Advertisment

Tamil News Updates: சீர்காழியில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 பேரைக் கடித்துக் குதறிய வெறிநாய் : மக்கள் அச்சம்

Tamil news Live updates-27-05-20224: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore Police on Feeding Stray Dogs Prosecution Against Deterrents Tamil News

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 72-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 47.55% நீர் இருப்பு உள்ளது. 

செம்பரம்பாக்கம் - 50.95%, புழல் - 88.12%, பூண்டி - 12.19%, சோழவரம் - 9.62%, கண்ணன்கோட்டை - 65.4% நீர் இருப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

  • May 27, 2024 23:19 IST
    மணிமுத்தாறு அருவி - நாளை முதல் அனுமதி

    நெல்லை, மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் குளிக்க அனுமதி அளித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • May 27, 2024 23:18 IST
    முட்டி வலி என்று கூறி ராமர் கோவில் செல்வதை தவிர்க்கிறார்கள் : அ.தி.மு.க குறித்து அண்ணாமலை விமர்சனம்

    "ஜெயலலிதா ஒரு இந்துத்துவாதி. ராமர் கோவில் கட்ட வேண்டுமென கையெழுத்து இயக்கம் நடத்தியவர் ஜெயலலிதா. முட்டி வலி என்று கூறி ராமர் கோவில் செல்வதை தவிர்க்கிறார்கள் தற்போதைய அதிமுகவினர் என ஈபிஎஸ்யை அண்ணாமலை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.



  • May 27, 2024 21:18 IST
    வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுனை அணிவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை

    வட மாநிலங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுனை அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில், சைலேந்திர திரிபாதி என்பர் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் நிலை உணர்ந்து வெப்பம் குறையும் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.



  • May 27, 2024 20:36 IST
    வனத்துறை அறிவிப்பு

    “நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை சுற்றுலாதலங்களுக்கு செல்ல நாளை (மே 28) முதல் அனுமதி” என்று வனத்துறை அறிவித்துள்ளது. 



  • May 27, 2024 20:36 IST
    தீபக் ராஜா உடல் சொந்த ஊரில் அடக்கம்

    தீபக் ராஜா நெல்லையில் கடந்த வாரம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுடன் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் புத்தகங்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது



  • May 27, 2024 20:34 IST
    அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு

    தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் அளிக்கும் படிப்பு சான்று தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது என்ற அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரசாணையை எதிர்த்து தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • May 27, 2024 20:31 IST
    "டெபாசிட் இழந்தவர் பிரகாஷ்ராஜ்" - பிரகாஷ் ராஜை விமர்சித்த அண்ணாமலை 

    "பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர், ஆனால் எதிர்ப்பதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கிறார். 2019 பெங்களூர் மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்தவர், அரசியலில் அவரது அனுபவம் அவ்வளவுதான்" என்று பிரகாஷ் ராஜை அண்ணாமலை விமர்சித்துள்ளார் 



  • May 27, 2024 20:25 IST
    "நான் மாட்டை சாமியாக பார்க்கிறவன்" - அண்ணாமலை

     

    "மாட்டுக்கறி சாப்பிடுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்,  நான் மாட்டை சாமியாக பார்க்கிறவன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 



  • May 27, 2024 19:50 IST
    3 நாட்கள் பயணமாக மோடி தமிழ்நாடு வருகை - குமரியில் தியானம்

    பிரதமர் நரேந்திர மோடி வரும் 30, 31, 1 ஆகிய 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வதாக தகவல் தெரிவித்துள்ளார். 



  • May 27, 2024 19:35 IST
    மாநிலங்களவை தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    கேரளாவைச் சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை 1ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அந்த இடங்களுக்கு வரும் ஜூன் 25ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 



  • May 27, 2024 19:33 IST
    முக்கிய நகரங்களில் 100 ஃபாஸ்ட் சார்ஜிங்: ஹூண்டாய் அறிமுகம் 

    ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது முதல் 180KW DC ஃபாஸ்ட் பொது EV சார்ஜிங் நிலையத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியது. தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் 100 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை நிறுவ ஹூண்டாய் நிறுவனம்  திட்டமிட்டுள்ளது.



  • May 27, 2024 18:50 IST
    முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது -  கே. பாலகிருஷ்ணன்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்: “முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது. புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சிக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது. தமிழகம் அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்றே தடுப்பணை கட்ட வேண்டும்” என்று கூறினார்.



  • May 27, 2024 18:46 IST
    திறந்தநிலைப் பள்ளிச் சான்று: அரசாணைக்கு இடைக்கால தடை - ஐகோர்ட் உத்தரவு

    திறந்தநிலைப் பள்ளிச் சான்று தமிழக அரசின் வேலைக்கு செல்லாது என்ற அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தேசிய திறந்தநிலைப் பள்ளி மாணாக்கர் விஷ்ணு, சந்தோஷ் தாக்கல் செய்த மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திறந்தநிலை பள்ளிச் சான்று வைத்திருக்கும் மாணாக்கர் அரசு வேலை, பதவி உயர்வு பெற இயலாது என அரசாணை வெளியிடப்பட்டது.



  • May 27, 2024 18:42 IST
    ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை

     

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) பலியானார். 



  • May 27, 2024 18:38 IST
    சென்னையில் கொளுத்திய வெயில்... 105 டிகிரி வெப்பம் பதிவு

    தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 105 டிகி வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று வெயில் 105 டிகிரியில் கொளுத்தியது.



  • May 27, 2024 18:04 IST
    சாதி ஒழிப்புக்கான செயல் திட்டத்தை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு

    சென்னை பல்கலைக்கழகத்தில் பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் 'பாடத்திட்டத்தில் சாதி ஒழிப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.‌ இதில், கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு: “பள்ளி தொடங்கி கல்லூரி முடியும் வரை வயதுக்கு தகுந்தாற்போல் ஜாதி ஒழிப்பதற்கான செயல் திட்டத்தை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.  இந்த கருத்தரங்கில் சாதி ஒழிப்பிற்கான செயல் திட்டத்தை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



  • May 27, 2024 18:01 IST
    எத்தனை இடங்களில் வெற்றி என்பது முக்கியமில்லை - அண்ணாமலை

    தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை:  “தேர்தல் முடிவுக்குப் பிறகு, மேலே இருப்பவர்கள் கீழே வரலாம், கீழே இருப்பவர்கள் மேலே போகலாம். அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக் கூடாது. நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்துவிட்டோம்.” என்று கூறினார்.



  • May 27, 2024 17:18 IST
    ரீமால் புயல்: மேற்கு வங்கத்தில் 7 பேர் உயிரிழப்பு

    ரீமால் புயல் காரணமாக மேற்குவங்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ரீமால் புயலால் ஏற்பட்ட  முழு சேத விவரங்கள் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. 



  • May 27, 2024 16:58 IST
    திருப்பூரில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் 2 பேர் கைது

    சென்னை - ஆலப்புழா ரயிலில் புகைப்பிடித்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் பயணியை தரக்குறைவாக பேசி இளைஞர்கள் தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து போலீஸ் கைது நடவடிக்கை எடுத்துள்ளது



  • May 27, 2024 16:42 IST
    பொய்யான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன்; பிரஜ்வல் புது வீடியோ

    என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். பாலியல் வழக்கில் வரும் 31ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறேன் என பிரஜ்வல் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்



  • May 27, 2024 16:11 IST
    ஜெயக்குமார் மரணம்; குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரி சேகரிப்பு

    நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில், டி.என்.ஏ பரிசோதனைக்காக ஜெயக்குமாரின் குடும்ப உறுப்பினர்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது



  • May 27, 2024 15:35 IST
    கோவில் பூசாரி மீது பாலியல் புகார்; சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கோரிக்கை

    சென்னை காளிகாம்பாள் கோவில் பூசாரிக்கு எதிரான பாலியல் புகாரின் விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற கோரி, பாலியல் புகாரளித்த பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்



  • May 27, 2024 15:21 IST
    சேலம் நர்சிங் கல்லூரிக்கு நோட்டீஸ்

    மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விவகாரத்தில், சேலம் நர்சிங் கல்லூரியின் சமையல் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் நர்சிங் கல்லூரியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். விடுதியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால் நர்சிங் கல்லூரிக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.



  • May 27, 2024 14:55 IST
    வாக்கு எண்ணும் பணியில் 4,500 நுண் பார்வையாளர்கள்

    தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும்

    - தமிழ்நாடு தலைமை தேர்தல் சத்யபிரத சாஹூ



  • May 27, 2024 14:55 IST
    வாக்கு எண்ணும் பணியில் 4,500 நுண் பார்வையாளர்கள்

    தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் உட்பட 38,500-க்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு நடைபெறும்

    - தமிழ்நாடு தலைமை தேர்தல் சத்யபிரத சாஹூ



  • May 27, 2024 14:53 IST
    மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயர் அப்பாவு கடிதம்

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சேதமான நெற்பயிர்களுக்கு இயற்கை பேரிடராக கருதி உரிய நிவாரணம் வழங்க முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.



  • May 27, 2024 14:50 IST
    நர்சிங் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

    சேலம், குப்பனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நர்சிங் கல்லூரி மாணவிகளை மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.  மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்



  • May 27, 2024 14:16 IST
    சென்னையில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். மேலும், ராணிப்பேட்டை, வேலூரின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்.

    தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்ப அலை இருக்காது. கன்னியாகுமரியில் நினைத்த அளவு மழை பெய்ய வாய்ப்பில்லை

    தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்



  • May 27, 2024 14:13 IST
    ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை சௌந்தரராஜன்

    ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா.

    தமிழிசை சௌந்தரராஜன்



  • May 27, 2024 14:13 IST
    ஜெயலலிதா இந்துத்துவா தலைவர்: தமிழிசை சௌந்தரராஜன்

    ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவை பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம். ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார். நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்பவர் ஜெயலலிதா.

    தமிழிசை சௌந்தரராஜன்



  • May 27, 2024 14:10 IST
    அடுத்த 5 நாட்களுக்கு மழை

    தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 27) முதல் மே 31-ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • May 27, 2024 13:46 IST
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல்

    கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது

     - இந்திய வானிலை ஆய்வு மையம்



  • May 27, 2024 13:46 IST
    மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம்

    திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தில் மர்ம பொருள் விழுந்து 5 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறிய நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

    பள்ளத்தை சுற்றி வேலி போட்டு பாதுகாப்பாக வைக்க கிராம நிர்வாக அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவு



  • May 27, 2024 13:45 IST
    சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவு செல்லாது

    உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட புதுச்சேரி இளைஞர்  உயிரிழந்த விவகாரத்தில் பம்மல் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்து, செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரின் உத்தரவை எதிர்த்து மருத்துவமனை தொடர்ந்த வழக்கு

    சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு.



  • May 27, 2024 13:19 IST
    ஹரியானாவில் தேர்தலை புறக்கணித்த கிராமத்தினர்

    ஹரியானா மக்களவை தேர்தலின் போது தபு மஜ்ரி கிராமத்தில் 2 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

    யமுனா நதியின் மீது பாலம் கட்டி தருமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாததால், சுமார் 550 வாக்காளர்களை தேர்தலை புறக்கணித்துள்ளனர்.



  • May 27, 2024 13:02 IST

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பா.ஜ.கவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு .பா.ஜ.கவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பாஜகவின் விளம்பரத்தை பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அவமதிக்கும் வகையில் உள்ளது - நீதிபதிகள் பாஜகவின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை - நீதிபதிகள் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் - நீதிபதிகள்.



  • May 27, 2024 12:53 IST
    இயல்பைவிட கூடுதலாக பெய்த கோடை மழை

    தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பைவிட 25% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்



  • May 27, 2024 12:45 IST
    அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு: முன்னாள் மேயர் அப்துல் மாலிக் காயம்

    நாசிக்கில் அடையாளம் தெரியாத 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் மாலேகான் முன்னாள் மேயர் அப்துல் மாலிக் காயமடைந்தார்



  • May 27, 2024 12:41 IST
    ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு: 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்

    நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் 30க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன் கடிதத்தில் உள்ள நண்பர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் சம்மன் அனுப்பப்பட்டவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் நேரில் ஆஜராக அழைப்பு. 



  • May 27, 2024 12:30 IST
    தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டம் மூலம் உணவு வழங்க உத்தரவு

    தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளில் பயிலும் 5,725 மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம். அரசு பள்ளி சத்துணவு மையத்திலிருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.  மதிய உணவினை உரிய நேரத்தில் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல மாற்றுத் திறனாளிகள் நல இயக்குனரகம் சுற்றறிக்கை . சிறப்பு பள்ளி பயனாளிகளுக்கு உணவை முறையாக வழங்கிட பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட உபகரணங்களையும் ஏற்பாடு செய்ய உத்தரவு. 



  • May 27, 2024 12:02 IST
    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி தொடக்கம். கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் கூட்டம் மொத்தம் 1,433 பேர் வாக்கு எண்ணும் மையங்களில் பணியில் ஈடுபட உள்ளனர்.



  • May 27, 2024 11:19 IST
    சவுக்கு சங்கர் கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி மனு : விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம்

    கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஜாமின் மனு கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவு.



  • May 27, 2024 11:18 IST
    தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

    தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் .பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் ஆலோசனை. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் அமைப்பு. செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள் பங்கேற்பு வாக்கு எண்ணிக்கையின் போது பூத் முகவர்கள் செயல்படும் முறை குறித்து ஆலோசனை .



  • May 27, 2024 10:58 IST
    திருப்பதி அருகே விபத்து: 4 பேர் பலி

    திருப்பதி அருகே, சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதி பயங்கர விபத்து. காரில் சென்ற 6 பேரில், 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு,  2 பேர் படுகாயம்.

    திருப்பதி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது பரிதாபம். 



  • May 27, 2024 10:34 IST
    துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

    ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாடு தொடக்கம்

    உதகை ராஜ்பவன் மாளிகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்

    துணை வேந்தர்களுக்கான மாநாடு இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெற உள்ளது



  • May 27, 2024 10:31 IST
    தங்கம் சவரனுக்கு ரூ.520 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 6 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 



  • May 27, 2024 09:49 IST
    ஜாமின் நீட்டிப்பு: கெஜ்ரிவால் மனு

    மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் ஜுன் 1 வரை வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமினை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு. PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டி உள்ளதாக கூறி நீட்டிப்பு கோரியுள்ளார். 2-ம் தேதி சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.  



  • May 27, 2024 09:26 IST
    'வைகோ விரைவில் நலம் பெற வேண்டும்' : ராமதாஸ்

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும். கலிங்கப்பட்டி வீட்டில் தவறி விழுந்ததில் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட  எலும்பு முறிவுக்காக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சென்னை மருத்துவமனையில்    அறுவை சிகிச்சை  செய்யப்படவிருக்கிறது.

    வைகோ அவர்கள் விரைவில் முழுமையாக உடல் நலம்  பெற்று  அரசியல்  பணியை தொடர வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்- பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 



  • May 27, 2024 09:06 IST
    சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு. போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை எனப்து தெரிய வந்தது. வெடிகுண்டு புரளியை கிளப்பிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். 



  • May 27, 2024 08:50 IST
    இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை

    மக்களவைத் தேர்தல் நிலவரம் குறித்து வரும் ஜுன் 1-ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்.  ஜுன் 1-ம் தேதி கடைசி கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment