Tamil Nadu | Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
-
May 11, 2024 07:04 ISTசவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் தேனி மாவட்ட போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்
10 மணி நேர சோதனைக்கு பிறகு, குடும்ப அடையாள அட்டை, டேப், மொபைல் போன், ரூ.2 லட்சம், கம்ப்யூட்டர் மானிட்டர், நான்கு கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், பேங்க் பாஸ்புக் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் சோதனையில் எடுத்த பொருட்களை சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு போலீசார் சீல் வைத்தனர்.
-
May 10, 2024 20:58 ISTசென்னையில் போலி போலீஸ் கைது
சென்னையில் காதல் ஜோடிகளிடம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி போலீஸ் சிவராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே 40 வழக்குகள் நிலுவையில் உள்ளன. -
May 10, 2024 20:32 ISTதிருவாரூரில் சுவாரஸ்யம்: குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவரை கொண்டாடிய ஊர் மக்கள்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவன் மணிகண்டன், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 210 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
அவரை அழைத்து மாலை அணிவித்து பைக்கில் ஊர்வலமாக அழைத்துச் சென்று, நண்பர்கள் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர் . -
May 10, 2024 19:51 IST'நான் திரும்பி வந்துவிட்டேன்’- திகார் சிறையில் இருந்து திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்
“என்னிடம் உள்ள அனைத்தையும் வைத்து நான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடுகிறேன், இப்போது நம்மில் 140 கோடி பேர் அதை செய்ய வேண்டும்” என்று திகார் சிறைக்கு முன்னால் கூட்டத்தில் உரையாற்றிய கெஜ்ரிவால் கூறினார்.
-
May 10, 2024 18:50 ISTதீப்பிடித்து எரிந்த கார்- திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
-
May 10, 2024 18:39 ISTதொகுதி வாக்கு சதவீதம் வெளியிட பாலு கோரிக்கை
தொகுதி வாரியாக வாக்கு சதவீதம், வாக்களித்தவர்களின் விவரங்களை தெளிவாக வெளியிட வேண்டும் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
-
May 10, 2024 17:47 ISTவடலூர் சர்வதேச மையம் வழக்கு ஒத்திவைப்பு
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஜுன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 10, 2024 17:40 ISTஅரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2 சரணடைய உத்தரவு
டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் அம்மாநில முதல அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 2ஆம் தேதி சரண் அடைய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. -
May 10, 2024 17:13 ISTகெஜ்ரிவால், தன்னிச்சையாக அரசு கோப்புகளில் கையெழுத்திட கூடாது: உச்ச நீதிமன்றம்
டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.- தன்னிச்சையாக எந்த அரசு கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது.
- முதலமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது.
- ரூ.50,000-க்கான பிணைத்தொகை கட்ட வேண்டும்.
-
May 10, 2024 16:02 ISTஉச்சநீதிமன்றத்திற்கு நன்றி - டெல்லி அமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது குறித்து, டெல்லி அமைச்சர் அதிஷி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி மக்கள் சார்பில், உச்சநீதிமன்றத்திற்கு நன்றி கூறியுள்ளார்.
-
May 10, 2024 16:01 ISTசவுக்கு சங்கர் மேலும் ஒரு வழக்கில் கைது
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சி.எம்.டி.ஏ.வின் ஆவணங்களை போலியாக தயாரித்து அவதூறு பரப்பியதாகவும், மோசடி, போலி ஆவணங்கள் மூலம் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் என 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே 2 வழக்குகள் பதிந்து கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் ஏற்கனவே 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6வது வழக்கிலும் கைதாகியுள்ளார்.
-
May 10, 2024 15:46 ISTவெறும் கண்களுக்கு தென்படும் விண்வெளி மையம் - நாசா அறிவிப்பு
"வெறும் கண்களுக்கு தென்படும் விண்வெளி மையம். சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம். இரவு 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் தென்படும்" என நாசா அறிவித்துள்ளது.
-
May 10, 2024 15:32 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - மம்தா பானர்ஜி வரவேற்பு
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளதை நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்” என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
-
May 10, 2024 14:39 ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கியும், ஜூன் 2ஆம் தேதி கெஜ்ரிவால் மீண்டும் சரண் அடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 10, 2024 12:52 IST10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் சந்திப்பு - த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் 12, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் அவரவர் உயர்கல்வி இலக்குகளுடன், வாழ்வின் பல்வேறு துறை சார்ந்த வெற்றிகளை குவிக்க வாழ்த்துகிறேன். வருங்கால சமூகத்தின் சாதனை சிற்பிகளாக வலம்வர இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்" என்று த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
10, 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவர்களை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார். -
May 10, 2024 12:43 ISTமகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட ராமநாதபுர மாணவி
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் ராமநாதபுரம் ஏவிஎம்எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரதிக்ஷா 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனையடுத்து, மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்டார்.
-
May 10, 2024 11:43 ISTவெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்
மேல்நிலைக் கல்வி - தொழிற்கல்வி எனப் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களது பாதைக்கு வழிகாட்ட #நான்_முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன
-முதல்வர் ஸ்டாலின்
மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) May 10, 2024
மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!
குறைவான மதிப்பெண்… -
May 10, 2024 11:23 ISTபட்டாசு விபத்து
பட்டாசு விபத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரது உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.
10 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலா 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க கோரிக்கை - காவல்துறையினர் பேச்சுவார்த்தை
-
May 10, 2024 11:22 ISTஜாபர் சாதிக் நெருங்கிய கூட்டாளி நீதிமன்றத்தில் மனு தாக்கல்
திகார் சிறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடித்ததாக கூறி, ஜாபர் சாதிக் நெருங்கிய கூட்டாளி சதானந்தம் டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கடந்த 8ஆம் தேதி விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரி சுனில் சங்கர் அடித்து துன்புறுத்தியதாகவும், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய திகார் சிறைக்கு உத்தரவிட வேண்டும் என மனு
-
May 10, 2024 10:41 ISTஐபிஎல் இன்றைய போட்டி
ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.
அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
-
May 10, 2024 10:40 ISTமறு கூட்டலுக்க்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வர்கள் மறு கூட்டலுக்க்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி மறு தேர்வு நடைபெறும் நாளை தேர்வு அட்டவனை வெளியாகும்.
-
May 10, 2024 09:40 IST10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;
தமிழ்நாடு முழுவதும் 9.03 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
-
May 10, 2024 09:17 ISTசென்னைக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்
சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக, கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் நேற்று கைதானார்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்து வரும் போலீசார்
-
May 10, 2024 09:09 IST2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் மே 12 மற்றும் 14 ஆகிய 2 நாட்களுக்கு ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
May 10, 2024 09:08 ISTஅட்சய திருதியை- ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை
அட்சய திருதியை நாளான இன்று காலையில் தங்கம் விலை ஏற்கெனவே சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.360 உயர்ந்தது.
அதன்படி சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.53,640-க்கும் விற்பனையாகிறது.
-
May 10, 2024 08:30 ISTபொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மே 15ஆம் தேதி தொடங்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
-
May 10, 2024 08:28 ISTபட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒப்பந்ததாரர் கைது
சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பட்டாசு ஆலை வெடி விபத்தில், ஆலை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் நள்ளிரவில் கைதான நிலையில், ஆலை ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணன் இன்று காலை கைது
தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் சரவணனை தீவிரமாக தேடி வரும் போலீசார்
-
May 10, 2024 08:25 ISTசவரனுக்கு ரூ.360 உயர்ந்த தங்கம் விலை
அட்சய திருதியை தினமான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கு விற்பனையாகிறது. வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
-
May 10, 2024 08:19 ISTபெங்களூருவில் விமான சேவை பாதிப்பு
பெங்களூருவில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் அங்கு செல்ல வேண்டிய 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்ன.
டெல்லி, மும்பை, கோவா, ஹைதராபாத், ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட இடங்களில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சென்னையில் தரையிறக்கம்.
-
May 10, 2024 08:18 ISTசிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேற்பார்வையாளர் கைது
சிவகாசி: கீழதிருத்தங்கலில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் கைது. அஜாக்கரதையாக செயல்பட்டு உயிரிழப்பு ஏற்படுத்தியது, வெடி பொருட்களை முறையாக கையாளத் தவறியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைமறைவாகவுள்ள ஆலை உரிமையாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
-
May 10, 2024 08:18 ISTசிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
May 10, 2024 08:18 ISTதமிழ்நாட்டில் 23 வகை நாய்களை வளர்க்க தடை
ராட் வீலர், பிட்புல் உள்ளிட்ட 23 வகை நாய்களை வளர்க்கவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு;
இந்த 23 வகை நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி, இனப்பெருக்கம், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வது உள்ளிட்ட எல்லா வகையான பயன்பாட்டையும் கால்நடை பராமரிப்புத்துறை தடை செய்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.