/indian-express-tamil/media/media_files/qFTUO6aAesNjHO8y5ZVB.jpg)
பெட்ரோல், டீசல் விலை
663 நாட்களுக்குப் பிறகு கடந்த 14-ம் தேதி மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.1.88 மற்றும் டீசலுக்கு ரூ.1.90 குறைத்தது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.75 காசுகளாகவும், டீசல் ரூ.92.34 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்.
3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2759 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 280 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 449 மில்லியன் கன அடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Mar 18, 2024 23:22 IST
தேமுதிகவுக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கும் அதிமுக?
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முடிவு செய்து உள்ளதாக தகவல்.
பேச்சுவார்த்தையின் முடிவில் 4 தொகுதிகள் வரை ஒதுக்க | அதிமுக சம்மதம் தெரிவித்தது. பாமக இல்லாததால் தற்போது கூடுதல் தொகுதி வழங்க வாய்ப்பு உள்ளதாக தேமுதிக தகவல்
-
Mar 18, 2024 23:17 IST
பா.ஜ.க மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதால் சேலத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
-
Mar 18, 2024 21:37 IST
ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ₹45 லட்சம் பணம் பறிமுதல்
அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியில் தனியார் வங்கிக்கு உரிய ஆவணமின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ₹45 லட்சம் பணம் பறிமுதல். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் நடவடிக்கை.
-
Mar 18, 2024 20:55 IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுப்பராயன் பேட்டி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் போட்டியிட உள்ள தற்போதைய எம்.பி. சுப்பராயன் "காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்று வரும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க திருப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என கூறியுள்ளார்.
-
Mar 18, 2024 20:52 IST
“தேச நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி” : பா.ம.க தகவல்
தைலாபுரம் தோட்டத்தில் நடந்த பாமக உயர்மட்டக் குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பாலு, வடிவேல் ராவணன் பேட்டி
-
Mar 18, 2024 20:50 IST
பிரேமலதா மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார்
தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக தேமுதிக கட்சி பொது செயலாளர் பிரேமலதா மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி புகார். மகளிர் தினத்தை முன்னிட்டு 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க டோக்கன் வழங்கியதாக புகார்
-
Mar 18, 2024 19:43 IST
மக்களவை தேர்தல் : பா.ஜ.க - பா.ம.க கூட்டணி உறுதி
மக்களவை தேர்தலை பா.ஜ.கவுடன் இணைந்து சந்திக்கிறது பாமக. கூட்டணியை உறுதி செய்த பாமக மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம் என்றும், வேட்பாளர்கள் யார் என்பது குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் ராமதாஸ் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
-
Mar 18, 2024 19:41 IST
கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு
நாமக்கல் தொகுதி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக சூரியமூர்த்தி தேர்வு கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
-
Mar 18, 2024 18:54 IST
மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 24-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் 24-ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார். முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார்.
-
Mar 18, 2024 18:51 IST
தீவிர மக்கள் பணிக்காக ஆளுநர் பதவி ராஜினாமா - தமிழிசை
தமிழிசை சௌந்தரராஜன்: “தீவிர மக்கள் பணிக்காக மனம் உவந்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். ஆதரவு தந்த புதுச்சேரி, தெலங்கானா மக்களுக்கு நன்றி; ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
-
Mar 18, 2024 18:10 IST
தி.மு.க கூட்டணியில், கொ.ம.தே.க நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிப்பு
தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடும் நாமக்கல் தொகுதி வேட்பாளராக சூரியமூர்த்தியை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இளைஞரணி செயலாளரான சூரியமூர்த்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
Mar 18, 2024 17:47 IST
அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட அனுமதி கோரி... தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு
"மக்களவை தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வேட்புமனு படிவத்தில், தான் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
-
Mar 18, 2024 17:17 IST
அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ. பன்னீர்செல்வம் மனு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் அளித்துள்ளார். இடைக்கால நிவாரணமாக இதனை வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி இரு அணிகளையும் பொதுச் சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் எனவும் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ள்ளார்.
-
Mar 18, 2024 16:37 IST
நீலகிரி - ரூ. 21 லட்சம் பறிமுதல்
நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 24 மணி நேரத்தில், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு ரூ. 50,000 மேல் எடுத்துச் செல்லும்போது ஏதேனும் ஒரு ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருணா அறிவுறுத்தியுள்ளார்.
-
Mar 18, 2024 16:33 IST
திருப்பூர், நாகை தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு - இந்திய கம்யூனிஸ்ட் வெளியீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் தொகுதியில் சுப்பராயன் போட்டியிடுகிறார். நாகை தொகுதியில் செல்வராஜ் போட்டியிடுகிறார்
-
Mar 18, 2024 16:05 IST
மேற்குவங்க டி.ஜி.பி - பணியிட மாற்றம்
மேற்குவங்க டி.ஜி.பி ராஜீவ் குமாரை பணியிட மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது
-
Mar 18, 2024 15:28 IST
திருச்சியில் போட்டியிடுகிறார் துரை வைகோ
எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ம.தி.மு.க சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுகிறார். துரை வைகோ போட்டியிட ம.தி.மு.க ஆட்சி மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.
-
Mar 18, 2024 15:27 IST
தேசிய நெடுஞ்சாலையில் விமானம் தரையிறக்கம்
அவசர நேரத்தில் விமானங்களை தரையிறக்குவதற்காக இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பிரத்யேகமாக ஆந்திராவில் ரூ. 79 கோடி செலவில் 4.1 கி.மீ நீள சாலையை அமைத்துள்ளது. இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒத்திகை நடைபெற்றது.
-
Mar 18, 2024 15:26 IST
மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
குஜராத், உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்கள் நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
Mar 18, 2024 15:05 IST
குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களின் மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு
குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு. மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின் முதல்முறையாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை.
-
Mar 18, 2024 15:04 IST
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட : இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ரூ.500 செலுத்தி, இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு
-
Mar 18, 2024 14:41 IST
அ.தி.மு.க சின்னம் - ஓ.பி.எஸ்-க்கு நிரந்தர தடை
அ.தி.மு.க பெயர், சின்னம், கொடி பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு விதித்த இடைக்கால தடையை நிரந்தரம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
-
Mar 18, 2024 14:18 IST
மார்ச் 20 முதல் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்; இப்பகுதிகளில் மார்ச் 20 முதல் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Mar 18, 2024 14:18 IST
மார்ச் 20 முதல் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும்; இப்பகுதிகளில் மார்ச் 20 முதல் 23ம் தேதி வரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
-
Mar 18, 2024 14:12 IST
தகுதியில்லாத செவிலியர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு
லஞ்சம் பெற்று தகுதியில்லாத செவிலியர்கள் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
-
Mar 18, 2024 13:42 IST
கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு கோவைக்கு இன்று மாலை பிரதமர் வரவுள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு.
-
Mar 18, 2024 13:29 IST
மக்களவைத் தேர்தல் 2024: திமுக நேரடியாக களமிறங்கும் தொகுதிகள்
மக்களவைத் தேர்தல் 2024: திமுக நேரடியாக களமிறங்கும் தொகுதிகள் 1. சென்னை வடக்கு 2. சென்னை தெற்கு 3. மத்திய சென்னை 4. காஞ்சிபுரம் ( தனி) 5. அரக்கோணம் 6. வேலூர் 7. தருமபுரி 8. திருவண்ணாமலை 9. சேலம் `10. கள்ளக்குறிச்சி 11. நீலகிரி (தனி) 12. பொள்ளாச்சி 14. கோவை 15. தஞ்சாவூர் 16. தூத்துக்குடி 17. தென்காசி (தனி) 18. ஸ்ரீபெரம்புதூர் 19. பெரம்பலூர் 20. தேனி 21. ஈரோடு 22. ஆரணி
-
Mar 18, 2024 13:12 IST
திருச்சி மக்களவை தொகுதி ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கீடு
திருச்சி மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒப்பந்தத்தில் கையெழுத்து.
-
Mar 18, 2024 12:57 IST
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது
✦ திருவள்ளூர் (தனி)
✦ கடலூர்
✦ மயிலாடுதுறை
✦ சிவகங்கை
✦ திருநெல்வேலி
✦ கிருஷ்ணகிரி
✦ கரூர்
✦ விருதுநகர்
✦ கன்னியாகுமரி
-
Mar 18, 2024 12:56 IST
கரும்பு விவசாயி சின்னம் - அவசரமாக விசாரிக்க கோரிக்கை
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்க கோரும் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக முறையீடு
மனுவை மின்னஞ்சலில் அனுப்புமாறு தலைமை நீதிபதி அறிவுரை
-
Mar 18, 2024 12:30 IST
இன்று மாலை கூடுகிறது பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கூட்டணி குறித்து முடிவு செய்ய இன்று மாலை கூடுகிறது பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்
-
Mar 18, 2024 12:18 IST
காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டி?
காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது சற்றுநேரத்தில் இறுதியாகிறது
தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும் புதுவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
Mar 18, 2024 12:17 IST
ஆளுநருக்கு எதிராக மனு தாக்கல்
பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்;
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தும் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்த நிலையில் மனு
-
Mar 18, 2024 11:57 IST
தென்சென்னை தொகுதியில் தமிழிசை போட்டி
மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட உள்ளதாக தகவல்;
இன்று மாலை 5 மணிக்கு சென்னை வருகிறார் தமிழிசை சௌந்தரராஜன்
-
Mar 18, 2024 11:53 IST
3 நாளைக்குள் எஸ்.பி.ஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையத்தில் வழங்கி, உச்ச நீதிமன்றத்தில் பிராமணப் பத்திரத்தை எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என எஸ்.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, பெயர், சீரியல் எண்கள், ஆல்ஃபா நியூமெரிக் எண்கள் என அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்ய உத்தரவு
-
Mar 18, 2024 11:33 IST
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி தொடர்பாக நாளை மறுநாள் (மார்ச் 20) ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல்;
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்
-
Mar 18, 2024 11:32 IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ ஏன் தாக்கல் செய்யவில்லை?
உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைப்பிடிக்கிறது
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வசம் இருக்கும் அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்ய வேண்டும் -
தேர்தல் பத்திரம் வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி
-
Mar 18, 2024 11:23 IST
எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐ வங்கியின் நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை
முதல் உத்தரவில் அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று தெளிவாக உள்ளதே?;
உத்தரவில் என்ன சந்தேகம் உள்ளது? நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு
-
Mar 18, 2024 11:13 IST
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா தமிழிசை?
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்;
குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்
-
Mar 18, 2024 11:12 IST
சத்யேந்தர் ஜெயின் மனு தள்ளுபடி
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்;
இந்த விவகாரத்தில் சத்யேந்தர் ஜெயின் சரணடைய நீதிபதி எம்.திரிவேதி அமர்வு உத்தரவு
-
Mar 18, 2024 11:12 IST
SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு
தேர்தல் பத்திரங்கள் சார்ந்த அனைத்து விவரங்களையும் வெளியிட வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனி அடையாள எண்ணை கட்டாயம் வெளியிட வேண்டும். மறைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் SBI வெளியிட வேண்டும் – உச்சநீதிமன்றம்
-
Mar 18, 2024 10:32 IST
பொன்முடி பதவி விவகாரம் - ஆளுநருக்கு கண்டனம்
பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்த ஆளுநருக்கு திமுக கண்டனம். ஆளுநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் - திமுக எம்.பி., வில்சன் எக்ஸ் தளத்தில் பதிவு
-
Mar 18, 2024 10:31 IST
பொறியியல் மாணவர் சேர்க்கை: முக்கிய முடிவு
பொறியியல் படிப்புக்கு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆன்லைன் வழியிலான பதிவு துவக்கம்
ஆன்லைன் வழியில் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டம்
பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் முடிவு
-
Mar 18, 2024 10:29 IST
விற்று தீர்ந்த ஐபிஎல் டிக்கெட்: ரசிகர்கள் அதிருப்தி
சென்னையில் வரும் 22ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடக்கம். டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டு விட்டதாக காட்டப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தி
-
Mar 18, 2024 10:28 IST
தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் சரிவு
தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் சரிவு. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு/ ஒரு கிராம் தங்கம் ரூ.6,090க்கும், ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை
-
Mar 18, 2024 10:26 IST
சத்ய பிரதா சாகு இன்று ஆலோசனை
மக்களவைத் தேர்தல் பணிகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கம், வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை.
-
Mar 18, 2024 10:19 IST
சி.பி.ஐ வேட்பாளர்கள் இன்று அறிவிக்க வாய்ப்பு
சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு கூட்டம், முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் குழுவுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 4 மணிக்கு மேல் செய்தியாளர்களை சந்தித்து வேட்பாளர்களை அறிவிக்கிறார் மாநிலச் செயலாளர் முத்தரசன்.
-
Mar 18, 2024 09:44 IST
சூளை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு
சூளை - வேப்பேரி சாலையில் முழங்கால் அளவுக்கு தேங்கி கிடக்கும் தண்ணீர். சென்னை சூளை பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு - சாலையில் தேங்கிய தண்ணீர்
-
Mar 18, 2024 09:44 IST
சபர்மதி - ஆக்ரா ரயில் தடம் புரண்டு விபத்து
ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து. ரயிலின் எஞ்சின் உட்பட 4 பெட்டிகள் தடம்புரண்டது - மீட்புப் பணிகள் துரிதம்
-
Mar 18, 2024 09:43 IST
சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், டெல்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டார்.
ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை.
சென்னை அடுத்த அயப்பாக்கம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.