Advertisment

Tamil News Live Updates: இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்று நிறைவு: மாலை தமிழகம் வரும் மோடி

Tamil Nadu News Update Today- 29 May 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Modi Aligarh

Tamil news live

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

6ம் கட்ட மக்களவை தேர்தலில் 63.37% வாக்குப்பதிவு

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 63.37% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

6-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 58 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீகிதம் தொடர்பான விவரங்களையும் வெளியிட்டுள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

  • May 30, 2024 07:10 IST
    செல்போன் பேசியபடி கார் ஓட்டிய டிடிஎஃப் வாசன் கைது!

    மதுரையில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக பிரபல யூட்யூபர் டி.டி.எஃப் வாசன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • May 29, 2024 19:43 IST
    நவீன் பட்நாயக் உடலநிலை: பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் குழு அமைக்கப்படும்: மோடி

     

    ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உடல் நிலை சீர்குலைந்து வருவது குறித்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.



  • May 29, 2024 18:56 IST
    பொறியியல் மாணவர் சேர்க்கை 

    பொறியியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு கடந்த 6ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று மாலை வரை 2.22 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். 



  • May 29, 2024 18:22 IST
    கோவை மருத்துவமனை தொழிலாளி கொலை வழக்கு: 8 பேர் கைது

    கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவமனை துணைத் தலைவர் நாராயணன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்படுகின்றன



  • May 29, 2024 18:21 IST
    குமரியில் மோடி தியானம் - ரத்து செய்யக் கோரி தி.மு.க மனு

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

    "தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



  • May 29, 2024 17:21 IST
    சிறார்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி. ரத்து; விதிமுறை ஜூன் 1 முதல் அமல்

    18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவர் ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றித (ஆர்.சி) ரத்து செய்யும் விதிமுறை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும், பிடிபடும் மையனருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று விதிமுறை ஜூன் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.



  • May 29, 2024 17:15 IST
    கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி - ஐகோர்ட் உத்தரவு

    கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தில் இடமில்லாததால் கணவரின் பாதுகாவலராக நியமிக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க தனி நீதிபதி மறுத்த நிலையில் மனைவி மேல்முறையீடு செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • May 29, 2024 17:05 IST
    மாணவிகளை வைத்து பாலியல் தொழில்: முக்கிய ஏஜெண்ட் கைது - போலீஸ் அதிரடி

    சென்னையில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்த வழக்கில் முக்கிய ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய ஏஜெண்ட்டாக இருந்த விஜயலட்சுமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • May 29, 2024 16:27 IST
    மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்க அனுமதி கோரிக்கை - வியட்நாம் வின்பாஸ்ட்

    தூத்துக்குடி மாவட்டத்தில், மின்சாஅ கார் உற்பத்தி ஆலையை அமைக்க வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. முதல் கட்டமாக ரூ.1120 கோரியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிகப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் கையெழுத்தாகி பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.



  • May 29, 2024 16:22 IST
    கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது - ஆவின் நிர்வாகம்

    மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக புகார் எழுந்துள்ளது. பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக வியாபாரிகள் குற்றச்சாட்டினர். இதனால், வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, ஆவின் பால் பண்ணைக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். இதற்கு, கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • May 29, 2024 16:21 IST
    கூடலூர் அருகே 20 அடி பள்ளத்துக்குள் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 20 அடி பள்ளத்துக்குள் விழுந்த குட்டி யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டி தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் முயன்றனர். அப்போது திடீரென குட்டி யானை துரத்தியதால், வனத்துறையினர் அலறியடித்து ஓடினர். அதன் பின்பு மீண்டும் குட்டி யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு தற்போது தாய் யானையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.



  • May 29, 2024 16:21 IST
    கூடலூர் அருகே 20 அடி பள்ளத்துக்குள் விழுந்த குட்டி யானை; போராடி மீட்ட வனத்துறையினர்

    நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் 20 அடி பள்ளத்துக்குள் விழுந்த குட்டி யானையை மீட்டு, வனப்பகுதிக்குள் விரட்டி தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் முயன்றனர். அப்போது திடீரென குட்டி யானை துரத்தியதால், வனத்துறையினர் அலறியடித்து ஓடினர். அதன் பின்பு மீண்டும் குட்டி யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டு தற்போது தாய் யானையுடன் சேர்க்கப்பட்டுள்ளது.



  • May 29, 2024 15:55 IST
    சென்னை:செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்த ஐ.டி. பொறியாளர், ரயில் மோதி மரணம்

    சென்னை பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தைக் கடந்த ஐ.டி. பொறியாளர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தாரணி சத்தியா (23) இன்று காலை தண்டவாளத்தைக் கடந்த போது, அந்தோதியா விரைவு ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சடலத்தைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • May 29, 2024 15:35 IST
    'மகாராஜா' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு

    விஜய் சேதுபதியின் 50 வது படமான 'மகாராஜா' திரைப்படத்தின் ட்ரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது



  • May 29, 2024 15:16 IST
    ஜெயலலிதாவை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள் - ஜெயக்குமார்

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி அவரை கலங்கபடுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்; ஒருவரது தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பது தான் பா.ஜ.க.,வின் எண்ணம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • May 29, 2024 15:04 IST
    அதிகரிக்கும் வெப்பம்: தண்ணீரை வீணடித்தால் ரூ.2,000 அபராதம் : டெல்லி அரசு உத்தரவு

    தண்ணீரை வீணாக்குவது - கார்களை குழாய் மூலம் கழுவுவது, தண்ணீர் தொட்டிகள் நிரம்பி வழிவது அல்லது வணிக நடவடிக்கைகளுக்கு தனியார் இணைப்புகளை பயன்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தில்லி அரசு புதன்கிழமை அறிவித்தது.



  • May 29, 2024 14:39 IST
    ஈரோடு: சுமார் 150 கிலோ கஞ்சா பறிமுதல்

    ஈரோடு சாணார்பாளையம் பகுதியில் சுமார் 150 கிலோ கஞ்சா பறிமுதல். சேகர் என்பவரின் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பெருந்துறை வட்டாச்சியர் மற்றும் வெள்ளோடு காவல் துறையினர் நடவடிக்கை.



  • May 29, 2024 14:38 IST
    உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதியிலிருந்து சாலைக்கு வந்த முதலையால் பரபரப்பு

    உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதியிலிருந்து சாலைக்கு வந்த முதலையால் பரபரப்பு .தடுப்பு வேலியை தாண்டி மீண்டும் நதிக்குள் குதிக்க முயன்ற முதலை முதலையை பார்த்து அலறியடித்து ஓடிய பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு நதியில் விட்டனர்.



  • May 29, 2024 14:23 IST
      அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை

    24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை.  அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது - வானிலை மையம்



  • May 29, 2024 14:19 IST
    30 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானை: 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

    நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளி பகுதியில், 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த குட்டி யானையை .10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட வனத்துறையினர் கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி, யானையை மீட்ட வனத்துறையினர் மீட்கப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை தீவிரம்.



  • May 29, 2024 13:55 IST
    பீகார்: கடும் வெப்ப அலை : மயங்கி விழுந்த மாணவர்கள்

    பீகாரில் கடும் வெப்ப அலை காரணமாக ஷேக்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.  மயங்கிய மாணவர்களின் முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்து பின் மருத்துவமனையில் அனுமதித்த ஆசிரியர்கள். 



  • May 29, 2024 13:52 IST
    மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை

    பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதற்காக எந்த தயாரிப்பு நிறுவனமும் என்னை அணுகவில்லை, இது வெறும் வதந்தி- நடிகர் சத்யராஜ் 



  • May 29, 2024 13:12 IST
     காரைக்கால் சிறுவன் கொலை : கூடுதல் வழக்குப்பதிவு

    காரைக்காலில் 13 சிறுவனை கொடூரமாக வெட்டி கொலை செய்த இளைஞர் மீது போக்சோ பிரிவிலும் வழக்குப்பதிவு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக போக்சோ வழக்கும் பதிவு.



  • May 29, 2024 13:09 IST
    பிரதமரின் பயணத் திட்டத்தில் மாற்றம்

    நாளை கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மாற்றம், கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசிக்கும் பிரதமர் மோடி.  கடலுக்குள் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளதாக தகவல் பிரதமர் வருகையையொட்டி, கன்னியாகுமரியில் உச்சக்கட்ட பாதுகாப்பு. 



  • May 29, 2024 12:55 IST
    இளையராஜா காப்புரிமை விவகாரம் : விஜய் ஆண்டனி பதில்

    இசைக்கான ஆடியோ லேபிள் தன்னிடம் இருந்தால் இளையராஜா உரிமை கோரலாம், இல்லாவிட்டால், தயாரிப்பாளருக்கு தான் உரிமை உள்ளது.

    மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர், இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக அனுமதி கேட்டிருக்கலாம் - இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி



  • May 29, 2024 12:38 IST
    பிரதமர் தியானம் - உச்சகட்ட பாதுகாப்பில் குமரி

    பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் செய்யவுள்ள நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு

    தற்போது விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் கப்பல் படை, கடலோர பாதுகாப்பு படை வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, 



  • May 29, 2024 12:38 IST
    சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்

    கல்லூரி மாணவர்களிடையே மோதல். சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல். மாணவர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு - கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை



  • May 29, 2024 12:25 IST
    புதிய இந்தியா பிறக்குமா?: ரஜினி பதில்

    ஆன்மிகம் மிக முக்கியமான ஒன்று. 

    இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் ஆன்மிகம் தேவைப்படுகிறது. என்னுடைய முதல் இமயமலை பயணத்தில் புது அனுபவம் கிடைத்ததால் ஒவ்வொரு வருடமும் செல்கிறேன். புதிய இந்தியா பிறக்குமா என்ற கேள்விக்கு, "வேண்டிக்கொள்கிறேன்" - ரஜினிகாந்த்



  • May 29, 2024 12:06 IST
    நாளை பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல்

    பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல். ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்து வந்த பிரஜ்வல் ரேவண்ணா நாளை பெங்களூரு திரும்புகிறார். வரும் 31ம் தேதி சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஆஜராகிறார் பிரஜ்வல் ரேவண்ணா



  • May 29, 2024 11:52 IST
    உபாவில் 6 பேர் கைது: விவரங்களை அனுப்பிய சைபர் கிரைம்

    தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக சென்னையில் கைது செய்யப்பட்ட 6 பேரின் விவரங்கள், நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு அனுப்பியது சைபர் கிரைம் போலீஸ்

    இதனை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பும் எனவும் உள்துறை அமைச்சகம் இவ்வழக்கு NIA விசாரணைக்கு உகந்ததா என ஆராய்ந்து முடிவு செய்யும் எனவும் போலீஸ் தகவல்



  • May 29, 2024 11:37 IST
    வைகோவுக்கு சர்ஜரி முடிந்தது - துரை வைகோ

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமுடன் உள்ளதாக அவரது மகன் துரை வைகோ அறிக்கை

    தோள்பட்டையில் 3 இடங்களில் ஏற்பட்டிருந்த எலும்பு முறிவை சரிசெய்ய டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது

    40 நாட்கள் ஓய்வுக்கு பிறகு வைகோ இயல்பு நிலைக்கு திரும்புவார் - துரை வைகோ



  • May 29, 2024 11:16 IST
    கெஜ்ரிவால் மனு- விசாரணைக்கு ஏற்க மறுப்பு

    இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

    இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரும் மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்



  • May 29, 2024 11:14 IST
    அஞ்சலி

    திருச்சி: கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த மேஜர் சரவணனின் நினைவு தினத்தை முன்னிட்டு காண்டோன்மெண்ட் அருகே உள்ள அவரது நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி



  • May 29, 2024 10:54 IST
    நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

    ஒவ்வொரு வருடமும் இமயமலைக்கு செல்கிறேன், இந்த வருடமும் அங்கு செல்வது மகிழ்ச்சி

    பத்ரிநாத், கேதார்நாத் செல்ல உள்ளேன்

    -நடிகர் ரஜினிகாந்த்



  • May 29, 2024 10:43 IST
    தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு

    பிரதமர் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி வருகையையொட்டி தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு;

    கடல் பகுதியில் இந்திய கடலோர காவல் படை கப்பல்கள், அதிநவீன ஹெலிகாப்டர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்



  • May 29, 2024 10:40 IST
    தனியார் தொலைக்காட்சி ஒளிப்பாதிவளர் சாலை விபத்தில் மரணம்

    பொள்ளாச்சி தனியார் தொலைக்காட்சி ஒளிப்பாதிவளர் மற்றும் புகைப்பட கலைஞர் அஜய், கடந்த 2 நாட்களுக்கு முன் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று மரணம் அடைந்தார்.



  • May 29, 2024 10:27 IST
    கொச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

    கேரள மாநிலம் கொச்சியில் ஒரு மணி நேரத்தில் 98 மில்லி மீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.

    கொல்லம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.



  • May 29, 2024 10:08 IST
    மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மோசடி

    மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு

    கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் தகவல்



  • May 29, 2024 09:58 IST
    தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,775-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200-க்கு விற்பனையாகிறது



  • May 29, 2024 09:57 IST
    போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக சிறார் உட்பட 6 பேர் கைது

    சென்னை, அம்பத்தூர் தொழிற்ப்பேட்டை பகுதியில் கருவுற்ற பெண்கள் குழந்தை பிறப்பு ஏற்படும் காலத்தில் வலியை குறைக்க பயன்படுத்தக்கூடிய மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் விற்பனை செய்த சிறார் உட்பட 6 பேர் அம்பத்தூர் தொழிற்ப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

    1,800 போதை மாத்திரைகளை பறிமுதல்



  • May 29, 2024 09:10 IST
    ஜூன் 2 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு, புதுச்சேரியில் ஜூன் 2 ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு



  • May 29, 2024 08:36 IST
    தமிழ்நாட்டில் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்

    தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்குக் கூடுதலாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து அரசிதழ் வெளியீடு!

    பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • May 29, 2024 08:35 IST
    சென்னையில் கொள்ளையர்கள் அட்டூழியம்

    சென்னை கொடுங்கையூரில், டூவிலரில் வந்து 4 பேரிடம் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கண்ணதாசன் நகர் பேருந்து நிறுத்தும் அருகே நின்று கொண்டிருந்த லட்சுமி என்ற பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ஒரு செல்போன், ரூ.6000 பணம் பறித்தனர்.

    சிட்கோ நகர் மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில் லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன் என்பவரைத் தாக்கி செல்போன், ரூ.500 பணம் பறித்தனர்.



  • May 29, 2024 08:30 IST
    காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று கைது செய்தனர்.



  • May 29, 2024 08:30 IST
    காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

    பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கார்த்திக் முனுசாமியை நேற்று கைது செய்தனர்.



  • May 29, 2024 07:49 IST
    உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட வைகோ



  • May 29, 2024 07:43 IST
    அமித்ஷா தமிழ்நாடு வருகை

    நாளை தமிழ்நாடு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    ஏற்கனவே திட்டமிடப்பட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு வரும் அமித்ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.



  • May 29, 2024 07:25 IST
    நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

    ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் உட்பட 4 பேர் நாளை மறுநாள் சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன்



  • May 29, 2024 07:24 IST
    ஆவின் பால் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் திடீர் போராட்டம்

    ஆவின் பால் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



  • May 29, 2024 07:24 IST
    கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவது தேர்தல் விதிமீறல்- செல்வப்பெருந்தகை

    மே 30 முதல் ஜூன் 1 வரை பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

    வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில்  இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால், நீதிமன்றத்தையும் அணுகுவோம்

    -செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment