Advertisment

Tamil News Highlights: அ.தி.மு.க பெயர்,சின்னம் விவகாரம்; ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை

Tamil News Updates- 24 March 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
OPS Kovai press meet

IE Tamil Updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

ஐ.பி.எல் இன்றைய போட்டிகள் 

இன்று ஐ.பி.எல் தொடரில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. ஜெய்ப்பூரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான்- லக்னோ அணிகள் மோதல். அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத்- மும்பை அணிகள் மோதல். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 24, 2024 21:56 IST
    ஆந்திரா பா.ஜ.க தலைவர் புரந்தேஷ்வரி ராஜமுந்திரி தொகுதியில் போட்டி

    ஆந்திரா மாநில பா.ஜ.க தலைவரும், முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் மகளுமான புரந்தேஷ்வரி ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்



  • Mar 24, 2024 21:22 IST
    இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் அறிவிப்பு

    இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நடிகை கங்கனா ரனாவத் களமிறங்குகிறார். 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க



  • Mar 24, 2024 20:47 IST
    தேர்தல் என்று வந்துவிட்டால் அ.தி.மு.க – தி.மு.க இடையேதான் போட்டி – இ.பி.எஸ்

    தேர்தல் என்று வந்துவிட்டால் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இடையேதான் போட்டி என திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்



  • Mar 24, 2024 20:14 IST
    எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியதுதானே? – இ.பி.எஸ்

    மதுரை எய்ம்ஸ் செங்கலை நாடாளுமன்றத்தில் காட்டி அழுத்தம் கொடுத்திருக்க வேண்டியதுதானே?  5 ஆண்டுகளாக 38 எம்.பி.,க்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் என திருச்சி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். 



  • Mar 24, 2024 19:54 IST
    விஜயகாந்த் பட வசனத்தை வைத்து பா.ம.க.,வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்

    "துளசி வாசம் மாறும்.. தவசி வார்த்தை மாறாது.." இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என கூறியவர்கள், வேண்டியது கிடைத்தவுடன் துண்ட காணோம், துணிய காணோம்-னு ஓடி விட்டார்கள் என இ.பி.எஸ்-ஐ அருகே வைத்து பா.ம.க.,வை விமர்சித்தார் பிரேமலதா விஜயகாந்த்



  • Mar 24, 2024 19:48 IST
    கோவையில் எந்த வேட்பாளருடன் போட்டி இல்லை; அண்ணாமலை

     

    “கோவையில் எந்த வேட்பாளருடனும் எனக்கு போட்டி கிடையாது; மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம்.
    கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை; என்னுடைய வேலை மக்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது” என கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.



  • Mar 24, 2024 19:44 IST
    நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க - காங்கிரஸ் தான் – திருச்சியில் இ.பி.எஸ் பேச்சு

    நானும் அரசுப் பள்ளியில் படித்த மாணவன் தான். தி.மு.க.,வினர் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை. நீட் தேர்வுக்கு காரணமே தி.மு.க - காங்கிரஸ் தான். சாதனை, சாதனை என கூறினால் போதாது, செய்து காட்ட வேண்டும். அ.தி.மு.க ஆட்சியில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம் என திருச்சி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்



  • Mar 24, 2024 19:23 IST
    திருச்சியில் 40 அ.தி.மு.க வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த இ.பி.எஸ்

    திருச்சியில் நடைபெறும் அ.தி.மு.க.,வின் பரப்புரை பொதுக்கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்



  • Mar 24, 2024 19:18 IST
    அமலாக்கத் துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி ஆஜர்

    டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவல் இன்று ஆஜரானார்.



  • Mar 24, 2024 19:15 IST
    கட்சி துண்டுடன் கோவில் சென்ற எல். முருகன்; புகார் அளிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்

    தேர்தல் விதிமுறைகளை மீறி பாஜக சின்னம் பொறித்த துண்டை அணிந்து நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்கோயிலுக்குள் சென்றார்.
    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.



  • Mar 24, 2024 19:07 IST
    'கேப்டனாக மு.க. ஸ்டாலின் வழிநடத்துகிறார்'- விஜய் வசந்த் எம்.பி


    “தமிழ்நாட்டில் ஒரு கேப்டனாக எங்களை மு.க. ஸ்டாலின் வழிநடத்துகிறார்” என கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் கூறினார்.



  • Mar 24, 2024 18:12 IST
    'பாஜகவை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம்'- உதயநிதி

     

    பாஜகவை தூங்க வைக்கும் வரை தூங்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, “தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் நரேந்திர மோடி; தேர்தல் சமயங்களில் மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார்.
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை மத்திய பாஜக அரசு” என திண்டுக்கல்லில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.



  • Mar 24, 2024 18:12 IST
    'பாஜகவை வீழ்த்தும்வரை ஓயமாட்டோம்'- உதயநிதி

     

    பாஜகவை தூங்க வைக்கும் வரை தூங்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Mar 24, 2024 17:14 IST
    குல தெய்வ கோயிலில் சாமி தரிசனம் : நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் ஓ.பி.எஸ்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது குல தெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்த அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நாளை வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்



  • Mar 24, 2024 16:11 IST
    தேர்தல் விதிமுறைகளை மீறிய பாஜக வேட்பாளர் எல்.முருகன் : புகார் அளிக்க எதிர்கட்சிகள் முடிவு

    தேர்தல் விதிமுறைகளை மீறி பாஜக சின்னம் பொறித்த துண்டை அணிந்து நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன்  கோயிலுக்குள் சென்றுள்ளார். மத வழிபாட்டுத் தளங்களை எந்த வகையிலும் வாக்கு சேகரிப்புக்காக பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Mar 24, 2024 16:07 IST
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இந்தியா கூட்டணி பேரணி அறிவிப்பு:

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து 31ம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படும் என மாநில அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு



  • Mar 24, 2024 15:12 IST
    ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி

    ஈரோடு ம.தி.மு.க எம்.பி. அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.  தற்கொலை முயற்சி செய்த ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியை ஈரோடு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறார்.



  • Mar 24, 2024 14:08 IST
    நான் பேசியதை இ.பி.எஸ் முழுமையாக கேட்கவில்லை - அண்ணாமலை

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இ.பி.எஸ் முழுமையாகக் கேட்கவில்லை. டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கிக் கொடுப்பவர் இ.பி.எஸ். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்கக் கூடாது” என்று கடுமையாகச் சாடினார்.



  • Mar 24, 2024 14:06 IST
    பா.ஜ.க நீலகிரி தொகுதி வேட்பாளர் எல். முருகன் நாளை வேட்புமனு தாக்கல் 

    பா.ஜ.க சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 24, 2024 14:02 IST
    எதிக்கட்சிகள் மீதான பா.ஜ.க அரசின் தாக்குதலைக் கண்டித்து இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

    எதிக்கட்சிகள் மீதான பா.ஜ.க அரசின் தாக்குதலைக் கண்டித்து மார்ச் 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.



  • Mar 24, 2024 13:56 IST
    நம்ம ரிமோட்.. நம்ம டிவி.. - விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த கமல்

    தி.மு.க-வை விமர்சனம் செய்து வந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை ஆதரித்தது குறித்து, விமர்சனங்கள் எழுந்த நிலையில் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். கமல்ஹாசன்: “டி.வி ரிமோட் எடுத்து அடிச்சீங்க, இப்போது அங்கேயே போறீங்களே எனக் கேட்கின்றனர். அய்யா ரிமோட் இன்னும் என் கையில்தான் உள்ளது. டிவியும் அங்கேயேதான் உள்ளது. நம்ம வீட்டு டிவி, நம்ம வீட்டு ரிமோட், ஆனால், அந்த டிவிக்கான கரண்டும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் உருவக்கூடிய அரசு ஒன்றியத்தில் உருவாகிக்கொண்டிருக்கிறது. அதை நான் இனி எறிந்தால் என்ன, கையில் வைத்திருந்தால் என்ன?” என்ரு கேள்வி எழுப்பினார்.



  • Mar 24, 2024 13:49 IST
    தி.மு.க கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் மார்ச் 29 முதல் பிரச்சாரம் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு

    தி.மு.க கூட்டணியை ஆதரித்து கமல்ஹாசன் மார்ச் 29 முதல் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 2024 இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம் வெளியாகி உள்ளது.



  • Mar 24, 2024 13:44 IST
    நீலகிரி தொகுதியில் மோடிஜியா 2ஜியா போட்டி நிலவுகிறது - எல். முருகன்

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் மத்திய இணை அமைச்சர் செயல்முருகன் பேட்டி: “நீலகிரி தொகுதியை பொறுத்தவரையில் மோடிஜியா 2ஜிஆர் என்ற போட்டி நிலவுகிறது. மாநில அரசின் மூன்றாண்டு கால ஊழல் அவலங்களை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய உள்ளேன்” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:58 IST
    தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன் - கமல்ஹாசன் 

    சென்னை தி. நகரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேச்சு: “தன்மானத்தை விட்டு யாருக்கும் தலைவணங்க மாட்டேன்; பிரதமர் என்பதற்காக அவரை நான் வணங்குவேன்; அதற்காக அவருக்கு நான் அடிபணிய மாட்டேன்; எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அரசியல் எதிரி சாதியம்தான். அன்னியரை தமிழ்நாட்டில் நுழைய விடக்கூடாது. தமிழக கட்சிகளிடம் எத்தனை கருத்து வேறுபாடு இருந்தாலும் வேறு கருத்தியல் உள்ள அந்நியரை மாநிலத்திற்குள் நுழைய விடக்கூடாது. சாதியத்திற்கு எதிரான கருத்தியலை சிதைக்கும் நோக்குடன் தமிழ்நாட்டில் நுழைப்பவர்களை நாம் அனுமதிக்க கூடாது. தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடாதது தியாகம் அல்ல, வியூகம்” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:37 IST
    மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது... தோற்கடிக்கப்பட வேண்டும் - சுப்பிரமணியசாமி

    மதுரையில் பா.ஜ.க முன்னாள் எம்.பி. சுப்பிரமணியசாமி பேட்டி: “பா.ஜ.க கேட்டால் பிரசாரத்திற்கு செல்வேன். ஆனால், என்னிடம் கேட்கவில்லை. மோடி பிரதமராக மீண்டும் வரக்கூடாது. தோற்கடிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:34 IST
    தெலங்கானாவில் 10 தொகுதிகளில் வி.சி.க போட்டி - திருமாவளவன்

    சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி: “தெலுங்கானா மாநிலத்தின் 10 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளது. ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சேர்ந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் 6 தொகுதிகள், கேரளாவில் 5  தொகுதிகள், மகாராஷ்டிராவில் 1 தொகுதியில் பானை சின்னத்தில் வி.சி.க போட்டியிட உள்ளது” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:27 IST
    கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை: செங்கோட்டையன்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்: “கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை. மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி உறுதி” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:25 IST
    கோட்டையில் ஓட்டை போட வரவில்லை,  மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன் - துரை வைகோ

    பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கோவையில் பா.ஜ.க வெற்றியை சுவைத்து நீண்ட நாள் ஆகிவிட்டன. கோவை எங்களது கோட்டை பலரும் சொல்கின்றனர். கோட்டையில் ஓட்டை போட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன். ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெல்ல முடியும் என்பதைக் காட்டவே நான் கோவைக்கு வந்துள்ளேன். 2026-ம் ஆண்டு முன்பகுதியில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்” என்று கூறினார்.



  • Mar 24, 2024 12:21 IST
    என் தந்தை வைகோ ஒரு சகாப்தாம் - பிரச்சாரத்தில் கண்ணீர் விட்ட துரை வைகோ 

    திருச்சி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அப்போது, “என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் அரசியலுக்கு வந்தேன். அவர் ஒரு சகாப்தம்” என்று துரை வைகோ உருக்கமாகப் பேசி கண்ணீர் விட்டார். தொண்டர் ஒருவரின் கேள்விக்கு  “நான் செத்தாலும் பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவேன்” என துரை வைகோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். 



  • Mar 24, 2024 11:39 IST
    புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வித் திட்டத்தை புகுத்த முயற்சி - உதயநிதி விமர்சனம்

    தேனி பங்களா மேடு பகுதியில் தேர்தல் பிரசரம் செய்த தி.மு.க அமைச்சர் உதயநிதி, “புதிய கல்விக் கொள்கை மூலம் குலக்கல்வித் திட்டத்தை புகுத்த மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது; புதிய கல்விக் கொள்கை மூலம் கல்வியை சீரழிக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் மாணவர்கள் படிக்கக்கூடாது என்பதற்காக புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது .கடும் நிதி நெருக்கடியிலும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேனியில் தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் 3 மாதம் தேனியில் தங்கி மக்கள் பணியாற்றுவேன்.” என்று  கூறினார்.



  • Mar 24, 2024 10:18 IST
    தேவைகளின் பிரதிபலிப்பே அ.தி.மு.க தேர்தல் அறிக்கை

    தேவைகளின் பிரதிபலிப்பே அ.தி.மு.க தேர்தல் அறிக்கை: இ.பி.எஸ்

    மக்களின் எண்ணங்களின், தேவைகளின் பிரதிபலிப்பே அ.தி.மு.க தேர்தல் அறிக்கை. வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் உள்ளன. மாநில உரிமைப் பறிப்பு, போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்டவற்றை  ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்- இ.பி.எஸ்



  • Mar 24, 2024 09:21 IST
    இப்போது அம்மா இல்லை; மோடி இருக்கிறார்: டிடிவி தினகரன்

    இப்போது அம்மா இல்லை; ஆனால் நம்மோடு இந்திய பிரதமர் மோடி இருக்கிறார் - பாஜக கூட்டணி சார்பாக தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி



  • Mar 24, 2024 09:17 IST
    கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு

    வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார்.



  • Mar 24, 2024 09:14 IST
    தங்க தமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர்: டி.டி.வி தினகரன்

    என்னை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர். யாரையும் நான் போட்டியாக கருதவில்லை. நான் யாருக்கும் குருவும் இல்லை, எனக்கு யாரும் சிஷ்யனும் இல்லை.  டி.டி.வி தினகரன் தொடங்கிய அ.ம.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இப்போது இருவரும் தேனி தொகுதியில் போட்டியிடுகின்றனர். 



  • Mar 24, 2024 08:57 IST
    பிரச்சாரத்தை தொடங்கிய இ.பி.எஸ்

    சேலத்தில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 



  • Mar 24, 2024 08:54 IST
    பெருமாள் கோயிலில் இ.பி.எஸ் சாமி தரிசனம்

    சேலம் சென்றாய பெருமாள் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம். தரிசனத்துக்கு பின் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் பழனிசாமி. 

     



  • Mar 24, 2024 08:54 IST
    குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம்

    உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக  நடைபெறும் குருத்தோலை ஞாயிறு. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா கீர்த்தனை பாடி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பவனி.



  • Mar 24, 2024 08:30 IST
    அ.ம.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

     மக்களவைத் தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    தேனி - டிடிவி தினகரன்; திருச்சி - செந்தில் நாதன் போட்டி 



  • Mar 24, 2024 08:30 IST
    அ.ம.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு

     மக்களவைத் தேர்தல்: அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

    தேனி - டிடிவி தினகரன்; திருச்சி - செந்தில் நாதன் போட்டி 



  • Mar 24, 2024 08:28 IST
    தேங்காயை ரூ.62,000 க்கு ஏலம் எடுத்த தம்பதி

    தேனி: பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின்  வள்ளிக்கும் முருக பெருமானுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தத் நிகழ்ச்சியின் முக்கிய திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன்- கவிதா வள்ளியம்மை தம்பதியினர் ஒற்றைத் தேங்காயை ரூ.62,000 க்கு ஏலம் எடுத்தனர்



  • Mar 24, 2024 07:53 IST
    பா.ஜ.க வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

    வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு

    வடசென்னை தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் வழக்குப்பதிவு. முறையான அனுமதி இன்றி திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தியதாக தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு



Tamilndau
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment