Advertisment

Tamil News Updates : தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Tamil News Live Updates- 10 April 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த ஊர்க்காரர்கள் ரொம்ப பாவப்பட்டவர்கள் தான்.... உங்கள் ஊரின் வெயில் நிலவரம்!

Tamil news live

பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 26-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

ஐ.பி.எல் இன்றைய போட்டி

ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் பலப்பரீட்சை. ஜெய்ப்பூரில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Apr 10, 2024 23:10 IST
    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல் : போலீசார் தடியடி

    கடலூர், புவனகிரி அருகே திருமாவளவன் பிரச்சார வாகனத்திற்கு முன்பு விசிகவினர் பயங்கர மோதலில் ஈடுபட்டுள்ளனர்.  கஸ்பா ஆலம்பாடி மற்றும் நத்தமேடு பகுதிக்கு வந்து செல்ல வேண்டும் என திருமாவளவனிடம் அப்பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர் ஆனால் நேரமாகிவிட்டதால் வேறு ஒரு நாள் வருவதாக திருமாவளவன் தெரிவித்த நிலையில் அவரது வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெயங்கொண்டான் மற்றும் ஆலம்பாடி நத்தமேடு இளைஞர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.



  • Apr 10, 2024 23:08 IST
    பிரதமர் ரோடு ஷோவில் விதிமீறல் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு

    மேற்கு மாம்பலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் விதிமீறல்நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி சாலையில் விளம்பர பதாகைகள் வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Apr 10, 2024 23:06 IST
    தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக அதிமுக வேட்பாளர் மீது குற்றச்சாட்டு

    தேர்தல் பரப்புரையில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்வது போன்ற சாமி சிலையைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் - மத அடையாளங்களை பரப்புரையில் பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் விதிகளை மீறியுள்ளதாகக் குற்றச்சாட்டு!



  • Apr 10, 2024 23:04 IST
    தேர்தல் பிரச்சரத்திற்கு வந்த மோடி ஆளுனர் மாளிகையில் தங்கலாமா? என்.ஆர்.பாரதி கேள்வி

    "தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? ஆளுநர் மாளிகையில் தங்கி பா..க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினால் என்னென்ன சொல்லியிருப்பார்கள்?" என மீஞ்சூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்



  • Apr 10, 2024 21:28 IST
    வழக்குகளுக்கு பயந்து கூட்டணியில் இறங்கியுள்ளார் டி.டி.வி : மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    "ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 10, 2024 21:27 IST
    சொத்துகளை வேட்புமனுவில் மறைத்த நயினார் நாகேந்திரன் : மதுரை உயர்நீதிமன்றத்தில் புகார்

    பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ₹1500 கோடி சொத்துகளை வேட்புமனுவில் மறைத்துள்ளார் என கூறி நெல்லை மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.



  • Apr 10, 2024 21:25 IST
    புதுச்சேரி பா.ஜ.க ஆதரவாளர் வீட்டில் வருமான வரி சோதனை

    புதுச்சேரி தொகுதி பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளரான தில்லை நகரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை



  • Apr 10, 2024 21:14 IST
    டாக்டர் ராமதாஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து

    தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ராமதாஸ் நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள்”  என்று கூறியுள்ளார்.



  • Apr 10, 2024 20:58 IST
    திருநெல்வேலி மக்களவை தேர்தலை நிறுத்தக் கோரி மனுத்தாக்கல்

    பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ₹1500 கோடி சொத்துகளை வேட்புமனுவில் மறைத்துள்ளார்; திருநெல்வேலி மக்களவை தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • Apr 10, 2024 20:37 IST
    டி.டி.வி தினகரனை பார்த்து இதைக் கேளுங்கள்; மு.க. ஸ்டாலின்

    “பாஜக உடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம், நோட்டா உடன் போட்டி போடும் கட்சி பாஜக எனக் கூறிய டிடிவி தினகரன், தற்போது பாஜக கூட்டணியில் தேனியில் போட்டியிடுகிறார்.
    இப்போது நோட்டா உடன் போட்டி போட வந்தீர்களா? என வாக்காளர்களான நீங்கள் கேட்க வேண்டும்” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • Apr 10, 2024 20:21 IST
    பேட்டி கொடுப்பதுதான் வேலை; அண்ணாமலையை தாக்கிய எடப்பாடி பழனிசாமி

    பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் புதிதாக ஒரு தலைவர் வந்திருக்கிறார். விமானத்தில் ஏறினாலும், இறங்கினாலும் பேட்டிதான்; பேட்டிக் கொடுப்பதுதான் அவரது வேலை” என்றார்.



  • Apr 10, 2024 20:01 IST
    சிறப்பு சலுகை கிடையாது; கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

    சிறையில் இருப்பதற்காக சிறப்பு சலுகைகளை அளிக்க முடியாது எனக் கூறி டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • Apr 10, 2024 19:29 IST
    தி. நகர் வரலாறு தெரியுமா? மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

    தி.நகர் வரலாறு தெரியுமா என மோடிக்கு ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர், “சென்னை தியாகராயர் நகரில் மோடி நேற்று ரோடு ஷோ நடத்தியுள்ளார்.

    அந்த இடத்திற்கு தியாகராயர் நகர் என பெயர் வந்த வரலாறு அவருக்கு தெரியுமா? தியாக ராயர், பனகல் அரசர், சொளந்தரபாண்டியர் ஆகியோர் பெயர்களில் திராவிட கோட்டமாக இருக்கும் இடத்தில் உங்களது ஷோ எடுபடுமா? ப்ளாப் ஷோ ஆகவே முடிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.



  • Apr 10, 2024 19:22 IST
    சிதம்பரம் நடராஜர் கோவில்; நீதிமன்றம் உத்தரவு

     

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து முடிவெடுக்க, நிபுணர் குழு அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
    குழுவில் இடம்பெற வேண்டியர்களின் பெயர்களை பரிந்துரைக்க மனுதாரர், அறநிலையத்துறைக்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ள மாட்டோம் என அளித்த உத்தரவாதத்தை மீறவில்லை எனவும் தீட்சிதர்கள் தரப்பு வாதம் செய்தனர்.



  • Apr 10, 2024 18:13 IST
    ரோடு ஷோ நடத்தினால் ஓட்டு கிடைக்குமா, மக்களை யாரும் ஏமாற்ற முடியாது - இ.பி.எஸ்

    பா.ஜ.க தலைவர்கள் பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தமிழகம் வந்து ரோடு ஷோ நடத்தி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நிலையில், அதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் பரப்புரையில் ஈடுபட்டபோது,  “டெல்லியில் இருந்து விமானத்தில் தலைவர்கள் வருகிறார்கள்; ரோடு ஷோ நடத்துகிறார்கள்; ரோட்டில் பயணம் செய்வதால் என்ன பயன்? அதனால், மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா? எத்தனை தலைவர்கள் வந்து சென்றாலும் பேட்டி கொடுத்தாலும் மக்களை யாரும் ஏமாற்ற முடியாது” என்று விமர்சித்தார்.



  • Apr 10, 2024 18:09 IST
    ‘நான் எல்லோருக்கும் மேலானவன்தான்’ காப்புரிமை வழக்கில் இசைஞானி இளையராஜா தரப்பு வாதம்

    “ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்” என்று பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், படத்தின் காப்புரிமை என்பது தயாரிப்பாளரிடம் உள்ளது. இசையமைப்பாளர் குறிப்பிட்ட படத்திற்கு ஊதியம் பெற்ற உடன் அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார். காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என நிறுவனங்கள் தரப்பு வாதிட்டுள்ளது. இளையராஜா ஒரு இசைஞானி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், 1970, 80, 90களில் இருந்த ஈர்ப்பு அவரது பாடல்களுக்கு இப்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார் என நிறுவனங்கள் தரப்பு வாதிட்டதற்கு. இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்” என வாதிட்டார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



  • Apr 10, 2024 18:04 IST
    டெல்லி ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா

    ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பட்டியலினத்தோருக்கு எதிராக ஆம் ஆத்மி உள்ளது; கெஜ்ரிவால் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என ராஜ்குமார் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார். ராஜ்குமார் வீட்டில் கடந்த நவம்பரில் அமலாக்கத்துறை சோதனை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • Apr 10, 2024 17:59 IST
    பா.ஜ.க புதிய தலைவருக்கு பேட்டி கொடுப்பதுதான் வேலை; பெயர் குறிப்பிடாமல் அண்ணாமலை விமர்சித்த இ.பி.எஸ் 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொள்ளாச்சியில் பரப்புரையில் ஈடுபட்டபோது, அண்ணாமலை பெயரைக் குறிப்பிடாமல் விமர்சித்துப் பேசினார். அதாவது, “பா.ஜ.க-வில் புதிதாக் தலைவர் ஒருவர் வந்திருக்கிறார். பேட்டி கொடுப்பதுதான் அவர் வேலை; விமானத்தில் ஏறும்போது பேட்டி, இறங்கும்போது பேட்டி, பேட்டி கொடுத்தே மக்களை ஈர்க்கப் பார்க்கிறார். உழைக்கிறவர்களுக்கே இங்கே மரியாதை” என்று விமர்சித்துப் பேசினார்.



  • Apr 10, 2024 17:30 IST
    கடலூர் தொகுதி பா.ம.க பொறுப்பாளர் சுரேஷ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை

    கடலூர் மாவட்டம், எருக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள கடலூர் தொகுதி பா.ம.க பொறுப்பாளர் சுரேஷ் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்த வருகை தந்துள்ளனர். 



  • Apr 10, 2024 17:26 IST
    ராமநவமியை முன்னிட்டு யாத்திரை செல்ல தமிழக அரசு அனுமதி மறுத்தது சரியே - ஐகோர்ட் உத்தரவு

    ராமநவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளை தமிழ்நாட்டில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய நிலையில், அரசு அனுமதி மறுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

    ராமநவமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த ஆஞ்சநேயம் அறக்கட்டளை தமிழ்நாட்டில் யாத்திரை செல்ல அனுமதி கோரிய நிலையில், அரசு அனுமதி மறுக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்கள் வழியே யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி மறுத்தது சரியே என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரியில் மட்டும் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைக்க, 2 நாட்களில் பரிசீலித்து அரசு முடிவெடுக்க நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.



  • Apr 10, 2024 17:18 IST
    ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

    முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.எம். வீரப்பனின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.



  • Apr 10, 2024 17:02 IST
    ஏப்ரல் 12ல் மீனாட்சி அம்மன் கோயிலில் அமித்ஷா சாமி தரிசனம்

    ஏப்ரல் 12 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்கிறார்



  • Apr 10, 2024 16:45 IST
    நீலகிரியில் வருமான வரித்துறை சோதனை

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் தாமஸ் வீட்டில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஐ.டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வீடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும், தாமஸ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்துள்ளார். தாமஸ் பெயரில் தேயிலை தோட்டங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது



  • Apr 10, 2024 16:24 IST
    ஆர்.எம்.வீரப்பன் இறுதி ஊர்வலம்

    சென்னையில் உடல்நலக்குறைவால் நேற்று காலமான அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அவரது இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது



  • Apr 10, 2024 16:04 IST
    தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல்; மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்கம்

    தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து, வருமான வரித்துறை இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை என பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது தி.மு.க அளித்த புகாருக்கு நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பதில் அளித்துள்ளார். ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறை தான் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்



  • Apr 10, 2024 15:39 IST
    இது குடும்ப ஆட்சி, ஊழலை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல் - மோடி

    தி.மு.க தலைவர் ஒருவர் மோடி தேர்தலுக்கு பின் இந்தியாவை விட்டு ஓடிவிடுவார் என சொன்னார். இந்த தேர்தல், குடும்ப ஆட்சி, ஊழலை நாட்டை விட்டு விரட்டுவதற்கான தேர்தல் என கோவை பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறினார்



  • Apr 10, 2024 15:28 IST
    3வது முறை ஆட்சியின் போது கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் - மோடி

    கோவைக்கு 2 வந்தே பாரத் ரயில்கள் வருகின்றன. தமிழகத்தின் வளர்ச்சியை திமுக பார்ப்பதில்லை. 3வது முறை ஆட்சியின் போது கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக வேகமாக செயல்படுவோம் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • Apr 10, 2024 15:10 IST
    தமிழ்நாட்டின் திறமைகளை தி.மு.க அரசு புறக்கணித்து வருகிறது - பிரதமர் மோடி

    தமிழ்நாடு முழுவதும் பா.ஜ.க அலை வீசுகிறது. எங்கள் அரசு இந்தியர்கள் மீது நம்பிக்கை வைத்தது, கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரித்தது. எதை முடியாது என்று சொன்னார்களோ அதை நாங்கள் செய்து காட்டினோம். கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என எதிர்க்கட்சியினர் கூறினார்கள். தமிழ்நாட்டின் திறமைகளை தி.மு.க அரசு புறக்கணித்து வருகிறது என கோவை தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்



  • Apr 10, 2024 14:55 IST
    கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

    காங்கிரஸ், திமுக அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை. குடும்ப அரசியல் நடத்தும் கட்சிகள் தங்கள் பிள்ளைகளை மட்டுமே பதவிக்கு கொண்டு வருகிறார்கள்.

    தமிழ்நாட்டின் திறமைகளை திமுக அரசு புறக்கணித்து வருகிறது. சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டிற்கு திமுக அரசு அதிக தீமைகளை செய்கிறது. கோவைக்கு 2 வந்தே பாரத் ரயில்கள் வருகின்றன.

    - கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு



  • Apr 10, 2024 14:33 IST
    பிரதமர் மோடி மேட்டுப்பாளையம் வருகை

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்தடைந்தார் 



  • Apr 10, 2024 14:00 IST
    நெல்லையில் ராகுல்காந்தி பிரசாரம்

    நெல்லையில் வருகிற 12ம்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி, நாளை முதல் 13 ஆம் தேதி வரை நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • Apr 10, 2024 13:54 IST
    திரையரங்க உரிமையாளர்களுக்கு 19ம் தேதி விடுமுறை

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 10, 2024 13:38 IST
    அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு

    டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு



  • Apr 10, 2024 13:35 IST
    வெப்ப அலை வீசும்

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் வெப்ப அலை வீசும்- வானிலை ஆய்வு மையம்



  • Apr 10, 2024 13:20 IST
    தயாநிதி மாறன் பேட்டி



  • Apr 10, 2024 13:12 IST
    கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா

    கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா. 

    ஒசூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது எஸ்.டி.குமார் அறிவிப்பு

     



  • Apr 10, 2024 13:11 IST
    மத்திய மற்றும் உத்தரகண்ட் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

    பதஞ்சலி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளுக்கு எதிராக நாங்கள் ஏன் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது?

    மத்திய மற்றும் உத்தரகண்ட் அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம்  கேள்வி

    பதஞ்சலி நிறுவனத்தின் செயல்பாடுகள்  நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்;

    எங்களது உத்தரவுகள் சரிவர பின்பற்றப்படாததால் தான்,  நீதித்துறை தற்போது கேலிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது;

    உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் மீறக் கூடாது என்ற செய்தியை சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

    -  பதஞ்சலி விளம்பர விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வேதனை



  • Apr 10, 2024 13:09 IST
    மதுரை திருமங்கம் கோர விபத்து- வீடியோ வெளியானது



  • Apr 10, 2024 12:19 IST
    வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம்

    வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடிய நிலையில் கட்டுமானப் பணி தற்காலிக நிறுத்தம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது பள்ளம் தோண்டும்போது பார்வதிபுரம் மக்கள் பள்ளத்தில் இறங்கி போராட்டம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் போராட்டத்தால் கட்டுமான பணிகள் தற்காலிக நிறுத்தம்



  • Apr 10, 2024 12:19 IST
    நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்

    தமிழின் பெருமையை அறிய வேண்டும். நான் உங்கள் அனைவரையும் காசிக்கு அழைக்கிறேன்"-பிரதமர் மோடி



  • Apr 10, 2024 11:52 IST
    இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது

    முருகன் பெருமானை நான் வணங்குகிறேன் இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது- பிரதமர் மோடி



  • Apr 10, 2024 11:47 IST
    கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்

    கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்தது காங்கிரஸூம் தி.மு.கவும்தான். கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தமிழக மீனவரக்ள் 5 பேரை இலங்கையில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன் – மோடி



  • Apr 10, 2024 11:44 IST
    தி.மு.கவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை

    தி.மு.க என்பது குடும்ப நிறுவனத்தைப் போன்றது. தி.மு.கவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்திற்கு  எதிராக தி.மு.க செயல்படுகிறது. – மோடி



  • Apr 10, 2024 11:42 IST
    மக்களை மொழியால், மதத்தால், சாதியால், பிரித்தாளும் வேலையை தி.மு.க செய்கிறது

    மக்களை மொழியால், மதத்தால், சாதியால், பிரித்தாளும் வேலையை தி.மு.க செய்கிறது. தி.மு.கவின் செயல்களை மக்கள் உணரும்போது அந்த கட்சி செல்லாக்காசாகி விடும் – மோடி



  • Apr 10, 2024 11:29 IST
    வேலூர் கோட்டைக்கு வந்துள்ள முதல் பிரதமர் மோடி

    உலக நாடுகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடி உதவுகிறார் இந்திய போர் தளவாடங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்திய போர் தளவாடங்கள் ஏற்றுமதிக்கு முக்கிய காரணம் பிரதமர் மோடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் - வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம்



  • Apr 10, 2024 11:22 IST
    தமிழ்நாட்டின் வளர்சிக்காக எனது அனைத்து திறமையையும் பயன்படுத்துவேன்

    தமிழ்நாட்டின் வளர்சிக்காக எனது அனைத்து திறமையையும் பயன்படுத்துவேன்: வரவிருக்கும் தமிழ்புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்.- மோடி 



  • Apr 10, 2024 11:15 IST
    பிரதமர் மோடியை கௌரவித்த சௌமியா அன்புமணி

    பிரதமர் மோடியை கௌரவித்த சௌமியா அன்புமணி



  • Apr 10, 2024 11:09 IST
    பிரதமர் மோடியை கெளரவித்தார் ஏ.சி.சண்முகம்

    பிரதமர் மோடியை கெளரவித்தார் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்



  • Apr 10, 2024 11:09 IST
    தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி

    தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார் பிரதமர் மோடி. தொண்டர்களை பார்த்து தலை தாழ்த்தி வணக்கம் சொன்னார் பிரதமர் மோடி



  • Apr 10, 2024 10:58 IST
    பொதுக் கூட்ட மேடைக்கு வந்தார் மோடி

    பிரதமர் மோடி வேலூர் வருகை. பொதுக் கூட்டத்தில் பங்கேற்பு 
     
    பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறும் மேடைக்கு வந்தார் பிரதமர் மோடி. 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment