Advertisment

Tamil News Today Highlights: வைகோவை நேரில் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரிப்பு

Tamil news live updates-01-06-2024: இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaiko stalin.jpg

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 77-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்.  3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2934 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 322 மில்லியன் கன அடியாக உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Jun 01, 2024 16:00 IST
    இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

    டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது



  • Jun 01, 2024 15:12 IST
    வைகோவை நேரில் சந்தித்து ஸ்டாலின் நலம் விசாரிப்பு

    இடது தோளில் ஏற்பட்ட காயத்திற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்



  • Jun 01, 2024 14:34 IST
    கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    கடலூரில் கருடன் படம் பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்க நிர்வாகம் டிக்கெட் வழங்க மறுப்பதாக புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் நரிக்குறவர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்க நரிக்குறவர்கள் காத்திருக்கின்றனர்.



  • Jun 01, 2024 14:08 IST
    சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகம்

    சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் எடுக்க யூ.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான வசதி செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் பெறுவதற்கான UPI, கார்டு, பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது தொடர்பாக நடத்துனர்களுக்கு பயிற்சி நிறைவு பெற்றுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது



  • Jun 01, 2024 13:58 IST
    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை – தமிழ்நாடு மின் வாரியம்

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. மே 2ல் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின் தேவை 20.830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. நேற்றைய தினம் 4769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.



  • Jun 01, 2024 13:32 IST
    சிறார் வாகனம் ஓட்டினால் வாகன உரிமம் ரத்து; விதிமுறை தமிழகத்தில் அமல்படுத்துவதில் தாமதம்

    18 வயது நிரம்பாத சிறார் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை தமிழகத்தில் அமல் ஆவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. சிறார் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது, வாகனத்தின் ஆர்.சி. ரத்து என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. ஜூன் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என அறிவித்த நிலையில், தமிழகத்தில் அமல் படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் முறையாக அரசாணை வெளியிடாததால் சட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் என கூறப்படுகிறது. ஜூன் 4க்கு பிறகு இந்த நடைமுறைக்கு அமலுக்கு வாய்ப்பு என போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்



  • Jun 01, 2024 13:01 IST
    நோயாளிகளுக்கு ஒரே ஊசி? விசாரணைக்கு உத்தரவு

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தனியார் கிளினிக்கில் நோயாளிகளுக்கு ஒரே ஊசி பயன்படுத்திய விவகாரம்

    இணை இயக்குனர் விசாரணை மேற்கொள்ள மருத்துவ, ஊரக நலப்பணி இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் உத்தரவு

    சம்பந்தப்பட்ட கிளினிக்கில் உரிய வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யவும் உத்தரவு

    ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்த வைத்திருந்ததாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில் நடவடிக்கை



  • Jun 01, 2024 12:45 IST
    மோடி தியானம் குறித்து பிரகாஷ் ராஜ் கருத்து

    கருணாநிதி இருக்கும் வரை யாரும் இங்கு வாலாட்ட முடியவில்லை கலைஞர் இருந்திருந்தால் நான் பேசவேண்டிய அவசியமே இல்லை

    சாதி அரசியல் செய்வதெல்லாம் பெரிதல்ல... கொள்கை பற்றால் தலைவர் ஆனவர் கருணாநிதி

    "எத்தனையோ ஷூட்டிங்கிற்கு மக்கள் தானாக வருவார்கள்...குமரியில் நடக்கும் சூட்டிங்கிற்கு அவர்களே ஆடியன்ஸை கூட்டி செல்கிறார்கள்"

    கருணாநிதியாக நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெருமை

    கருணாநிதியை பார்த்து கற்றுக் கொண்டதை இப்போது பேசுகிறேன்

    கலைஞர் நூற்றாண்டு என்பதை விட ஒரு நூற்றாண்டு கலைஞரின் விழா என்பதே சரி

    கல்லக்குடி போராட்ட காட்சியில் நடித்த போது வியர்த்து விட்டது 

    கருணாநிதி ஒரு பன்முக தன்மையாளர்

    "என் வசனத்தை பேச சிவாஜிக்கு பிறகு பிரகாஷ்ராஜ் இருக்கிறார் என கருணாநிதி கூறினார்"

    கருணாநிதி விதைத்த விதை தமிழர்கள் அனைவரின் மனதிலும் இருக்கிறது-  நடிகர் பிரகாஷ் ராஜ் 



  • Jun 01, 2024 11:52 IST
    திமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

    திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

    அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்பு - காணொலி காட்சி வாயிலாக கூட்டம்



  • Jun 01, 2024 11:52 IST
    வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஒத்திகை

    ஆட்சியர் முன்னிலையில் துப்பாக்கி சூடு நடத்தி அதிரடிப்படையினர் ஒத்திகை. 

    கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தத்ரூபமாக நடந்த பாதுகாப்பு ஒத்திகை. ஜூன் 4ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் பணிகள் தீவிரம். திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 



  • Jun 01, 2024 11:51 IST
    பாசிச பா.ஜ.க. வீழட்டும்; இந்தியா வெல்லட்டும்: ஸ்டாலின்

    இந்தியாவை காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது"

    பாசிச பா.ஜ.க. வீழட்டும் - இந்தியா வெல்லட்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

    இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி

    தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக மாபெரும் சக்தியாக இந்தியா கூட்டணி

    இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன

    பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறது, இந்தியா கூட்டணி



  • Jun 01, 2024 11:02 IST
    கல்லூரிகளுக்கு பல்கலை மானிய குழு உத்தரவு

    சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறியும் நடைமுறைக்கு உயர்கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க கூடாது. 

    பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு

    பல்வேறு உயர்கல்வி நிறுவனங்கள் சான்றிதழ்களின் உண்மை தன்மையை கண்டறிய கட்டணம் வசூலிப்பதாக புகார்

    உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்கள், அரசு பணியில் சேருவோரின் சான்றிதழ்களின் உண்மை தன்மை பரிசோதனை செய்யும் நடைமுறை

    விண்ணப்பதாரர்கள் படித்த கல்வி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களை அனுப்பி வைத்து சரிபார்க்கப்படுகின்றன



  • Jun 01, 2024 10:43 IST
    7-ம் கட்ட வாக்குப் பதிவு: 9 மணி நிலவரம்

    ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் - காலை 9 மணி நிலவரப்படி 11.31% வாக்குப்பதிவு

    உ.பி., - 12.94%, பீகார் - 10.58%, மே.வங்கம் - 12.63%, பஞ்சாப் - 9.64% ஹிமாச்சல் - 14.35%, ஜார்க்கண்ட்-12.15%, ஒடிசா - 7.69%, சண்டிகர் - 11.64%



  • Jun 01, 2024 10:39 IST
    மே.வங்கத்தில் வன்முறை: கச்சா குண்டுகள் வீச்சு 

    மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

    ஜாதவ்பூர் தொகுதியில் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்ததில் கச்சா குண்டுகள் வீசப்பட்டன. 
    தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் இருப்பு வைக்கப்பட்டிருந்த  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை  தண்ணீரில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.



  • Jun 01, 2024 10:39 IST
    மே.வங்கத்தில் வன்முறை: கச்சா குண்டுகள் வீச்சு 

    மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்ற நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

    ஜாதவ்பூர் தொகுதியில் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்ததில் கச்சா குண்டுகள் வீசப்பட்டன. 
    தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஒரு கும்பல் இருப்பு வைக்கப்பட்டிருந்த  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை  தண்ணீரில் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.



  • Jun 01, 2024 10:25 IST
    தாய்ப்பால் விற்பனை: கண்காணிக்க சிறப்பு குழு

    தாய்ப்பால் விற்பனை-  கண்காணிப்பை மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு

    சென்னை மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அதிரடி

    மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது

    வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் லைசன்ஸ்களை ரத்து செய்யவும் உத்தரவு

    சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது

    தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் தெரிவிக்கலாம் - புகார் தெரிவிக்க 9444042322 



  • Jun 01, 2024 10:23 IST
    கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் சஸ்பெண்ட்

    சென்னையில் சவீதா கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் 5 பேர் சஸ்பெண்ட்.

    ரூ 3 லட்சம் கட்டிய நிலையில், கட்டணம் செலுத்தவில்லை என கூறியதால் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர்கள்.

    கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள் தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று வந்து கட்டுமாறு கூறிய நிர்வாகம்.

    கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்கள் சஸ்பெண்ட்

     மேலும் பல மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு



  • Jun 01, 2024 10:21 IST
    மே.வங்கம்: தண்ணீரில் வீசப்பட்ட வாக்கு இயந்திரம்

    மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வன்முறை. EVM, VVPAT இயந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டுக் கிடந்ததால் பரபரப்பு. தேர்தல் அதிகாரிகள் விசாரணை. 

    WB EVM.png



  • Jun 01, 2024 10:14 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,710க்கு விற்பனையாகிறது.

    ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,680க்கு விற்பனையாகிறது. 



  • Jun 01, 2024 09:57 IST
    3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 

    இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்குள் தொடங்கும்- இந்திய வானிலை மையம் 



  • Jun 01, 2024 09:55 IST
    ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம்

    சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம். 3 அடி வரை பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு, 

    மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல்



  • Jun 01, 2024 09:54 IST
    திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திருப்பதியில் குவிந்து வரும் பக்தர்கள். 30 மணி நேரம் காத்திருப்பு.இலவச தரிசனத்துக்கு 5 கி.மீ நீளத்துக்கு வரிசையில் நிற்கும் பக்தர்கள்

    கோடை விடுமுறை, வார இறுதியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு 



  • Jun 01, 2024 09:31 IST
    சிறார் வாகனம் இயக்கினால் ஆர்.சி ரத்து

    சிறார் வாகனம் இயக்கினால் ஆர்.சி ரத்து, ரூ.25,000 அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமல். ரூ.25,000 அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம். வாகனம் இயக்கும் சிறுவருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும்.



  • Jun 01, 2024 09:31 IST
    சிறார் வாகனம் இயக்கினால் ஆர்.சி ரத்து

    சிறார் வாகனம் இயக்கினால் ஆர்.சி ரத்து, ரூ.25,000 அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமல். ரூ.25,000 அபராதமும், 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையும் அளிக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம். வாகனம் இயக்கும் சிறுவருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும்.



  • Jun 01, 2024 08:48 IST
    லாலு பிரசாத் குடும்பத்துடன் வாக்குப்பதிவு

    மக்களவைத் தேர்தல் 7ம் கட்ட வாக்குப்பதிவு: பீகார் மாநிலம் பாட்னாவின் சரண் மக்களவைத் தொகுதியில், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். 



  • Jun 01, 2024 08:46 IST
    கடைசி கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

    மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு துவங்கியது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவங்கியது.

    பீகார், பஞ்சாப், உ.பி., ஜார்கண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் இன்று 7ம் கட்ட தேர்தல். இன்றைய வி.ஐ.பி வேட்பாளர்கள் =மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நடிகை கங்கனா ரணாவத்

    இன்றைய வி.ஐ.பி வேட்பாளர்கள் =மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக், லாலு பிரசாத் மகள் மிசா பாரதி. இன்றுடன் 7 கட்ட தேர்தல் முடிவடைவதை தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment