Advertisment

Tamil News Live Updates: ஜெகன்மோகன் மீது தாக்குதல் : ஸ்டாலின் கண்டனம்

Tamil Nadu Live News Update Today 13- 04- 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin

Tamil News live

Tamil Nadu Chennai News Update

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

இந்தியர்கள் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு தங்கள் இருப்பிடத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Apr 14, 2024 00:10 IST
    ஜெகன்மோகன் மீது தாக்குதல் : முதல்வர் மு.க.ஸ்டாலின்கண்டனம்

    விஜயவாடாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் அரசியல் வேறுபாடுகளுக்காக வன்முறையை நாடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்



  • Apr 13, 2024 22:12 IST
    அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

    தேனி, மதுரை, தென்காசி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு



  • Apr 13, 2024 22:11 IST
    காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

    சண்டிகர், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மக்களவை தொகுதிகள் மற்றும் குஜராத்தில் இடைத்தேர்தல் நடக்கும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது!



  • Apr 13, 2024 22:08 IST
    பிரச்சாரத்திற்கு சென்ற ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு

    விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பஸ் யாத்திரை சென்றபோது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.



  • Apr 13, 2024 20:33 IST
    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர், மணிப்பூராகி விடும் : மு.க.ஸ்டாலின்

    "மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர், மணிப்பூராகி விடும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், விவசாய, கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும். ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டு புதிய சட்டம் இந்தியாவின் கடன் உயர்ந்தது தான், பிரதமரின் சாதனை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 13, 2024 19:53 IST
    மோடி ஒட்டுமொத்த நாட்டுக்கே பேராபத்து : மு.க.ஸ்டாலின்

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வாந்தார் என்றால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தையே மாற்றிவிடுவார். அதனால்தான் சொல்கிறோம், மோடி ஆட்சிக்கு வருவது என்பது, அரசியலமைப்புக்கே ஆபத்து. ஜனநாயகத்திற்கு ஆபத்து. ஒட்டுமொத்த நாட்டுக்கே பேராபத்து என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 13, 2024 19:27 IST
    சமூக நீதி என்றாலே மோடிக்கு அலர்ஜியாக உள்ளது - ஸ்டாலின்

    சமூக நீதி என்றாலே பிரதமர் மோடிக்கு அலர்ஜியாக உள்ளது என அவிநாசியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 13, 2024 19:12 IST
    கோவையில் நிர்மலா சீதாராமன் ரோட் ஷோ

    கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேரணி நடத்தி வாக்கு சேகரித்தனர். ஜிபி சிக்னல் முதல் சிவானந்தா காலனி வரை 2 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்



  • Apr 13, 2024 18:55 IST
    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் - உதயநிதி

    இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். நீங்கள் அளிக்கும் ஓட்டு, பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். சிலிண்டர் விலை குறைக்கப்படும் என மத்திய சென்னை தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்



  • Apr 13, 2024 18:39 IST
    தமிழக மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்து விட்டார் – இ.பி.எஸ்

    தமிழகத்தில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. தமிழக மக்களின் செல்வாக்கை முதலமைச்சர் ஸ்டாலின் இழந்து விட்டார். தி.மு.க ஆட்சியில் மருத்துவமனை, கல்லூரிகள் என எதையும் கட்டவில்லை. அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என தேர்தல் பரப்புரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Apr 13, 2024 18:19 IST
    தெய்வ சக்தி உள்ள கட்சி அ.தி.மு.க; அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் – இ.பி.எஸ்

    தெய்வ சக்தி உள்ள கட்சி அ.தி.மு.க, அதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். 2 கோடி தொண்டர்கள் உள்ள கட்சியான அ.தி.மு.க.,வை சீண்டி பார்க்க வேண்டாம். அ.தி.மு.க.,வை சீண்டி பார்த்தால் எதிர்வினை இருக்கும். அ.தி.மு.க இல்லாவிட்டால் மகளிர் உரிமைத் தொகை கிடைத்திருக்காது என தேர்தல் பரப்புரையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.



  • Apr 13, 2024 17:55 IST
    உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1,425 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

    சென்னை குன்றத்தூர் அருகே உரிய ஆவணங்களின்றி லாரியில் கொண்டு வரப்பட்ட 1,425 கிலோ தங்கக் கட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வெளிநாட்டில் இருந்து விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, சேமிப்பு குடோனுக்கு தங்கத்தை கொண்டுச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது



  • Apr 13, 2024 17:42 IST
    ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

    போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கு தொடர்பாக, ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. ஜாபர் சாதிக்கிற்கு தொடர்புடைய சென்னை உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அமலாக்கத்துறை சோதனையில் ரூ.40 கோடி மதிப்பிலான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து சொத்துக்களை முடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 13, 2024 16:58 IST
    15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

    அடுத்த 3 மணிநேரத்தில் நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி,பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 



  • Apr 13, 2024 16:54 IST
    மதுபானம் ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்து 

    திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்து நாசமாகின. லாரி ஓட்டுனர் சுந்தரமூர்த்தி உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.



  • Apr 13, 2024 16:54 IST
    புதுச்சேரி: காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் உறவினர் வீட்டில் ஐ.டி சோதனை

    புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 

     



  • Apr 13, 2024 16:17 IST
    நாமக்கல் நிதி நிறுவன அதிபர் வீட்டில் ஐ.டி சோதனை -  ரூ.80 லட்சம் பறிமுதல் 

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள நிதி நிறுவன அதிபர் செல்லப்பன் என்பவரது வீட்டில்  வருமானவரி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.80 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    தேர்தலுக்கு பணம் விநியோகம் செய்ய பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, வருமானவரி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 



  • Apr 13, 2024 15:48 IST
    கோடை வெயிலை தணித்த மழை: திண்டுக்கல் மக்கள் மகிழ்ச்சி 

    திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான சாணார்பட்டி, கோபால்பட்டி, வேம்பார் பட்டி, மேட்டுக் கடை, கன்னியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை கோடை வெயிலை தணித்த நிலையில், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 



  • Apr 13, 2024 15:23 IST
    பெங்களூருவில் ரூ.1 கோடி பறிமுதல்

    பெங்களூரு தெற்கு தொகுதிக்குட்பட்ட ஜெயநகர் பகுதியில், ரூ.1 கோடிக்கும் அதிகமான பணத்தை இருசக்கர வாகனத்தில் இருந்து, 4 சக்கர வாகனத்திற்கு மாற்றும்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், காரில் இருந்தவர்கள் தப்பியோட்டம். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 



  • Apr 13, 2024 14:58 IST
    பிரதமர் மோடியிடம் எப்போது வேண்டுமானாலும் பேசும் செல்வாக்கு பெற்றவர் ஓ.பி.எஸ்

    பிரதமர் மோடியிடம் எப்போது வேண்டுமானாலும் பேசும் செல்வாக்கு பெற்றவர் ஓ.பி.எஸ்.  மோடி எப்போது பேசுவார் என்று உலக தலைவர்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள். ராமநாதபுரத்திற்கு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பல நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார்மோடி- அண்ணாமலை பேச்சு 



  • Apr 13, 2024 14:40 IST
    ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான்: அண்ணாமலை

     ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார், பிரதமர் மோடி.எம்.ஜி.ஆர்-ஐ கருணாநிதி வெளியேற்றியதை போல் ஓபிஎஸ்-ஐ ஈ.பி.எஸ் வெளியேற்றி இருக்கிறார் ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற ஒரே தலைவர் ஓ.பி.எஸ். தான். அண்ணாமலை .ராமநாதபுரத்தை தனது நேரடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார், பிரதமர் மோடி



  • Apr 13, 2024 14:23 IST
    அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை

     ராமநாதபுரத்தில் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை. ஓ.பி.எஸ்.ஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை வருகை.



  • Apr 13, 2024 14:23 IST
    பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழப்பு

    சிவகங்கையில் இருந்து இடுக்கி சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7வயது சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் 14 பேர் படுகாயங்களுடன் மீட்பு - ராஜாக்காட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை



  • Apr 13, 2024 14:21 IST
    ஜாபர் சாதிக் வழக்கு - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

    ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல் ஜாபர் சாதிக் மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஏப்.9ல் சோதனை நடத்திய அமலாக்கத்துறை "சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல்" ஜாபர் சாதிக் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல். 



  • Apr 13, 2024 13:43 IST
    புதுச்சேரிக்கு வருகிறார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

    மக்களவை தேர்தல் பரப்புரைக்காக நாளை மறுநாள் புதுச்சேரிக்கு வருகிறார் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.



  • Apr 13, 2024 13:33 IST
    அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்.15ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்.15ல் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.



  • Apr 13, 2024 13:28 IST
    திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள்: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு

    திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.



  • Apr 13, 2024 13:27 IST
    சட்டமன்றத்திற்கு ஆளுநர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது: உதயநிதி ஸ்டாலின்

    "சட்டமன்றத்திற்கு ஆளுநர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது" மாயி பட காமெடி காட்சியை சுட்டிக்காட்டி ஆளுநரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.



  • Apr 13, 2024 12:31 IST
    ஜெ-வைப் போல டி.டி.வி.தினகரன் அரசியல் செய்கிறார்

    ராமரை போல 16 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக் கொண்டு தினகரன் இந்த தேர்தலில் களம் காண்கிறார். ஜெயலலிதாவைப் போல டி.டி.வி.தினகரன் அரசியல் செய்கிறார் - அண்ணாமலை

    அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலையின் தேனி பிரச்சாரம்



  • Apr 13, 2024 12:12 IST
    குமரியில் அமித்ஷா ரோடு ஷோ

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ

    கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

    விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினியை ஆதரித்தும் பிரசாரம்

    தக்கலை பழைய பேருந்து நிலைய சந்திப்பு முதல் மேட்டுக்கடை வரை ரோடு ஷோ



  • Apr 13, 2024 11:22 IST
    ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

    நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி மருதுபாண்டி கைது

    அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக தேர்தல் போஸ்டர் ஒட்டுவதை தடுத்த ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது பாஜக நிர்வாகி பாட்டிலால் தாக்கியுள்ளார். 



  • Apr 13, 2024 11:22 IST
    ஓட்டுநரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது

    நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகி மருதுபாண்டி கைது

    அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக தேர்தல் போஸ்டர் ஒட்டுவதை தடுத்த ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது பாஜக நிர்வாகி பாட்டிலால் தாக்கியுள்ளார். 



  • Apr 13, 2024 10:58 IST
    மீண்டும் விமான சேவை

    சென்னை மொரிஷியஸ் இடையிலான விமான சேவைகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளன. சுமார் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் 173 பயணிகளுடன் இன்று மீண்டும் மொரிஷியஸ் நாட்டிற்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டுச் சென்றது.



  • Apr 13, 2024 10:44 IST
    வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தீப்பெட்டி தொழிற்சாலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு தடை விதித்தும் சீன லைட்டர்கள், பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதாக குற்றம்ச்சாட்டி,  200க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், 1200க்கும் மேற்பட்ட பேக்கேஜிங் யூனிட்டுகளை மூடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்ப்படுகிறது.



  • Apr 13, 2024 10:35 IST
    திமுக வழக்கு

    திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அற்ப காரணங்களுக்காக நிராகரிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.



  • Apr 13, 2024 09:45 IST
    மு.க.ஸ்டாலினுக்கு ஸ்வீட் கொடுத்த ராகுல் காந்தி



  • Apr 13, 2024 09:23 IST
    சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை

    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி ஏப்ரல் 19ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை விடுத்து உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.



  • Apr 13, 2024 09:21 IST
    போஸ்டர்கள் அகற்றம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்க கோரி பல்வேறு சின்னங்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.



  • Apr 13, 2024 09:10 IST
    இன்றைய ஐபிஎல் போட்டி

    ஐபிஎல் தொடரில் மகாராஜா யாதவீந்த்ரா மைதானத்தில் இன்று இரவு 7.30 நடக்கும் போட்டியில்  ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன.



  • Apr 13, 2024 08:38 IST
    பறிமுதல்

    மதுரை நேற்று இரவு வண்டியூர் டோல்கேட் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்



  • Apr 13, 2024 08:37 IST
    எல்லாமே அரசியல் சாசனம் தான்- மோடி

    அம்பேத்கரே வந்து அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாது. பகவத் கீதை, குரான், பைபிள் என எல்லாமே அரசியல் சாசனம் தான். காங்கிரசும் இந்திய கூட்டணி கட்சிகளும் கூறும் பொய்களிடமிருந்து நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மோடி



  • Apr 13, 2024 07:58 IST
    8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • Apr 13, 2024 07:44 IST
    மதுரையில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்

    அதிமுக திமுக இருவருடைய ஊழல் காரணமாக தமிழகம் எந்த அளவிற்கு வளர்ச்சி பெற வேண்டுமோ அந்த வளர்ச்சியை பெறவில்லை என்பது தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை உருவாக்க செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். நேரம் வந்துவிட்டது தற்போது தமிழக மக்களும் மோடிக்கு வாக்களிக்க வந்து விட்டீர்கள்.

    பாஜக மட்டும் தான் தமிழ் வளர்ச்சி, தமிழக வளர்ச்சி  என  அக்கறை செலுத்தும் கட்சி.  தமிழகத்தின் கௌரவத்தை இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பறைசாற்றி கொண்டிருப்பவர் மோடி.

    மதுரையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீனிவாசனை ஆதரித்து அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்



  • Apr 13, 2024 07:44 IST
    கோவையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று நினைத்துப் பாருங்கள்.

    ₹6500 கோடி முதலீட்டுடன் கோவைக்கு வந்த ஒரு பெரிய நிறுவனத்தை மிரட்டி குஜராத்துக்கு மாற்றியது பாஜக. இதுதான் கோவை மீது பாஜக வைத்துள்ள பாசம். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பாஜக அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சிக்கும் போய்விடும்

    -கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம்



  • Apr 13, 2024 07:42 IST
    மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது- ராகுல் காந்தி

    மோடியின் அரசு போக வேண்டிய நேரம் இது. மோடியின் அரசு என நான் சொன்னாலும், இது அதானியின் அரசு.

    அதானிக்காகவே எல்லாமே செய்கிறார் மோடி. சாலை, உள்கட்டமைப்பு, விமான நிலையம் என எதை அவர் விரும்புகிறாரோ, அதை மோடி கொடுத்துவிடுவார். நாடாளுமன்றத்தில் அதானி எப்படியெல்லாம் இந்த அரசில் சலுகைகளை பெறுகிறார் என பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. என் அரசு இல்லமும் பறிக்கப்பட்டது. உண்மையிலேயே எனக்கு அந்த வீடு தேவையில்லை, லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள்

    -கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம்



  • Apr 13, 2024 07:41 IST
    ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கூட்டாக பிரசாரம்

    கோவையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கூட்டாக பிரசாரம் மேற்கொண்டனர்.



  • Apr 13, 2024 07:39 IST
    டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி

    லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்து அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment