Tamil News Updates: தமிழ்நாட்டில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலானது

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

பெட்ரோல்,டீசல் விலை: சென்னையில் 78-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

டி20 உலக கோப்பை தொடக்கம் 

ஐ.சி.சியின் 9-வது டி20 உலக கோப்பை தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோத உள்ளன. இந்த தொடர் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகளில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கனடா, அமெரிக்கா, உகாண்டா, நேபாளம், ஓமன், பப்புவா நியூகினியா அணிகள் புதிதாக பங்கேற்றுள்ளன. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment
Advertisements

 

  • Jun 02, 2024 22:30 IST

    பிறர் பாக்கெட்டில் பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை - பிரகாஷ் ராஜ் விமர்சனம்

    நடிகர் பிரகாஷ் ராஜ்: “பிறர் பாக்கெட்டில் பணம் எடுப்பதால் காந்தி பற்றி மோடிக்கு தெரியவில்லை; தனது பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்து செலவு செய்தால் காந்தியைப் பற்றி தெரிந்திருப்பார். நான் அரசியல்தான் செய்கிறேன். ஆனால், அரசியல் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்ல” என்று கூறினார்.



  • Jun 02, 2024 22:28 IST

    இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன் - கௌதம் கம்பீர்

    அபுதாபியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன்; தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதைவிட பெரிய கவுரவம் எதுவும் இல்லை” என்று கூறினார். 



  • Jun 02, 2024 21:21 IST

    பா.ஜ.க பெரும்பான்மை பெற்று மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார் - ஓ.பி.எஸ்

    திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்த முன்னால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பின்னர்  செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  “பா.ஜ.க பெரும்பான்மை பெற்று மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்பார்” என்று ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.



  • Jun 02, 2024 20:15 IST

    வாக்கு எண்ணும்போது பாதுகாப்பை உறுதி செய்ய தேர்தல் ஆணையரிடம் பா.ஜ.க வலியுறுத்தல்

     

    வாக்கு எண்ணிக்கையின்போது, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; தேர்தல் நடைமுறைகளை சிறுமைப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பா.ஜ.க குழுவினர் தேர்தல் ஆணையரிடம் நேரில் வலியுறுத்தினர்.   



  • Jun 02, 2024 20:11 IST

    சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சினிமா தயாரிப்பாளர் கைது

    சென்னையில் இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், சினிமா தயாரிப்பாளர் முகமது அலி கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்  அளிக்கப்பட்டதன் பேரில் கைது செய்யப்பட்டார்.



  • Jun 02, 2024 19:21 IST

    வாக்கு எண்ணிக்கை; இந்தியா கூட்டணி மனு

     

    “தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே EVM வாக்குகளை எண்ண வேண்டும்” என தேர்தல் ஆணையர்களை சந்தித்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.



  • Jun 02, 2024 19:00 IST

    இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்

    செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 02, 2024 18:05 IST

    உத்தரப்பிரதேசத்தில் நில அதிர்வு

    உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.9 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jun 02, 2024 18:00 IST

    வீடு திரும்பினார் வைகோ

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.



  • Jun 02, 2024 17:46 IST

    நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சரண்

    டெல்லி ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து உரையாற்றிய பின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு சென்றார்.
    டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் திகார் சிறையில் சரணடைந்தார் அரவிந்த் கெஜர்வால்.



  • Jun 02, 2024 16:52 IST

    என் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை – கெஜ்ரிவால்

    என் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை. ஒரு ரூபாய் லஞ்சமாக கிடைத்திருந்தாலும் அதற்கான ஆதாரத்தை அவர்களால் தரமுடியுமா? 21 நாட்களில் ஒரு வினாடியை கூட நான் வீணடிக்கவில்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுங்கள் என சிறைக்குச் செல்லும் முன் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்



  • Jun 02, 2024 16:34 IST

    சிக்கிமில் நோட்டாவுக்கு கீழ் காங்கிரஸ்

    சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் நோட்டாவை விட காங்கிரஸ் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. நோட்டாவுக்கு 0.99% வாக்குகளும், காங்கிரஸுக்கு 0.32% வாக்குகளும், பா.ஜ.க.,வுக்கு 5.18% வாக்குகளும் கிடைத்துள்ளது



  • Jun 02, 2024 15:23 IST

    காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை

    இடைக்கால ஜாமின் நிறைவடைந்து இன்று திகார் சிறையில் சரணடைய இருக்கும் நிலையில் காந்தி நினைவிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மரியாதை செலுத்தினார் 



  • Jun 02, 2024 14:51 IST

    வெப்ப அலை பாதிப்பு; பிரதமர் மோடி ஆலோசனை

    பிரதமர் மோடி நாட்டில் நிலவும் வெயிலின் தாக்கம் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ரீமால் புயல் பாதிப்பு குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்



  • Jun 02, 2024 14:29 IST

    7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, நெல்லை, கோவை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது



  • Jun 02, 2024 14:04 IST

    இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Jun 02, 2024 14:04 IST

    இன்று மாலை வீடு திரும்புகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ

     எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பின், இன்று மாலை வீடு திரும்புகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ .கடந்த வாரம் தனது இல்லத்தில், வைகோ தடுமாறி விழுந்ததில், தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது கடந்த 27ஆம் தேதி சென்னை கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார் திங்கட்கிழமை மாலை வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தொடர்ந்து 7 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று மாலை டிஸ்சார்ஜ்.



  • Jun 02, 2024 13:07 IST

    ராமேஸ்வரத்தில், கடும் வெயிலால் மயங்கி விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

    ராமேஸ்வரத்தில், கடும் வெயிலால் மயங்கி விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு . ஐஸ் விற்றுக்கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்த தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 



  • Jun 02, 2024 13:04 IST

    அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் : மீண்டும் ஆட்சியை பிடித்த பாஜக

    அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை பிடித்த பா.ஜ.க . மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு தேவையான 31 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி, 14 தொகுதிகளில் முன்னிலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தேசிய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி, 3 தொகுதிகளில் முன்னிலை.  



  • Jun 02, 2024 12:44 IST

    நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார். விமானத்தில் பயணிக்க அனுமதி மறுத்த பாதுகாப்பு படையினர், அவரிடம் தொடர்ந்து விசாரணை



  • Jun 02, 2024 12:40 IST

    எக்ஸிட் போல் முடிவுகள்: காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆலோசனை கூட்டம்

    டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் உள்ளனர், அங்கு அனைத்து மக்களவை வேட்பாளர்களுடனும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக காங்கிரஸ் கூட்டம் நடைபெற உள்ளது.  



  • Jun 02, 2024 12:23 IST

    அருணாச்சல் : பாஜக 22 தொகுதிகளில் வெற்றி, 24ல் முன்னிலை

    அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக மொத்தமுள்ள 60 தொகுதிகளில், பாஜக 22 தொகுதிகளில் வெற்றி, 24 தொகுதிகளில் முன்னிலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேசிய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி, 5 தொகுதிகளில் முன்னிலை.



  • Jun 02, 2024 11:58 IST

    டி.டி.எஃப் வாசனுக்கு காவல்துறை சம்மன்

    ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் நாளை விசாரணைக்கு ஆஜராக டிடிஎஃப் வாசனுக்கு மதுரை அண்ணாநகர் காவல்துறை சம்மன். 10 நாட்கள் அண்ணாநகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது 3வது நாளாக அண்ணா நகர் காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட டிடிஎஃப் வாசன் கையெழுத்திட வந்த டிடிஎஃப் வாசனிடம் சம்மன் ஒப்படைப்பு.



  • Jun 02, 2024 11:22 IST

    நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின்

    நார்வே செஸ் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் ஸ்டாலின் .உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தது அபாரமான சாதனை 5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரரான பேபியானோ கருவானாவை தோற்கடித்தது அபாரமான சாதனை முதல் 10 இடங்களுக்கு வரவேற்கிறோம் பிரக்ஞானந்தா - முதலமைச்சர் ஸ்டாலின் உங்கள் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியந்து நிற்கிறது - முதலமைச்சர் ஸ்டாலின்.



  • Jun 02, 2024 11:16 IST

    இளையராஜா, மணி ரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கமல்



  • Jun 02, 2024 10:50 IST

    மோடி இன்று ஆலோசனை

    பிரதமர் மோடி இன்று, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை

    ரீமால் புயல் பாதிப்பு மற்றும் வெயிலின் தாக்கம் குறித்தும் பிரதமர் ஆலோசனை

    உலக சுற்றுச்சூழல் தினத்தை பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்

    மக்களவைத் தேர்தலில்  பாஜக ஆட்சி அமையும் பட்சத்தில்அடுத்த நூறு நாட்கள் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது



  • Jun 02, 2024 10:46 IST

    பத்ரிநாத்தில் ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்

    ஆன்மிக பயணம் சென்றுள்ள ரஜினியுடன், புகைப்படம் எடுத்து மகிழும் ரசிகர்கள்.

    பத்ரிநாத்தில் ரஜினிகாந்தை காண குவிந்த ரசிகர்கள். சமூக வலைதளங்களில் வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படங்கள். கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களிலும் ரஜினிகாந்த் வழிபாடு



  • Jun 02, 2024 10:32 IST

    பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை - இளையராஜா

    இன்று இசையமைப்பாளர் இளையராஜாவின் 81வது பிறந்தநாள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்க கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் குவிந்துள்ள ரசிகர்கள்

    கோடம்பாக்கம் ஸ்டூடியோவிற்கு வந்த ரசிகர்களுடன் இளையராஜா சந்திப்பு. மகளை பறிகொடுத்த காரணத்தினால் இந்த பிறந்தநாளை நான் கொண்டாடவில்லை - இளையராஜா

    ரசிகர்களுக்காக தான் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - இளையராஜா 



  • Jun 02, 2024 09:49 IST

    அருணாச்சல்: 45 தொகுதிகளில் பாஜக முன்னிலை

    அருணாச்சல் சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக

    சிக்கிம் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

    அருணாச்சல் - வெற்றிக்கு 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், 45 தொகுதிகளில் பாஜக முன்னிலை

    சிக்கிம் - வெற்றிக்கு 17 இடங்கள் தேவைப்படும் நிலையில், 31 தொகுதிகளில் எஸ்.கே.எம் முன்னிலை

    அருணாச்சலில் 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு



  • Jun 02, 2024 09:47 IST

    சென்னையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலமாக மிரட்டல்.

    ஒய்எம்சிஏ கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்.

    வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு விமான நிலையத்தில் சோதனை. சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு



  • Jun 02, 2024 09:06 IST

    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு 



  • Jun 02, 2024 09:01 IST

    அருணாச்சல் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் பா.ஜ.க 

    60 தொகுதிகளை கொண்ட அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவையில் 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் 43 இடங்களில் முன்னிலை. என்.பி.பி (தேசிய மக்கள் கட்சி) 8 இடங்களிலும், அருணாச்சல மக்கள் கட்சி 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. காங்கிரஸ் 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. 

    மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 31 இடங்கள் தேவை. பாஜக ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.



  • Jun 02, 2024 08:54 IST

    சிக்கிம்: ஆளும் எஸ்.கே.எம். கட்சி முன்னிலை

    32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் முன்னிலை

    எதிர்க்கட்சியான எஸ்.டி.எஃப் கட்சி ஒரு இடத்தில் முன்னிலைஎ



  • Jun 02, 2024 08:54 IST

    சிக்கிம்: ஆளும் எஸ்.கே.எம். கட்சி முன்னிலை

    32 தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 31 இடங்களில் முன்னிலை

    எதிர்க்கட்சியான எஸ்.டி.எஃப் கட்சி ஒரு இடத்தில் முன்னிலைஎ



  • Jun 02, 2024 08:52 IST

    அருணாச்சல், சிக்கிமில் இன்று வாக்கு எண்ணிக்கை

    அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம். இரு மாநில பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவதால் முன்கூட்டிய வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட உள்ளது. 



  • Jun 02, 2024 08:45 IST

    62.36 % வாக்குகள் பதிவு

    நேற்று நடைபெற்ற 7-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 62.36 % வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: