியலை முறைப்படி பத்திரிக்கையில் வெளியிட்டது தேர்தல் ஆணையம்



  • May 11, 2024 18:38 IST
    சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை


    சென்னை தலைமை செயலகத்தில் சிவ் தாஸ் மீனா தலைமையில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக ஆலோசனை நடந்தது.



  • May 11, 2024 17:29 IST
    ரிஷப் பண்ட்டிற்கு ஒரு போட்டியில் விளையாட தடை

    நடப்பு ஐபிஎல் தொடரில், டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிற்கு 3 வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டதால், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12ம் தேதி, பெங்களூருக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு



  • May 11, 2024 17:27 IST
    பத்ம பூஷண் விருதை தமிழர்கள் அனைவருக்கும் விருது சமர்ப்பிக்கிறேன் : பிரேமலதா விஜயகாந்த்

    கலைத்துறையில் விஜயகாந்தின் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியுள்ளது. இந்த பத்ம பூஷண் விருதை தமிழர்கள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.



  • May 11, 2024 17:26 IST
    போதைப்பொருள் புழக்கம் - தலைமை செயலாளர் ஆலோசனை

    தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை



  • May 11, 2024 17:25 IST
    கொடைக்கானலில் 5 நாட்களில் 54 ஆயிரம் இ-பாஸ் பதிவு

    கொடைக்கானல் வருவதற்காக கடந்த 5 நாட்களில் 54,116 வாகனங்களுக்கு இ-பாஸ் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இ-பாஸ் அமல்படுத்திய நாள் முதல் இன்று அதிகாலை வரை 9,555 வாகனங்கள் கொடைக்கானல் வந்துள்ளது. இன்று மட்டும் 2437 வாகனங்கள் கொடைக்கானல் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • May 11, 2024 16:01 IST
    3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்புவெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக அசாம் மாநிலத்தின் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 85.45% வாக்குகள் பதிவு நடந்துள்ளது என்றும், குறைந்தபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 10 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.55% வாக்குப்பதிவு நடந்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • May 11, 2024 15:03 IST
    தேர்தல் பிரசாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன்

    ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலையொட்டி நடிகர் அல்லு அர்ஜுன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 

    ஒய்எஸ்ஆர் காங். வேட்பாளரை ஆதரித்து நந்தியாலா தொகுதியில் நடிகர் அல்லு அர்ஜூன் பிரசாரம் செய்தார். 



  • May 11, 2024 15:02 IST
    'மிகப்பெரிய ஊழல்வாதிகள் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார்' - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  

     "ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி - தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன. இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை. ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. 

    "தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து வருகின்றனர். ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். 

    என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள். பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன். 

    பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப் போவது யார்?. ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக ஆட்சி இருக்கப் போவதில்லை. முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 



  • May 11, 2024 14:59 IST
    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு  என்றும் குறிப்பிட்டுள்ளது. 



  • May 11, 2024 14:39 IST
    பிரேமலதா விஜயகாந் பேரணிக்கு போலீசார் மறுப்பு

    தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின்  திறந்தவெளி வாகனப் பேரணிக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் நீண்ட நேரம் வாக்குவாதத்திற்கு பிறகு பேரணிக்கு போலீசார் அனுமதி அளித்தனர். 



  • May 11, 2024 14:06 IST
    மோடியின் ஒரே குறிக்கோள்  ‘ஒரு நாடு, ஒரே தலைவர்’  - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

    “ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலரை  பா.ஜ.க சிறைக்கு அனுப்பியுள்ளது. நமது கட்சியை பாஜக அழிக்க நினைக்கிறது; குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆம் ஆத்மி கட்சியை நசுக்கப் பார்க்கிறார். 

    மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக சிறையில் இருந்து வெளியே வருவேன் என கூறினேன் அதன்படியே வந்துள்ளேன். பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே குறிக்கோள்  ‘ஒரு நாடு, ஒரே தலைவர்’ என்பது தான். அதனால் பிற கட்சி தலைவர்களை சிறைக்கு அனுப்பும் நடவடிக்கையை விசாரணை அமைப்புகள் மூலம் நடத்தி வருகிறார்” என்று டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், அம்மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 



  • May 11, 2024 13:36 IST
    பழைய அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் விபத்து

    விருதுநகரில் பழைய அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து. புல்லலக்கோட்டை ரோடு பகுதியில் 1988ஆம் ஆண்டு கட்டப்பட்ட வீட்டில் வசித்து வந்த சுந்தர பாண்டியன் பழைய வீட்டின் சுவர்களை இடித்து, அதே அஸ்திவாரத்தில் 2 மாடி கட்டடம் எழுப்பிய சுந்தர பாண்டியன்.

    நேற்று பெய்த லேசான மழையால் 2 மாடி கட்டடம் முழுவதும் சரிந்து விபத்து. வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு



  • May 11, 2024 13:08 IST
    ஜெயக்குமார் மர்ம மரணம்: கொலை என்ற கோணத்தில் விசாரணை

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம்: கொலை என்ற கோணத்தில் விசாரணை துவக்கம்

    ஜெயக்குமார் மரணமடைந்து 8 நாட்களான நிலையில், முடுக்கி விடப்பட்ட விசாரணை. வீடு, தோட்டம் உள்ளிட்ட இடங்களில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு. 10 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை. 



  • May 11, 2024 12:59 IST
    வெஸ்ட் நைல் வைரஸ்: வழிகாட்டுதல் வெளியீடு 

    தமிழகத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை - இருப்பினும் கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும்"

    பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் 

    'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும்

    "மனிதர்களுக்கிடையே பரவும் தன்மை இல்லை என்றாலும், கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்" 

    "வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை"

    "ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக கண்டறியலாம்"



  • May 11, 2024 12:50 IST
    ஜெயக்குமார் தோட்டத்தில் மீண்டும் ஆய்வு

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் வீட்டு தோட்டத்தில் மீண்டும் ஆய்வு

    ஜெயக்குமார் மரணமடைந்து 8 நாட்களான நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை

    ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக 10 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை

    சுற்று வட்டார கடை சிறு வியாபாரிகளிடம் புதிய நபர்கள் யாரேனும் சந்தேகப்படி வந்தார்களா எனவும் போலீசார் விசாரணை

    8 நாட்களாகியும் ஜெயக்குமார் மரணம் தொடர்பான தடயங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை.



  • May 11, 2024 12:49 IST
    பதிவுத் துறைக்கு உத்தரவு

    பதிவிற்காக தாக்கல் செய்யப்படும் ஆவணங்களில் உள்ள சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைக்கழிக்க கூடாது - பதிவுத்துறை உத்தரவு

    சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை.

    பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்கள் தொடர்பான தகவல்களை உரிய ஆவணதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் சரி செய்யத்தக்க சிறு பிழைகளுக்காக ஆவணதாரர்களை அலைகழித்தல் கூடாது எனவும் உத்தரவு



  • May 11, 2024 12:34 IST
    யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது

    சவுக்கு சங்கர் விவகாரத்தில் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் கைது. டெல்லியில் திருச்சி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர். தமிழகம் அழைத்து வருவதாக தகவல்.

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது. முன்ஜாமின் கோரி பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என மறுத்த நிலையில் கைது. 

    அநாகரீகமாக விவாதம் செய்த பெலிக்சை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு கூறி இருந்தார். முன்ஜாமின் மனு விசாரணையை ஒரு வார காலம் உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்த நிலையில் பெலிக்ஸ் கைது. 



  • May 11, 2024 12:29 IST
    ஆஞ்சநேயர் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

    திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி கன்னாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம். சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் உடன் இருந்தனர். 



  • May 11, 2024 12:29 IST
    ஆஞ்சநேயர் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்

    திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி கன்னாட் ப்ளேஸ் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம். சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஆகியோர் உடன் இருந்தனர். 



  • May 11, 2024 12:03 IST
    11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

    மார்ச் மாதம் நடந்து முடிந்த 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14-ம் தேதி (செவ்வாய்கிழமை) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் 



  • May 11, 2024 11:38 IST
    10-ம் வகுப்பு துணைத் தேர்வு: மே 16 முதல் விண்ணப்பம் 

    10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத அவர்கள்  பயின்ற பள்ளிகளில் மே 16-ம் தேதி முதல் ஜுன் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்- அரசுத் தேர்வுகள் இயக்கம் 



  • May 11, 2024 11:05 IST
    ஒரே நாளில் ரூ.15,000 கோடி தங்கம் விற்பனை

     "அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 15,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனை"

    கடந்த ஆண்டு 11,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையான நிலையில், தற்போது 20% விற்பனை அதிகரிப்பு - நகை வியாபாரிகள்

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தங்கத்தின் மொத்த விலை 20% வரை அதிகரிப்பு - நகை வியாபாரிகள்

    3 முறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டும் நேற்றைய தினம் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்



  • May 11, 2024 10:56 IST
    ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு

    தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்த்தனின் டிரைவர் விக்னேஷுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளனர்.



  • May 11, 2024 10:52 IST
    ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேட்டி

    கடந்த 5 மாதங்களில் மட்டும் பட்டாசு விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். விதியை மீறும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை வேண்டும். தமிழ்நாட்டில் இன்றைக்கு பட்டாசு ஆலைகளால் ஏற்படுகிற விபத்துகளின்  எண்ணிக்கை என்பது கவலை ஏற்படுத்துகிறது

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேட்டி



  • May 11, 2024 10:32 IST
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750-க்கு, சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,160-க்கும் விற்பனையாகிறது.



  • May 11, 2024 10:25 IST
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • May 11, 2024 09:52 IST
    பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகைகள் கொள்ளை

    மதுரையில் அலங்காநல்லூர் அருகே, திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ஷர்மிளா வீட்டில் வீட்டில் 250 பவுன் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



  • May 11, 2024 09:47 IST
    ஐபிஎல் இன்றை போட்டி

    ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில், கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.



  • May 11, 2024 09:14 IST
    பட்டாசு தொழிற்சாலை உரிமம் தற்காலிகமாக ரத்து

    சிவகாசியில் 10 பேர் பலியான பட்டாசு தொழிற்சாலையில் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    வெடிபொருள்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உத்தரவு



  • May 11, 2024 08:48 IST
    பாஜக நிர்வாகி கைது

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட சம்பவத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைதானார்.

    பாஸ்கரை, குடவாசல் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • May 11, 2024 08:35 IST
    டெல்லியில் ஃபெலிக்ஸ் கைது

    2022ல் கீதா என்ற பெண்ணிடம் பேட்டி எடுக்கும் போது அரசியலில் இருக்கும் பெண்கள் குறித்து தவறாக பேசியதற்காக யூடியூபர் ஃபெலிக்ஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஜாமின் பெற்றார்

    தற்போது மீண்டும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி டெல்லியில் ஃபெலிக்ஸ் கைது



  • May 11, 2024 07:53 IST
    சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    சிவகாசி அருகே நாராணம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

    காலையில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வராததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விருதுநகர் மாவட்ட்த்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.



  • May 11, 2024 07:53 IST
    சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    சிவகாசி அருகே நாராணம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின.

    காலையில் விபத்து ஏற்பட்ட நிலையில் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வராததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விருதுநகர் மாவட்ட்த்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாக பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.



  • May 11, 2024 07:37 IST
    13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 11, 2024 07:34 IST
    செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழை

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை. ரயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், அண்ணாசாலை, அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், வேதாசலநகர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.



  • May 11, 2024 07:33 IST
    உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்- மு.க.ஸ்டாலின்

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி, நம் நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்

    - மு.க.ஸ்டாலின்



  • May 11, 2024 07:33 IST
    சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு

    சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்

    10 மணி நேர சோதனைக்கு பிறகு, குடும்ப அடையாள அட்டை, டேப், மொபைல் போன், ரூ.2 லட்சம், கம்ப்யூட்டர் மானிட்டர், நான்கு கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பின்னர் சோதனையில் எடுத்த பொருட்களை சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர்.



  • May 11, 2024 07:32 IST
    குஜராத் டைட்டன்ஸ் வெற்றி

    சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

    முதலில் ஆடிய குஜராத் அணி 232 ரன்களை சிஎஸ்கே அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து தோல்வி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment