Advertisment

Tamil News Today: நாகை கடலில் இரு கிராம மீனவர்களிடையே மோதல்: ஒருவர் பலி

Tamil News Updates: தமிழ்நாடு, இந்தியா என இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fishersmens

IE Tamil Updates

Tamilnadu | பெட்ரோல், டீசல் விலை 

Advertisment

சென்னையில் 645-வது நாளாக பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

கிளாம்பாக்கம்: மின்சார ரயில் சேவை நீட்டிப்பு 

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வோருக்கு வசதியாக சென்னை கடற்கரை- தாம்பரம் செல்லும் 5 இரவு ரயில்கள் சென்னை கடற்கரை கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு. நாளை முதல் இந்த  சேவை தொடங்கும் எனவும் அறிவிப்பு. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Feb 25, 2024 22:11 IST
    பிரதமர் மோடிக்கு பெண்கள் ஆதரவு அதிகம்  - விஜய தரணி 

    பா.ஜ.க-வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ விஜய தரணி கோவையில் பேட்டி: “பெண்களுக்கு தலைமை பண்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்த கட்சி பா.ஜ.க. அதனால்தான், பா.ஜ.க-வில் இணைந்தேன். பெண்கள் வாழ்க்கையில், பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்த பா.ஜ.க-வும் பிரதமர் மோடியும்தான் பெண்கள் மனதில் இருக்கிறார்கள்” என்று கூறினார்.



  • Feb 25, 2024 21:36 IST
    த.மா.கா வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை; ஜி.கே. வாசனுடன் பா.ஜ.க தலைவர்கள் சந்திப்பு

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை அவரது இல்லத்தி்ல் கூட்டணி குறித்து பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மற்றும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி மற்றும் பால் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.



  • Feb 25, 2024 21:31 IST
    விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தீர்மானம்

    தே.மு.தி.க-வின் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பாக மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க-வினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 



  • Feb 25, 2024 21:09 IST
    இறுதி மூச்சு உள்ளவரை அ.தி.மு.க-தான்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மஃபா பாண்டியராஜன்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல் பரவியதையடுத்து, மாஃபா பாண்டியராஜன் 3 ஆண்டுகளுக்கு முன்  “என் இறுதி மூச்சு உள்ளவரை அ.தி.மு.க மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்” என எக்ஸ் தளத்தில் இட்டப் பதிவை பகிர்ந்து “என்றும் புரட்சித் தலைவி அம்மா தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன், உண்மையுடன்” என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.



  • Feb 25, 2024 19:59 IST
    அ.தி.மு.க-வில் சாதாரண தொண்டன் முதலமைச்சர் ஆகலாம்... வேறு எந்த கட்சியிலாவது முடியுமா? - இ.பி.எஸ் 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “சாதாரண தொண்டன்கூட பொதுச் செயலாளராக வருவதற்கு தகுதியுடைய ஒரே கட்சி அ.தி.மு.க. சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ ஆகலாம், எம்.பி. ஆகலாம், அமைச்சர் ஆகலாம், ஏன் முதலமைச்சராகக்கூட ஆக முடியும் என்றால் அது அ.தி.மு.க-வில் மட்டும்தான். வேறு எந்த கட்சியிலாவது அப்படி முடியுமா?” என்று கேட்டுள்ளார்.



  • Feb 25, 2024 19:35 IST
    புதிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் - மோடி

    பிரதமர் நரேந்திர மோடி: “ஒரு திட்டத்திற்கு நாட்டின் பல நகரங்களில் திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அரசைக் கொண்டு செல்வதன் மூலம் புதிய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். ஒரு காலத்தில் நாட்டின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் டெல்லியில் மட்டுமே நடந்தன.” என்று கூறினார்.



  • Feb 25, 2024 19:29 IST
    சென்னை கிண்டியில் தேசிய முதியோர் மையத்தை திறந்து வைத்தார் மோடி

    சென்னை கிண்டியில் தேசிய முதியோர் மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.



  • Feb 25, 2024 19:28 IST
    தங்கச்சி மடத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்

    ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தி.மு.க மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து மீனவர்கள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.



  • Feb 25, 2024 19:26 IST
    தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை தொகுதி

    மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, தி.மு.க தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சி.பி.எம் நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேச்சுவார்த்தை நல்ல படியில் நடந்தது. இணக்கமாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. பிறகு நல்ல உடன்பாடு வரும். அந்த செய்தியை நாங்கள் விரைவில் உங்களுக்கு தெரிவிப்போம்.” என்று கூறினார். 



  • Feb 25, 2024 18:45 IST
    மதுரை எய்ம்ஸ் விரைவில் கட்டி முடிக்கப்படும் - தமிழிசை சௌந்தரராஜன்

    காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பேசிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும; மதுரை எய்ம்ஸ் தாமதம் அவசியமான காலதாமதமாகவே உள்ளது.” என்று கூறினார்.



  • Feb 25, 2024 18:26 IST
    துவாரகா: கடலுக்கு அடியில் பிரார்த்தனை செய்த பிரதமர்

    பிரதமர் நரேந்திர மோடி துவாரகா இருந்த இடமாக அறியப்படும் இடத்தில் கடலுக்கு அடியில் அமர்ந்து வழிபாடு நடத்தினார்.



  • Feb 25, 2024 17:41 IST
    கோவையில் ராகுல் காந்தி போட்டியிட காங்கிரஸார் விருப்பம்


    “கோவை மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும்” என கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நடத்திய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



  • Feb 25, 2024 16:53 IST
    232 தொகுதிகளை கடந்து விட்டோம்; அண்ணாமலை

    தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில், “232 தொகுதிகளை கடந்துவிட்டோம். கடைசி இரண்டு தொகுதிகளை கடப்பதற்காக உங்களுக்காக காத்திருக்கின்றோம்.
    பிப்ரவரி 27 ஆம் தேதி உங்களை பல்லடத்தில் சந்திப்போம். இதுதாங்க நேரம் - இனி எல்லாம் மாறும்!” எனத் தெரிவித்துள்ளார்.



  • Feb 25, 2024 16:14 IST
    விடுதி உணவால் மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

    தனியார் நர்சிங் கல்லூரி விடுதியில் இரவு உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Feb 25, 2024 15:56 IST
    ஆழ்கடலுக்கு நடுவில் கடற்படை சாகசம்

    48வது இந்திய கடலோர காவல்படை தினத்தை முன்னிட்டு, சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. கடலோர காவல்படை பணிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டது



  • Feb 25, 2024 15:27 IST
    ஜாபர் சாதிக் தி.மு.க.,வில் இருந்து நீக்கம்

    தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி செயலாளர் ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் நிரந்தரமாக நீக்கபடுவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.



  • Feb 25, 2024 15:09 IST
    இந்திய சுழலில் சரியும் இங்கிலாந்து

    இந்திய சுழலில் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்தது. 179 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.



  • Feb 25, 2024 14:42 IST
    உறுதியாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் - ஓ.பி.எஸ்

    உறுதியாக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என புதுச்சேரியில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்



  • Feb 25, 2024 14:28 IST
    ராஜ்நாத் சிங் உடன் விஜயதாரணி நேரில் சந்திப்பு

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.,வில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்தார்



  • Feb 25, 2024 14:04 IST
    மின்சார ரயில்கள் ரத்து; கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனிடையே ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது



  • Feb 25, 2024 13:50 IST
    பட்டாசு ஆலையில் விபத்து; 5 பேர் மரணம்

    உத்தரப்பிரதேச மாநிலம் கோக்ராஜ் அருகேவுள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்



  • Feb 25, 2024 13:32 IST
    விஜயதரணியின் பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன்-  சபாநாயகர் அப்பாவு

    பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தனது பதவி விலகல் கடிதத்தை எனக்கு இணையதளம் வழியாக அனுப்பி வைத்தார்; இன்று என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்தினார்; அதன் அடிப்படையில் விஜயதரணியின் பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன்-  நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி



  • Feb 25, 2024 13:14 IST
    தனித்தொகுதி என்பது இல்லையென்றால் பட்டியலின மக்கள் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது

    “தனித்தொகுதி என்பது இல்லையென்றால் பட்டியலின மக்கள் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது; அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு நாம்தமிழர் கட்சி வாய்ப்பளிக்கும்; நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி; வாக்கு இயந்திரத்தை வைத்து தேர்தல் நடத்தும் போது முடிவுகள் மக்கள் கையில் இருக்காது-சீமான் பேட்டி



  • Feb 25, 2024 12:50 IST
    மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி : அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் ஜி.கே.வாசன்

    மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்



  • Feb 25, 2024 12:23 IST
    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் - பொங்கல் திருவிழா

    பெண்களின் சபரிமலை எனப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் ஆற்றுக்காலில் கோலாகலமாக நடைபெறுகிறது.  பொங்கல் திருவிழா 10 கி.மீ சுற்றளவுக்கு குவிந்து பொங்கல் வைத்து வரும் ஏராளமான பெண்கள். 



  • Feb 25, 2024 12:08 IST
    நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அ.தி.மு.க அறிவிப்பு

    அ.தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவிப்பு



  • Feb 25, 2024 12:06 IST
    வருகிற பிப்.28ம் தேதிக்குள் திமுக மநீம இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்

     வருகிற பிப்.28ம் தேதிக்குள் திமுக மநீம இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தாக வாய்ப்பு.  29ம் தேதி படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் மீண்டும் வெளிநாடு செல்கிறார். 



  • Feb 25, 2024 12:05 IST
    ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி

    ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி 78 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்



  • Feb 25, 2024 12:05 IST
    ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி

    ஜம்மு-காஷ்மீரின் கதுவாவில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி 78 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்



  • Feb 25, 2024 12:04 IST
    திமுக - இந்திய கம்யூனிஸ்ட் நாளை பேச்சுவார்த்தை

    திமுக - இந்திய கம்யூனிஸ்ட் நாளை பேச்சுவார்த்தை நாளை காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை



  • Feb 25, 2024 11:42 IST
    மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை

    “மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை“ "வெள்ள நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை" "அனைத்து நிவாரண உதவிகளும் மாநில அரசின் நிதியிலிருந்தே வழங்கப்பட்டது" - முதல்வர் ஸ்டாலின்



  • Feb 25, 2024 10:49 IST
    அதிபர் வேட்பாளர் போட்டி- டிரம்ப் முன்னிலை

    குடியரசு கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில்,தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் வெற்றி



  • Feb 25, 2024 10:46 IST
    ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை

    தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல்



  • Feb 25, 2024 10:25 IST
    தூத்துக்குடியில் மின் வாகன உற்பத்தி ஆலை

    தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாடடினார். முதற்கட்டமாக ரூ.4000 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 50 நாட்களில் ஆலை அமைக்கம் அடிக்கல் . 



  • Feb 25, 2024 09:16 IST
    ஆணவப் படுகொலை - 4 பேர் கைது

    சென்னை, பள்ளிக்கரணை ஆணவப் படுகொலை விவகாரத்தில் பெண்ணின் சகோதரன் தினேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது



  • Feb 25, 2024 09:13 IST
    ராகுல் யாத்திரையில் அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

    உத்திரப் பிரதேசத்தில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்க உள்ளார்.



  • Feb 25, 2024 08:55 IST
    டெல்லியில் 3 தமிழர்கள் கைது

     போதைப் பொருள் கடத்தல் - டெல்லியில் 3 தமிழர்கள் கைது

    கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் அம்பலம். 

    டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையின் சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ சூடோபெட்ரைன் போதைப் பொருள் பறிமுதல். தமிழர்கள் 3 பேர் கைது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சுமார் 3,500 கிலோ சூடோபெட்ரைன் கடத்தப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவங்களுக்கு பின்னால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் அம்பலம். 



  • Feb 25, 2024 08:48 IST
    சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை

    சென்னை பள்ளிக் கரணையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் வெட்டிக் கொன்றனர். ஜல்லடையாம்பேட்டையை சேர்ந்த ஷர்மியை 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பிரவீனை வெட்டிக் கொன்ற பெண்ணின் அண்ணன் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 



  • Feb 25, 2024 08:48 IST
    சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை

    சென்னை பள்ளிக் கரணையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண் வீட்டார் வெட்டிக் கொன்றனர். ஜல்லடையாம்பேட்டையை சேர்ந்த ஷர்மியை 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்த பிரவீனை வெட்டிக் கொன்ற பெண்ணின் அண்ணன் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 



  • Feb 25, 2024 07:50 IST
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் விஜயதரணி

    விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு விஜயதரணி கடிதம். கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம். விளவங்கோடு தொகுதியில் 3 முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டவர். 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment