Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு

Tamil News Updates - 29 April 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa

Tamil news updates

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 45-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இங்கே. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2960 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 108 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 380 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 • Apr 29, 2024 21:47 IST
  புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை; அறிக்கை

  புதுக்கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததற்கான அறிகுறி இல்லை. தண்ணீர் தொட்டியை நீண்ட நாள் கழுவாததால் பாசி இருப்பதை சிலர் தவறாக கூறியுள்ளனர். தண்ணீர் குடிக்க உகந்தது என திருச்சி சுகாதார நீர் பகுப்பாய்வகத்தின் அறிக்கை கூறுகிறது • Apr 29, 2024 20:25 IST
  சித்த மருத்துவர், மனைவி கொலை வழக்கு; முக்கிய நபர் கைது

  சென்னை ஆவடி அருகே சித்த மருத்துவர் சிவநாயர் மற்றும் அவரது மனைவி நேற்றிரவு கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்படும் முக்கிய நபரான மகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை நடந்த இடத்தில் செல்போன் கிடைத்ததை வைத்து, 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார் • Apr 29, 2024 19:55 IST
  வேலூர் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை

  வேலூர் மாநகராட்சியில் 2017ம் ஆண்டு ரூ.20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ10,000 அபராதம் விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது • Apr 29, 2024 19:04 IST
  தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

   

  தமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. அந்த இடங்கள், ஈரோடு (108.68), திருப்பத்தூர் - (107.6), சேலம் (106.88), வேலூர் (106.7), கரூர் பரமத்தி (105.8), தருமபுரி  (104.9), திருச்சி (104.54), மதுரை விமான நிலையம் (104.36), திருத்தணி (104.18), மதுரை நகரம் தஞ்சாவூர் (104), கோவை (103.64), நாமக்கல் (102.2), பாளையங்கோட்டை (101.3), மீனம்பாக்கம்  (100.4) • Apr 29, 2024 18:39 IST
  தேனியில் உள்ளூர் விடுமுறை

   

  தேனி வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு • Apr 29, 2024 18:37 IST
  மதுரையில் ரயில்வே பெண் ஊழியர் மீது தாக்குதல்

   

  மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் ஏறி, கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து கைப்பையை பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். • Apr 29, 2024 17:44 IST
  கொடைக்கானல் செல்ல இ-பாஸ்; சென்னை உயர் நீதிமன்றம்

  ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  அந்த உத்தரவில், மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
  மேலும், இதற்கான தொழில்நுட்ப உதவிகளை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். இபாஸ் நடைமுறைகள் குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். • Apr 29, 2024 17:36 IST
  வாக்காளர்கள் நீக்க புகார்; தி.மு.க. எம்.பி. பதில்

  “தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 முறையாவது வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கத்திற்கு சிறப்பு முகாம்களும் நடத்துவார்கள்.
  மக்களோடு பணியாற்றக் கூடிய அனைத்து கட்சிகளுக்கும் இது தெரியும். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது” என லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாஜக வேட்பாளர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு, திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ பதிலளித்துள்ளார். • Apr 29, 2024 16:32 IST
  அமித்ஷா வீடியோ தொடர்பாக பதிவு: தெலங்கானா முதல்வருக்கு சம்மன்

  உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இடஒதுக்கீடு தொடர்பான வீடியோ பதிவு விவகாரத்தில் மே 1-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. • Apr 29, 2024 16:29 IST
  பொதுநல வழக்கு: ரங்கராஜ நரசிம்மன் டெபாசிட் தொகை தொடர்பாக - ஐகோர் உத்தரவு

  கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகள் தொடர்ந்த திருச்சியைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், வழக்கின் நேர்மைத்தன்மையை நிரூபித்தால் மட்டுமே அவர்  டெபாசிட் செய்த ரூ. 3.50 லட்சம் திரும்ப அளிக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  தனது வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், தான் செலுத்திய டெபாசிட் பணத்தை திரும்ப அளிக்க ரங்கராஜன் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கவில்லை. அரசுத் தரப்பில் பதில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது. • Apr 29, 2024 16:16 IST
  குஜராத்தில் அடுத்தடுத்து பிடிபடும் போதைப் பொருள் கடத்தல்; 173 கிலோ பறிமுதல்

  குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருட்களை கடலோர காவல் படை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு பறிமுதல் செய்துள்ளது. போதைப் பொருட்களை கடத்தி வந்த இந்திய மீன்பிடி படகிலிருந்த 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குஜராத்தில் நேற்று 86 கிலோ போதைப் பொருள் கடத்தி வந்த 11 பாகிஸ்தானியர்கள் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. • Apr 29, 2024 15:55 IST
  மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி - டெல்லி ஐகோர்ட் உத்தரவு

  பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை தள்ளுப்படி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடவுள், கோயில்கள் குறித்து மோடி பேசியது தேர்தல் விதிமீறல் என்று, வெறுப்பு பேச்சு காரணமாக மோடி போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி ஜோண்டேல் என்பவர் ஏப்ரல் 15-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது. • Apr 29, 2024 14:58 IST
  மேல்முறையீடு

  கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் இருந்து இருவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

  - CBCID தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் பேட்டி • Apr 29, 2024 14:46 IST
  ஆதினத்திற்கு மிரட்டல்- பாஜக நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு

  தருமபுரம் ஆதினத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக நிர்வாகி அகோரத்தின் ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. • Apr 29, 2024 14:28 IST
  36 குற்றவாளிகள் கைது

  சென்னையில் கடந்த 7 நாட்களில் 36 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. • Apr 29, 2024 13:48 IST
  நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

  கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

  குற்றம்சாட்டப்பட்ட 2வது மற்றும் 3வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுவிப்பு • Apr 29, 2024 13:48 IST
  அண்ணாமலை மனு- செப்.9க்கு தள்ளிவைப்பு

  மத வெறுப்புணர்வை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய அண்ணாமலையின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

  வழக்கில் தமிழ்நாடு அரசை எதிர்மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

    • Apr 29, 2024 13:48 IST
  பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்

  இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் காண்டி பாஜக வேட்பாளருடன் சென்று, தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்தார்.

  ஏற்கனவே குஜராத் மாநிலம் சூரத்தில், அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. தற்போது இந்தூர் தொகுதியிலும் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால், பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. • Apr 29, 2024 13:21 IST
  வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

  வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 2, 3ம் தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டும்

  காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் பிற்பகலில் 30% - 50%ஆக இருக்கும்

  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    • Apr 29, 2024 13:21 IST
  வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்

  வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 2, 3ம் தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை எட்டும்

  காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களில் பிற்பகலில் 30% - 50%ஆக இருக்கும்

  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    • Apr 29, 2024 13:20 IST
  நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை

  கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சென்றதாக பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேருக்கு எதிராக வழக்கு;

  உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. • Apr 29, 2024 13:20 IST
  நிர்மலா தேவி வழக்கில் இருவர் விடுதலை

  கடந்த 2018 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த சென்றதாக பேராசிரியை நிர்மலா தேவி உட்பட 3 பேருக்கு எதிராக வழக்கு;

  உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. • Apr 29, 2024 13:20 IST
  குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

  கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று முதல் மே 1 வரை  மழைக்கு வாய்ப்பு

  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • Apr 29, 2024 12:30 IST
  பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது"

  நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது - விசிக அறிவிப்பு மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவர் பிரகாஷ்ராஜ் என விசிக பாராட்டு வழக்கறிஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது, முத்தரசனுக்கு மார்க்ஸ் மாமணி விருது அறிவிப்பு விசிக விருதுகள் வழங்கும் விழா, மே25ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. • Apr 29, 2024 12:30 IST
  இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார்

  இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்" - அமித்ஷா  • Apr 29, 2024 12:09 IST
  கொடநாடு வழக்கு - 4 பேருக்கு சம்மன்

  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்.  ஓட்டுநர் ரமேஷ், தேவன், ரவிக்குமார், அப்துல் காதர் ஆகிய 4 பேருக்கு சம்மன்.  • Apr 29, 2024 12:06 IST
  கோவை தேர்தல் வழக்கு - நாளை விசாரணை

  கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை, பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல்.  • Apr 29, 2024 11:32 IST
  கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பா.ஜ.க நிர்வாகி

  மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பா.ஜ.க நிர்வாகியால் பரபரப்பு. மனுவுடன் கஞ்சா பொட்டலத்தையும் எடுத்து சென்றதால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர் பாஜக நிர்வாகி சங்கர் பாண்டியனை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை .  • Apr 29, 2024 11:26 IST
  செந்தில்பாலாஜி மனு தள்ளிவைப்பு

  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு மே 6ம் தேதிக்கு தள்ளிவைப்பு பண மோசடி தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில், உச்சநீதிமன்றம் உத்தரவு 320 நாட்களுக்கு மேலாக மனுதாரர் சிறையில் உள்ளார் - செந்தில்பாலாஜி தரப்பு வாதம் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனுவுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல். • Apr 29, 2024 11:13 IST

  சென்னை, தாம்பரத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு கைதான 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டம். • Apr 29, 2024 10:26 IST
  16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

  ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று  வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம் • Apr 29, 2024 10:26 IST
  16 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

  ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 16 மாவட்டங்களுக்கு இன்று  வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம் • Apr 29, 2024 10:21 IST
  தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை

  தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை

  தமிழகம், புதுச்சேரி, உள்கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை  3 நாட்களுக்கு நீடிக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ச் எச்சரிக்கை.  • Apr 29, 2024 10:01 IST
  கொடைக்கானல் புறப்பட்டார் ஸ்டாலின்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் 5 நாட்கள் பயணமாக கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.

  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்று, அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் மே 3ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். • Apr 29, 2024 10:01 IST
  தங்கம் விலை சரிவு

  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 சரிவு ஒரு கிராம் தங்கம் ரூ.6,740க்கும், ஒரு சவரன் ரூ.53,920க்கும் விற்பனை • Apr 29, 2024 09:48 IST
  ஈரோட்டில் ஸ்ட்ராங் ரூம் சி.சி.டி.வி பழுது

  ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி பழுது

  ஈரோடு, பவானி அருகே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஐ.ஆர்.டி.டி அரசு பொறியியல் கல்லூரியில் சிசிடிவி பழுது

  நள்ளிரவு 12 மணிக்கு மேல் குறிப்பிட்ட சில கேமராக்கள் மட்டும் இயங்காததால் பரபரப்பு • Apr 29, 2024 09:28 IST
  ஆவடி இரட்டை கொலை: ஒருவர் கைது

  சென்னை, ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம்.

  போலீசாரின் விசாரணையில் இரட்டை கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது.

  செல்போன் கைப்பற்றப்பட்டதன் அடிப்படையில் மகேஷ் என்பவரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை. மேலும் மருத்துவம் பார்க்க வந்து சென்றவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. • Apr 29, 2024 09:27 IST
  சிறுமி படுகொலை: நாளை குற்றப் பத்திரிகை தாக்கல்

  சிறுமி படுகொலை - நாளை குற்றப் பத்திரிகை தாக்கல்

  புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்

  போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரிகை தாக்கலாகிறது • Apr 29, 2024 08:58 IST
  பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம்

  பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம். சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம். வீதிகளில் வலம் வரும் சுவாமியை, திரளான பக்தர்கள் வரவேற்று தரிசனம்.  • Apr 29, 2024 08:57 IST
  வெள்ளியங்கிரி மலை: மேலும் ஒருவர் பலி

  கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு நண்பர்களுடன் சென்றவர் உயிரிழப்பு. ஒன்றாவது மலையில் வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் உயிர் பிரிந்த சோகம்.  • Apr 29, 2024 08:55 IST
  நடிகை ராதா மீது மீண்டும் புகார்

  பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக சென்னை, வடபழனி காவல் நிலையத்தில் நடிகை ராதா மீது மீண்டும் புகார்.

  தலையில் படுகாயமடைந்த முரளி, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி. கடந்த மார்ச் மாதம், பிரான்சிஸ் என்பவரை தாக்கியதாக நடிகை ராதா, அவரது மகன் மீது புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது • Apr 29, 2024 08:02 IST
  தேவகவுடா மகன் மீதும் வழக்குப்பதிவு

  முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் ரேவன்னா மீது வழக்குப்பதிவு

  பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக பகீர் புகார்

  தேவகவுடாவின் பேரனும், எம்பியுமான பிரஜ்வல் ரேவன்னா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு

  பாதிக்கப்பட்ட பெண்ணை பணிக்கு அமர்த்தியதாக ரேவன்னா மீதும் போலீசார் வழக்குப்பதிவு • Apr 29, 2024 07:50 IST
  ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

  பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

  வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரிக்கை

  கடந்த 2021ல் பதியப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது

  தண்டனைக்கு எதிரான ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது

  தற்போது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மனு தாக்கல்Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment